என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம்.
    • புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. அதனால்தான் திருவெண்காடு தலத்தில், புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சார்த்தப்படுகிறது.

    புதன் கிழமையில், புதன் ஓரையில் மற்றும் புதன் பகவானுக்கான ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திர நாட்களில், புதன் பகவானை வீட்டில் விளக்கேற்றி வழிபடுவது மிகுந்த வலிமை மிக்கது என்றும் தொழிலில் உயரலாம் என்றும் சிலாகிக்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    திருவெண்காடு திருத்தலம், நவக்கிரக திருத்தலங்களில் புதன் பகவானுக்கு உரிய திருத்தலம். மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரம் செல்லும் வழியில் உள்ளது சீர்காழி. இங்கிருந்து கிளை பிரிந்து செல்லும் சாலையில் சென்றால், திருவெண்காடு திருத்தலத்தை அடையலாம்.

    புதன் எனும் சொல் புத்தி என்பதில் இருந்து வந்ததாகச் சொல்வர். சந்திரனின் மைந்தன் புதன். இருவரும் திருவெண்காடு தலத்தில் தவமிருந்து, சிவனாரின் அருளைப் பெற்று, தங்களின் பாவங்களையும் தோஷங்களையும் போக்கிக்கொண்டதாக விவரிக்கிறது ஸ்தல புராணம்.

    சந்திரன் நம் மனதை ஆள்பவன். மனதின் எண்ண ஓட்டத்துக்குக் காரணகர்த்தா சந்திர பகவான். புத்திக்கூர்மையைத் தருபவன் புதன் பகவான். நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்கு உரிய தலம் திங்களூர். புதன் பகவானுக்கு உரிய தலம் திருவெண்காடு.


    புதன் பகவானை வழிபடுவதற்கு உகந்த கிழமை புதன்கிழமை. புத பகவானுக்கு உரிய ராசி - மிதுனம், கன்னி. இதேபோல், புதன் பகவானுக்கான திசை வடகிழக்கு என்றும் புதன் பகவானின் அதிதேவதை மகாவிஷ்ணு என்றும் பிரத்யதி தேவதை ஸ்ரீமந் நாராயணன் என்றும் விவரிக்கிறது ஜோதிட சாஸ்திரம்.

    புதன் பகவானுக்கு உரிய நிறம் பச்சை. அதனால்தான் திருவெண்காடு தலத்தில், புதன் பகவானுக்கு பச்சை வஸ்திரம் சார்த்தப்படுகிறது. புதன் பகவானின் வாகனம் குதிரை. பச்சைப்பயறு புதன் பகவானுக்கு விருப்பமான நைவேத்தியம் என்றும் வெண்காந்தள் மலர் கொண்டு அர்ச்சிப்பது சிறப்பு என்றும் வஸ்திரம் பச்சை நிற வஸ்திரம் என்றும் அவருக்கான ஆபரணம் மரகதம் என்றும் அவருக்கு பாசிப்பருப்புப்பொடி கலந்த அன்னத்தால் நைவேத்தியம் செய்யவேண்டும் என்றும் புதன் பகவானுக்கான உலோகம் பித்தளை என்றும் விவரிக்கிறது திருவெண்காடு ஸ்தல புராணம்.

    ஓம் கஜத்துவ ஜாய வித்மஹே

    சுக ஹஸ்தாய தீமஹி

    தன்னோ புத : பிரசோதயாத் !

    எனும் மந்திரத்தைச் சொல்லி புதன் பகவானை வழிபடுங்கள் என்கிறார் வைத்தியநாத குருக்கள்.

    புதன் பகவான் உச்சம் பெற்று ஆட்சி செய்யும் மாதமாக புரட்டாசியையும் ஆட்சி பெறும் மாதமாக ஆனி மாதத்தையும் சொல்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். வீட்டில் இருந்துகொண்டு, புதனின் நட்சத்திரங்களான ஆயில்யம், கேட்டை, ரேவதி ஆகிய நட்சத்திர நாட்களில் வழிபடலாம்.

    இதேபோல், புதன் கிழமைகளில் புதன் ஓரையில் வழிபடுவது மிகுந்த பலன்களைத் தரவல்லது. புதன் கிழமையன்று புதன் ஓரை என்பது காலை 6 முதல் 7 மணி வரையும் பின்னர் இரவு 8 முதல் 9 மணி வரையும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள்.

