என் மலர்tooltip icon

    தோஷ பரிகாரங்கள்

    ஆலயங்களில் இறைவனின் கருவறையில் இருந்து, அபிஷேகம் செய்யப்பட்டு வெளியேறும் நீரை அருந்துவதால் நோய்கள் விலகும் என்பதும் ஐதீகமாக உள்ளது.
    ஆலயங்களில் இறைவனின் கருவறையில் இருந்து, அபிஷேகம் செய்யப்படும் நீர் வெளியேறும் பகுதியை ‘கோமுகம்’ என்று அழைப்பார்கள். கோமுகம் வழியாக வெளியேறும் அபிஷேக நீரை பலரும், பாட்டில்களில் பிடித்துச் செல்வதையும், சிலர் கைகளில் ஏந்தி அருந்தி தலையில் தடவிக் கொள்வதையும் நாம் பார்த்திருப்போம்.

    ஒரு சிலர் அது ஏதோ அசுத்தமான நீர் என்று நினைத்து அதை கண்டுகொள்ளாமல் செல்வதையும் பார்த்திருக்கலாம். இறைவனின் மீது பட்டு கோமுகம் வழியாக வெளியேறும் நீர், கங்கையை விட புனிதமானது என்று சொல்லப்படுகிறது.

    பரணி அல்லது மகம் நட்சத்திரத்தன்று இறைவனை அபிஷேகித்து வெளியேறும் நீரை, பாட்டிலில் பிடித்து வீட்டில் வைப்பது நல்லது என்கிறார்கள். அந்த அபிஷேக நீரை அருந்துவதால் நோய்கள் விலகும் என்பதும் ஐதீகமாக உள்ளது.
    மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும்.
    மனிதன் தனது வாழ்க்கையில், காமம், வெகுளி, மயக்கம் இந்த மூன்று குணங்களை - கர்மங்களை  கடந்து விட்டால்  முக்தி அடையலாம் என்பது இந்து தர்மத்தின் தத்துவார்த்தம். இந்த மூன்றை ஒருவர் கடந்திட உதவுகிறது  மூன்றாம் பிறை தரிசனம். சிவன், பார்வதி, விநாயகப் பெருமான் போன்ற தெய்வங்களின் சிகையை அலங்கரிக்கும் பாக்கியம் பெற்ற இந்தப் மூன்றாம் பிறையை, தரிசனம் செய்யும் வாய்ப்பும் வரமும்  பெற்றவர்களின் முற்பிறவி பாபங்கள் தொலைகிறது என்பது நம்பிக்கை.

    சூரியனும், சந்திரனும் ஒரே ராசியில் இணைவது அமாவாசை திதியாகும். ஒவ்வொரு அமாவாசைக்கு பிறகு வரும் மூன்றாம் நாள், மூன்றாம் பிறை நாளாகும். அமாவாசைக்கு மறுநாள் நிலவு தெரிவதில்லை. ஆனால் மூன்றாம் நாளான துவிதியை திதியில் தெரியும் நிலவு, அழகாகவும், மிகவும் பிரகாசமாகவும் இருக்கும். இரவு வருவதற்கு முன்னே 6.30 மணியளவில் தோன்றும் பிறையே மூன்றாம் பிறை.
    மனநிறைவும், மன அமைதியும் கிடைத்து மனிதனின் மனக்கஷ்டங்கள், வருத்தங்களை நீக்கும் வல்லமைப் பெற்றது மூன்றாம்பிறை தரிசனம்.

    மூன்றாம் பிறையை எப்படி  வணங்க வேண்டும் ?

    மாங்கல்ய பலன் கிடைக்க :


    சந்திரனை தரிசிக்கும் வேளையில், கையில் காசை வைத்து மூடிக்கொண்டு வலமாக மூன்று முறை சுற்றி, மீண்டும் ஒரு முறை பிறையை தரிசித்து வணங்க, பெண்களுக்கு மாங்கல்ய பலம் ஏற்படுகிறது.

    திங்கள்கிழமை முன்றாம் பிறை கண்டால் :

    மூன்றாம் பிறையில் சந்திர தரிசனம் செய்து வணங்குவது ஆயுளை விருத்தியாக்கும், செல்வங்களைச் சேர்க்கும், பிரம்மஹத்தி போன்ற தோஷங்களை நீக்கும். அதுவும், திங்கட்கிழமையில் வரும் மூன்றாம் பிறையை நீங்கள் பார்த்துவிட்டால், வருடம் முழுக்க நீங்கள் சந்திரனை வணங்கிய பலன்கள் எல்லாம் கிடைக்கும்.

