என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • மகாசக்தி அன்னை பார்வதியை வழிபாடு செய்யாமல் பிரத்தியங்கிராவைத் தனியே வழிபடக்கூடாது.
    • மகாசக்தியை வழிபாடு செய்தாலே பிரத்தியங்கிரா தேவி நமக்குத் தெரியாமலே நம்மைக் காக்கிறார்.

    மகாசக்தி அன்னை பார்வதியை வழிபாடு செய்யாமல் பிரத்தியங்கிராவைத் தனியே வழிபடக்கூடாது.

    மகாசக்தியை வழிபாடு செய்தாலே பிரத்தியங்கிரா தேவி நமக்குத் தெரியாமலே நம்மைக் காக்கிறார்.

    காப்புக் கடவுளாக விளங்குகிறாள் பிரத்தியங்கிரா தேவி.

    வன்முறையும் பாதுகாப்பற்ற நிலையும் வளர்ந்துள்ள நிலையில், துஷ்டர்களும், எதிரிகளும் சூழ்ந்து வளர்ந்து வரும் நிலையில், கூட இருந்தே குழிபறிக்கும் பகைவர்களும் கெட்ட எண்ணம் கொண்டோரும் சூழ்ந்துள்ள நிலையில் நமக்குப் பாதுகாப்புத் தருபவள் பிரத்தியங்கிரா தேவி.

    பயத்தை அகற்றுபவள், தைரியத்தை கொடுப்பவள், தெரிந்தும் தெரியாமலும் வரும் பகையை முறியடிப்பவள் பிரத்தியங்கிரா தேவி, சத்ருவிடம் ஜெயம் சேர்ப்பாள்.

    இவளை உபாசிக்க நமக்கு மன உறுதி, தனித்தகுதி அவசியம். நல்லெண்ணம், நற்செய்கைகள், தேவியின் மீது உயர்ந்த பக்தி, இருப்பின் எண்ணம் யாவும், வெற்றி உண்டாகும். லட்சியம் நிறைவேறும்.

    • திண்டிவனம் புதுவை பேருந்து தடத்தில் மொட்டாண்டி என்ற இடத்தில் கோவில் இருக்கிறது.
    • புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவ மனையில் இருந்து 3 கி.மீ தூரம்.

    திண்டிவனம் புதுவை பேருந்து தடத்தில் மொட்டாண்டி என்ற இடத்தில் கோவில் இருக்கிறது.

    புதுவையில் உள்ள ஜிப்மர் மருத்துவ மனையில் இருந்து 3 கி.மீ தூரம்.

    ஜிப்மரில் இறங்கி ஆட்டோவில் செல்லலாம். மொட்டாண்டியில் நவாப் ராஜமாணிக்கம் வீதியில் கோவில் இருக்கிறது.

    காலை 7 மணிமுதல் மதியம் 1 மணிவரையும், பிற்பகல் 3.30 மணி முதல் இரவு 9 மணி வரையும் கோவில் திறந்து இருக்கும்.

    நாள் தோறும் 108 நாமாவளி அர்ச்சனை, 1008 நாமாவளி அர்ச்சனைகள் நடக்கின்றன.

    • கோவிலுக்கு வருகிற ஆண்கள் நீலநிற ஆடையும், பெண்கள் நீல நிற சேலையும் அணிந்துகொள்வது நல்லது.
    • கோவிலில் சர்க்கரை பொங்கல் வைக்கலாம்.

    புதுவை பிரத்தியங்கிரா தேவிக்கு அருகில் லிங்கம், பைரவர், பிரளய விநாயகர், நரசிம்மர் சிலைகள் இருக்கின்றன.

    கோவில் உள்ளே 'பாதாள பரமேஸ்வரி' சன்னதி இருக்கிறது. படிகளில் இறங்கிச்சென்று தரிசனம் செய்ய வேண்டும்.

    கோவிலுக்கு வருகிற ஆண்கள் நீலநிற ஆடையும், பெண்கள் நீல நிற சேலையும் அணிந்துகொள்வது நல்லது.

    கோவிலில் சர்க்கரை பொங்கல் வைக்கலாம்.

    புளியோதரை, தயிர்சோறு, எள்ளுருண்டை செய்து எடுத்து வரலாம்.