    எனவே, பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். அத்தனை பெருமை மிக்க புதன் கிழமைகளில், புதன் ஓரைகளில், வீட்டில் விளக்கேற்றி, புதன் பகவானை மனதார வேண்டிக்கொண்டால், கல்வியில் சிறந்துவிளங்கலாம். வியாபாரத்தில் இதுவரை இருந்த நஷ்ட நிலை மாறி, லாபம் பெருகும். திருமணத்தடைகள் நீங்கும். சந்தான பாக்கியம் கிடைக்கப் பெறலாம். குடும்பத்தில் ஒற்றுமையும் அமைதியும் நிலவும் என்கிறார்கள் பக்தர்கள்.

    • திருத்தணி முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம்.
    • காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாளுக்கு ஆலும் பல்லக்கில் தீர்த்தவாரி

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு வைகாசி-16 (புதன்கிழமை)

    பிறை : தேய்பிறை

    திதி : சஷ்டி நண்பகல் 1.26 மணி வரை பிறகு சப்தமி

    நட்சத்திரம் : திருவோணம் காலை 8.36 மணி வரை பிறகு அவிட்டம்

    யோகம் : சித்த, மரணயோகம்

    ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம் : வடக்கு

    நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பாலாபிஷேகம். காஞ்சிபுரம் ஸ்ரீ வரதராஜப் பெருமாளுக்கு ஆலும் பல்லக்கில் தீர்த்தவாரி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி சமீபம் திருப்புளிங்குடி மூலவர் பூமிபாலகர், மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீகோதண்டராம சுவாமி காலை திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-ஆக்கம்

    ரிஷபம்-ஆரோக்கியம்

    மிதுனம்-வரவு

    கடகம்-செலவு

    சிம்மம்-உதவி

    கன்னி-பரிவு

    துலாம்- பாசம்

    விருச்சிகம்-பண்பு

    தனுசு- உயர்வு

    மகரம்-பாராட்டு

    கும்பம்-பயணம்

    மீனம்-இன்பம்

    • அனுமனும், விரைவாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதாலேயே அவரின் அனுமதி பெறாமல் சிவலிங்கம் எடுக்க முனைந்ததை கூறி மன்னிப்பு கேட்டார்.
    • ஸ்ரீகால பைரவரும் மகிழ்ச்சி அடைந்து சிவலிங்கத்தை அனுமனுக்கு கொடுத்து அனுப்பினார்.

    காசியின் காலபைரவராகிய தன்னிடம் அனுமதி ஏதும் பெறாமல் அனுமன் லிங்கத்தை எடுக்க முயல்வது கண்டு கோபம் அடைந்த ஸ்ரீகால பைரவர், என் அனுமதி இல்லாமல் எப்படி நீ சிவலிங்கத்தை எடுக்கலாம் என்று அனுமனை தடுத்தார்.

    முதல் முறை சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டு போகும் போதும் இந்த காலபைரவர் ஏதோ சூழ்ச்சி செய்து காளிங்க மடுவில் தடுத்துவிட்டார்.

    இப்போது மறுபடியும் தன்னுடைய முயற்சிக்கு தடை செய்கிறார் என்று கோபம் அடைந்த அனுமன் கால பாரவரை தாக்கத் தொடங்கினார்.

    ஆணவத்தால் செய்த போராகையால் அனுமனுக்கு தோல்வியே கிட்டுகிறது.

    அந்த சமயத்தில் அங்கு வந்த முனிவர்கள் காலபைரவரை வணங்கி, "உலக நன்மைக்காகவும், ராமனின் பெருமைக்காகவும் இந்த சிவலிங்கம் தென்னாடு போக அனுமதிக்க வேண்டும்" என்று வேண்டினார்கள்.

    அனுமனும், விரைவாக எடுத்துச் செல்ல வேண்டும் என்பதாலேயே அவரின் அனுமதி பெறாமல் சிவலிங்கம் எடுக்க முனைந்ததை கூறி மன்னிப்பு கேட்டார்.

    ஸ்ரீகால பைரவரும் மகிழ்ச்சி அடைந்து சிவலிங்கத்தை அனுமனுக்கு கொடுத்து அனுப்பினார்.