    பிறைகள் தரும் பலன்கள் :

    மூன்று பிறை தொடர்ந்து தரிசித்தால் முட்டாளும்  அறிவாளி ஆவான்.

    நான்கு பிறை தொடர்ந்து தரிசிக்க  நம் ஊழ்வினை தீரும்.

    ஐந்து பிறை தொடர்ந்து தரிசித்தால் ஆண்டியும் அரசயோகம் பெறுவான்.

    ஆறு பிறை தொடர்ந்து தரிசித்தால் திருமணம் தடையின்றி நடக்கும்.

    ஏழு பிறை தொடர்ந்து தரிசிக்க தீராக் கடன்  தீரும்.

    பத்து பிறை தொடர்ந்து தரிசிக்க புகழ் உச்சியில் பெருமையடைவான்.

    முக்தி தரும் முன்றாம்பிறை தரிசனம் செய்வோம். முற்பிறவி பாவங்கள் போக்குவோம்.
    பில்லி, சூனியம், துர்மந்திரங்களால் பாதிக்கப்பட்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த பரிகாரத்தை முறைப்படி செய்து வந்தால் தடைகள் நீங்கும்.
    தேய்பிறை ஞாயிறு அல்லது செவ்வாய்க்கிழமை அன்று மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குள் இந்த பூஜையைத் தொடங்க வேண்டும். ஸ்ரீ காளி தேவியின் படம் வைத்து அதன் முன் ஒரு புது கருப்புத்துணியில் கொஞ்சம் பன்னீர் தெளித்து அதன் மேல் ஒரு புது அகல் விளக்கேற்றி விளக்கின் முன் மஞ்சள் தடவிய தேங்காய் ஒன்று வைக்கவும்.

    கருப்பு நிறக் கம்பளி அல்லது கருப்புத் துணியில் அமர்ந்து கருப்பு ஆடை அணிந்து கருமணி மாலை வைத்து வடக்கு முகமாக அமரவும். முதலில் 18 எண்ணிக்கை செந்நிறப்பூக்களால் விளக்கின் பாதத்தில் அர்ச்சித்து ஜபம் செய்த பின் தீபத்தை பார்த்தபடி 1008 உரு ஜெபிக்கவும்.

    ஜபம் முடிந்த பின் விளக்கின் முன் வைக்கப்பட்ட தேங்காயை எடுத்து விளக்கை 3 தடவை சுற்றி ஸ்ரீ காளி மாதாவை வணங்கி எந்தத் தீய மந்திரங்கள் / சக்திகளின் பாதிப்பு இருந்தாலும் அவை உன் மேல் ஆணையாக நீங்கட்டும் என மனதிற்குள் சொல்லிக்கொண்டேபாதிக்கப்பட்டுள்ள நபர் அல்லது இடத்தை 3 தடவை சுற்றி அந்தத் தேங்காயைத் தெற்கு முகமாக நின்று எரித்துவிடவும்.

    பின்னர் நல்லெண்ணெய் தேய்த்துக் குளித்து அருகில் உள்ள அம்மன் ஆலயம் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டுக் குங்குமம் வைத்துக்கொள்ளவும். இதை செய்யும் போது வெளிநபர்களை அழைக்காமல் செய்வது சிறப்பு.

    முக்கியமான விஷயம் : பாதிக்கப்பட்டுள்ள நபருக்கு அன்றைய தினம் படுபட்சி நாளாக இருக்கக்கூடாது.

    மந்திரம்:-

    ஓம் க்ரீம் தந்த்ரபாத நிவாரணாய க்லீம் ஓம் பட் ||

    திருவக்கரை வக்கிரகாளியம்மன் கோவிலில் 6 விதமான பரிகாரங்கள் மிகவும் பிரசித்தி பெற்றது. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    திருவக்கரை ஆலயத்தில் மூலஸ்தானத்து இறைவன் முகலிங்கமாகக் காட்சி அளிக்கின்றார். இந்த ஆலயத்தில் உள்ள வக்கிர லிங்கம் எதிரே உள்ள மணலில் புதைந்து காணப்படும் நந்திக்கு மஞ்சள் குங்குமம் பூமி வழிபாடு செய்தால், அவர் மூலம் சிவன் அருளை பெற முடியும் என்ற நம்பிக்கை பக்தர்களிடம் உள்ளது. எனவே சிவனிடம் செய்ய வேண்டிய பரிகாரங்களை இந்த நந்தி மூலம் பக்தர்கள் செய்கிறார்கள்.

    பவுர்ணமி தோறும் தீப கொப்பரையில் தீபம் ஏற்றுகிறார்கள். 3 பவுர்ணமி இந்த தீபத்தை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.

    குழந்தை பேறு வேண்டி காளியம்மன் சன்னதி பின்புறம் தொட்டில் கட்டும் வழக்கம் உள்ளது.

