என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • பகைவர் தொல்லைகள் அறவே தீரும். கெட்டவர்களின் சேர்க்கை இல்லாது போகும். தீவினைகள் நெருங்காது.
    • அனைத்து தோஷங்களும் விலகி ஓடும். நல்ல எண்ணங்கள் பிறக்கும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் கைகூடும்.

    பில்லி, சூனியம், ஏவல், செய்வினைகள் போன்ற அனைத்து தீயவினைகளையும் தீர்ப்பவள் பிரத்யங்கரா தேவி.

    இவள் பத்ரகாளியின் சொரூபம்.

    பிரத்யங்கரா தேவி பிரத்யங்கரஸ், பால பிரத்யங்கரா, பிராம்பி பிரத்யங்கரா, ருத்திர பிரத்யங்கரா, உக்கிர பிரத்யங்கரா, அதர்வண பிரத்யங்கரா,பிராம்மி பிரத்யங்கரா, சிம்ம முகக் காளி, ஸ்ரீ மகா பிரத்யங்கரா என ஒன்பது விதமாக வழிபடப்படுகிறாள்.

    கலியுகக் கடவுளான இவளை உபாசிப்பவர்கள் கல்வி, வேள்விகளில் சிறந்து விளங்குவர்.

    இவளை பூஜிப்பவரை, தம்மை பூஜிப்பவரகளாகவே தேவர்கள் எண்ணி அருள்பாலிப்பர்.

    தேவியை பூஜிப்பவர் பிரம்மன், விஷ்ணு, சிவன், கௌரி, லஷ்மி, விநாயகர் அனைவரையும் பூஜித்த பலன்களை பெறுவர்.

    உக்கிர தெய்வமாக காணப்பட்டாளும் இவளது திருவுருவத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபடலாம்.

    இவளது மூல மந்திரத்தை ஜெபித்து துவங்கி இவளது தியான மந்திரம், அஷ்டகம், பஞ்சகம் சொல்லி தினமும் வழிபட குடும்பத்தில் அமைதி நிலவும்.

    பகைவர் தொல்லைகள் அறவே தீரும். கெட்டவர்களின் சேர்க்கை இல்லாது போகும். தீவினைகள் நெருங்காது.

    அனைத்து தோஷங்களும் விலகி ஓடும்.

    நல்ல எண்ணங்கள் பிறக்கும். அஷ்ட ஐஸ்வர்யங்களும் கைகூடும்.

    அமாவாசை, பௌர்ணமி தினங்களில் நடைபெறும் யாகத்தில் கலந்து கொள்வதும், இவளுக்கு மிகவும் பிரீத்தியான மிளகாயுடன் தரிசனம் செய்வதும் மிகச் சிறந்த பலன்களை தரும்.

    உக்கிர தேவியான இவளுக்கு மிளகாய், மிளகு போன்ற காரமான பொருட்கள் மிகவும் பிடித்தமானது.

    • இதனை கண்ட தேவர்கள் அஞ்சி நடுங்கி பரமேஸ்வரனை தஞ்சமடைந்தனர். சிவ பெருமான் சரபேஸ்வரராக உருவெடுத்தார்.
    • சரபம் பாதி பறவை உருவத்தையும், பாதி காளி உருவத்தையும் கொண்ட பிரம்மாண்ட பறவை.

    ஹிரண்யகசிபுவை வதம் செய்த பின்னரும் நரசிம்மரின் உக்கிரம் தணியவில்லை.

    இதனை கண்ட தேவர்கள் அஞ்சி நடுங்கி பரமேஸ்வரனை தஞ்சமடைந்தனர். சிவ பெருமான் சரபேஸ்வரராக உருவெடுத்தார்.

    சரபம் பாதி பறவை உருவத்தையும், பாதி காளி உருவத்தையும் கொண்ட பிரம்மாண்ட பறவை.

    கூரிய நகங்களையும், பற்களையும் கொண்டது. சரபரும், நரசிம்மமும் சண்டையிட்டனர்.

    நீண்ட நாட்கள் நீடித்தத சண்டையை முடிவுக்கு கொண்டு வர எண்ணிய சரபர் தனது இறக்கைகளில் ஒன்றாக இருந்த காளியை உக்ர பிரத்யங்காரா தேவியாக அவதாரமெடுக்க செய்தார்.

    நரசிம்மத்தின் மூர்க்க குணமாக இருந்த கண்ட பெருண்டத்தை தன் வாயிலிட்டு விழுங்கினாள் தேவி.

    நரசிம்மர் சாந்தமானார். தான் சிவ பெருமானுடன் சண்டையிட்டதை எண்ணி வருந்தி, சிவனை 18 ஸ்லோகங்களால் பாடினார்.

    இந்த 18 ஸ்லோகங்களே சரபேஸ்வரரின் அஷ்டோத்திர நாமாக்கள்.

    • அன்னைக்கு அபிஷேகம் கிடையாது. அர்ச்சனையும் கிடையாது.
    • ஆண்டுக்கு ஒரு நாள் தை மாதம், முதல் தினத்தன்று அன்னைக்குப் புனுகு தைலம் சாத்தப்படுகிறது.

    அன்னையின் சந்நிதி அமைந்திருக்கும் இடமே யாகபூமி என்பதால் இங்கே யாகம் செய்தால் யார் யாருக்கு என்ன வேண்டுதல்களோ, அவை நியாயமான வேண்டுதல்கள் எனில் அனைத்தும் நிறைவேறுகின்றன.

