என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • தசராத்திருவிழா அக்டோபர் 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    • சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் அக்டோபர் 12-ந் தேதி.

    நெல்லை:

    தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவிலில் நடைபெறும் தசரா திருவிழா மிகவும் பிரசித்தி பெற்றது.

    இங்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் தசரா திருவிழா இந்தியாவில் மைசூருக்கு அடுத்து மிகவும் புகழ்பெற்றது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

    இந்த திருவிழாவை காண வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்தும் சென்னை, கோவை, கன்னியாகுமரி, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் காளி, அம்மன், சிவன், கிருஷ்ணா், முருகன், விநாயகர் போன்ற சாமி வேடங்கள் மற்றும் குறவன், குறத்தி, போலீஸ், குரங்கு, கரடி, சிங்கம், புலி போன்ற வேடங்கள் அணிவார்கள்

    குலசேகரன்பட்டினம் கோவிலை பொறுத்தவரை 90 நாள், 48 நாள், 31 நாள், 12 நாள், 10 நாள் என பல்வேறு நாட்கள் விரதத்தை கடை பிடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.

    இந்த நிலையில் இந்த ஆண்டிற்கான திருவிழாவை முன்னிட்டு 48 நாட்கள் மாலை அணிந்து விரதம் இருக்கும் பக்தர்கள் குலசேகரப்பட்டினம் கடலில் புனித நீராடி, சிவப்பு ஆடை அணிந்து, துளசி மாலையுடன் கோவிலுக்கு வந்து கோவில் அர்ச்சகர் கையால் மாலை அணிந்து விரதம் இருக்க தொடங்கி உள்ளனர்.

    சிறப்பு வாய்ந்த குலசேகரப்பட்டினம் தசராத்திருவிழா வருகிற அக்டோபர் 3-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக சூரசம்ஹாரம் அக்டோபர் 12-ந் தேதி குலசேகரன்பட்டினம் கடற்கரையில் நடைபெறுகிறது. அன்றைய தினம் கடற்கரை பகுதியில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து அம்மனை தரிசனம் செய்வார்கள்.

    இதற்கிடையே, தசரா திருவிழாவில் கலந்து கொள்ளும் பக்தர்கள் வசதிக்காக குலசேகரன்பட்டி னம் புறவழிச் சாலை, உடன்குடி சாலை, மணப்பாடு சாலை, திருச்செந்தூர் செல்லும் சாலை ஆகிய பகுதிகளில் உள்ள 250 ஏக்கர் இடங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு அப்பகுதியில் உள்ள முட்செடிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி, மேடு, பள்ளங்களை சரி செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

    மேலும் பக்தர்கள் வாகனம் நிறுத்தும் 20 இடங்களில் 150-க்கும் மேற்பட்ட உயர் மின் கோபுர விளக்குகள் பொருத்தப்பட உள்ளது. இந்த வாகன நிறுத்தும் இடங்களில் தற்காலிக நடமாடும் சுகாதார வளாகங்களும் அமைக்கப்பட உள்ளது.

    • விநாயகப்பெருமானுக்கு 32 வடிவங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது.
    • ஷோடச விநாயகர் என்றால் 16 விநாயகர்.

    விநாயகப்பெருமானுக்கு 32 வடிவங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவற்றில் ஷோடச விநாயகர் (16 விநாயகர்) வழிபாடு என்பது முக்கியமானது. இந்த விநாயகர்களை பற்றியும், அவர்களை வழிபடுவதால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றியும் அறிந்துகொள்ளலாம்.


    பாலகணபதி

    மா, பலா, வாழை ஆகிய மூன்று பழங்களையும், கரும்பையும் தம் கரங்களில் ஏந்தி இருக்கும் இவர், சிவப்பு வண்ண மேனியுடன் பிரகாசிக்கும் பாலகனின் தோற்றம் கொண்டவர். இவரை வழிபடுவதால் அனைத்து விதமான தோஷங்களும் நீங்கும்.


    தருண கணபதி

    பாசம், அங்குசம், அப்பம், விளாம்பழம், நாவற்பழம், முறிந்த ஒற்றை தந்தம், நெற்கதிர், கரும்பு ஆகியவற்றை தம் எட்டுக் கரங்களில் ஏந்தியிருப்பவர் இவர். சூரியன் உதிக்கும்போது இருக்கும் செவ்வானத்தின் நிறத்தைக் கொண்டு இளைஞராக அருள்பவர் இவர். இவரை வழிபட்டால் முகக் கலை உண்டாகும்.