    திருமணத்திற்காக பெண்கள் இந்த மரத்தில் மஞ்சள் கயிறு கட்டும் வழக்கம் உள்ளது.

    கடன் பிரச்சினை, வழக்குகள், மாமியார் கொடுமை ஆகியவை நீங்குவதற்கு பூட்டு போடும் பரிகாரம் செய்கின்றனர்.

    நாகதோஷம் நீங்குவதற்காக இத்தலத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.
    இறந்தவர்க்கு, ஒவ்வொரு வருடமும் செய்யப்படும் சிரார்த்தம், திதியை அனுசரித்தே செய்யப்பட வேண்டும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு திதியிலும் எண்ணிலாக் குழந்தைகள் பிறப்பது போல, எண்ணிலார், எல்லா திதிகளிலும், இறைபதம் அடைவதும் இயற்கை நிகழ்வே ஏகாதசியில் மரணமும், துவாதசியில் தகனமும் மாமுனிவர்க்கும் கிடைத்தற்கரியது. இறந்தவர்க்கு, ஒவ்வொரு வருடமும் செய்யப்படும் சிரார்த்தம், திதியை அனுசரித்தே செய்யப்பட வேண்டும்.

    ஏகாதசி அன்று சிரார்த்தம் நடத்திடும் குடும்பத்தினரும், சிரார்த்தத்தில் நம்முடைய முன்னோர்களின் பிரதிநிதியாக ஏற்கப்படுபவர்களும் நெருங்கிய பங்காளிகளும், சிரார்த்தத்திற்காக சமைக்கும் உணவை ஏற்க வேண்டிய நிலையில் உள்ளனர். இதனால் சிரார்த்த உணவை ஏற்பது விரதநியதிகளை மீறியதாக கருதப்படுவதில்லை.

    சில பகுதி மக்கள், ஏகாதசிகளில், தாம் சாப்பிட்ட தவறுக்கோ, பிறரை உண்ணச் செய்த தவறுக்கோ, ஆளாகக் கூடாது என்பதால், ஏகாதசியில் வரும் சிரார்த்தத்தை துவாதசி திதியில் செய்வதை, வழக்கமாகக் கொண்டுள்ளனர். இது, தேசாசாரம் என்று, நெடுங்காலமாக பெரியோர்களால் ஒத்துக் கொள்ளப்பட்டும் வந்திருக்கிறது.
    வீடு-மனை ஆகியவற்றை அடைவதில் உள்ள சிக்கல்களுக்கு வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் இரண்டு விதமான வழிகளை காட்டி இருக்கின்றனர். அவை என்னவென்று பார்க்கலாம்.
    ‘எலி வளை ஆனாலும் தனி வளை..’ என்ற பழமொழிக்கேற்ப சொந்த வீட்டில் குடியிருப்பது பெருமையும், மனநிறைவையும் அளிக்கக்கூடிய விஷயம். ஆனால், இன்றைய காலகட்டம் பல்வேறு பொருளாதார நெருக்கடிகள் கொண்டதாக அமைந்துள்ள நிலையில் சொந்த வீடு என்ற லட்சியத்தை அடைய பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவது பலருக்கும் அனுபவமாக உள்ளது.

    இரண்டு வித முறைகள்

    வீடு-மனை ஆகியவற்றை அடைவதில் உள்ள சிக்கல்களுக்கு வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் இரண்டு விதமான வழிகளை காட்டி இருக்கின்றனர். முதலாவது வழி பூமி வசிய முறை என்றும், இரண்டாவது வழி கிரக வசிய முறை என்றும் குறிப்பிடப்பட்டுள்ள நம்பிக்கை சார்ந்த விஷயங்கள் பற்றிய குறிப்புகளை இங்கே காணலாம்.

    முதலாவது வழிமுறை


    இந்த வழிமுறையானது ஜோதிட கிரக சிந்தாமணி என்ற பெரிய வருசாதி நூலில் உள்ளதாக சொல்லப்படுகிறது. அதாவது,

    * அஸ்தம், பரணி, திருவோணம் மற்றும் விசாகம் ஆகிய நான்கு நட்சத்திரங்கள் அமைந்த நாளில், நட்சத்திரத்தின் நான்காம் பாதம் உள்ள நேரத்தை கணக்கிட்டு கொள்ளவேண்டும்.

    * அன்று செவ்வாய் கிழமையாக இருப்பது அவசியம்.