    மாந்திரீகத்தின் துணைகொண்டு எதிரிகளால் ஏவி விடப்படும் பில்லி, சூனியம், ஏவல், வைப்பு, ரணம், ரோகம் ஆகிய அனைத்தும் இங்கே யாகம் செய்வதால் நிவர்த்தி ஆகின்றன.

    மேலும் வீட்டில் ஏற்படும் அனைத்து திருஷ்டி தோஷங்களும் கழிகின்றன.

    யாகத்தின் போது அன்னம், நெய் மற்றும் அனைத்து திரவியங்களுடன் புஷ்பங்களும் பழங்களும் யாகத்தீக்கு ஆகுதியாக அளிக்கப்படுகின்றன.

    மாந்திரீகத்தின் காரணமாக ஏற்படும் உபாதைகள் நீங்குவதற்காக மிளகாய் வற்றலும் யாகத் தீயில் ஆகுதியாக அளிக்கப்படுகிறது.

    மிளகாய் எவ்வளவு சேர்த்தாலும் சிறிதளவு காரம் கூட வெளிபடுவதில்லை. நெடியும் வருவதில்லை என்பது இன்று வரை இங்கே நிகழ்ந்து கொண்டிருக்கும் ஓர் ஆச்சரியம்.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசை அன்று காலை 10 மணிக்கு தொடங்கும் நிகும்பலா யாகம், பிற்பகல் இரண்டு மணிக்கு நிறைவு பெறுகிறது. வெளி மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து யாகம் செய்கிறார்கள்.

    யாகம் முடிந்தவுடன், தயிர் சாதம் அன்னதானமாக அளிக்கப்படுகிறது. சுமார் இருபதாயிரம் பேர் இந்த அன்னத்தை அன்னையின் அருட்பிரசாதமாக ஏற்று, உண்டு மகிழ்கிறார்கள்.

    மகா பிரத்தியங்கிராதேவி. இரண்டு ஆள் உயரத்துக்குப் பிரமாண்டமான திருஉருவம். 4 சிம்மங்கள் பூட்டிய ரதத்தில், அமர்ந்த நிலையில் 18 திருக்கரங்களுடன் இத்தலத்தில் காட்சி அளிக்கிறாள்.

    அன்னைக்கு அபிஷேகம் கிடையாது. அர்ச்சனையும் கிடையாது.

    ஆண்டுக்கு ஒரு நாள் தை மாதம், முதல் தினத்தன்று அன்னைக்குப் புனுகு தைலம் சாத்தப்படுகிறது.

    சிம்ம முகம் கொண்டு, 18 கரங்களிலும் பல வகை ஆயுதங்கள் ஏந்திப் பயங்கரமாகக் காட்சி தரும் அன்னையின் எதிரில் நின்றால் நம்மை அறியாமல் உடல் சிலிர்க்கிறது.

    எதிரிகளை அழிக்கத்தானே அன்னை இந்த திருக்கோலம் கொண்டிருக்கிறாள் என்ற எண்ணம் எழுந்தவுடன் அன்னையின் முகம் அன்பு வடிவமாக நமக்குத் தோன்றுகிறது.

    • புலிபாணி சித்தர் அழகாக தமிழில் இந்த தேவியை பாடல்களில் மந்திரத்தில் சொல்லி உள்ளார்.
    • சனிபகவானின் குமாரர் குளகன் இந்த தேவியை வழிபட்டு உள்ளான்.

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வட்டம், அய்யாவாடி (ஐவர்பாடி) என்ற கிராமத்தில் ஸ்ரீ அதர்வண பத்திரகாளி, பிரத்தியங்கிரா தேவி கோவில் உள்ளது.

    இக்கோவில் இந்தியாவில் தமிழகத்தில் இங்கு மட்டும்தான் அமைந்துள்ளது.

    அம்பிகை சிம்ம முகத்தோடும் 18 திருக் கரங்களோடும் 4 சிம்மம் பூட்டிய ரதத்தில் லட்சுமி சரஸ்வதியோடு காட்சி தருகிறாள்.

    ஸ்ரீ பிரித்தியங்கிரா தேவி ஆங்கிரஸ், பிரத்தியங்கிரஸ் என்ற மகரிஷிகள் உபாசன மூர்த்தியாக பூஜித்து 20 அக்ஷரம் கொண்ட மந்திரத்தை ஜபித்து அவர்கள் பெயரைக் கொண்டு இந்த தேவி விளங்குகிறாள்.

    ஸ்ரீமகா பிரத்தியங்கிரா தேவி சரபேஸ்வரருடைய நெற்றிக் கண்ணில் இருந்து தோன்றியவள்.

    நரசிம்மம் என்ற கண்ட பேருண்டத்தை அடக்கவே அவதரித்தாள் அவள்.

    ஆயிரம் முகங்கள், 2 ஆயிரம் கைகள், சிவப்பேறிய மூன்று கண்கள், கரிய நிறம் மிகப் பருத்த சரீரம், பெருங்கழுத்து நீலநிற ஆடை, கபாலமாலை, பயங்கரமான புலி நகம் போன்ற கைகளோடு அவதரித்து கண்ட பேருண்டம் என்ற நரசிம்மத்தை யுத்தம்செய்து சாப்பிட்டு விட்டாள்.

    அவளே உக்ரபிரத்தியங்கிரா தேவி. அந்த தேவி சாந்தம் அடைய சரபரும், தேவர்களும், ரிஷிகளும் எல்லோரும் துதித்தனர். அவள் விஸ்வரூபம் அடங்கி ஸ்ரீமகா பிரத்தியங்கிரா தேவியாக காட்சி தந்தாள்.