    பக்த கணபதி

    தேங்காய், மாங்காய், வாழைப்பழம், வெல்லம் கொண்டு செய்யப்பட்ட பாயசம் நிரம்பிய சிறுகுடம் ஆகியவற்றை, தம் நான்கு கரங்களில் ஏந்தியவர் இந்த விநாயகர். இவர் நிலவின் ஒளியைப் போன்ற வெண்ணெய் நிற மேனி கொண்டவர். இவரை வழிபடுவதால் இறை வழிபாடு உபாசனை நல்லவிதமாக அமையும்.


    வீர கணபதி

    பதினாறு கரங்களைக் கொண்டவர் இவர். அவற்றில் ஒரு கரத்தில் வேதாளத்தையும், மற்ற கரங்களில் ஆயுதங்களையும் ஏந்தி செந்நிற மேனியுடன் ரவுத்ரமாக வீராவேசத்துடன் காணப்படுபவர். இவரை வழிபடுவதால் தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும்.


    சக்தி கணபதி

    பச்சைநிற மேனியுடைய சக்தியுடன் காட்சியளிப்பவர் இந்த விநாயகர். பாசம், அங்குசம் ஏந்தியிருப்பவர். பயத்தை நீக்குபவர். செந்தூர வண்ணம் கொண்டவர். இவரை வழிபடுவதால் உடல் ஆரோக்கியம் சீராகும்.


    துவிஜ கணபதி

    இரண்டு யானை முகங்களுடன் இடது கையில் சுவடி, அட்சயமாலை, தண்டம், கமண்டலம் ஏந்தியிருப்பார். வெண்ணிற மேனி கொண்டவர். இவரை வழிபடுவதால் கடன் தொல்லை நீங்கும்.


    சித்தி கணபதி

    பழுத்த மாம்பழம், பூங்கொத்து, கரும்புத்துண்டு, பாசம், அங்குசம் ஆகியவற்றைக் ஏந்தியிருப்பார். ஆற்றலைக் குறிக்கும் சித்தி தேவியை உடன் இருத்தியபடி, பொன்னிற மேனியைக் கொண்டவராக அருள்பவர். இவருக்கு 'பிங்கள கணபதி' என்ற பெயரும் உண்டு. இவரை வழிபட்டால் சகல காரியமும் சித்தியாகும்.


    உச்சிஷ்ட கணபதி

    வீணை, அட்சரமாலை, குவளை மலர், மாதுளம் பழம், நெற்கதிர், பாசம் ஆகியவற்றையும் ஏந்தியுள்ளார். கருநீலவண்ண மேனியுடைய இவர் தன்னுடைய தேவியை அணைத்தபடி இருப்பவர். இவரை வழிபடுவதால் வாழ்க்கையில் உயர்வும், உயர் பதவிகளும் பெறலாம்.


    விக்னராஜ கணபதி

    சங்கு, கரும்பு, வில், மலர், அம்பு, கோடரி, பாசம், அங்குசம், சக்கரம், தந்தம், நெற்கதிர், சரம் ஆகியவற்றை தன் பன்னிரு கைகளில் ஏந்தி, பொன்னிற மேனியுடன் பிரகாசிப்பவர். இவரை வழிபடுவதால் விவசாயம் செழிக்கும்.


    சுப்ர கணபதி

    கற்பகக்கொடி, தந்தம், பாசம், அங்குசம் ஆகியவற்றை தன் நான்கு கரங்களிலும், ரத்தினங்களை பதித்த கும்பத்தை தனது துதிக்கையிலும் ஏந்தியிருப்பார். செம்பருத்தி மலரைப் போன்ற சிவந்த மேனியுடைய இவர், விரைந்து அருள்புரிபவராகக் கருதப்படுகிறார். இவரை வழிபடுவதால் கல்வி விருத்தியாகும்.