    எலுமிச்சை, திராட்சை பழம் கொண்டு வரலாம். செவ்வரளி, சிவப்பு ரோஜா, செந்தாமரை இதழ்களால் அர்ச்சனை செய்ய வேண்டும்.

    • திருமணம் தடைபட்ட பெண்களுக்கு திருமணம் நடக்கும்.
    • குழந்தைகள் இல்லாதவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

    புதுவை பிரத்தியங்கரா தேவி கோவிலில் அஷ்டமி யாகம் மிகச்சிறப்பானது.

    பவுர்ணமியை அடுத்து வரும் 8 வது நாள் தேய்பிறை அஷ்டமியில் இரவு 10.30 மணிக்கு யாகம் தொடங்கும்.

    நள்ளிரவு 3 மணிக்கு முடியும். ஒவ்வொரு மாதமும் தேய்பிறை அஷ்டமியில் இந்த யாகம் நடக்கிறது.

    'அஷ்டமி தரிசனம் அஷ்ட ஐஸ்வரியம் தரும்' என்பது சிரபசித்தர் வாக்கு.

    இந்த யாகத்தில் கலந்துகொண்டால் ஏவல், செய்வினை விலகிச் செல்லும்.

    நோய்கள் தீரும். குடும்ப கவலைகள் மாறும்.

    வியாபாரம், தொழில் தடைகள் நீங்கி வளர்ச்சி அடையும். கைவிட்டுப்போன சொத்துக்கள் மீளும்.

    திருமணம் தடைபட்ட பெண்களுக்கு திருமணம் நடக்கும்.

    குழந்தைகள் இல்லாதவர்களுக்கு குழந்தைகள் பிறக்கும் என்று பக்தர்கள் நம்புகிறார்கள்.

    ஞாயிறு, செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் ராகு கால பூஜை நடக்கிறது. அமாவாசை, பவுர்ணமி நாட்களில் சிறப்பு பூஜை உண்டு.

    இந்த பூஜைகளில் கலந்து கொள்கிறவர்களும் பல நன்மைகள் அடைவார்கள் என்கிறார்கள்.

    • நீலநிற மேனி, நீல சேலை கட்டி சிங்கத்தின் மீது அமர்ந்த கோலம்.
    • பார்க்கவே பயம் தரும் காட்சி. இவளை யாராலும் வெல்ல முடியாது.

    இந்த பிரத்தியங்கிரா தேவியின் விஸ்வரூப சிலை புதுவையில் இருக்கிறது. 72 அடி உயரம்.

    உலகிலேயே மிகப்பெரிய அம்மன் சிலை இதுதான்.

    குகை போன்ற பெரிய வாய், ரத்தம் சொட்டும் நீண்ட நாக்குகள், விரிந்த கூந்தல், காலில் மிதிபடும் மண்டை ஓடு, கனல் கக்கும் கண்கள், கைகளில் திரிசூலம், நாகபாசம், கழுத்தில் ராகு, கபாலத்தை மாலையாக அணிந்து இருக்கிறார்.

    நீலநிற மேனி, நீல சேலை கட்டி சிங்கத்தின் மீது அமர்ந்த கோலம்.

    பார்க்கவே பயம் தரும் காட்சி. இவளை யாராலும் வெல்ல முடியாது.

    இதனால் 'அபராஜிதா' என்று பெயர் பெற்றாள். நடுநிசி பூஜைதான் பிரத்தியங்கிரா தேவிக்கு உகந்தது.

    மகாபைரவர் நாள்தோறும் நள்ளிரவில் வந்து பூஜை செய்வதாக ஐதீகம்.

    • சிவபெருமானிடம் இருந்து தோன்றியவள் பிரத்தியங்கிரா தேவி.
    • ஆயிரம் சிங்க முகத்துடன், இரண்டாயிரம் கைகளுடனும் பிரத்தியங்கிரா தேவி தோன்றினாள்.

    இரணியனை வதைக்க நரசிம்ம அவதாரம் எடுத்த பெருமாள், இரணியனை கொன்றபின்பும் உக்கிரம் அடங்கவில்லை.

    அவரது உக்கிரத்தால் மூவுலகும் அழிந்துவிடும் போல இருந்தது.

    அப்போது தோன்றி, அவரது உக்கிரத்தை கிரகித்து சாந்தப்படுத்தி உலகத்தை அழிவில் இருந்து காத்தாள் பிரத்தியங்கிரா தேவி.