    * மேற்கண்ட இரண்டு நிலைகளும் உள்ள நாளில் வரக்கூடிய கடக லக்னம் அமைந்த நேரத்தில் சுத்தமான மண்ணை சிறிய அளவில் பிரசாதமாக சாப்பிட வேண்டும். அதன் மூலம் பூமி, மனை மற்றும் வீடு ஆகிய பாக்கியம் கிடைக்கும் என்று பாடல் வடிவத்தில் கூறப்பட்டுள்ளது.

    மேற்கண்ட முறையில் மண்ணை எடுக்க சுத்தமான ஒரு இடத்தில் மேல் பரப்பில் உள்ள மண்ணை ஒதுக்கி விட்டு சுமார் மூன்றடி ஆழத்தில் இருக்கும் சுத்தமான மண்ணை எடுத்து முன்னதாக வைத்துகொள்வது அவசியம். மேற்கண்ட நேரத்தில் இஷ்ட தெய்வம், வாஸ்து மற்றும் செவ்வாய் ஆகியவற்றுக்கு பூஜைகள் செய்து பழங்களில் வைக்கப்பட்ட சிறிதளவு மண்ணை பிரசாதமாக உண்பதன் மூலம் சொந்த வீடு அல்லது மனை வாங்கக்கூடிய யோகம் வாய்க்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.



    இரண்டாவது வழிமுறை

    வீடு அல்லது மனை வாங்க தேவையான வசதிகள் அமைந்த பலருக்கும் எதிர்பாராத தடைகள் காரணமாக அவற்றை வாங்குவது தாமதமாகி கொண்டு இருக்கக்கூடும். அது போன்ற சூழலில் உள்ளவர்களுக்கு வாஸ்து கிரக வசிய முறை என்ற வழி வாஸ்து வல்லுனர்களால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அவை பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

    ஒரு ஆண்டுக்கு 8 முறை வாஸ்து கண் விழிக்கும் நாளாக கணக்கிடப்பட்டுள்ளது. அந்த நாட்களில் கிரக வசிய முறையை கடைப்பிடித்து பயன்பெறலாம்.

    வாஸ்து விழித்தெழும் நாட்கள்

    * சித்திரை - 10-ம் நாள் காலை 8-55 முதல் 9-30 மணி வரை.

    * வைகாசி - 21-ம் நாள் காலை 10-06 முதல் 10-42 மணி வரை.

    * ஆடி - 11-ம் நாள் காலை 7-38 முதல் 8-14 மணி வரை.

    * ஆவணி - 6-ம் நாள் பகல் 3-18 முதல் 3-54 மணி வரை.

    * ஐப்பசி - 11-ம் நாள் காலை 7-42 முதல் 8-18 மணி வரை.

    * கார்த்திகை - 8-ம் நாள் காலை 11-09 முதல் 11-45 மணி வரை.

    * தை - 12-ம் நாள் காலை 10-50 முதல் 11-26 மணி வரை.

    * மாசி - 22-ம் நாள் காலை 10-12 முதல் 10-48 மணி வரை.

    மேற்கண்ட எட்டு நாள்களில் எந்த நாளிலும் கிரக வசிய பூஜையை செய்து கொள்ளலாம் பூஜைகள் வழக்கமான முறைப்படி மங்களன் என்ற செவ்வாய் மற்றும் வாஸ்து புருஷன் ஆகியவர்களுக்கு செய்வது முறை. அதன் மூலம் மனை வாங்குவதில் உள்ள தடைகள், மனை வாங்கிய பிறகு வீடு கட்டுவதில் உள்ள தடைகள் ஆகியவை அகலும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.
    சனியின் வக்கிரத்தினால் துன்பப்படுகிறவர்கள் திருவக்கரை வக்கிரகாளியம்மன் தலத்துக்கு வந்து சனிக்கோளை வணங்கினால். துன்பம் நிச்சயம் குறையும்,
    நவக்கிரகங்களில் சனி, குரு ஆகிய கோள்கள் தாம் சஞ்சரித்த ராசிகளிலேயே பின் நோக்கி சில சமயங்களில் சில நாட்களோ மாதங்களோ சஞ்சரிப்பதுண்டு. இதை ‘வக்கிரகதி’ என்று சொல்லுவார்கள்.

    சனியின் வக்கிரத்தினால் துன்பப்படுகிறவர்கள் திருவக்கரை வக்கிரகாளியம்மன் தலத்துக்கு வந்து சனிக்கோளை வணங்கினால். துன்பம் நிச்சயம் குறையும், நீங்கும் என்று நம்புகிறார்கள். அப்படிப்பலன் அடைந்தவர்கள் பலர் என்றும் சொல்லுகிறார்கள்.

    ஜாதகத்தில் சனி வக்கிரமாக உள்ளவர்கள் இங்கே வந்து பூஜித்துச் செல்லலாம். சனி பகவானின் வாகனமான காகம் தெற்கு நோக்கி இருப்பது இங்கே விசேஷம்.