    ஹேரம்ப கணபதி

    அபய ஹஸ்தங்களுடன் (கரங்கள்), பாசம், அங்குசம், தந்தம், அட்சரமாலை, கோடரி, சம்மட்டி, மோதகம், பழம் ஆகியவற்றை ஏந்தியிருப்பார். பத்து கைகளும், ஐந்து முகங்களும் அமைந்து வெண்ணிற மேனியுடன் சிம்ம வாகனத்தில் அமர்ந்து இவர் காட்சி தருகிறார். நேபாள நாட்டில் காணப்படும் இவர், திசைக்கு ஒன்றாக நான்கு முகங்களும் உயரே நோக்கிய ஐந்தாவது முகத்துடனும் விளங்குகிறார். இவரை வழிபடுவதால் விளையாட்டு, வித்தைகளில் புகழ் பெறலாம்.


    லட்சுமி கணபதி

    பச்சைக்கிளி, மாதுளம் பழம், பாசம், அங்குசம், கற்பகக்கொடி, கத்தி ஆகியவற்றை தன் ஆறு கைகளிலும், மாணிக்க கும்பத்தை தன் துதிக்கையிலும் ஏந்தி தன் இருபுறமும் இரு தேவிகளை அணைத்துக் கொண்டு வெள்ளைமேனியாய் அமர்ந்து அருள்புரிபவர். இவரை வழிபடுவதால் பணம், பொருள் அபிவிருத்தியாகும்.


    மகா கணபதி

    பிறை சூடி, மூன்று கண்களுடன் தன் சக்தியான வல்லபையை அணைத்த வண்ணம், கைகளில் மாதுளம்பழம், கதை, சக்கரம், பாசம், நெய்தல், புஷ்பம், நெற்கதிர், தந்தம், கரும்பு, வில், தாமரை மலர் ஆகியவற்றையும், துதிக்கையில் ரத்தின கவசத்தையும் ஏந்தி சிவப்புநிற மேனியாய் விளங்குபவர். இவரை வழிபடுவதால் தொழில் விருத்தியாகும்.

    புவனேச கணபதி

    விநாயகர் தன் தந்தத்தை முறித்து வீசியதால், கஜமுகாசூரன் தன் சக்தி ஒடுங்கி சிறு மூஞ்சூறு வடிவத்துடன் ஓடினான். அவன் மீது பாய்ந்து ஏறி அவனை தன் வாகனமாக்கிக் கொண்டவர் இந்த கணபதி. இவர் செந்நிற மேனியுடன் பாசம், அங்குசம், தந்தம், மாம்பழம் ஏந்தி கற்பக விருட்சத்தின் கீழ் காட்சி தருகிறார். இவரால் விவகாரம், வழக்குகள் வெற்றியாகும்.

    நிருத்த கணபதி

    மஞ்சள் மேனியுடன் பாசம், அங்குசம், அப்பம், கோடரி, தந்தம் ஆகியவற்றை ஐந்து கைகளில் ஏந்திய மோதகம் இருக்கும் துதிக்கையை உயர்த்தி ஒற்றைக்காலில் நிருத்த கணபதியாகக் காட்சி தருகிறார். இவரை வழிபடுவதால் சங்கீதம், சாஸ்திரங்களில் சிறப்பு பெறுவார்கள்.

    ஊர்த்துவ கணபதி

    பொன்னிற மேனியுடைய இவர், எட்டு கைகள் கொண்டவர். தேவியை தன் இடதுபுறம் அணைத்துக் கொண்டு வீற்றிருக்கிறார். இவரை வழிபடுவதால் இல்வாழ்க்கை இன்பமாக இருக்கும்.

    • திருச்செந்தூர் ஸ்ரீமுருகப்பெருமான் உருகு சட்டச்சேவை.
    • திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளிவாகன சேவை.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-14 (வெள்ளிக்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: துவாதசி மறுநாள் விடியற்காலை 4.42 மணி வரை. பிறகு திரயோதசி.

    நட்சத்திரம்: புனர்பூசம் இரவு 9.09 மணி வரை. பிறகு பூசம்.