    இந்த தேவியை சித்தர்கள், அகத்தியர், பஞ்சபாண்டவர்கள், ராமர், லட்சுமணன், இந்திரஜித் (மேகநாதன்), இவர்கள் பூஜித்துள்ளனர்.

    இந்திரஜித் ராமரோடு யுத்தம் செய்து தோற்றுபோய் இவ்விடத்தில் அம்பிகையை வழிபாடு செய்தான். அவன் மாயாவி என்பதால் எட்டுத்திக்கும் மாசான பூமியும் பூத பிரேதங்களும் வைத்து நிகும்பலா யாகம் செய்ய விபீசனர் ராமரிடம் சென்று இந்திரஜித்தை காணவில்லை.

    அவன் யாகம் செய்து முடித்துவிட்டால் அவனை ஜெயிக்க யாராலும் முடியாது என்று சொல்ல ராமர் இவ்விடம் வந்து அம்பிகையை பிரார்த்தித்தார்.

    அம்பிகை ஸ்ரீராமருக்கு அனுக்கிரகம் செய்துவிட்டு மறைந்து விட்டாள். மேகநாதன் யாகம் செய்ய முடியாமல் பல இடம் தேடி அம்பிகையை காணாமல் யுத்தத்தில் உயிர் பிரியும் தருவாயில் அம்பிகையை பிரார்த்தனை செய்தான்.

    அம்பிகை காட்சி தந்து தர்மமே வெல்லும் என்று சொல்ல, எனக்கு ஒரு வரம் வேண்டும் என்று பிரார்த்தித்தான். வேண்டும்வரம் தருகிறேன் என்று சொல்ல மரண, ரிபு, விஷ, வியாதி தாரித்திரிய நாசி நீம் என்ற வரத்தை பெற்று அம்பிகை திருவடியை அடைந்தார்.

    இந்திரஜித் வரம் பெற்ற தலம் என்றும் புராணம் கூறுகிறது. அவன் வழிபட்ட தலம் ஆதலால் இன்றும் எட்டுதிக்கில் மயான பூமியும் ஒரே ஆலமரத்தில் 5 விதமான இலைகளை கொண்ட அதிச தலவிருட்சமும் சிம்மமுக காளியையும் இன்று காணலாம்.

    பஞ்சபாண்டவர் பூஜித்தபடியால் ஐவர்பாடி என்ற நாமம் சம்மந்தரால் திருக்கோவையில் பாடி நான்கும் என்ற பதிகத்தோடு காரணப் பெயர் உள்ளது.

    இந்த தேவியை வழிபாடு செய்தால் பிறரால் ஏவப்படும் ஆபிசார தோஷம், பில்லி சூணியம், ஏவல், வைப்பு, ரணம் ரோஹம் மிருத்தியுபயம் 64 விதமான சாபங்கள், மாதுருசாபம், பிதுர்சாபம், நர, மிருசு பசு, பட்சி இவர்களால் ஏற்படும் சாபங்களும் நிவர்த்தி ஆகும்.

    இந்த தேவியை பற்றி ருக்வேதத்தில் 48 பஞ்சாதிகள் பெருமைப் படுத்துகிறது. இவளுக்கு மேல்எந்த மந்திரமும் தெய்வமும் இல்லை என்று அதர்வண வேதம் கூறுகிறது.

    தேவி, தேவிமகாதேவி, மமசத்ருன், விநாசய என்றும் குஞ்சிதாங்கிரியில் உமாபதி சிவம் என்றும் அழகாக சொல்லியுள்ளார்கள்.

    பிரத்தியங்கிரா தேவி பற்றி பல விஷயங்கள் பெரியோர்களும், மகான்களும் கூறுவார்கள். 9 விதமாக பிரத்தியங்கிரா அவதரித்து சரப சக்தியாக கூறுவார்கள்.

    பால பிரத்தியங்கிரா, பிராம்பி பிரத்தியங்கிரா ருத்ர பிரத்தியங்கிரா, உங்கிர பிரத்தியங்கிரா, விபரீத பிரத்தியங்கிரா, லம்பிய பிரத்தியங்கிரா, அதர்வண பிரத்தியங்கிரா, சிம்ம முக காளி, மகா பிரத்தியங்கிரா என்று அவர்களை கூறுவார்கள்.

    புலிபாணி சித்தர் அழகாக தமிழில் இந்த தேவியை பாடல்களில் மந்திரத்தில் சொல்லி உள்ளார். பிரபஞ்ச ஸார ஸங்ர ஹித்தில்

    பிரத்தியங்கிரா த்யானசிலே ந சூர்யாத் திவேஷ மாத்மனி என்ற பழமொழியால் இத்தேவியை யார் வழிபடுகிறார்களோ அவரிடம் துவேஷம் கொள்ளக் கூடாது என்றும் உள்ளது.

    சனிபகவானின் குமாரர் குளகன் இந்த தேவியை வழிபட்டு உள்ளான்.

    ஜாதகத்தில் ஏற்படும் தோஷங்கள் 3, 6, 8, 12ல் உள்ள திசைகள் மாந்தி குளிகன் மற்றும் நவக்கிரக தோஷங்கள் நிவர்த்தியாகி பல கோடி செல்வங்களும் பெற்று பல்லாண்டு காலம் வாழவும் நோயற்ற வாழ்வும் 16 வித செல்வங்களை அடையவும் இத்தேவியை தரிசித்து அருள்பெறலாம்.

    • சங்கடங்களும், கஷ்டங்களும், துன்பங்களும் விலகி சகல நன்மைகளும் உண்டாகும்.
    • திருமண தடை நீங்கும். கஷ்டங்கள் விலகும். வியாபாரம் தொழில் நன்றாக நடைபெறும்.