    திருமணம் ஆகாதோர், குழந்தை பாக்கியம் இல்லாதோர் திருவீழிமிழலை வீழிநாதேஸ்வரர் கோவிலில் அமைந்துள்ள மூலவரை வழிபட்டால் அவர்களுக்கு விரைந்து திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் அமையும்.
    கும்பகோணத்திலிருந்து சுமார் 26 கிலோமீட்டர் தொலைவில் திருவீழிமிழலை என்னும் ஊரில் அமைந்துள்ள இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயத்தில் காட்சியளித்து வரும்  சிவபெருமானை தரிசனம் செய்தால், கண்ணில் ஏற்பட்ட நோய்கள் குணமாகிவிடும், திருமணம் வாய்ப்பு தள்ளிச் செல்கிறவர்களுக்கு, திருமணம் விரைந்து நிகழும், புத்திர பாக்கியம் அமையப்பெறாதவர்களுக்கு குழந்தைபேறு அமையும், பொருளாதார மற்றும் சொத்துப் பிரச்சனைகள் நீங்கும் என்பது ஹிந்துக்களின் தொன்மையான நம்பிக்கையாகத் திகழ்ந்து வருகிறது.

    இத்திருத்தல மூலவர் கல்யாண சுந்தரேஸ்வரர் என்ற திருநாமத்தை கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். மேலும், இந்த  ஆலயத்தில் மட்டுமே சிவ பெருமான், பார்வதி அம்மையுடன் மானுட ரூபம் கொண்டு, திருக்கல்யாண கோலத்தில் காட்சியளித்து வருகிறார். இந்த திருக்கோவில் சுமார் 2000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று கூறப்படுகிறது.

    திருமணம் ஆகாதோர், குழந்தை பாக்கியம் இல்லாதோர் இத்திருத்தலத்தில் அமைந்துள்ள மூலவரை நேரில் வந்து வழிபட்டால் அவர்களுக்கு விரைந்து திருமணம் மற்றும் புத்திர பாக்கியம் அமையும் என்பது ஹிந்துக்கள் மத்தியில் ஆண்டாண்டு காலமாக நிலவி வரும் நம்பிக்கையாகத் திகழ்ந்து வருகிறது.

    கண்ணில் ஏதேனும் உபாதைகள் இருந்தால், இந்த ஈஸ்வரனின் தரிசனத்தால் அவை சீராகிவிடும் என்று கூறப்படுகிறது. மஹா விஷ்ணுவின் கண்ணை சிவபெருமானின் பாதத்தில் இன்றும் காணலாம்.

    இந்த கோவிலில் வழிபாடு செய்ய செல்பவர்கள் விளாம்பழமும் தாமரை மலரும் வாங்கி செல்வது விசேஷம்.

    கும்பகோணத்திலிருந்து பூந்தோட்டம் சென்று, அங்கிருந்து திருவீழிமிழலைக்கு செல்ல வேண்டும்.

    ஒரு கட்டிடத்தை சரியாகவோ அல்லது தவறாகவோ கட்டி விட்டால் அங்கு வாஸ்து குறைபாடு ஏற்படும். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு உண்டா என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம்.
    ஒரு கட்டிடத்தை சரியாகவோ அல்லது தவறாகவோ கட்டி விட்டால் அந்த இடத்தில் வசிக்கக்கூடிய நபர் மீது நல்ல தாக்கத்தையோ, கெடுதலான தாக்கத்தையோ அந்த கட்டிடம் தினம் தினம் ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகம். அதற்காக கட்டிய வீட்டை இடிக்க முடியாது. ஆனால் சில எளிய பரிகார பொருட்களை வீட்டில் வைப்பதன் மூலம் தீர்வு காணலாம்.

    இந்த அடிப்படை தெரியாத மக்கள் பரிகாரம் என்கின்ற பெயரில் வாங்கி வைக்கும் பொருட்களான

    1. பிரமிடு

    2. செப்பு தகடுகள்

    3. கிரிஸ்டல்கள்

    4. வாஸ்து பரிகார பூஜைகள்

    5. வாஸ்து மணி

    6. வாஸ்து மரம்

    7. நீர் விழ்ச்சி

    8. வாஸ்து குபேர பொம்மைகள்

    9. வீட்டைச் சுற்றிலும் செப்பு கம்பி பதித்துக்கொள்வது

    10. பாசிடிவ் எனர்ஜி, நெகட்டிவ் எனர்ஜி

    11. வாசலுக்கு எதிரே கண்ணாடி மாட்டுவது,

    12. விநாயகர் சிலை, ஆஞ்சநேயர் சிலை வைப்பது

    இது போல இன்னும் பல பொருட்கள் உண்டு.