    யோகம்: சித்த, மரணயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சுப முகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்தில் புறப்பாடு. திருச்செந்தூர் ஸ்ரீமுருகப் பெருமான் உருகு சட்டச்சேவை, விளாமிச்சவேர் சப்பரத்தில் பவனி. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தர குசாம்பிகை புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமான் கிளிவாகன சேவை.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-வாழ்வு

    ரிஷபம்-சாந்தம்

    மிதுனம்-மாற்றம்

    கடகம்-பக்தி

    சிம்மம்-அன்பு

    கன்னி-உறுதி

    துலாம்- முயற்சி

    விருச்சிகம்-ஆக்கம்

    தனுசு- பயிற்சி

    மகரம்-வெற்றி

    கும்பம்-தெளிவு

    மீனம்-வரவு

    • நிர்வாணஷட்கம் என்பது ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட ஆறு சுலோகங்களின் தொகுப்பாகும்.
    • இது ஆத்மஷட்கம் என்ற பெயராலும் அறியப்படுகிறது.

    நிர்வாணஷட்கம் என்பது ஆதிசங்கரரால் இயற்றப்பட்ட ஆறு சுலோகங்களின் தொகுப்பாகும்.

    இது ஆத்மஷட்கம் என்ற பெயராலும் அறியப்படுகிறது. ஆதிசங்கரர் துறவறம் மேற்கொண்டு குருவை தேடிக் கொண்டிருந்த பொழுது, ஆச்சாரியார் கோவிந்த பகவத்பாதரை சந்தித்தார்.

    கோவிந்த பகவத்பாதர் ஆதிசங்கரரிடம் யாரென வினவ, அதற்கு விடையாக ஆதிசங்கரர் இந்த ஆறு பாடல்களை பாடியதாக ஒரு கருத்து நிலவுகிறது.

    இப்பாடல்களில் சிவ வழிபாட்டின் பெருமையை கூறியும், வேதம், வேள்வி, மதம் ஆகியற்றை மறுத்து சிவனே ஆனந்த மயமானவன் என்றும் ஆதிசங்கரர் கூறுகிறார்.

    ஆறு பாடல்களையும் சிதானந்த ரூப: சிவோஹம் சிவோஹம் என்ற ஒரு வரியாலேயே முடிக்கிறார்.

    பாடல்கள்

    1. மனம் புத்தி ஆணவச் சித்தங்கள் இல்லை; இரு

    கண்ணில்லை; செவி, நாக்கு நாசியும் இல்லை;

    வானில்லை மண்ணில்லை; வளி ஒளியும் இல்லை;

    சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

    2. உயிர் மூச்சு மில்லை; ஐங் காற்றும் இல்லை;

    எழு தாதும் இல்லை; ஐம் போர்வை இல்லை;

    கை கால்கள் இல்லை; சினை வினையும் இல்லை;

    சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

    3. வெறுப்பில்லை விருப்பில்லை; மையல் பற்றில்லை;

    சிறு கர்வம் இல்லை; அழுக்காறும் இல்லை;

    அறம் பொருள் நல்லின்ப, வீடு பேறில்லை;

    சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

    4. வினை வேட்கை இன்பங்கள், துன்பங்கள் இல்லை;

    மறை வேத தீர்த்தங்கள், வேள்விகள் இல்லை;

    உணவில்லை, உணவாக்கி உண்பவரும் இல்லை!

    சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

    5. மரணங்கள் ஐயங்கள், உயர்வு தாழ்வில்லை;

    தந்தை தாயில்லை; தரும் பிறப்பில்லை;

    உற்றார்கள் சுற்றார்கள், குரு சீடர் இல்லை;

    சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

    6. மாற்றங்கள் இல்லை; பல தோற்றங்கள் இல்லை;

    எங்கெங்கும் எல்லாமும், எதனுள்ளும் இவனே;

    தளையில்லை; தடையில்லை; வீடுபேறில்லை;

    சிதானந்த ரூபம்; சிவோஹம்! சிவோஹம்!

    • அழகிய பவானிகோவில் ஜோஷி மடத்திலிருந்து ஆறு கி.மீ தொலைவில், ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.
    • ஜோஷி மடத்திலிருந்து 44 கி.மீ தொலைவில் ஸ்ரீகிருஷ்ணரின் பத்ரிநாத்கோவில் அமைந்துள்ளது.

    பவானிகோவில்

    அழகிய பவானிகோவில் ஜோஷி மடத்திலிருந்து ஆறு கி.மீ தொலைவில், ரிஷிகேஷ் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.

    பத்ரிநாத்கோவில்

    ஜோஷி மடத்திலிருந்து 44 கி.மீ தொலைவில் ஸ்ரீகிருஷ்ணரின் பத்ரிநாத்கோவில் அமைந்துள்ளது.