    தன் அனுமதி பெறாது லிங்கத்தை எடுக்க முயன்ற அனுமனுக்கு துணை புரிந்ததால் கருடன் காசி நகர எல்லைக்குள் பறக்கக்கூடாது என்றும், சுயம்புலிங்கத்தை அனுமனுக்கு உறுதி செய்த பல்லிகள் காசியில் இருந்தாலும் ஒலிக்கக்கூடாது என்றும் ஸ்ரீகால பைரவர் சாபமிட்டார்.

    அவரின் அந்த சாபப்படியே இன்றும் காசியின் நகர எல்லையில் கருடன் பறப்பதில்லை. அங்கே பல்லிகளும் ஒலிப்பதில்லை.

    • காரணம் காசியில், கங்கைக்கரையில் எங்கு பார்த்தாலும் லிங்கங்களாகவே காட்சி அளித்தன.
    • இந்த லிங்கங்களில் எது சுயம்புலிங்கம் என்பதை கண்டு பிடிக்க முடியாமல் அனுமன் திணறினார்.

    "நான் கொண்டு வந்த லிங்கம் இங்கே வேரூன்றி நின்றதற்கு இந்த காளிங்க மடுகு தான் காரணம்.

    இது வற்றியிருந்தால் நான் லிங்கத்தை மாய சிறுவனிடம் கொடுக்காமல், தட்டுத்தடுமாறி சற்று தாமதமாகவாவது ராமேஸ்வரம் போய் சேர்ந்திருப்பேனே என்று மடுகின்மேல் ஆஞ்சநேயருக்கு கடும் கோபம் வந்தது.

    அருகில் இருந்த காரிகிரி என்ற மலையைப் பெயர்த்தெடுத்தார்.

    அந்த மடுகு மீது போட்டு "இந்த மலைப்பிரதேசம் இனி வனப்பிரதேசமாகப் போகக்கடவது என்று சபித்தார்.

    அந்த காரிகிரி மலையே இப்போது நாம் ராமகிரியில் காணும் பெரிய மலை.

    ராமேசுவரத்தில் எல்லோரும் காசி லிங்கத்திற்காக காத்திருப்பார்கள் என்பதால் நேரத்தை வீணாக்காமல் ஆஞ்சநேயர் மறுபடியும் காசிக்கு சென்றார்.

    இந்த முறை காசியில் தெரிந்த காட்சிகள் அனுமனுக்கு ஆச்சரியம் அளித்தது.

    காரணம் காசியில், கங்கைக்கரையில் எங்கு பார்த்தாலும் லிங்கங்களாகவே காட்சி அளித்தன.

    இந்த லிங்கங்களில் எது சுயம்புலிங்கம் என்பதை கண்டு பிடிக்க முடியாமல் அனுமன் திணறினார்.

    அப்போது ஒரு குறிப்பிட்ட லிங்கத்திற்கு மேலே கருடன் வட்டமிட்டது.

    அதே நேரம் பல்லியும் நல்லுரை கூறியது. இந்த இரு குறிப்புகளினால் அதுவே சுயம்புலிங்கம் என்பதை உணர்ந்த அனுமன் அதனை எடுக்க முயன்றார்.

    • ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும்.
    • சிலரெல்லாம் எல்லைத் தெய்வங்களோட படம், ஆயுதங்களோடு இருக்கக்கூடிய படத்தை வைத்திருப்பார்கள்.

    கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பதுதான் அதனுடைய அர்த்தம். ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான். அந்தத் தெருவிலேயே பெரிய வீடு கட்டிவிட்டார்கள். அதனால் அந்தத் தெருக்காரர்கள் எல்லாம் போகும் போதெல்லாம் திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போவார்கள். அப்பொழுது என்ன செய்ய வேண்டுமென்றால், அவர்களுடைய ஒட்டுமொத்த சிந்தனையும், பார்வையும் எதிலாவது படும்படி ஒரு பொருளை அங்கு வைக்க வேண்டும். இதுதான் முக்கியம்.