    கணபதி ஹோமத்தின் பலன்கள்

    சங்கடங்களும், கஷ்டங்களும், துன்பங்களும் விலகி சகல நன்மைகளும் உண்டாகும்.

    நவக்கிரக ஹோமத்தின் பலன்கள்

    திருமண தடை நீங்கும். கஷ்டங்கள் விலகும். வியாபாரம் தொழில் நன்றாக நடைபெறும்.

    அஷ்ட பைரவர் ஹோமத்தின் பலன்கள்

    ஆயுள் விருத்தி உண்டாகும். உடல் உபாதைகள் நீங்கி, நன்மைகள் உண்டாகும்.

    சரபரேஸ்வரர் ஹோமத்தின் பலன்கள்

    பட்சி தோஷம், பிசு கத்தி தோஷம் (பெண் சாபம்) வாகன தோஷம் நிவர்த்தி ஆகும்.

    • நம் ஜாதகத்தில் உள்ள ராகு, கேது தோஷங்கள் நிவர்த்தி செய்பவள்.
    • நம் ஜாதகத்தில் உள்ள பூர்வீக தோஷங்கள், பாவங்களை நீக்கி அருள்பவள்.

    கருச்சிதைவையும், நம் கருமத்தையும் நீக்குபவள்.

    நம் ஜாதகத்தில் உள்ள ராகு, கேது தோஷங்கள் நிவர்த்தி செய்பவள்.

    நம் ஜாதகத்தில் உள்ள பூர்வீக தோஷங்கள், பாவங்களை நீக்கி அருள்பவள்.

    அமாவாசை தினத்தன்று கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், அஷ்ட ஹோமம்.

    சர்பரேஷ்வரர் ஹோமம் பிரத்தியங்கிரா ஹோமம் நடைபெறும்.

    பிரத்தியங்கிரா தேவி ஹோமத்தின் பலன்கள்

    கிரகங்களால் ஏற்படும் தடைகள், அதனால் உண்டாகும் பாவங்களும் நீங்கி தொழில் வியாபாரம் சிறப்பாக அமையும்.

    • இந்த தேவியின் மந்திரத்தை தெரிந்து கொண்டவர். அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆவார்.
    • அவர் மூலமாய் இந்த தேவியை வழிபாடு செய்தவன் ராவணேஷ்வரன் மகன் மேகநாதன் எனும் இந்திரஜித் ஆவான்.

    பிரத்தியங்கிரா தேவி வழிபாடு குறித்து சேலம் அன்னை உக்ரபிரத்தியங்கிரா கோவில் அர்ச்சகர் பூபதி சிவாச்சாரியார் கூறியதாவது:

    இந்த கலியுகத்தில் மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம் ஆதிசக்தி அம்சமாகிய அன்னை ஸ்ரீ அதர்வண பத்ரகாளி.

    இந்த தெய்வத்தை ஆங்கிர அரசரிஷி, பிரத்தியங்கிரா ரிஷி ஆகிய இருவரும் தேவியை கண்டு வழிபட்டனர்.

    இந்த தேவியை வழிபட்ட ரிஷிகளின் பெயராலே ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவி என்று அழைக்கப்பட்டு வருகிறாள்.

    இந்த தேவியின் மந்திரத்தை தெரிந்து கொண்டவர். அசுரகுரு சுக்ராச்சாரியார் ஆவார்.

    அவர் மூலமாய் இந்த தேவியை வழிபாடு செய்தவன் ராவணேஷ்வரன் மகன் மேகநாதன் எனும் இந்திரஜித் ஆவான்.

    இந்த தேவியின் மகிமை பற்றி புலிப்பாணி முனிவர் மிகவும் விமரிசையாக கூறியுள்ளார்.

    இந்த தேவி ஸ்ரீதேவி எந்திரத்தின் உத்தரதிக்கில் இருப்பவர்.

    இந்த தேவியின் அவதாரம் ஆயிரம் சிங்க முகங்களும் இரண்டாயிரம் கைகளும் கோரைபற்களும் நீல நிறம் உடையவளாகவும், ஆமை மாலையையும் கபால மாலையையும் அணிந்து காட்சி தருபவள்.

    அக்கினி சுவாலை கொண்டவள்.

    சிம்ம வாகனத்தில் அமர்ந்து அஷ்ட நாகங்களையும் குடையாக கொண்ட இந்த தேவியின் பெயர் உக்ரகாளி அதர்வண பத்ரகாளி, பிரத்தியங்கிரா தேவி எனவும் அழைக்கப்படுகிறாள்.

    இந்த தேவியானவள் விர்பரேஸ்வரர் சக்தியில் இருந்து தோன்றியவள்.

    இந்த தேவியானவள் தர்மம் காத்து அதர்மம் அழித்து இப்பூவுலகை காத்தருளுகிறாள். இந்த தேவி மங்களம் தரும் மகா காளிதேவி எனவும் அழைக்கப்படுகிறாள்.

    • தமிழ்நாட்டுப் பெண்கள் அனுசரிக்கும் விரதம்.
    • பார்வதிக்கு, வரட்சுமி விரதத்தை பற்றி சிவபெருமான் எடுத்துரைத்தார்.

    ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் வரும் பவுர்ணமிக்கு முந்தைய வெள்ளிக்கிழமையில், 'வரலட்சுமி நோன்பு' கடைபிடிக்கப்படுகிறது. இந்த விரதம் நாடு முழுவதும் வெகு விமரிசையாக கடைப்பிடிக்கப்படும் ஒன்று என்றாலும், குறிப்பாக தமிழ்நாட்டுப் பெண்கள் அனுசரிக்கும் விரதங்களில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இது பார்க்கப்படுகிறது.

