என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • ஆனால் நேரமின்மை காரணமாக பூஜைகள் செய்ய முடிவதில்லை.
    • மிக குறுகிய நேரத்தில் கீழ்க்கண்ட முறையில் சிறப்பாக பூஜை செய்ய முடியும்.

    தினசரி பூஜை செய்ய வேண்டும் எனப் பலருக்கு ஆசையிருக்கும்.

    ஆனால் நேரமின்மை காரணமாக பூஜைகள் செய்ய முடிவதில்லை.

    மிக குறுகிய நேரத்தில் கீழ்க்கண்ட முறையில் சிறப்பாக பூஜை செய்ய முடியும்.

    1. அபிஷேகம்.

    2. மந்திர புஸ்பம்.

    3. தூபம்.

    4. தீபம்.

    5. நைவேத்தியம்.

    6. ஆராதனை.

    • சிவன்- அபிஷேகப் பிரியர்
    • விஷ்ணு- அலங்காரப் பிரியர்

    அருள் சக்தி,

    போர் சக்தி,

    கோசக்தி,

    புருஷசக்தி.

    அருள்சக்தி- பார்வதி

    போர்ச்சக்தி- காளி

    கோ சக்தி- துர்க்கை

    பிருஷ சக்தி- விஷ்ணு

    தெய்வங்களுக்கு பிரியமானவை:

    சிவன்- அபிஷேகப் பிரியர்

    விஷ்ணு- அலங்காரப் பிரியர்

    சூரிய பகவான்- நமஸ்காரப் பிரியர்

    விநாயகர்- நைவேத்யப் பிரியர்.

    • திருப்பனந்தான்- சோழநாடு
    • திருப்பனையூர்- சோழநாடு

    பனை மரத்தைத் தல விருட்சமாகக் கொண்ட சிவத்தலங்கள் ஐந்து அவை

    1. திருப்பனந்தான்- சோழநாடு

    2. திருப்பனையூர்- சோழநாடு

    3. திருப்பனங்காடு- தொண்டை நாடு

    4. திருவோத்தூர்- தொண்டை நாடு

    5. புரிவார் பனங்காட்டூர்- நடுநாடு.

    தத்புருஷம் - கிழக்கு - பொன்நிறம்

    அகோரம் - தெற்கு -  கருமை நிறம்

    சத்தியோஜாதம் - மேற்கு -  வெண்ணிறம்

    வாமதேவம் - வடக்கு -  சிவப்புநிறம்

    ஈசானம் -   வடகிழக்கு -  பளிங்கு நிறம்

    • சாலையினுள் சுவத்தி என்னும் சொல்லைச்சொல்லி, மெல்ல மெல்ல பசுக்களை புகுவித்து, சிரத்தையோடு புல்லைக் கொடுக்க வேண்டும்.
    • அஷ்டமி தோறும் பசுக்களை நீராட்டி, பூச்சூட்டி, அன்னமும் ஜலமும் ஊட்டி, தீப தூபம் காட்டி வணங்க வேண்டும்.

    கோமாதா என்று அழைக்கப்படும் பசு பூவுலகில் லௌகீக ரீதியாகவும், ஆன்மிக ரீதியாகவும் பல பல நன்மைகளைத் தருகிறது.

    கேட்ட வரத்தை நல்கும் பசுவை எவ்வாறு பராமரித்து போற்ற வேண்டும் என்பது பற்றி சிவதருமோத்தரம் கீழ்கண்ட வாறு கூறுகிறது:

    பழங்காலத்தில் பசுக்களைக்கட்டும் தொழுவத்தினை கோவிலாகவே கருதினர்.

    இதனை "ஆக்கோட்டம்" என இலக்கியங்கள் குறிப்பிடுகிறது. பசுமடம் என்றும் வழங்குவர். அப்பசுமடத்தினை விதிப்படி செய்விக்க வேண்டும்.

    அதாவது,ஆற்றுமண், ஓடை மண், புற்றுமண், வில்வத்தடி மண், அரசடி மண் என்பவைகளால் கொட்டிலின் தரைப்பகுதியை அமைக்க வேண்டும். முதிர்கன்று, இளங்கன்று, நோயுற்ற கன்று ஆகியவற்றிக்கு வெவ்வேறு இடங்களை அமைக்க வேண்டும்.

    நாள் தோறும் கோசல, கோமலங்களைப் புறத்தே நீக்கி சுத்தம் செய்ய வேண்டும். துர்நாற்றம் வராமல் தூபம் இட வேண்டும். தீபங்கள் ஏற்றவேண்டும்.