    சிலரெல்லாம் வாசலில் பெரிய பாத்திரத்தில் நீர் விட்டு மலர்களையெல்லாம் தூவி வைப்பார்கள். பார்ப்பவர்களுக்கு அதிலேயே அவர்களுடைய சிந்தனை போய்விடும். அந்த வீட்டில் உள்ளவர்களைப் பற்றிய சிந்தனை வராமல் போய்விடும். இதுபோன்ற எளிமையான சில பரிகாரங்களை மேற்கொள்வது நல்லது. இதில் குறிப்பாக தாவரங்களுக்கு கண் திருஷ்டியை எடுக்கக் கூடிய குணங்கள் நிறைய உண்டு. தொங்கும் தோட்டம் போன்றதெல்லாம் அமைக்கலாம். ரோஜா முட்கள் உள்ள செடி. அதுபோன்று முள் செடிகள் இருக்கும்படியும் வைக்கலாம். இந்த மாதிரி எளிய பரிகாரங்கள் நிறைய இருக்கிறது.

    சிலரெல்லாம் பூசணிக்காயை கட்டித் தொங்க விடுவார்கள். சிலர், நாக்கு வெளியே தொங்கவிட்டுக் கொண்டிருக்கிற பொம்மையை வைத்திருப்பார்கள். சிலர் பிள்ளையாரை வைத்திருப்பார்கள். இன்னும் சிலர் கற்றாழையைக் கட்டித் தொங்க விட்டிருப்பார்கள். இதுபோன்று சிலவற்றை செய்யலாம். இதெல்லாம் பயனுள்ளதாக இருக்கும். சாதாரணமாகப் பார்த்தீர்களென்றால் பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கண் திருஷ்டிக்கு நல்ல பாதுகாப்பாக இருப்பார். சிலரெல்லாம் எல்லைத் தெய்வங்களோட படம், ஆயுதங்களோடு இருக்கக்கூடிய படத்தை வைத்திருப்பார்கள்.

    ஒட்டுமொத்த பார்வையையும், சிந்தனையையும் திசை திருப்புவதற்கு ஏதேனும் ஒரு பொருளை வாசலிலேயே தொங்கவிடுவது நல்லது. அது எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். குறிப்பாக இயற்கைத் தாவரங்கள், செடிகொடிகள் போன்றவற்றிற்கு ஆதிக்கம் அதிகமாக இருக்கும். வாழைக்கன்று நடும் அளவிற்கு இடமிருந்தால் அது மிக மிகச் சிறப்பாக இருக்கும். ஏனென்றால் வாழை ஒவ்வொரு விநாடியும் துளிர்த்துக் கொண்டே இருக்கும். எந்ததெந்த திருஷ்டி இருக்கிறதோ அதை அப்பப்பவே களைந்துவிடும். வாழைக்கு அந்த அருங்குணம் உண்டு. அதை வைத்தால் இன்னும் நல்லது.

    • இந்த தலம் ஸ்ரீ கால பைரவரின் ஷேத்திரம் ஆயிற்றே அவர்தான் மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து தன்னை ஏமாற்றி விட்டார் என்று தெரிந்து கொண்டார்.
    • தான் கொண்டு வந்த சுயம்புலிங்கத்தை அவரோடு வைத்துக் கொள்ளவே இத்தனை நாடகங்கள் ஆடி இருக்கின்றார்.

    இதற்குள் மதியம் நெருங்கி விட்டது. ஆதவனும் தன் வெப்பத்தை தணித்துக் கொண்டார்.

    புயலாக அடித்த காற்று படிப்படியாக குறைந்து தென்றலாக மாறியது. திருக்காரிக்கரை கிராம மக்களும் தமது இல்லங்களை விட்டு வெளிவரத் தொடங்கினர்.

    இந்த மாறுதல்களையெல்லாம் கவனித்த மாருதி, இவையெல்லாம் சாதாரண மாயைகள் அல்ல. ஒரு தெய்வத்தின் லீலைகள் என்பதை புரிந்து கொண்டார்.

    அவர் யோசித்த போது, உண்மைகள் யாவும் அவர் ஞான அறிவிற்கும் புலனானது.

    இந்த தலம் ஸ்ரீ கால பைரவரின் ஷேத்திரம் ஆயிற்றே. அவர்தான் மாடு மேய்க்கும் சிறுவனாக வந்து தன்னை ஏமாற்றி விட்டார் என்று தெரிந்து கொண்டார்.

    தான் கொண்டு வந்த சுயம்புலிங்கத்தை அவரோடு வைத்துக் கொள்ளவே இத்தனை நாடகங்கள் ஆடி இருக்கின்றார்.