    பூவும், பொட்டும், சகல சவுபாக்கியங்களும் பெற்று, குடும்பம் சிறந்தோங்க வேண்டும் என்று சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தை மேற்கொள்கிறார்கள்.

    ஒரு சமயம் திருக்கயிலாயத்தில் பரமசிவனும், பார்வதிதேவியும் வீற்றிருந்தனர். அப்போது பார்வதிதேவி, சிவபெருமானை நோக்கி "சுவாமி! எந்த தேவதையை நினைத்து பெண்கள் விரதம் இருந்தால், அவர்களின் குடும்பம் சகல துக்கங்களில் இருந்தும் நீங்கப்பெற்று சுகவாழ்வை அடையும்" என்று கேட்டார்.

    அதற்கு சிவபெருமான், "எல்லா சவுபாக்கியங்களையும் தரும் வரலட்சுமி விரதத்தைப் பற்றிச் சொல்கிறேன் கேள்" என்று கூறி, அந்த விரதம் ஏற்பட்ட வரலாற்றை சொன்னார்.

    மகத தேசத்தில் குந்தினபுரம் என்ற ஒரு பட்டினம் உண்டு. அந்த பட்டினத்தில் சாருமதி என்னும் பதிவிரதை இருந்தாள். அவள் லட்சுமி தேவியை வணங்குவதை வழக்கமாக கொண்டிருந்தாள். அவளது கணவன் உஞ்சவிருத்தி மூலம் கொண்டுவரும் அரிசியைக் கொண்டு, அந்த குடும்பத்தில் அனைவரும் பசியாறி வந்தனர்.

    கருணையே வடிவான வரலட்சுமி தேவி, பதிவிரதையான சாருமதிக்கு அனுக்கிரகம் செய்ய முன்வந்தாள். ஒரு நாள் சாருமதியின் கனவில் தோன்றிய வரலட்சுமி தேவி, "சாருமதி.. உன் பக்தியால், நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

    உனக்கு அனுக்கிரகம் செய்வதற்காகவே வந்திருக்கிறேன். நீ ஆவணி மாதம் பூர்வ பட்சத்தில், பவுர்ணமிக்கு முன்பு வரும் வெள்ளிக்கிழமையில் என்னைப் பூஜித்தால் உன் கோரிக்கைகளை நிறைவேற்றுவேன்" என்றாள்.

    அதைக் கேட்ட சாருமதி, தான் கண்ட கனவிலேயே, அன்னை வரலட்சுமி தேவியை வலம் வந்து வழிபட்டாள். மேலும், தனக்குத் தெரிந்த மந்திரங்களைச் சொல்லி பூஜிக்கவும் செய்தார். அதோடு பவுர்ணமிக்கு முந்தை வெள்ளிக்கிழமை அன்று பூஜை செய்யும் வழிமுறைகளைப் பற்றியும் வரலட்சுமி தேவியிடம் கேட்டு தெரிந்துகொண்டாள்.

    அதிகாலையில் கண் விழித்து எழுந்ததும், தான் கண்ட கனவு பற்றி, தன்னுடைய கணவன் மற்றும் மாமியார், மாமனாரிடம் சொன்னாள், சாருமதி. அவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்து, அந்த உன்னதமான விரதத்தை கண்டிப்பாக கடைப் பிடிக்க வேண்டும் என்று மனதில் உறுதி கொண்டனர்.

    அதன்படி ஆவணி மாத பூர்வபட்ச பவுர்ணமிக்கு முன்பு வந்த வெள்ளிக்கிழமையில் உதய காலத்தில், சாருமதியும், அவளது குடும்பத்தினரும் விழித்தெழுந்தனர். பின்னர் நீராடி விட்டு நல்ல வஸ்திரங்களை அணிந்து கொண்டு, பூஜை செய்வதற்குத் தேவையான பொருட்களை சேகரித்தனர்.

    வீட்டில் ஓர் இடத்தை தேர்ந்தெடுத்த சாருமதி, அந்த இடத்தை மொழுகி, அரிசி மாவினால் கோலமிட்டாள். வரலட்சுமி தேவிக்கு ஒரு மண்டபம் அமைத்தாள். வண்ணப் பொடிகளால் தாமரைப் போன்று கோலமிட்டு அதனை அழகுபடுத்தினாள்.


    அதன் மீது ஒரு நுனி வாழை இலையைப் போட்டு, அந்த இலை முழுவதும் பச்சரிசியை பரப்பி வைத்தாள். பச்சரிசியின் மேல் பகுதியில் பித்தளை செம்பில் சுண்ணாம்பு தடவி, அதன் வாய்ப் பகுதியில் மாவிலைகளை சுற்றிவைத்து, தேங்காயை வைத்து கலசம் போல் மாற்றினாள்.

    அந்த கலசத்தின் மீது அம்மன் முகத்தை பதித்தாள். பின்னர் குத்துவிளக்கேற்றி வைத்தாள். கலசத்தை மலர் மாலைகளைக் கொண்டு அலங்கரித்தாள். அந்த கலசத்தில் வரலட்சுமி தேவியை ஆவாகனம் செய்தாள்.

    இந்த பூஜையில் சாருமதியும் அவளது வீட்டின் அருகில் உள்ள பெண்களும் பக்தி சிரத்தையுடன் பங்கேற்று, வரலட்சுமி தேவியை பிரார்த்தனை செய்தனர்.