    இது போன்ற பொருட்களால் தற்காலிக தீர்வு கிடைப்பது போல தோன்றினாலும் நிரந்தரமான தீர்வு கிடைக்காது. பொது மக்களாகிய நாம் தான் கடவுள் கொடுத்த அறிவைக் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டும்.
    எந்த யாகத்தையும் செய்யாதவனும், எந்த மந்திரத்தையும் உச்சரிக்காதவனும் கூட, ருத்ராட்சத்தை தொடுவதன் மூலமாகவே அனைத்து பாவங்களில் இருந்து விடுபட இயலும்.
    சிவபெருமானை வழிபடுபவர்களுக்கு சிவலிங்கம் எவ்வளவு சிறப்பு வாய்ந்ததோ, அதேப் போலவே சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றிய ருத்ராட்சமும் அத்தகைய சிறப்பு வாய்ந்தது. அந்த ருத்ராட்சத்தை அணிவது பற்றியும், அதன் பயன் பற்றியும் ஸ்ரீமத் தேவி பாகவதம், சிவ மகா புராணம், பழமையான சிவாகமங்களில் கூறப்பட்டுள்ள சிலவற்றை இங்கே பார்ப்போம்.

    எந்த யாகத்தையும் செய்யாதவனும், எந்த மந்திரத்தையும் உச்சரிக்காதவனும் கூட, ருத்ராட்சத்தை தொடுவதன் மூலமாகவே அனைத்து பாவங்களில் இருந்து விடுபட இயலும்.

    ருத்ராட்சம் அணிந்த ஒருவன் பல புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலனைவிட அதிக பலனைப் பெறுகிறான்.

    ருத்ராட்சத்தை அணிந்தவனும், அதை வைத்து வழிபாடு செய்கிறவனும் சம்சார பந்தங்களில் இருந்து விடுபட்டு, இனியும் தொடர இருக்கும் பலகோடி பிறப்புகளில் இருந்து விடுபடுவான்.

    ஒருவர் நம்பிக்கையோடு ருத்ராட்சம் அணிந்தாலும் கூட, அல்லது நம்பிக்கை இல்லாமல் அணிந்து கொண்டாலும் சரி.. அவன் ருத்ரனின் அம்சத்தை பெற்ற வனாக மாறுகிறான்.

    ருத்ராட்சம் அணிந்தவருக்கு உணவு, உடை வழங்குவது, ருத்ராட்சம் அணிந்த சிவனடியாருக்கு நீர் ஊற்றி பாத பூஜை செய்வதன் மூலமாக ஒருவன் சிவலோகத்தை அடைவான். ருத்ராட்ச மாலை அணிந்த ஒருவருக்கு உணவளித்தால், அவரின் 21 தலைமுறை மக்களும் பாவங்களில் இருந்து விடுபட்டு ருத்ர லோகத்தை அடைவார்கள்.

    அனைத்து வித தெய்வ சுலோகங்கள், விரதங்களை அனுசரிப்பதன் மூலம் ஒருவன் அடைகின்ற பலனை, ருத்ராட்சம் அணிந்து கொள்வதன் மூலம் சுலபமாக பெற்றிட முடியும்.

    ருத்ராட்ச மாலையை ஒருவன் வெறுமனே கையில் வைத்திருந்தால் கூட, அவன் நாக்கு வேதங்களையும், சாஸ்திரங்களையும், உபநிடதங்களையும் கற்றறிந்தவனை விட மேம்பட்டவனாக திகழ்வான்.

    ஒருவன் மரணம் அடையும் தருவாயில் ருத்ராட்சத்தை அணிந்திருந்தால், அவன் இறந்த பின் ஆன்மாவானது, ருத்ர லோகத்தை அடையும்.



    பிறப்பால் ஒருவன் உயர்ந்தவனோ அல்லது தாழ்ந்தவனோ, சைவ உணவை உண்பவனோ அல்லது அசைவ உணவை உண்பவனோ... யாராக இருப்பினும் ருத்ராட்சம் அணிந்தவன் ருத்ரனுக்கு இணையாகிறான்.

    ருத்ராட்சத்தைத் தலையில் சூடியவன், கோடி புண்ணியங்களைப் பெறுவான். காதுகளில் அணிபவன் பத்துகோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான். கழுத்தில் அணிபவன் நூறு கோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்; பூணூலில் அணிபவன் ஆயிரம் கோடிப் புண்ணியங்களைப் பெறுகிறான்; கைகளில் அணிபவன் லட்சம் கோடிப் புண்ணியத்தைப் பெறுகிறான்; இடுப்பில் அணிபவன் மோட்சத்தை அடைகிறான்.