    போக்குவரத்து வசதிகள்

    ஜோஷி மடத்திற்கு 293 கி.மீ தொலைவில் அமைந்துள்ள விமான நிலையம், டேராடூனில் உள்ளது.

    மிக அருகில் அமைந்துள்ள தொடருந்து நிலையம், அரித்வார் அருகே உள்ள ரிஷிகேஷில் அமைந்துள்ளது.

    தேசிய நெடுஞ்சாலை எண் 58 ஜோஷி மடத்தை புதுதில்லி, மற்றும் இந்திய-திபெத் எல்லைகளை சாலை வழியாக இணைக்கிறது.

    • ஜோஷி மடத்திலிருந்து பத்து கி.மீ தொலைவில் தபோவனம் எனும் அமைதியான இடம் அமைந்துள்ளது.
    • இங்கு இயற்கையாக அமைந்த வெந்நீர் ஊற்றில் குளிக்க இதமானது. தௌலி கங்கை ஆறு அமைதியாக இவ்விடத்தை கடக்கிறது.

    சங்கராச்சாரியர் மடம்

    ஜோசி மடம் ஆதிசங்கரரால் இமயமலையில் நிறுவப்பட்டது. இங்குள்ள புனித குகையில் ஆதிசங்கரர் தவமியற்றியதாகக் கருதப்படுகிறது.

    பத்ரிநாத்கோவில், சங்கரர் நிறுவிய ஜோஷி மடத்தின் நிர்வாகத்தில் உள்ளது.

    நரசிம்மர்கோவில்

    பனிக்காலத்தில் பத்ரிநாத்கோவில் மூடப்படும் போது, கோவிலிலுள்ள முக்கிய தெய்வச்சிலைகளை தீபாவளி நாள் முதல் ஜோஷி மடத்தில் உள்ள நரசிம்மர் கோவிலினுள் வைத்து வழிபடுவர்.

    தபோவனம்

    ஜோஷி மடத்திலிருந்து பத்து கி.மீ தொலைவில் தபோவனம் எனும் அமைதியான இடம் அமைந்துள்ளது.

    இங்கு இயற்கையாக அமைந்த வெந்நீர் ஊற்றில் குளிக்க இதமானது. தௌலி கங்கை ஆறு அமைதியாக இவ்விடத்தை கடக்கிறது.

    • அதர்வண வேதத்தை நிர்வகிக்கும்படியாக ஆதிசங்கரர் ஜோஷி மடத்தை நிறுவினார்.
    • ஜோஷி மடத்தில் குடிகொண்டுள்ள முக்கிய இறைவன் நரசிம்மர் ஆவார்.

    ஜோஷி மடம் அல்லது ஜோதிர் மடம்ந்தியாவின் உத்தரகாண்ட் மாநிலத்தில், சமோலி மாவட்டத்தில் , இமயமலையில் 6150 அடி உயரத்தில் அமைந்துள்ள நகராட்சி பகுதியாகும்.

    இமயமலையில் மலை ஏறும் குழுவினர்களுக்கும், பத்ரிநாத்கோவில் புனித யாத்திரை செய்பவர்களுக்கும் ஜோஷி மடம் நுழை வாயிலாக அமைந்துள்ளது.

    இந்தியாவில் ஆதிசங்கரர் நிறுவிய நான்கு மடங்களில் ஜோஷி மடமும் ஒன்று.

    சமயச் சிறப்புகள்

    அதர்வண வேதத்தை நிர்வகிக்கும்படியாக ஆதிசங்கரர் ஜோஷி மடத்தை நிறுவினார். ஜோஷி மடத்தில் குடிகொண்டுள்ள முக்கிய இறைவன் நரசிம்மர் ஆவார்.

    பத்ரிநாத்கோவில், குரு கோவிந்த்கோவில், பூக்களின் பள்ளத்தாக்கு எனப்படும் தேசிய பூங்கா ஆகிய இடங்களுக்கு ஜோஷி மடத்திலிருந்துதான் செல்ல வேண்டும்.

    • சாம வேதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இம்மடத்தை காளி மடம் என்றும் அழைப்பர்.
    • இம்மடத்தின் முதல் மடாதிபதியாக இருந்தவர், ஆதிசங்கரரின் நான்கு சீடர்களில் ஒருவரான அஸ்தாமலகர் ஆவார்.