    பத்மாஸநே, பத்மகராம்

    ஸர்வலோக பூஜிதே

    நாராயணப்ரியே தேவி

    ஸுப்ரி தாப்பவ ஸர்வதா!!

    என்ற லட்சுமி சுலோகத்தால், வரலட்சுமி தேவியை வணங்கி, ஷோடச உபசார பூஜைகள் செய்து, ஒன்பது முடிச்சு போட்ட மஞ்சள் சரடினை வலது கையில் கட்டிக் கொண்டனர்.

    வரலட்சுமி தேவிக்கு ஒன்பது விதமான பட்சணங்களை நைவேத்தியமாக படைத்து, கற்பூர தீபாராதனை காட்டி வணங்கினர். விரதம் முடிந்ததும் அனைவருக்கும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

    பின் அனைவரும் அவரவர் வீட்டிற்குச் சென்றபோது, அந்த பெண்களின் வீடுகள் அனைத்தும் மாட மாளிகைகளாக ஆடம்பரமாக காட்சியளித்தன. இதைக் கண்ட மக்கள் அனைவரும், 'இது சாருமதி செய்த வரலட்சுமி பூஜையின் மகிமையால் ஏற்பட்டது' என்பதை அறிந்து சாருமதியை போற்றினர்.

    இந்த வரலட்சுமி விரதம் இருப்பவர்கள், வரலட்சுமி தேவியின் அருளைப் பெற்று, தங்கள் பக்திக்கான நற்பலன்களை அடைவது உறுதி என்று பார்வதிக்கு, வரட்சுமி விரதத்தைப் பற்றி சிவபெருமான் எடுத்துரைத்தார்.

    பவிஷ்ய புராணத்தில் பரமேஸ்வரனால் பார்வதி தேவிக்கு சொல்லப்பட்ட இந்த வரலட்சுமி விரதத்தைப் பற்றி சொல்பவர்களும், சொல்லக் கேட்பவர்களும், விரதம் இருந்து அதை பூர்த்தி செய்பவர்களும், அஷ்ட ஐஸ்வரியங்களுடன், புத்திர பாக்கியமும், தீர்க்காயுளும் பெற்று வாழ்வார்கள் என்பது ஐதீகம்.


    சரடு எடுக்க சொல்லும் சுலோகம்

    ஒன்பது முடிச்சுகள் கொண்ட மஞ்சள் சரடை பூஜையில் வைத்து, பூஜை முடிந்ததும் அதனை வலக் கையில் கட்டிக் கொள்ள வேண்டும். பூஜை முடிந்து சரடை எடுக்கும் போது,

    ஸர்வமங்கள மாங்கள்யே ஸர்வபாப ப்ரணாசினி!

    தோரகம் பரதிக்ருஹ்ணாமி ஸுப்ரீதா பவ ஸர்வதா!!

    என்ற மந்திரத்தைச் சொல்ல வேண்டும். பின்னர் தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், மஞ்சள் வைத்து, பூஜையில் பங்கேற்ற சுமங்கலி கையில் கொடுத்து கீழ்க்காணும் மந்திரத்தைச் சொல்லவும்.

    நவதந்து ஸமாயுக்தம் நவக்ரந்திஸமன்விதம்

    பத்னியாம் தக்ஷிணே ஹஸ்தே தோரகம் ஹரிவல்லபே

    பிறகு மஞ்சள் சரடை வலது கையில் கட்டி விட வேண்டும். இதேபோல் மற்ற சுமங்கலிகளுக்கும் கட்டி விடவேண்டும்.

    • 16-ந்தேதி வரலட்சுமி விரதம்.
    • 17-ந்தேதி சனிப்பிரதோஷம்.

    13-ந்தேதி (செவ்வாய்)

    * சேலம் செவ்வாய் பேட்டை மாரியம்மன் வசந்த உற்சவம்.

    * குரங்கணி முத்து மாலை அம்மன் பவனி

    * சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் ஆண்டாளுக்கு திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    14-ந்தேதி (புதன்)

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் வளையல் விற்ற திருவிளையாடல்.

    * ராமேஸ்வரம் சுவாமி அம்பாள் தங்க கேடய சப்பரத்தில் பவனி

    * இருக்கன்குடி மாரியம்மன் புறப்பாடு.

    * திருப்பதி ஏழுமலையான் சகஸ்ர கலசாபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    15-ந்தேதி (வியாழன்)

    * சுமார்த்த ஏகாதசி.

    * சுவாமிமலை முருகப்பெருமான் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.

    * திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் ராமருக்கு திருமஞ்சனம்,

    * சமநோக்கு நாள்.

    16-ந்தேதி (வெள்ளி)

    * சர்வ ஏகாதசி.

    * வரலட்சுமி விரதம்.

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் புட்டுக்கு மண் சுமந்தருளிய விலை.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    17-ந்தேதி (சனி)

    * சனிப்பிரதோஷம்

    * மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிவில் விறகு விற்ற திருவிளையாடல்.

    * திருவரங்கம் நம்பெருமான், பண்ணார்குடி ராஜ கோபாலசுவாமி, திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் வரதராஜ பெருமாளுக்கு திருமஞ்சனம்.

    * கீழ்நோக்கு நாள்.

    18-ந்தேதி (ஞாயிறு)

    * திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் ரத உற்சவம்.

    * திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் மாடவீதி புறப்பாடு.

    * சாத்தூர் வேங்கடேசப் பெருமாள் தோளுக்கினியானில் புறப்பாடு.

    * மேல்நோக்கு நாள்.