    சாலையினுள் சுவத்தி என்னும் சொல்லைச்சொல்லி, மெல்ல மெல்ல பசுக்களை புகுவித்து, சிரத்தையோடு புல்லைக் கொடுக்க வேண்டும்.

    நோயுற்ற பசுக்களுக்கு தனியிடம் அமைத்து, மருந்து அளித்து பேண வேண்டும்.

    அஷ்டமி தோறும் பசுக்களை நீராட்டி, பூச்சூட்டி, அன்னமும் ஜலமும் ஊட்டி, தீப தூபம் காட்டி வணங்க வேண்டும்.

    வேனிற் காலத்தில் பசுக்களை சோலைகளிலும், மழைக்காலத்தில் மலைச்சாரல் வனங்களிலும், பனிக் காலத்தில் வெயில் மிகுந்த வெளிகளிலும் மேய்க்க வேண்டும்.

    • எந்த சிலையையும் அல்லது விக்கிரகத்தையும் நாம் தொடக்கூடாது.
    • அதற்கு பதிலாக உள்ளத்தால் அவர்களின் திருவடிகளை கண்களில் ஒற்றிக்கொள்ளலாம்.

    நவக்கிரகங்களை மட்டுமல்லாமல் திருக்கோவில்களில் கொடிமரத்தை கடந்து உள்ளே சென்ற பின்னர் அங்குள்ள அனைத்து சிலைகளும், விக்கிரகங்களும் மந்திரப்பிரயோகம் செய்து சக்தியூட்டப்பட்டவை ஆகும்.

    அவற்றை நாம் தொடுவதால் நம்மிடம் உள்ள அசுத்தம் அதன் சக்தியை பாதிக்கும்.

    எந்த சிலையையும் அல்லது விக்கிரகத்தையும் நாம் தொடக்கூடாது.

    அதற்கு பதிலாக உள்ளத்தால் அவர்களின் திருவடிகளை கண்களில் ஒற்றிக்கொள்ளலாம்.

    • நவக்கிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும்.
    • ஏனெனில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை.

    நவக்கிரகங்களை ஏழு சுற்றுகள் வலமாகவும், இரண்டு சுற்றுகள் இடமாகவும் சுற்ற வேண்டும்.

    ஏனெனில் சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி ஆகிய ஏழு கிரகங்களும் இடமிருந்து வலமாக சுற்றுபவை.

    எனவே இந்த ஏழு கிரகங்களை வலமாகச் சுற்ற வேண்டும். ராகுவும், கேதுவும் வலமிருந்து இடமாக சுற்றுபவை.

    எனவே அடுத்த இரண்டு சுற்றுகளை இடமாகச் சுற்ற வேண்டும். சிலர் அப்படி சுற்ற தேவையில்லை என்கிறார்கள்.

    மொத்தம் ஒன்பது முறை நவக்கிகரங்களை சுற்ற வேண்டும் எல்லா தெய்வங்களையும் வணங்கி முடித்துவிட்டு கடைசியாக நவக்கிரகங்களை சுற்றி வருவது தான் முறையாகும். இந்த ஐதீகம் தான் நலத்தைத் தரும்.

    • சுதர்சனம் என்னும் சக்கரத்தாழ்வார் பூஜையிலேயே நவக்கிரங்களும் இடம் பெற்று விடும்.
    • வைணவத்தில் தாயாருக்கும் பெருமாளுக்கும் மட்டுமே பெரும் இடம் தரப்பட்டிருக்கும்.

    சுதர்சனம் என்னும் சக்கரத்தாழ்வார் பூஜையிலேயே நவக்கிரங்களும் இடம் பெற்று விடும்.

    வைணவத்தில் தாயாருக்கும் பெருமாளுக்கும் மட்டுமே பெரும் இடம் தரப்பட்டிருக்கும்.

    நவக்கிரகங்கள் அவரவர் கர்ம பலனை வழங்கும் அதிகாரிகள் ஆவார்கள்.

    அவர்களுக்கு உண்டான மரியாதையும், மதிப்பும், பூஜையும் வைணவ தலங்களில் உண்டு.

    ஆனால் வெளிப்படையாக முன்நிறுத்தப்படுவதில்லை. அவர்களுக்கும் சேர்த்து அவர்களையும் ஆண்டளக்கும் பெருமாளே முன்னிறுத்தப்படுகிறார்.

    அவர் உருவத்திலேயே, இவர்களும் அடங்கி விடுகிறார்கள். அவதாரங்களில் கூட, நவகிரக அம்சங்கள் உண்டு.