    துவாரகை மடம்

    துவாரகை மடம் அல்லது துவாரகை பீடம் , இந்தியாவின், குஜராத் மாநிலத்தில், இன்றைய தேவபூமி துவாரகை மாவட்டத்தின் கடற்கரை நகரான துவாரகையில், ஆதிசங்கரரால் எட்டாம் நூற்றாண்டில் துவக்கப்பட்ட அத்வைத மடமாகும்.

    சாம வேதத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இம்மடத்தை காளி மடம் என்றும் அழைப்பர்.

    இம்மடத்தின் முதல் மடாதிபதியாக இருந்தவர், ஆதிசங்கரரின் நான்கு சீடர்களில் ஒருவரான அஸ்தாமலகர் ஆவார்.

    கோவர்தன மடம்

    கோவர்தன மடம், இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில், புரி நகரத்தில் அமைந்துள்ளது. புரி ஜெகன்நாதர் கோயிலுக்கு தொடர்புடைய கோவர்தன மடம், ஆதிசங்கரர் கி. பி., 820இல் நிறுவிய நான்கு மடங்களில் ஒன்று.

    ரிக் வேதத்தை முதன்மைபடுத்த, இந்தியாவின் கிழக்குப் பகுதியில் நிறுவப்பட்ட கோவர்தன மடத்தின் முதல் மடாதிபதியாக ஆதிசங்கரரின் சீடர் பத்மபாதர் பொறுப்பேற்றார்.

    பைரவர் மற்றும் பைரவியுடன், இம்மடத்தில் பெருமாள் மற்றும் சிவ பெருமான் பூஜிக்கப்படுகிறார்.

    • யசூர் வேதத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் வகையில் இம்மடம் அமைந்துள்ளது.
    • இம்மடத்தின் முதல் மடாதிபதியாக, சுரேஷ்வரர் எனும் தன் சீடரை நியமித்தார் சங்கரர்.

    சிருங்கேரி சாரதா பீடம் அல்லது சிருங்கேரி சாரதா மடம் தென்னிந்தியாவின், கர்நாடகா மாநிலத்தில், சிக்மகளூர் மாவட்டத்தில், துங்கபத்திரை ஆற்றாங்கரையில், சிருங்கேரி எனுமிடத்தில், ஆதிசங்கரரால் கி. பி. எட்டாம் நூற்றாண்டில் அத்வைத தத்துவத்தை பரப்ப அமைக்கப்பட்ட முதல் மடம்.

    யசூர் வேதத்தை பிரதிநிதித்துவம்படுத்தும் வகையில் இம்மடம் அமைந்துள்ளது.

    இம்மடத்தின் முதல் மடாதிபதியாக, சுரேஷ்வரர் எனும் தன் சீடரை நியமித்தார் சங்கரர்.

    மங்களூருவிலிருந்து 105 கி. மீ. தொலைவிலும், பெங்களூரிலிருந்து 303 கி. மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.

    பெருவாரியான ஸ்மார்த்தர்கள் ஆதிசங்கரரின் அத்வைத தத்துவத்தை பின்பற்றுகிறார்கள்.

    • விவேகானந்தர் அத்வைத சாரத்தை ஞான யோகத்தில் மிகவும் ஆழமாகச் சென்று சிறப்பாக விளக்கி இருக்கிறார்.
    • சுஃபியிசம் போன்ற இஸ்லாமிய ஆன்மிகப் பிரிவிலும் நிறைய அத்வைத சிந்தனைகள் உண்டு.

    அத்வைத சாரத்தை ஈஸ்வரனே ஆதிசங்கரருக்குப் போதித்ததாய் ஒரு நிகழ்ச்சி சொல்லப்படுகிறது.

    ஆதிசங்கரர் ஒரு சமயம் கங்கையில் குளித்து விட்டு சீடர்களுடன் காசி விஸ்வநாதனைத் தரிசிக்கச் சென்று கொண்டிருந்தார்.

    அப்போது நான்கு நாய்களைக் கட்டி இழுத்துக் கொண்டு ஒரு புலையன் எதிரில் வழிமறித்தபடி வந்து கொண்டிருந்தான். சடைத்தலையுடனும், அழுக்கு உடைகளுடனும், துர்நாற்றத்துடனும், கோரத் தோற்றத்துடனும் இருந்த அந்தப் புலையன், நாய்களுடன் நெருங்கிய போது ஆதிசங்கரர் அருவருப்புடன் "விலகி நில். எங்களுக்குப் போக வழிவிடு" என்று சொன்னார்.