    19-ந்தேதி (திங்கள்)

    * பவுர்ணமி

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    * கீழ்திருப்பதி கோவிந்த ராஜ பெருமாளுக்கு புஷ்ப அலங்காரம்.

    * மேல்நோக்கு நாள்.

    • முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம்.
    • மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் சட்டத் தேரில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆடி-28 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: அஷ்டமி காலை 6.11 மணி வரை. பிறகு நவமி.

    நட்சத்திரம்: விசாகம் காலை 8.29 மணி வரை. பிறகு அனுஷம்.

    யோகம்: மரண, சித்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம். குறுக்குத்துறை ஸ்ரீமுருகப் பெருமான் புறப்பாடு. குரங்கணி ஸ்ரீமுத்துமாலையம்மன் பவனி. மதுரை ஸ்ரீமீனாட்சியம்மன் சட்டத் தேரில் பவனி. வடபழனி, திருப்போரூர், குன்றத்தூர், திருத்தணி, கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். கழுகுமலை, மருதமலை கோவில்களில் ஸ்ரீமுருகப்பெருமான் பவனி.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-முயற்சி

    ரிஷபம்-சாந்தம்

    மிதுனம்-பெருமை

    கடகம்-மேன்மை

    சிம்மம்-நிறைவு

    கன்னி-தியாகம்

    துலாம்- உதவி

    விருச்சிகம்-உண்மை

    தனுசு- உழைப்பு

    மகரம்-இரக்கம்

    கும்பம்-நட்பு

    மீனம்-கடமை

    1. ஓம் விண்ணவா போற்றி

    2. ஓம் விளங்கு உயர் வீரா போற்றி

    3. ஓம் திண்ணவா போற்றி

    4. ஓம் அணிமாமலர் பறவை அரசே போற்றி

    5. ஓம் ருத்ர அக்னியே போற்றி

    6. ஓம் மந்திரத் துதி தேவா போற்றி

    7. ஓம் மாமலை சக்தியே போற்றி

    8. ஓம் சர்வ வியாபியே போற்றி

    9. ஒம் சங்கரா போற்றி

    10. ஓம் காலனுக்கும் காலா போற்றி

    11. ஓம் கருத்தில் நிறைந்தவனே போற்றி

    12. ஓம் பிறவிபயம் அறுத்தவனே போற்றி

    13. ஓம் நிரந்தரமானவனே போற்றி

    14. ஓம் நியாயம் தருபவனே போற்றி

    15. ஓம் வீரபத்திரனே போற்றி

    16. ஓம் ஆயிரம் நாமம் உடையாய் போற்றி

    17. ஓம் மகாதேவா போற்றி

    18. ஓம் நரசிம்மரை குளிரவைத்தவா போற்றி

    19. ஓம் நான்மறை ஆனாய் போற்றி

    20. ஓம் சூலினி உடனுறை தேவா போற்றி

    21. ஓம் அதர்வண காளியை அடைந்தவா போற்றி

    22. ஓம் மந்திரம் ஆள்பவனே போற்றி

    23. ஓம் கம்பத்தில் நிற்பவனே போற்றி

    24. ஓம் கோபக்கனலேபோற்றி

    25. ஓம் கூர்நகம் கொண்டவனே போற்றி

    26. ஓம் லிங்கப்பதியே போற்றி

    27. ஓம் ருத்ரதாண்டவா போற்றி

    28. ஓம் சத்திய துணையே போற்றி

    29. ஓம் சாந்தி அருள்பவனே போற்றி

    30. ஓம் சத்திய சாட்சியே போற்றி

    31. ஓம் சத்திய உருவே போற்றி

    32. ஓம் முத்தொழில் தலைவா போற்றி

    33. ஓம் புவனம் படைத்தாய் போற்றி

    34. ஓம் ஆட்டிப் படைப்பாய் போற்றி

    35. ஓம் அறம் பொருள் இன்பம் அளிப்பாய் போற்றி

    36. ஒம் அம்ருத அரசே போற்றி

    37. ஓம் சித்தர் சிந்தை புகுந்தவனே போற்றி

    38. ஓம் ருத்திர மூர்த்தியே போற்றி

    39. ஓம் காலகாலமாய் இருப்பவனே போற்றி

    40. ஓம் சிந்தாமணியின் ஜீவனே போற்றி

    41. ஓம் சித்தாந்த சித்தனே போற்றி

    42. ஓம் பரமாத்மனே போற்றி

    43. ஓம் பரப்பிரம்மனே போற்றி

    44. ஓம் பரப்பிரம்ம ஜோதியே போற்றி

    45. ஓம் கைலாசவாசா போற்றி

    46. ஓம் திருபுவனேசா போற்றி

    47. ஓம் நடுக்கம் தீர்ப்பாய் போற்றி

    48. ஓம் நம்பினோர் நலம் அருள்வாய் போற்றி

    49. ஓம் ஏவல் தீர்ப்பாய் போற்றி

    50. ஓம் சூன்யம் அழிப்பாய் போற்றி

    51. ஓம் கொடுமை தீர்ப்பாய் போற்றி

    52. ஓம் எண்ணியது அருள்வாய் போற்றி

    53. ஓம் திண்ணிய நெஞ்சம் தருவாய் போற்றி