    சிவபெருமானிடம் இருந்து தோன்றியவள் பிரத்தியங்கிரா தேவி.

    ஆயிரம் சிங்க முகத்துடன், இரண்டாயிரம் கைகளுடனும் பிரத்தியங்கிரா தேவி தோன்றினாள்.

    அவள் பார்வதியின் அம்சம். அவளே காளி, துர்க்கை.

    பில்லி சூனியம், மந்திரம் தந்திரம், எந்திரம் ஏவல் எல்லாவற்றையும் முறியடித்து காக்கக்கூடியவள் பிரத்தியங்கிரா தேவி.

    இவளையே அதர்வண வேதம் 'அதர்வண பத்ரகாளி' என்று கூறுகிறது. நோய்கள், பேய்களை ஓட்டக்கூடிய ஆற்றல் படைத்தவள்.

    தன்னைத்தேடி வரும் பக்தர்களின் கவலைகளை போக்கி நலம், வளம் தருவதில் ஈடு இணையற்றவள் பிரத்தியங்கிரா தேவி.

    • அபயம் என்று அலறிப் பணிந்த உயிர்களைக் காக்கும் அற்புத தேவி இந்தப் பிரத்தியங்கிரா. அதர்வணப் பத்ரகாளியும் இவளே.
    • இவளை வழிபடும் எவரும் துன்பத்தின் நிழல்கூட தன் மீது படாமல் வாழ்வார்கள்.

    சென்னை, தாம்பரம், சேலையூர் அருகில் உள்ள கீழ்ப்பாக்கம் மகாலட்சுமி நகரில் அமைந்துள்ளது பிரத்தியங்கிரா தேவி ஆலயம்.

    இரணியனைக் கொல்ல திருமால் நரசிம்ம மூர்த்தி அவதாரம் எடுத்து இரணியனைக் கொன்றார்.

    ஆனாலும் அவரது கோபம் தணியவில்லை. இரணியனின் ரத்தத்தைத் தீண்டியதன் விளைவு நரசிம்மனின் உக்கிரம் அதிகமாகியது.

    நரசிம்மர் பெரிய உருவங்கொண்டு அகில உலகமே நடுங்கும்படி பயங்கரமாகக் கர்ஜித்துக் கொண்டிருந்தார்.

    இவரது கோபத்தை அடக்க சிவபெருமான் சரபேஸ்வரராக வடிவம் கொண்டு அவரைச் சாந்தப்படுத்த முயன்றார்.

    ஆயினும் திருமாலின் கோபம் தணியாமல் இருக்கவே தனது நெற்றிக்கண்ணில் இருந்து பிரத்யங்கிரா காளியைத் தோற்றுவித்தார்.

    ஸ்ரீ சாந்தானந்தா சுவாமிகள் சென்னை, ராஜ கீழ்ப்பாக்கத்தில் உள்ள கந்தாஸ்ரமத்தில் இந்த பிரத்தியங்கிரா தேவிக்கு ஆலயம் அமைத்துள்ளார்.

    இந்த ஆலயத்தில் ஸ்ரீபுவனேஸ்வரியும், சுவாமிநாதனும் எதிரெதிரே தனித்தனியாகக் கோவில் கொண்டிருக்கிறார்கள்.

    இவர்களையடுத்து ஸ்ரீசரபேஸ்வரரும் ஸ்ரீபிரத்தியங்கிராவும் தனித்தனியே கோவில் கொண்டிருக்கின்றனர்.

    இந்த நான்கு திருவடிகளுக்கும் மத்தியில் அழகான தியான மண்டபம் அமைந்துள்ளது.

    அபய, வரத முத்திரைகள் தாங்கி பாசமும் அங்குசமும் தரித்தவளாக அன்பும் சாந்தமும் நிறைந்த திருமுகத்தினளாய் பேரழகுடன் வீற்றிருக்கிறாள் ஸ்ரீபுவனேஸ்வரி.

    அகில உலகத்தையே ஆளும் அந்த நாயகியின் பக்கத்தில் முருகப்பெருமான் இடக்கையை ஊர்ஹஸ்தமாகவும் வலக்கரத்தில் தண்டூன்றியும் காட்சி தருகிறார்.