    ராமேஸ்வரத்தில் ஸ்ரீராமர் கையால் பிரதிஷ்டையாக வேண்டிய லிங்கம். அதே லக்கனத்தில் கால பைரவர் கையால் திருக்காரிக் கரையில் பிரதிஷ்டையாகி விட்டதே.

    அங்கு ஸ்ரீராமர் தன் வரவை எதிர்பார்த்து ஆவலுடன் காத்திருப்பாரே என்று பலவாறு நினைத்து ஆத்திரமும் துக்கமும் அடைந்தார்.

    • முயற்சியில் தோற்றுப்போன ஆஞ்சநேயர் தனக்கு ஏற்பட்ட கர்வ பங்கத்திற்கு வெட்கப்பட்டு லிங்கத்தைப் பக்தியுடன் வலம் வந்தார்.
    • மன்னிக்கக் கோரி பிரார்த்தித்து நமஸ்கரித்தார்.

    சிறுவன் குரல் கேட்டு திடுக்கிட்ட ஆஞ்சநேயர் விரைந்து கரையேறினார்.

    சிறுவன் நின்ற இடத்துக்கு ஓடி வந்தார். அங்கு "பூமியில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    "இப்படி செய்து விட்டானே இந்த சிறுவன்" என்று கோபப்பட்டார்.

    கோபம் கண்ணை மறைக்க, தான் ஏற்கனவே காசியில் இருந்து பெயர்த்தெடுத்து வந்த லிங்கம் தானே இது என்ற அலட்சிய உணர்வு ஏற்பட்டது.

    சஞ்சீவி மலையையே பெயர்த்தெடுத்த தனக்கு, இந்த சிவலிங்கம் எம்மாத்திரம் என்ற ஆணவத்தாலும், தன் பலமிக்க நீண்ட வாலினால் அந்த சுயம்பு சிவலிங்கத்தை சுற்றி இழுத்தார்.

    ஆனால் லிங்கம் அசையவில்லை. சற்றும் லிங்கம் அசையாதிருக்கவே சுற்றியிருந்த வாலை சற்று இறுக்கி, பலமாக இழுத்தார்.

    ஆனால் லிங்கமோ இருந்த இடத்தை விட்டுத் துளி கூட நகரவே இல்லை.

    முயற்சியை கைவிடாத ஆஞ்சநேயர் தன் முழு பலத்தையும் பிரயோகித்து இழுத்தபோது கூட போனால் போகிறது பாவம் என்று பரிதாபப்பட்டுப் பரிகசிப்பது போல லிங்கம் சிறிது வடக்குப் புறமாகச் சாய்ந்ததே தவிர பெயர்ந்து வரவில்லை.

    முயற்சியில் தோற்றுப்போன ஆஞ்சநேயர் தனக்கு ஏற்பட்ட கர்வ பங்கத்திற்கு வெட்கப்பட்டு லிங்கத்தைப் பக்தியுடன் வலம் வந்தார்.

    மன்னிக்கக் கோரி பிரார்த்தித்து நமஸ்கரித்தார்.

    • அதற்கு அச்சிறுவனும் ஐயா, தாகத்தால் அவதிப்படும் தங்களுக்கு நான் அவசியம் உதவுகிறேன். ஆனால் நானோ சிறுவன்.
    • இவ்வளவு பெரிய சிவலிங்கத்தை என்னால் சுமக்க முடியுமா? என்பதுதான் யோசனையாக இருக்கிறது என்று இழுத்தான்.

    இதுதான் தக்க சமயம் என உணர்ந்த ஸ்ரீகால பைரவர் தன் அஷ்டபுஜங்கள் (எட்டு கரங்கள்) சுன வாகனம் (நாய் வாகனம்) முதலியவற்றை கைவிட்டு ஒரு மாடு மேய்க்கும் சிறுவனாக தன்னை மாற்றிக் கொண்டு சில பசுக்களையும் சிருஷ்டித்துக் கொண்டு அவற்றை மேய்ப்பவன் போல் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு முன்பாக நடமாடினார்.

    அச்சிறுவனைக் கண்ட ஆஞ்சநேயர், "தம்பி, தாகத்தால் தவித்துக் கொண்டிருக்கும் எனக்கு தண்ணீர் இருக்கும் இடத்தைக் காண்பிப்பாயாக" என்று கேட்டுக் கொண்டார்.