    ருத்ராட்சத்தை அணிந்தவாறு, வேத நியமங்களை ஒருவன் கடைப்பிடிப்பானாயின், அவன் பெறும் பலனை அளவிட முடியாது.

    கழுத்தில் ருத்ராட்ச மாலையை அணிந்திருப்பவன், இந்த உலக பற்றில் இருந்தும், இன்ப- துன்பங்களில் இருந்தும் விடுபடுகிறான்.

    ருத்ராட்சம் அணிந்தவன் சிவபெரு மானைப் போலவே, முப்பத்துமுக்கோடி தேவர்களாலும் வணங்கப்படுகிறான்.

    ருத்ராட்சத்தைத் தலையில் தரித்து ஒருவன் நீராடினால், ருத்ராட்சத்தைத் தொட்ட நீர் ஒருவனின் உடலைத் தீண்டுமாயின், அது கங்கையில் நீராடிய புண்ணியத்தை வழங்கும்.

    மனிதன் மட்டுமல்ல; ஓரறிவு முதல் ஐந்தறிவுள்ள ஜீவராசிகள் வரை ருத்ராட்சத்தோடு சம்பந்தம் பெற்றால், அவை அனைத்தும் மறுபிறவியில் சிவலோகத்தை அடைந்தே தீரும்.

    ருத்ராட்சத்தை தானம் செய்பவர் களுக்கு, அதை அடுத்தவர் அணியும்படி செய்பவர்களுக்கு, இன்னொரு பிறவி இந்த பூமியில் கிடையாது.

    இவை அனைத்தும் சிவ மகா புராணத்தில், பார்வதி தேவிக்கு, பரமேஸ்வரன் எடுத்துரைத்தது என்று சொல்லப்படுகிறது.

    இந்த கலியுகத்தில் ருத்ராட்சத்தை அணிவதற்கு மிகுந்த மனவலிமை தேவைப்படுகிறது. ருத்ராட்சம் அணிவதை கிண்டல் செய்யவும், தேவையில்லாமல் பயம் காட்டவுமே பலரும் தயாராக இருக்கிறார்கள். ஆனால் அதை அணிய யாருக்கும், எந்த தடையும் இல்லை என்று புராணங்கள் சொல்கின்றன. பெண்கள் மாத விலக்கு நாட்களிலும் கூட ருத்ராட்சம் அணிந்திருக்கலாம்; தாம்பத்தியமும் இதற்குத் தடை அல்ல. ஆகையால் இறைவன் அளித்த அருட் கொடையான ருத்ராட்சத்தை அணிந்து இறைவனை நாடுவோம்.
    நம்முடைய பாரம்பரியத்தில் நாக வழிபாடு மிகவும் பழமையான ஒன்று. நாகங்கள், நாக வழிபாடு, அதன் பலன்கள் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
    நாகராஜாவை வழிபாடு செய்தால் கிடைக்கும் பலன்கள் அதிகம். நம்முடைய பாரம்பரியத்தில் நாக வழிபாடு மிகவும் பழமையான ஒன்று. நாகங்கள், நாக வழிபாடு, அதன் பலன்கள் பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.

    இறை அம்சம் கொண்ட நாகங்களில் பல வகைகள் உண்டு. ஆனாலும் ராகுவும், கேதுவுமே வழிபடப்படுகின்றன. நவக்கிரகங்களில் ராகுவும் கேதுவும் இடம்பெற்றுள்ளதே இதற்கு காரணம்.

    திருமணப் பொருத்தம் பார்க்கும் போதும், மற்ற காலக்கட்டங்களில் ஒருவரின் ஜாதகத்தைப் பார்க்கும் போதும் அவரது ஜாதகத்தில் நாக தோஷம் இருக்கிறதா என்பதை பார்ப்பது வழக்கம். நாக தோஷம் இருந்தால் உரிய பரிகாரங்கள் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.

    நமது இந்து மத சாஸ்திரங்களில் காமதேனு, பசு மாடு ஆகியவற்றுக்கு அடுத்து முக்கியமான இடம் வகிப்பது நாகங்கள் மட்டுமே. பத்மா, ஐந்து தலைக்கொண்ட பச்சை வண்ண மகாபத்மா, ஆனந்தா, ஆயிரம் தலைக்கொண்ட சேஷநாக் அல்லது ஆதிசேஷன் ஆகிய நாகங்கள் நம்முடைய தர்மத்தில் முக்கியமான இடம் வகிக்கிறது.