    பறவை, விலங்கு, மனிதன் மூன்றும் கலந்த வடிவாய். தலையில் பிறை நிலா விளங்க மான், மழு, நாகம், தீ, இந்நான்கையும் ஏந்திய கரத்தினராய்க் காட்சி தருகிறார். ஸ்ரீசரபேஸ்வரர்.

    இவர் ஸ்ரீநரசிம்மரின் ஆவேசத்தைத் தணிக்கும் பொருட்டு சிவபெருமானால் மேற்கொள்ளப்பட்ட திருவடிவம்.

    சுமார் 12 அடி உயரமுள்ள இந்த ஐம்பொன் சிற்பம் பார்க்க அழகான தோற்றமுடையது.

    இங்குள்ள பிரத்தியங்கிரா தேவி சிலை பஞ்சலோகத்தில் 13 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

    உலகிலேயே வேறு எங்கும் இல்லாத அளவிற்கு உள்ள சிறப்பு அம்சம் இதுவாகும்

    இந்தப் பிரத்தியங்கிரா தேவி டமருகம், பாசம், கபாலம், சூலம் நான்கையும் தரித்தவளாய் சிம்ம வாகனத்தில் அமர்ந்து ஒளிதரும் பெரு விழிகளும், தெற்றுப்பற்களும், கோரைப்பற்களும் துலங்க காட்சி தருகிறாள்.

    தலைக்கு மேலே நாகம் குடையாய் கவிழ்ந்திருக்கிறது.

    பாதத்து அருகே காளியின் மந்திரத்தை வெளிப்படுத்திய அங்கிரஸ், பிரத்தியங்கிரஸ் ஆகிய இரு முனிவர்களும் கைகூப்பித் தொழுகின்றனர்.

    இந்த ஆலயத்தில் அரிய தரிசனங்களாக பஞ்சமுக கணபதி, பஞ்சமுக ஆஞ்சநேயர் மற்றும் தத்தாத்ரேயரின் வடிவங்கள் ஆகிய சிலைகள் காட்சி தருகின்றன.

    அபயம் என்று அலறிப் பணிந்த உயிர்களைக் காக்கும் அற்புத தேவி இந்தப் பிரத்தியங்கிரா. அதர்வணப் பத்ரகாளியும் இவளே.

    இவளை வழிபடும் எவரும் துன்பத்தின் நிழல்கூட தன் மீது படாமல் வாழ்வார்கள்.

    இந்தக் காளியை வழிபடும் எவரையும், யாரும் பகைப்பதோ, விரோதிப்பதோ கூடாது.

    பிரத்யங்கிரா தேவியை தியானிப்பவர்களிடம் பகைமை பாராட்டக்கூடாது.

    அப்படி பக்தர்களைக் காக்கும் கவசமாகத் திகழ்கின்றாள் இந்தப் பிரத்தியங்கிரா தேவி.

    • திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்.
    • கோட்புலி நாயனார் குருபூஜை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆடி-29 (புதன்கிழமை)

    பிறை: வளர்பிறை

    திதி: நவமி காலை 7 மணி வரை பிறகு தசமி

    நட்சத்திரம்: அனுஷம் காலை 9.47 மணி வரை பிறகு கேட்டை

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

    எமகண்டம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

    திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். ராமேஸ்வரம் சுவாமி, அம்பாள் இருவரும் தங்கக் கேடயச் சப்பரத்தில் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம். இருக்கன்குடி ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. கோட்புலி நாயனார் குருபூஜை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமி சிறப்பு திருமஞ்சனம். வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் பவனி. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள் புறப்பாடு. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி புறப்பாடு.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நட்பு

    ரிஷபம்-விவேகம்

    மிதுனம்-பொறுமை

    கடகம்-நன்மை

    சிம்மம்-வெற்றி

    கன்னி-நலம்

    துலாம்- அமைதி

    விருச்சிகம்-ஜெயம்

    தனுசு- யோகம்

    மகரம்-சாந்தம்

    கும்பம்-வரவு

    மீனம்-மாற்றம்

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கோவில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம்.
    • தேங்காய் உடைப்பதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது.

    சென்னை:

    கோவில்களில் பெரும்பாலும் இறைவனுக்கு தேங்காய் உடைப்பது வழக்கம். ஏன் தேங்காய் உடைக்கிறோம், இதில் என்ன தத்துவம் இருக்கிறது என்ற விவரம் நம்மில் பலருக்கு தெரியாது.