    சிறுவன் வடிவில் இருந்த சேத்திர பாலரும் தன்னுடன் மாருதியை, காளிங்க மடுகின் கரைக்கு அழைத்துச் சென்றார்.

    காளிங்க மடுகு, சுவையான தண்ணீருடன் கடல் போல் நிரம்பி இருப்பதைக் கண்ட ஆஞ்சநேயர் மிகுந்த ஆனந்தம் அடைந்தார்.

    அதிக தாகத்தால் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஆஞ்சநேயர் மனமகிழ்ந்து, "சிறுவனே, இந்த சுயம்பு லிங்கத்தைச் சற்று நேரம் வைத்திருப்பாயாக.

    இதைக் கீழே வைக்கக்கூடாது.

    நான் தாக சாந்தி செய்து கொண்டு வந்து வாங்கிக் கொள்கிறேன்" என்று கூறினார்.

    அதற்கு அச்சிறுவனும் ஐயா, தாகத்தால் அவதிப்படும் தங்களுக்கு நான் அவசியம் உதவுகிறேன். ஆனால் நானோ சிறுவன்.

    இவ்வளவு பெரிய சிவலிங்கத்தை என்னால் சுமக்க முடியுமா? என்பதுதான் யோசனையாக இருக்கிறது என்று இழுத்தான்.

    அதற்கு மாருதி, "பயப்படாதே, இது பாரமாக இல்லாதவாறு யான் உனக்கு வரம் அளிக்கிறேன்" என்று கூறினார்.

    அந்த தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த சிறுவன் வடிவில் இருக்கும் பைரவர் மாருதியிடம் இருந்து அந்த சிவலிங்கத்தை வாங்கிக் கொண்டார்.

    "ஐயா தாங்கள் விரைவில் வந்து சிவலிங்கத்தை வாங்கிக் கொள்ள வேண்டும்.

    என்னால் அதிக நேரம் பாரம் தாங்க முடியாது. அப்படி தாங்க முடியாமல் போனால் சிவலிங்கத்தைக் கீழே வைத்துவிட நேரிடும்" என்று தன் எண்ணத்தை மறைமுகமாகத் தெரிவித்தார்.

    தான் வரமளித்தும் சிறுவன் பயப்படுகிறானே என்று நினைத்த மாருதி விரைவில் சிவலிங்கத்தை வாங்கிக் கொள்ளவே எண்ணினார்.

    ஏனெனில், முகூர்த்த லக்னம் வேறு நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தவராய் மடுகில் இறங்கி, தாகம் தீரும் வரை நீரை அருந்தினார். பின்னர் "அப்பாடா என்று ஒரு ஆசுவாசப் பெருமூச்சு விட்டார்.

    அவசரமாக சற்றே நீராடிக் களைப்பையும் போக்கிக் கொண்டார்.

    இதற்குள் அந்த சிறுவன் வடிவில் இருந்த கால பைரவர், தான் திட்டமிட்டபடியே, அந்த மடுகுக் கரையில் ஏற்கனவே நிர்ணயம் செய்திருந்த இடத்தில் அந்த சுயம்பு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து விட்டார்.

    "பாரம் தாங்க முடியாததால் லிங்கத்தை பூமி மீது வைத்து விட்டேன்" என்று உரக்கக் கூறி விட்டு மறைந்து விட்டார்.

    • அங்கிருக்கும் சுயம்பு லிங்கங்களில் ஒரு பெரிய சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டார்.
    • பிறகு ஆகாய மார்க்கத்தில் ராமேஸ்வரத்தை நோக்கிப் பயணமானார்.

    காசி பட்டணத்திற்கு சென்ற அனுமான் அன்றிரவு அங்கு உறங்கி மறுநாள் ஆதவன் உதிக்கும் முன்னரே எழுந்தார்.

    புனித கங்கையில் நீராடி, பக்தி சிரத்தையுடன் ஸ்ரீ காசி விஸ்வநாதரை தரிசித்தார்.

    அங்கிருக்கும் சுயம்பு லிங்கங்களில் ஒரு பெரிய சிவலிங்கத்தை எடுத்துக் கொண்டார்.

    பிறகு ஆகாய மார்க்கத்தில் ராமேஸ்வரத்தை நோக்கிப் பயணமானார்.