    54. ஓம் திடமாய் காரியம் செய்ய வைப்பாய் போற்றி

    55. ஓம் தீயவர் தொல்லை தீர்ப்பாய் போற்றி

    56. ஓம் திருவருள் தருவாய் போற்றி

    57. ஓம் வழித்துணையே போற்றி

    58. ஓம் எட்டு திசையும் காப்பாய் போற்றி

    59. ஓம் நஞ்சை புஞ்சை காப்பாய் போற்றி

    60. ஓம் நம்பி வருவோர்க்கு அருள்வாய் போற்றி

    61. ஓம் நமசிவாய திருவே போற்றி

    62. ஓம் சிவ சூரியா போற்றி

    63. ஓம் சிவச்சுடரே போற்றி

    64. ஓம் அட்சர காரணனே போற்றி

    65. ஓம் ஆதி சிவனே போற்றி

    66. ஓம் கால பைரவரே போற்றி

    67. ஓம் திகம்பரா போற்றி

    68. ஓம் ஆனந்தா போற்றி

    69. ஓம் காலத்தின் வடிவே போற்றி

    70. ஓம் காற்றாய் வருவாய் போற்றி

    71. ஓம் கர்ப்பம் காப்பவனே போற்றி

    72. ஓம் காத்து கருப்பு அழிப்பாய் போற்றி

    73. ஓம் எல்லையில்லா பொருளே போற்றி

    74. ஓம் கல்லாலின் கீழ் அமர்ந்தவனே போற்றி

    75. ஓம் வல்லார் வாழ்த்தும் தேவா போற்றி

    76. ஓம் எல்லாமாய் இருப்பவனே போற்றி

    77. ஓம் மூல குருவே போற்றி

    78. ஓம் தெவிட்டா தேனே போற்றி

    79. ஓம் விளக்கு தீபத்தில் ஒளிர்பவனே போற்றி

    80. ஓம் அமரர் படை தலைவா போற்றி

    81. ஓம் மான் வைத்தாய் போற்றி

    82. ஓம் மழு தூக்கி சிறந்தாய் போற்றி

    83. ஓம் அழைத்ததும் வருவோனே போற்றி

    84. ஓம் சூலினித்தாயின் சுகத்தோனே போற்றி

    85. ஓம் பிரத்யங்கிரா தேவியின் பிராணநாதா போற்றி

    86. ஓம் அம்பலத்தாடும் அரசே போற்றி

    87. ஓம் நகமே ஆயுதமாய் கொண்டாய் போற்றி

    88. ஓம் நலம் தரும் தெய்வமே போற்றி

    89. ஓம் உள்ளத்தில் உறைவாய் போற்றி

    90. ஓம் சிந்தனைக்கினிய செல்வனே போற்றி

    91. ஓம் திருவுக்கும் திருவான தெய்வமே போற்றி

    92. ஓம் யாவையும் யாவரும் ஆனாய் போற்றி

    93. ஓம் வேதம் தொழும் வேங்கையே போற்றி

    94. ஓம் வெற்றியை நாடுவோர் உள்ளமே போற்றி

    95. ஓம் நோய் தீர்க்கும் நெடியாய் போற்றி

    96. ஓம் மூலவர்க்கெல்லாம் மூலவா போற்றி

    97. ஓம் மூவர்க்கு முந்திய முதல்வா போற்றி

    98. ஓம் முற்றும் துறந்தோர்க்கும் அருள்வாய் போற்றி

    99. ஓம் முக்திக்கு வழி செய்வாய் போற்றி

    100. ஓம் பயம் தீர்க்கும் பரம்பொருளே போற்றி

    101. ஓம் பக்தர் தன் துயர்நீக்கும் ஒளியே போற்றி

    102. ஓம் முக்தர்கள் ஜீவனே போற்றி

    103. ஓம் முழுவதுமாய் எம்மைக் காப்பாய் போற்றி

    104. ஓம் அடியார்க்கு அடியவா போற்றி

    105. ஓம் அருட்பெருஞ்ஜோதி அண்ணலே போற்றி

    106. ஓம் வெள்ளிக்கு வாழ்வு தந்தாய் போற்றி

    107. ஓம் குருவுக்கு உரு தந்த உயர்ந்தவா போற்றி

    108. ஓம் பூரண சரபேசா போற்றி! போற்றி!

    அதர்வண வேத சரப மந்திரன் எல்லா பாபங்களையும் போக்கி நம்மை காக்க வல்லது அந்த தியான சுலோகம் வருமாறு:

    ஹூம்காரீ சரபேஸ்வர: அஷ்ட சரண:

    பக்ஷீ சதுர் பாஹுக:

    பாதா கிருஷ்ட நிருஸிம்ஹ விக்ர ஹதர:

    காலாக்னி கோடித்யுதி:

    விச்வ க்ஷோப நிருஸிம்ஹ தர்ப்ப சமன:

    பிரும்மேந்திர முக்யைஸ்துத:

    கங்கா சந்தரதர: புரஸ்த சாப:

    ஸத் யோரிபுக் னோஸ்து ந

    (சரபேஸ்வரருக்கு எட்டு கால்களும், 4 கைகளும், இரு இறக்கைகளும், கருடனைப் போன்ற மூக்கும், கால்களால் நரசிம்மத்தை சாந்தப்படுத்தி வைத்தும், காலாக்னி போன்ற காந்தியும், கங்கை, சந்திரன், மான், மழு, ஏந்தி உலகத்தின் கஷ்டத்தைப் போக்க மனம் கொண்ட சரபேஸ்வரர் என் முன் தோன்றி என்னைக் காத்து அருள வேண்டும்.)

    இந்த தியான சுலோகத்தை மனப்பாடம் செய்து தினம் காலை மாலை பாராயணம் செய்கிறவர்கள் பேராபத்திலிருந்தும், பெரும் நஷ்டத்திலிருந்தும், கொடும் நோயினின்றும் விடுபட்டு சகல மங்களங்களையும் பெறுவார்கள்.

    ×