    ஏதோ சுவாமிக்கு அர்ச்சனை பண்ணினோம், தரிசனம் செய்தோம் என்றவாறே இதை நாம் தொன்றுதொட்டு செய்து வருகிறோம்.

    ஆனால் தேங்காய் உடைப்பதில் ஒரு சிறிய தத்துவ தகவல். இதில் ஒரு பெரிய உண்மை மறைந்து இருக்கிறது.

    தேங்காயின் மேல் கடுமையான ஓடும், அதனுள் மென்மையான பருப்புமாகிய காய்ப் பகுதியும், அதனுள் நீரும் உள்ளது.

    உருண்டையான புற ஓடு பிரபஞ்சத்தை ஒத்து இருக்கிறது. இரண்டும் கோள வடிவம் உடையது. இது உலக மாயையைக் குறிப்பது ஆகும்.

    உள்ளே உள்ள வெண்ணிறமான பகுதி பரமாத்மாவை குறிக்கும்.

    இளநீர் அதனால் விளையும் பரமானந்த அமிர்தத்தை ஒத்து இருக்கின்றது.

    ஜீவாத்மா மாயையினால் பரமாத்மாவை உணராமல் பரமானந்த பிராப்தியையும் பெறாமல் நிற்கின்றது. அதுபோல் வெள்ளை பகுதியையும், நீரையும் காண முடியாமல் ஓடு மறை(க்)கின்றது.

    ஈசுவர சன்னிதியில் மாயையை அகற்றி தேஜோமய சுவரூபத்தைக் காட்டி அவர் அருளாள் பரமானந்த பேரமுதத்தை நுகரச் செய்யும் செயலையே இது காட்டுகிறது.

    இவ்வளவு உட்கருத்து இருப்பதால்தான் தேங்காயை இறைவழிபாட்டில் முக்கிய பொருளாக வைத்து நம் முன்னோர்கள் வழிபட்டு வந்துள்ளனர் என்கிற உண்மையை நாம் உணரவேண்டும்.

    • சகல ஐஸ்வர்யங்களையும் உடையவர் என்பதால் சகல ஐஸ்வர்ய தாரின்யை என்று அழைக்கப்படுகிறாள்.
    • பக்தர்களுக்கு நவகிரகத்தின் சாரத்தில் இருந்து காப்பதால் நவகிரக ரூபிண்யை என்று அழைக்கப்படுகிறாள்.

    ஓம் க்ஷம்

    பக்ஷஜ்வாலா ஜிஹ்வே

    கராள தம்ஸ்டரே

    பிரத் யங்கிரே

    க்ஷம் ஹரீம் ஹும்பட சுவாஹ என்பதாகும்.

    ஸ்ரீ பிரத்தியங்கிரா தேவியின் தியானம், பூஜை, உபாசனை விதிமுறை ஆகியவற்றை சித்திபெற்ற நற்குருவிடம் தெளிவாகப் பாடம் கேட்டுக் கொண்டு, குருவின் முன் அவர் தம் சந்நிதானத்தில் பூஜையை ஆரம்பிக்க வேண்டும். பின் விதிமுறைகளை நன்கு தெரிந்துகொண்டு தனியாக பூஜைகளை ஆரம்பிக்க வேண்டும்.

    மூலமந்திரம் சொல்லும் விதம்:

    பிரணவத்தில் இருந்து விரிவடைந்திருக்கும் இந்தத் தேவியின் மூலமந்திரம் காயத்ரி மகா மந்திரம் சொல்லுவதுபோல் ஐந்து இடைவெளி விட்டுச் சொல்ல வேண்டும்.

    ஓம் - என்ற பிரணவத்தை தீர்க்க ஸ்வரத்திலும் அடுத்த க்ஷம் என்பதை ஸ்வரித அதாவது குறுகிய ஸ்வரத்திலும் ஓம் -க்ஷம் என்று ஒரு இடைவெளியிலும் பக்ஷஸ்வாலா ஜிஹ்வே என்று இரண்டாவது இடைவெளியும் கராளதம்ஸ்ட்ரே என்று மூன்றாவது இடைவெளியும் பிரத்யங்கரே என்று நான்காவது இடைவெளியும், க்ஷம் கிரீம் ஹிம் பட்ஸ்வராகா என்று ஐந்தாவது இடைவெளியும் வைத்து ஒவ்வொரு இடைவெளிக்கும் இடைப்பட்ட காலம் மூன்று மாத்திரை நேரம் எனக் கொள்ளலாம்.