    கால பைரவருக்கு கொடுத்த வாக்குப்படி ஆதவன் உதயமாகி தன் பூரண சக்தியுடன் பிரகாசிக்கத் தொடங்கினார்.

    வாயு பகவானும் ஒப்புக் கொண்டபடி தென் திசையில் இருந்து வடதிசை நோக்கிப் பிரளயகாலப் புயல் போல் வீசத் தொடங்கினார்.

    ங்கா தேவியும் ஆஞ்சநேயர் கண்களுக்கு எங்கும் புலப்படாமல் மறைந்து போனார்.

    சுட்டுப் பொசுக்குகின்ற சூரிய வெப்பத்தின் கொடுமை, வேகத்தைக் குறைக்கும் பலமான எதிர்க்காற்று, தன் தோளின் மேல் இருக்கும் சிவலிங்கத்தின் பாரம் இவைகளினால் ஆஞ்சநேயர் விரைவில் களைத்துப் போனார்.

    தாங்க முடியாத தாகத்தோடு குடிதண்ணீரைத்தேடி அலைந்தார்.

    ஆகா, இன்று என்னவாயிற்று. நேற்று இதே வழியாக செல்லும் போது ஆறுகள், குளங்கள், கிணறுகள் எல்லாம் நீர் நிரம்பியிருந்தனவே.

    ஒருநாள் இரவுக்குள் எல்லாம் எப்படி வற்றிப்போயின?

    என்றுமில்லாத அளவில் இன்று ஏன் ஆதவன் இப்படி சுட்டுப் பொசுக்குகிறான்?

    எதிர் காற்றும் பலமாக இருக்கிறதே? முன்பு சஞ்சீவி மலையைப் பெயர்த்தெடுத்து வரும்பேது கூட இத்தனை களைப்பு எனக்கு ஏற்படவில்லையே என்றெல்லாம் பலவாறாக சிந்தித்தப்படியே திருக்காரிக்கரை கிராமத்தை வந்தடைந்தார் மாருதி.

    • திட்டத்தின் முதல் கட்டமாக சூரிய பகவானை அணுகினார் கால பைரவர்.
    • “நாளை காலை முதல் மதியம் வரை நீ உனது பரிபூரண சக்தியைப் பிரயோகித்துப் பிரகாசிக்க வேண்டும்” என்று ஆணையிட்டார்.

    திட்டத்தின் முதல் கட்டமாக சூரிய பகவானை அணுகினார் கால பைரவர்.

    "நாளை காலை முதல் மதியம் வரை நீ உனது பரிபூரண சக்தியைப் பிரயோகித்துப் பிரகாசிக்க வேண்டும்" என்று ஆணையிட்டார்.

    அடுத்து கங்கா தேவியிடம் கால பைரவர் சென்றார்.

    "பவானி நாளை சூர்யோதயம் முதல் மதியம் வரை காசியில் இருந்து திருக்காரிக்கரை வரை உள்ள பிரதேசத்தில் நீ ஆஞ்சநேயன் கண்களுக்கு மதியத்திற்கு பிறகே புலப்பட வேண்டும்" என்று உத்தரவிட்டார்.

    பிறகு பைரவர் வாயு பகவானிடம் சென்றார்.

    "வாயு தேவா, நாளை காலை முதல் மதியம் வரை திருக்காரிக்கரையில் இருந்து காசி வரை வடதிசை நோக்கி, உனது முழு பலத்தையும் பிரயோகித்துப் பெரும் புயலாக வீசவேண்டும் என்று பைரவர் கேட்டுக் கொண்டார்.

    அது தன் மைந்தனுக்கு எதிரான சூழ்ச்சி என்பதை அறியாத வாயு பகவானும் அப்படியே செய்கிறேன் என்று ஒப்புக் கொண்டார்.

    இப்படியாக தன்னுடைய திட்டத்திற்கு பலமான அஸ்திவாரத்தை போட்டுக் கொண்ட பைரவர் அன்று இரவே, தன் இருப்பிடமாகிய திருக்காரிக்கரை கிராமவாசிகளின் கனவில் தோன்றி, "நாளை விடியற்காலை முதல் மதியம் வரை யாரும் தங்கள் இல்லங்களை விட்டு வெளியே வர வேண்டாம்" என்று கட்டளையிட்டார்.