    புலையன் கேட்டான். "யார் விலக வேண்டும்? இந்த உடலைச் சொல்கிறீர்களா?

    உடலுக்குள் இருக்கும் என்னைச் சொல்கிறீர்களா? உள்ளே உள்ள உயிர்ப் பொருள் இல்லா விட்டால் இந்த உடல் ஜடத்தன்மை வாயந்ததே.

    அது தானாக நகர முடியாதது. உள்ளே உள்ள உயிர்ப்பொருளைச் சொல்கிறீர்கள் என்றால், உங்கள் உடலினுள் உள்ள உயிர்ப் பொருளும், என் உடலின் உள்ளே இருக்கும் உயிர்ப்பொருளும் ஒன்று தான்.

    ஒன்றாக இருக்கும் உயிர்ப் பொருள் தன்னையே விட்டு எப்படி விலக முடியும்?"

    அந்த வாசகங்களில் இருந்த உண்மை ஆதிசங்கரரை உடனே இருகரம் கூப்பி மண்டியிட்டு அந்தப் புலையனை வணங்க வைத்தது.

    "தாங்களே என் குரு. உங்கள் திருவடிகளை வணங்குகிறேன்"

    உடனே புலையனின் உருவம் சிவபெருமானாகவும், நாய்கள் நான்கும் அவர் கையில் வேதங்களாகவும் மாறிக் காட்சியளிக்க ஆதிசங்கரர் பரவசத்துடன் "மணீஷ பஞ்சகம்" என்ற அற்புதமான ஐந்து சுலோகங்களில் புலையனாக வந்து இறைவன் சொன்ன அத்வைத தத்துவத்தைப் பாடினார்.

    இந்த அத்வைத சாரத்தை உபநிடதங்களிலும், பகவத் கீதையிலும் காண முடிகிறது.

    விவேகானந்தர் அத்வைத சாரத்தை ஞான யோகத்தில் மிகவும் ஆழமாகச் சென்று சிறப்பாக விளக்கி இருக்கிறார்.

    சுஃபியிசம் போன்ற இஸ்லாமிய ஆன்மிகப் பிரிவிலும் நிறைய அத்வைத சிந்தனைகள் உண்டு.

    ரமண மகரிஷி மற்றும் ஜெ.கிருஷ்ணமூர்த்தி போன்றோரும் அத்வைத மார்க்கத்தில் பயணித்தவர்களே.

    அஹம் ப்ரம்மாஸ்மி (நான் பிரம்மம்), தத்வமஸி (நீயே அது) என்ற மகாவாக்கியங்கள் அத்வைத ஞானத்தைப் பிரதிபலிப்பவை!

    • பிறகு விளக்கைப் போட்டதும் தான் பார்த்தது பாம்பு அல்ல வெறும் கயிறு தான் என்று தெரிகிறது.
    • உடனே தெளிவு பிறக்கிறது. பயம் மறைந்து விடுகிறது.

    பிரம்மத்தை உணர ஒரு உதாரணம் பார்ப்போம். இருட்டில் கயிற்றைப் பார்த்து பாம்பு என்று எண்ணிக் கொள்வதாக வைத்துக் கொள்வோம். அதனால் பயம் நம்மை ஆட்கொள்கிறது.

    பயத்தினால் இதயம் படபடக்கிறது. வியர்க்கிறது. இன்னும் என்னென்னவோ உணர்வுகள் ஏற்படுகின்றன.

    பிறகு விளக்கைப் போட்டதும் தான் பார்த்தது பாம்பு அல்ல வெறும் கயிறு தான் என்று தெரிகிறது. உடனே தெளிவு பிறக்கிறது. பயம் மறைந்து விடுகிறது.

    பயத்தின் மூலமாய் ஏற்பட்ட உணர்வுகளும் மறைந்து விடுகின்றன.

    அது போல நாமும் அறியாமை இருட்டில் இருந்து கொண்டு நம் ஆத்மாவின் நிலையான தன்மையை மறந்து விட்டு நிலையற்ற கதாபாத்திரமாக நம்மைக் கண்டு படாதபாடு படுகிறோம்.