    108 திவ்ய தேசங்களில் ஒன்பது திவ்யதேசங்கள், நவகிரகத் தலங்களாகச் சொல்லப்படுகின்றன. (திருநெல்வேலி&தூத்துக்குடியைச் சுற்றியுள்ள நவ திருப்பதிகள்)

    எனவே எந்த கிரக தோஷம் உள்ளதோ, அதற்கு ஏற்ப, உரிய தலத்துக்கு சென்று வழிபட்டு பலன் பெறலாம்.

    • சமீப ஆண்டுகளாக வைணவ நவகிரக தலங்களில் மீண்டும் உரிய முறைப்படி வழிபாடுகள் தொடங்கியுள்ளன.
    • இதனால் தற்போது தஞ்சை மண்டல வைணவ நவக்கிரக தலங்கள் புகழ் பெற்று வருகின்றன.

    சமீப ஆண்டுகளாக வைணவ நவகிரக தலங்களில் மீண்டும் உரிய முறைப்படி வழிபாடுகள் தொடங்கியுள்ளன.

    இதனால் தற்போது தஞ்சை மண்டல வைணவ நவக்கிரக தலங்கள் புகழ் பெற்று வருகின்றன. அந்த வைணவ நவக்கிரகங்கள் விபரம் வருமாறு:

    1. சூரியன்& ஸ்ரீசாரங்கபாணி ஆலயம், கும்பகோணம்.

    2. சந்திரன்& ஜெகன்னாதர் ஆலயம், ஸ்ரீநாதன்கோவில்.

    3. செவ்வாய்& சீனிவாச பெருமாள் கோவில், நாச்சியார் கோவில் (திருநறையூர்)

    4. புதன்& வல்வில் ராமர் ஆலயம் திருபுள்ளம்பூதங்குடி

    5. வியாழன்& ஆண்டளக்கும் அய்யன்பெருமாள் ஆலயம், திருஆதனூர்.

    6. சுக்கிரன்&கோலவல்வில்ராமர் ஆலயம், திருவெள்ளியங்குடி

    7. சனி& ஒப்பிலியப்பன் பெருமாள் ஆலயம், உப்பிலியப்பன் கோவில் (திருவிண்ணகர்)

    8. ராகு& கஜேந்திர வரதர் ஆலயம், கபிஸ்தலம்

    9. கேது& ஜெகத்ரட்சகன் கோவில், திருக்கூடலூர்

    (மாந்தி& திருச்சேறை)

    இந்த 9 வைணவத் தலங்களிலும் கிரக அமைப்புக்கு என்று சன்னதி இல்லை. பெருமாளே இங்கு கிரகங்களுக்கு உரிய அம்சங்களுடன் வீற்றிருந்து செயல்படுகிறார்.

    இதனால் பெருமாள் கோவில்களில் நவகிரகங்களுக்கு மதிப்பில்லை என்று பொருளாகி விடாது. அங்கும் நவகிரகங்களை குறித்து பூஜைகள், பஞ்சாங்க ஸ்ரவணம், ஹோமம் எல்லாம் உண்டு.

    • பொதுவாக சிவாலயங்களில் தான் நவக்கிரக தலங்கள் அனைத்தும் இருக்கும் என்பார்கள்.
    • ஆனால் வைணவ வழிபாட்டிலும் நவக்கிரக தலங்கள் உள்ளன என்பது நிறைய பேருக்கு தெரியாமல் உள்ளது.

    இந்த ஒன்பது கிரகங்கள் அமைந்துள்ள விதம், அதன் பலம் முதலியவை தான் ஒரு மனிதனின் தலை விதியை தீர்மானிக்கிறது என்று ஜோதிடம் கூறுகிறது.

    வைதீக பிரதிஷ்டை, ஆகமப் பிரதிஷ்டை என இரண்டு வடிவங்களில் நவக்கிரகங்களின் வரிசைகளை அமைப்பர். அதற்கேற்ப அனைவரும் பூஜை செய்யலாம்.

    பொதுவாக சிவாலயங்களில் தான் நவக்கிரக தலங்கள் அனைத்தும் இருக்கும் என்பார்கள்.

    ஆனால் வைணவ வழிபாட்டிலும் நவக்கிரக தலங்கள் உள்ளன என்பது நிறைய பேருக்கு தெரியாமல் உள்ளது.

    சைவ சமய நவகிரக தலங்கள் சோழ மண்டலத்தில் அமைந்திருப்பது போன்றே வைணவ நவகிரக தலங்களும் சோழ மண்டலத்தில் அமைந்துள்ளன.

    பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே வைணவ நவகிரக தலங்களில் சிறப்பான வழிபாடுகளை நமது முன்னோர்கள் வரையறுத்து வைத்திருந்தனர்.

    இடைபட்ட சில நூற்றாண்டுகளில் வைணவ நவக்கிரக தலங்களின் வழிபாடுகள் வழக்கொழிந்து போய் விட்டன.

    • இந்த முறையில் அமைந்திருப்பார்கள். ஒவ்வொரு நவக்கிரகமும் தனித்தலத்தில்தான் தன் வாகனத்துடன் காட்சியளிப்பார்கள்.
    • சிவாலயங்களில் இருக்கும் நவக்கிரகங்கள் பெரும்பாலும் தன் வாகனத்துடன் காட்சியளிப்பதில்லை.

    அனைத்து சிவாலங்களிலும், ஈசானிய மூலையில் (வடகிழக்கு) நவகிரகங்கள் மேற்கு திசை முகப்பாக அமைந்திருக்கும். நடுவில் இருக்கும் கிரகம் சூரியன்.

    சூரியனுக்கு கிழக்கில் சுக்கிரனும், மேற்கில் சனியும், வடக்கில் குரு, தெற்கில் செவ்வாய், வடகிழக்கில் புதன், தென்கிழக்கில் சந்திரன், வடமேற்கில் கேது, தென் மேற்கில் ராகுவும் அமைந்திருப்பர்.

    சூரியன் கிழக்கு முகமாக இருப்பார். சந்திரன்&மேற்கு, செவ்வாய்&தெற்கு, புதன்&வடக்கு, குரு&வடக்கு, சுக்கிரன்&கிழக்கு, சனி&மேற்கு, ராகு&தெற்கு, கேது&தெற்கு.

    இந்த முறையில் அமைந்திருப்பார்கள். ஒவ்வொரு நவக்கிரகமும் தனித்தலத்தில்தான் தன் வாகனத்துடன் காட்சியளிப்பார்கள்.

    சிவாலயங்களில் இருக்கும் நவக்கிரகங்கள் பெரும்பாலும் தன் வாகனத்துடன் காட்சியளிப்பதில்லை.

    நவக்கிரகங்களை சுற்றி வந்து வழிபடும்போது சூரியனே போற்றி, சந்திரனே போற்றி, செவ்வாயே போற்றி, புதனே போற்றி, குருவே போற்றி, சுக்கிரனே போற்றி, சனியே போற்றி, ராகு&கேதுவே போற்றி போற்றி என சொல்லிக் கொண்டே வழிபடலாம்.

    • சிவன் கோவில்களில் நவக்கிரக சன்னதி இருக்கும். அங்கு வழிபடுவது என்பது பொதுவான பரிகாரமாகத் தான் இருக்கும்.
    • தமிழ்நாட்டில் தஞ்சை மண்டலத்தில் நவக்கிரகங்களுக்கு தனித்தனி ஆலயங்கள் உள்ளன.

    சிவன் கோவில்களில் நவக்கிரக சன்னதி இருக்கும். அங்கு வழிபடுவது என்பது பொதுவான பரிகாரமாகத் தான் இருக்கும்.

    எனவே ஒவ்வொரு கிரகமும் தனி சன்னதியில் இருந்து அருளாட்சி செய்யும் கோவில்களுக்கு சென்று பரிகார பூஜை செய்தால் உரிய பலன்களுடன் கூடுதல் பலன்கள் உடனே கிடைக்கும்.

    தமிழ்நாட்டில் தஞ்சை மண்டலத்தில் நவக்கிரகங்களுக்கு தனித்தனி ஆலயங்கள் உள்ளன.

    தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் வட்டத்தில் திருமங்கலக்குடி அருகே சூரிய பகவானுக்கு சூரியனார் கோவில் உள்ளது.

    திருவையாறு தாலுகா திங்களூரில் சந்திரகிரகத்துக்கு தனிக்கோவில் உள்ளது.

    செவ்வாய் கிரகத்துக்கு வைத்தீஸ்வரன் கோவிலில் தனி கோவில் உள்ளது.

    புதனுக்கு திருவென்காட்டிலும், வியாழன் (குரு) கிரகத்துக்கு ஆலங்குடியிலும், சுக்கிரனுக்கு (வெள்ளி) கஞ்சனூரிலும் சனி கிரகத்துக்கு திருநள்ளாறிலும், ராகுவுக்கு திருநாகேசுவரத்திலும், கேது பகவானுக்கு கீழப் பெரும் பள்ளத்திலும் கோவில்கள் அமைந்துள்ளன.

    ×