    • ராமர் கட்டளையை சிரமேற்கொண்டு, அக்கணமே காசியை நோக்கி ஆகாய மார்க்கத்தில் திருக்காரிக்கரை வழியாக பறந்தார் மாருதி.
    • திருக்காரிக்கரை அதாவது இன்றைய ராமகிரி கிராமத்தை கால பைரவ சேத்திரம் என்றும் அழைப்பது உண்டு.

    ராமர் கட்டளையை சிரமேற்கொண்டு, அக்கணமே காசியை நோக்கி ஆகாய மார்க்கத்தில் திருக்காரிக்கரை வழியாக பறந்தார் கடமை தவறாத கர்ம வீரரான மாருதி.

    திருக்காரிக்கரை அதாவது இன்றைய ராமகிரி கிராமத்தை கால பைரவ சேத்திரம் என்றும் அழைப்பது உண்டு.

    ஏனெனில் ஸ்ரீ கால பைரவ மூர்த்தி பிரதான கடவுளாக எழுந்தருளி பாலித்துக் கொண்டிருக்கிறார்.

    இப்போது சிவலிங்க வடிவம் போல் தோற்றம் தரும் பெரியமலை அந்நாளில் அங்கு இல்லை.

    அந்த இடத்தில் காளிங்கு மடுகு என்ற பெரிய ஒரு நீர்த்தேக்கம் இருந்தது.

    அதன் தென்கரையோரம் தன் பததினி ஸ்ரீ காளிகாதேவியுடன் எழுந்தருளி இருக்கும் ஸ்ரீகால பைரவர் ஆகாய மார்க்கத்தில் போகும் ஆஞ்சனேயரைக் கண்டு தன் ஞான திருஷ்டியால் மாருதி செல்லும் நோக்கத்தை உணர்ந்து கொண்டார்.

    காசியில் இருந்து ஆஞ்சநேயர் கொண்டு வர இருக்கும் சுயம்பு லிங்கத்தை தன்னுடைய சேத்திரமாகிய திருக்காரிக்கரையில் தன் அருகிலேயே வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார்.

    அதற்கு ஒரு நல்ல திட்டம் செய்தார்.

    • இதனால் கோபம் கொண்ட ஸ்ரீராமர் அவனை யுத்தத்திலே வதம் செய்து தனது தேவியை மீட்டுக் கொண்டு வந்தார்.
    • பிறகு வானர பரிவாரங்களோடு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தார்.

    திரேதாயுகத்திலே ஸ்ரீமன் நாராயணன் ராமாவதாரம் எடுத்து வந்தபோது, சீதா தேவியை இலங்கை வேந்தன் ராவணாசுரன் கவர்ந்து சென்று, சிறை வைத்தான்.

    இதனால் கோபம் கொண்ட ஸ்ரீராமர் அவனை யுத்தத்திலே வதம் செய்து தனது தேவியை மீட்டுக் கொண்டு வந்தார்.

    பிறகு வானர பரிவாரங்களோடு ராமேஸ்வரம் வந்து சேர்ந்தார்.

    பிரம்ம அம்சத்தில் பிறந்தவனும், வேதங்களை நன்கு பயின்றவனும், சிறந்த சிவபக்தனுமாகிய ராவணனை வதம் செய்த காரணத்தால் ராமருக்கு பிரம்மகத்தி தோஷம் ஏற்பட்டு இருந்தது.

    அந்த தோஷத்துடன் அயோத்தி சென்று, முடிசூடிக் கொண்டு, அரசாள்வது முறையாகாது என்றும் குல குருவான வசிஷ்டர் முதலான முனிவர்கள் கூறினர்.

    எனவே ராமேஸ்வரத்தில் அதற்கு ராமர் பரிகாரம் செய்ய வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.

    இதற்காக காசியில் இருந்து ஒரு சுயம்பு (இயற்கையாக தோன்றியது) லிங்கத்தைக் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து பூஜித்து, பிரம்ம கத்தி தோஷத்தில் இருந்து விடுபட ஸ்ரீராமர் முடிவு செய்தார்.

    ஆஞ்சனேய சுவாமியை அருகில் அழைத்து, "வாயுபுத்திரா, இன்றே நீ காசித்தலம் செல்வாயாக என்று பணித்தார்.

    ×