    மூன்று மாத்திரை என்பது மூன்று வினாடிகள் என்று கொள்ளலாம்.

    கருணை உள்ளம் கொண்ட இத்தேவியின் மூலமந்திர அக்ஷரத்தின் பிரணவ கலைகளைக் கூர்ந்து நோக்கினால், இதில் சம்ஹாரத் தைக் குறிக்கும் கலைக்கு இடமே இல்லை என்று கூறலாம்.

    திருநாமங்கள்:

    இதன் காரணமாக பிரத்தியங்கிராதேவி பல பெயரிலும் அழைக்கப்படுகிறாள்.

    ஓங்கார ரூபிணியாக இருந்து விசுவ ரூபத்தில் திகழ்ந்து புத்தி முக்தியை அளிப்பதால் புத்தி முக்தி பலப்ராதாயை என்று அழைக்கப்படுகிறாள்.

    சகல ஐஸ்வர்யங்களையும் உடையவர் என்பதால் சகல ஐஸ்வர்ய தாரின்யை என்று அழைக்கப்படுகிறாள்.

    பக்தர்களுக்கு நவகிரகத்தின் சாரத்தில் இருந்து காப்பதால் நவகிரக ரூபிண்யை என்று அழைக்கப்படுகிறாள்.

    ஓம் சகல நாயகி போற்றி

    ஓம் சர்வ ப்ரத்யங்கரா தேவி போற்றி

    ஓம் தர்ம பரிபாலதையே போற்றி

    ஓம் தக்க வரமருள் தாயேபோற்றி

    ஓம் துக்க நிவாரணி மாதா போற்றி

    ஓம் துஷ்ட சிஷ்ட சம்ஹார போற்றி

    ஓம் இஷ்ட குண சோதரியே போற்றி

    ஓம் கஷ்ட வழி தகர்ப்பாய் போற்றி

    ஓம் எண்ணவரும் பிரத்யங்கரா போற்றி

    ஓம் ரூபமது ஓங்காரியே போற்றி

    ஓம் வரிந்த தோற்றமானாய் போற்றி

    ஓம் நெடிதுயர் விஸ்வரூபி போற்றி

    ஓம் ஹரத்துள்ளாயே போற்றி

    ஓம் கபால மாலையணிந்தாயே போற்றி

    ஓம் எண்ணிலா சிரமுள்ளாய் போற்றி

    ஓம் எண்ணமதி அறிவாய் போற்றி

    ஓம் வண்ண உயிர் வடிவே போற்றி

    ஓம் சிம்மவாகினி பிரத்யங்கரா போற்றி

    ஓம் சிங்க முகமுடையவளே போற்றி

    ஓம் சூலமது ஏந்தினாயே போற்றி

    ஓம் சதுர்கரம் தரித்தாயே போற்றி

    ஓம் ஸ்ஹம்கார சக்தியே போற்றி

    ஓம் சிவந்த விழி மூன்றுடையாய் போற்றி

    ஓம் சீற்றத்தில் சர்வ பாப நாசி போற்றி

    ஓம் தெற்றுப்பல் எண்ணிலாய் போற்றி

    ஓம் சந்திரனை தரித்தாயே போற்றி

    ஓம் இந்திரனும் பணிந்தாயே போற்றி

    ஓம் கர்ணகோர ரூபமே போற்றி

    ஓம் ஞானவழி எழிலே போற்றி

    ஓம் நாளும் இடர் அழிப்பாயே போற்றி

    ஓம் பாடும் மனம் அமர்வாயே போற்றி

    ஓம் ஓடும் மனம் நிறுத்துவாயே போற்றி

    ஓம் வாடும் பயிர் காப்பாயே போற்றி

    ஓம் வானம் பூமி காப்பாயே போற்றி

    ஓம் ரூபா ரூபம் கலந்தாயே போற்றி

    ஓம் வினை நீக்கும் பிரத்யங்கரா போற்றி

    ஓம் எதிர்வினை பொசிப்பாய் போற்றி

    ஓம் ஏவியோரை அழிப்பாய் போற்றி

    ஓம் எல்லோர்க்கும் சமமே போற்றி

    ஓம் ஏற்றத் தாழ்வு இல்லாயே போற்றி

    ஓம் பக்தர் மனம் வசிப்பாயே போற்றி

    ஓம் பக்தர் குறை தீர்ப்பாயே போற்றி

    ஓம் முக்தி தரும் சக்தியே போற்றி

    ஓம் சித்தி வழி சித்தியே போற்றி

    ஓம் சக்தி தரும் பிரத்யங்கரா போற்றி

    ஓம் சிவந்தவாழி பேரெழிலே போற்றி

