search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    கண் திருஷ்டியும்.. பரிகாரமும்..
    X

    கண் திருஷ்டியும்.. பரிகாரமும்..

    கண் திருஷ்டி என்பது பொறாமை, கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலால் ஏற்படக்கூடியது. கண் திருஷ்டி யாரை எளிதில் தாக்கும்?, யாரை தாக்காது? என்பதை ஜோதிட ரீதியான காரணங்களைக் கொண்டு பார்க்கலாம்.
    கண் பார்வையால் ஏற்படும் தோஷத்தை ‘திருஷ்டி’ என்பார்கள். ‘திருஷ்டி’ என்பதற்கு ‘பார்வை’ என்று பொருள். “கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது” என்பது பழமொழி.

    பார்வையை, சுப பார்வை, அசுப பார்வை என வகைப்படுத்தலாம். சித்தர்கள், ஞானிகள், ஆன்மிகவாதிகளின் பார்வை பலம் நிறைந்தது. அவர்களின் பார்வை படுபவர்களுக்கு சுப பலன் கிடைக்கும். சிலருடைய பார்வை தீய சக்தியை ஏற்படுத்தும். கண் திருஷ்டி என்பது பொறாமை, கெட்ட எண்ணங்களின் தொடர்ச்சியான தாக்குதலால் ஏற்படக்கூடியது. அதனால் எற்படும் பாதிப்பு, சிலருக்கு சிறியதாகவும், பலருக்கு தொடர்ச்சியான பின் விளைவுகளையும் தரும்.

    கண் திருஷ்டி யாரை எளிதில் தாக்கும்?, யாரை தாக்காது? என்பதை ஜோதிட ரீதியான காரணங்களைக் கொண்டு பார்க்கலாம்.

    * ஒருவரது ஜாதகத்தில் லக்னம் மற்றும் லக்னாதிபதி வலிமையாக இருந்தால், அவரை கண் திருஷ்டி எளிதில் பாதிக்காது.

    * லக்னம், ஐந்து, ஒன்பதாம் இடத்தில் மாந்தி இருந்தால், அந்த நபர்களை கண் திருஷ்டி எளிதில் பாதிக்கும்.

    * லக்னாதிபதி 6, 8, 12-ல் மறைந்திருந்தால், அவர்களுக்கு கண் திருஷ்டி பாதிப்பு நீண்ட காலத்திற்கு இருக்கும். சிலருக்கு செய்வினையாக மாறவும் வாய்ப்புண்டு.

    * லக்னாதிபதி 8-ல் மறைந்தவர்களுக்கு கண் திருஷ்டியால் விபத்து, அல்லது உயிர் பயம் இருந்து கொண்டே இருக்கும்.

    * லக்னத்திற்கு 2, 12-ல் மாந்தி, சனி, ராகு-கேதுக்கள் இருப்பின், அவர்களின் கண் பார்வைக்கு கெட்ட சக்தியை வெளிப்படுத்தும் ஆற்றல் அதிகம்.
    Next Story
    ×