    அந்தப் பாத்திரத்திற்கு பாதிப்பு என்றால் ஆத்மாவுக்கே பாதிப்பு ஏற்பட்டு விட்டதாக நினைக்கிறோம்.

    அந்த நினைவாலேயே கஷ்டப்படுகிறோம். ஞானம் என்கிற வெளிச்சம் வரும் வரை நம் கஷ்டங்கள் தொடர்கின்றன.

    ஞான ஒளி வந்து விட்டாலோ உண்மை தெளிவாகிறது. மாயையை உண்மை என்று நம்பி ஏற்படும் அறியாமையினால் விளையும் துன்பங்கள் தாமாக நீங்கி விடுகின்றன.

    ஒரு காலிப் பானையை குளத்தில் மூழ்க வைத்தால் பானையின் உள்ளே இருக்கும் தண்ணீர் பானைத் தண்ணீர், வெளியே இருக்கும் தண்ணீர் குளத்துத் தண்ணீர் என்று சொல்லலாம் என்றாலும் உண்மையில் இரண்டும் ஒன்றே அல்லவா?

    பானை உடைந்தால் முன்பு கண்ட வேறுபாடும் இல்லாமல் போகிறது அல்லவா?

    பானைத் தண்ணீர் ஜீவாத்மா. குளத்துத் தண்ணீர் பரமாத்மாவாகிய பிரம்மம். உடல் என்ற கதாபாத்திரம் உடையும் போது மிஞ்சுவது நிலைத்திருக்கும் ஒன்றேயான பிரம்மம் தான்.

    • உலகத்தின் பல்வேறு தோற்றங்களை மாயை என்று அத்வைதம் சொல்கிறது.
    • அத்வைதத்தின் படி நான், நீ, இன்னொருவன், ஜீவாத்மா போன்ற பேதங்கள் மாயையினால் ஏற்படுகின்றன.

    அத்வைதம் இந்த உலகத்தில் பிரம்மத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை என்று சொல்கிறது. ஜீவாத்மாவும், பரமாத்மாவும் வேறு வேறல்ல என்று சொல்கிறது.

    உலகத்தின் பல்வேறு தோற்றங்களை மாயை என்று அத்வைதம் சொல்கிறது.

    அத்வைதத்தின் படி நான், நீ, இன்னொருவன், ஜீவாத்மா போன்ற பேதங்கள் மாயையினால் ஏற்படுகின்றன. உண்மையில் எல்லாமே பிரம்மம் தான்.

    நாம் காண்கின்ற எல்லா வேறுபாடுகளும் அறியாமை ஏற்படுத்தும் தோற்றப் பிழைகள் மட்டுமே.

    இதை சில உதாரணங்கள் மூலம் சொன்னால் நன்றாக விளங்கும்.

    திரைப்படம் பார்க்கையில் திரையில் பலவிதமான காட்சிகள் பார்க்கிறோம்.

    வீடு, நகரம், மனிதர்கள், விலங்குகள் இயற்கைக் காட்சிகள் என வித விதமாய் காட்சிகள் தெளிவாக நம் கண் முன்னால் தெரிகிறது. ஆனால் அந்தக் காட்சிகள் உண்மையா?

    திரையில் தெரியும் நீரில் போய் நனைய முடியுமா? திரையில் தெரியும் வீட்டில் சென்று அமர முடியுமா? முடியாது அல்லவா?

    எத்தனை தெளிவாகக் காட்சிகள் தெரிந்தாலும் அந்தக் காட்சிகளில் எத்தனை விதமான செயல்கள் நடைபெற்றுக் கொண்டிருந்தாலும் உண்மையாக அங்கே இருப்பது ஒரு வெள்ளைத் திரை மட்டுமே அல்லவா?

    அந்த வெள்ளைத் திரை தான் பிரம்மம். பல விதமான காட்சிகள் தெரிவதும், செயல்கள் நடைபெறுவதாகத் தெரிவதும் வெறும் தோற்றமே அல்லவா?

    அப்படித் தோற்றத்தை ஏற்படுத்துவது மாயை. எப்போதும் நிலைத்து இருப்பது பிரம்மம் மாத்திரமே என்கிறது அத்வைதம்.

    ×