    ஓம் உகந்த வழி காட்டுவாய் போற்றி

    ஓம் புகலும் மொழி வருவாயே போற்றி

    ஓம் இகம் புரம் சுகமாவாயே போற்றி

    ஓம் தவம் தரும் யோகமாயே போற்றி

    ஓம் தயை சுவை மோகனமே போற்றி

    ஓம் கண் ஏறு நகிப்பாயே போற்றி

    ஓம் சூன்ய ஏவல் எரிப்பாயே போற்றி

    ஓம் சர்வ லோக பிரத்யங்கரா போற்றி

    ஓம் பத்ரகாளி வடிவே போற்றி

    ஓம் பாரோச்சும் சக்தீ போற்றி

    ஓம் சூலினியின் துணையே போற்றி

    ஓம் சூரர்களை வதிப்பாயே போற்றி

    ஓம் சூழ்ச்சிக்கு வீழ்ச்சியே போற்றி

    ஓம் சுந்தர வதன மாதேவி போற்றி

    ஓம் நெருப்பின் நெருப்பானாய் போற்றி

    ஓம் விருப்பமது அணைப்பாயே போற்றி

    ஓம் திருப்பமது பிரத்யங்கரா போற்றி

    ஓம் மகிஷசுர மர்த்தினியே போற்றி

    ஓம் மாவீர கோகிலமே போற்றி

    ஓம் சர்வபாப விநாசனி போற்றி

    ஓம் சத்ய ஜோதி வடிவமே போற்றி

    ஓம் உள்ளம் உள்ளதறிவாய் போற்றி

    ஓம் உகந்தது தருவாயே போற்றி

    ஓம் நினைத்தது நடத்துவாய் போற்றி

    ஓம் கணித்தது புகுவாயே போற்றி

    ஓம் விரைந்துதவும் பிரத்யங்கரா போற்றி

    ஓம் ஆபத் சகாயமே போற்றி

    ஓம் ஆகாய வெளிவழியே போற்றி

    ஓம் ஆயிரம் வியழி ஜோதி போற்றி

    ஓம் ஆதரவு தர வருவாயே போற்றி

    ஓம் சங்கர ஸ்வரூபியே போற்றி

    ஓம் பார்வதி மய சக்தியே போற்றி

    ஓம் ப்ராணரூப ஆட்சியே போற்றி

    ஓம் பிரணவரூப ஒலியே போற்றி

    ஓம் சரணாகதம் பிரத்யங்கரா போற்றி

    ஓம் புவனேஸ்வரி ரூபமே போற்றி

    ஓம் புவன யோக வீரமே போற்றி

    ஓம் யுக யுகாந்திர ஆற்றலே போற்றி

    ஓம் தவ ரூப மய ஸ்வரூபமே போற்றி

    ஓம் புத பேத நாசினி போற்றி

    ஓம் யோக தவம் அருள்வாய் போற்றி

    ஓம் வனநேச பாரிதியே போற்றி

    ஓம் குண ரூப சாரதியே போற்றி

    ஓம் வரவேண்டும் பிரத்யங்கரா போற்றி

    ஓம் டமருகம் தரித்தாய் போற்றி

    ஓம் சூலமும் கொண்டாய் போற்றி

    ஓம் பக்தரின் பிரியமே போற்றி

    ஓம் பணிந்தோர்க்கு காவலே போற்றி

    ஓம் ராஜராஜ தேவியே போற்றி

    ஓம் கங்காதர காருண்யே போற்றி

    ஓம் வித்தைக் கதிபதியே போற்றி

    ஓம் வித்வ மூல சித்தமே போற்றி

    ஓம் வேண்டதருள் பிரத்யங்கரா போற்றி

    ஓம் கல்ப விருட்சமானாய் போற்றி

    ஓம் காமதேனு மடியே போற்றி

    ஓம் காற்று நீர் நேருப்பே போற்றி

    ஓம் சித்த வித்யா புத்தியே போற்றி

    ஓம் தத்துவ சத்தியத் தாயே போற்றி

    ஓம் மகாபல மாசக்தியே போற்றி

    ஓம் மகா பைரவி தேவியே போற்றி

    ஓம் நலம் தரும் நாயகியே போற்றி

    ஓம் ஆத்மலய பிரத்யங்கரா போற்றி போற்றி போற்றி

    • மேலும் பிரத்தியங்கரா தேவியை தரிசித்தால் பில்லி, சூனியம், ஏவல் அண்டாது என்ற நம்பிக்கையும் உள்ளது.