    கன்னியாகுமரி மாவட்டத்தில் நாகர்கோவிலில் நாகராஜர் ஆலயமே உள்ளது. அந்தத் திருத்தலத்தில் உள்ள தெய்வங்கள் அனைத்தும் பாம்பு உருவத்துடன் உள்ளன. வெளிச் சுவர் மற்றும் நுழைவாயில் கோபுரத்திலும் நாக சிலை அமைந்துள்ளது

    நமது பக்கத்து மாநிலமான கர்நாடகாவில் நாக தேவதைகள் வணங்கி பூஜிக்கப்படுகின்றன. தமிழ்நாட்டில் பல இடங்களில் பாம்பு புற்றுடன் கூடிய நாகங்கள் அம்மனாக பல ஆலயங்களில் வழிபடப்படுகின்றன. அவற்றில் சேலம் மாரியம்மன், திருவக்கரை வக்கிரகாளி போன்றவை முக்கியமானவை.

    சிவாலயங்களில் நாகத்தின் மீதே பாலை ஊற்றி சிவலிங்கத்தின் மீது அதுவழியும் வகையில் பூஜைகள் செய்கின்றனர். இப்படியாக நாகங்கள் பலவிதங்களிலும் பூஜிக்கத் தகுந்தவை.

    புத்திர பாக்கியம் கிடைக்க நாகங்களில் ஆனந்தாவையும், புத்திரி பாக்கியம் கிடைக்க வாசுகியையும், நோய் நிவாரணம் நிவாரணம் பெற கார்கோடனையும் பூஜிக்கலாம். நமது பூர்வ ஜென்ம பாபம் அகல கேஷா, குளுமை வியாதியினால் அவதிப்படுபவர்கள் குளிகை மற்றும் மோட்ஷப்பிராப்தி பெற மகாபத்மாவையும் வணங்கிட வாழ்க்கை நலம் பெறும்.
    ஜாதக ரீதியாக தோஷம் இருந்தால் திருமணம் தடை இருக்கும். பரிகாரம், பிராயச்சித்தம் என அதிக செலவில்லாமல், இதற்கான தீர்வை எளிதில் காணலாம்.
    ஜாதக ரீதியாக தோஷம் இருந்தால் திருமணம் தடை இருக்கும். பரிகாரம், பிராயச்சித்தம் என அதிக செலவில்லாமல், இதற்கான தீர்வை எளிதில் காணலாம். வெள்ளி அல்லது செவ்வாய் கிழமையில் அருகில் உள்ள துர்க்கை அம்மன் கோவிலுக்கு சென்று, தோஷம் நீங்க சில பூஜைகள் செய்யலாம். பூஜைக்கு முன்பு இடத்தைச் சுத்தமாக மஞ்சள், சந்தனம் இட்டு மெழுகி அதில் திருவிளக்கு வைத்து அந்த விளக்கில் ஐந்து திரி இட்டு முக்கூட்டு எண்ணெயாக, நல்லெண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கலந்து ஊற்றி அதை ஏற்றவும்.

    தீக்குச்சியால் விளக்கு ஏற்றாமல், ஓர் ஊது பத்தியை எண்ணெயில் நனைத்து சுடரை ஊதுபத்தியில் ஏற்றி அந்தச் சுடரைக் கொண்டு விளக்கேற்ற வேண்டும். விளக்கின் முன்பு அருகம்புல் துளசி கலந்த தீர்த்தம் வைக்க வேண்டும். திருவிளக்குக்கு முன்பு ஒரு பழுத்த நல்ல எழுமிச்சம்பழம் படைக்கவும்.



    இரண்டு எழுமிச்சம்பழம் வாங்கி ஒவ்வொன்றையும் சரிபாதியாக இரண்டாக வெட்டி சாறு எடுத்து அதில் தேனும் சர்க்கரையும் கலந்து படைக்கவும். அறுத்துப் பிழிந்த எழுமிச்சம் பழத்தோலை வெளிப்புறத்தை உள்புறமாக்கி மொத்தம் 3 அகல் விளக்குகளைப் போலச் செய்து ராகு காலங்களில் கீழ்க்கண்ட மந்திரம் சொல்லி வழிபடத் திருமண தடை நீங்கி, நல்ல வரன் அமைந்து மங்களமாக முடியும்.

    மந்திரம் :

    ஓம் ஸ்ரீ கல்யாண சுந்தரேஸ்வர நமஹ !
    ஓம் லட்சுமி நாராயணாய நமஹ !
    ஓம் வல்லி தேவ சேனா சுப்பிரமணியாய நமஹ !
    ஓம் ஐம் ஹ்ரீம் யோகினி !
    சித்தி சுந்தரி, கௌரி, அம்பிகே ! யோக பயங்கரீ !
    சகல ஸ்தாவர ஜங்கம மூக ஹ்ருத

    ×