    • திருமணம் தள்ளி போகும் ஆண்கள், பெண்கள் கோவிலில் மஞ்சள், குங்குமம் வைத்து அபிஷேகம் செய்தால் பிரச்சினைகள் தீரும்.

    புதுவை பகுதியில் அமைந்துள்ள பிரபலமான கோவில்களில் ஒன்றாக பிரத்தியங்கரா தேவி கோவிலும் உள்ளது.

    புதுவை நகரில் இருந்து 3 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மொரட்டாண்டி காட்டு பகுதியில் இந்த கோவில் அமைந்து உள்ளது.

    இங்கு 72 அடி உயரம் உள்ள பிரமாண்டமான பிரத்தியங்கரா தேவி சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

    இதன் அருகில் பூமியின் பாதாள அறையில் கோவில் அமைந்துள்ளது.

    கோவில் நுழைவு வாயில் சிங்கத்தின் வாய்ப்போல அமைக்கப்பட்டுள்ளது.

    அதன் வழியாக படியில் இறங்கி சென்று பாதாள அறையில் உள்ள சாமியை தரிசிக்க வேண்டும். பிரத்தியங்கரா தேவி கருவறை விமானம் பூர்ணமேடு வடிவில் அமைந்துள்ளது.

    மயான பூமியை விரும்பும் பிரத்தியங்கரா தேவியின் கோவிலை சுற்றி 5 இடங்களில் மயான பூமி அமைந்துள்ளது.

    கோவிலை வலம் வந்தால் ஆகம சாஸ்திரப்படி முதலில் பிரளயவிநாயகர் சன்னதி உள்ளது. அதை தொடர்ந்து இந்திரன், அக்னி, வாயு, வருணன், மேதா தட்சிணாமூர்த்தி, ஈசான்ய பகவான், துர்க்கை, வாஸ்து, புருஷன், யமதர்மராஜன் போன்ற பரிவார தேவதைகளின் சன்னதிகளும் சாஸ்திரப்படி அமைந்துள்ளன.

    கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். புதுவை, தமிழ்நாடு மட்டும் அல்லாமல் கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர்.

    தினமும் காலை 7 மணி முதல் பகல் 1 மணி வரையிலும், மாலை 3.30 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பக்தர்கள் தரிசிக்கலாம்.

    வாரந்தோறும் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக் கிழமைகளில் ராகுகால பூஜைகள் நடக்கிறது. பவுர்ணமி கழித்து வரும் தேய்பிறை அஷ்டமியில் நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை பிரத்தியங்கரா யாகம் நடக்கிறது.

    இதில் கலந்து கொள்பவர்களுக்கு வேண்டும் வரங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

    செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு கால நேரத்தில் சிறப்பு பூஜை நடக்கிறது. இந்த பூஜையில் கலந்து கொண்டால் 64 திருஷ்டிகள் நிவர்த்தியாகும்.

    மேலும் பிரத்தியங்கரா தேவியை தரிசித்தால் பில்லி, சூனியம், ஏவல் அண்டாது என்ற நம்பிக்கையும் உள்ளது.

    திருமணம் தள்ளி போகும் ஆண்கள், பெண்கள் கோவிலில் மஞ்சள், குங்குமம் வைத்து அபிஷேகம் செய்தால் பிரச்சினைகள் தீரும்.

    வேண்டுதல் நிறைவேறும் பக்தர்கள் ஆடி மாதம் வெள்ளிக் கிழமை பால்குடம், தீச்சட்டி ஏந்தியும் அலகு குத்தியும் வழிபாடு செய்கின்றனர்.

    ×