என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • அண்ணனைப் போன்று இக்கைங்கர்யம் செய்த ராமானுஜரை, "கோதைக்கு அண்ணன்" என்று போற்றினார்கள்.
    • பிறகு திருமாலிருஞ்சோலையில் இருந்து ஆண்டாளின் அவதாரத்தலமாகிய திருவில்லிபுத்தூரை அடைந்தார்.

    திருநாராயணபுரத்து மக்களிடம் பிரியாவிடை பெற்று உடையவர் திருவரங்கத்திற்கு பயணமானார்.

    மதுரைக்கு அருகில் உள்ள திருமாலிருஞ்சோலைக்கு எழுந்தருளிய ராமானுஜருக்கு ஆண்டாள் பாசுரம் ஒன்று நினைவுக்கு வந்தது.

    அப்பாசுரத்தில் ஆண்டாள் திருமாலிருஞ்சோலைப் பொருமாளுக்கு நூறு தடா அக்கார அடிசிலும், நூறுதடா வெண்ணையும் பிறவும் படைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

    ஆண்டாள் தன் பாசுரத்தில் குறிப்பிட்டவாறு, உடையவர் திருமாலிருஞ்சோலைப் பெருமாளுக்கு நூறுதடா அக்காரஅடிசில் செய்து நிவேதித்தார்.

    அத்துடன் நூறுதடா வெண்ணையும் பிறவும் படைத்தார்.

    அண்ணனைப் போன்று இக்கைங்கர்யம் செய்த ராமானுஜரை, "கோதைக்கு அண்ணன்" என்று போற்றினார்கள்.

    பிறகு திருமாலிருஞ்சோலையில் இருந்து ஆண்டாளின் அவதாரத்தலமாகிய திருவில்லிபுத்தூரை அடைந்தார்.

    அங்கு ஆண்டாளைச் சேவிக்கச் சென்ற ராமானுஜரை ஆண்டாள் பிராட்டி, "வருக என் அண்ணனே" என்று வாயார அழைத்தாள்.

    அதனால், வாழித் திருநாமம், "பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே" என்று போற்றுகிறது.

    • காஷ்மீரத்தில் போதாயன விருத்தி உரை கண்டறிந்த பின்புதான் ஸ்ரீபாஷ்யம் பூரண தவம் அடைந்தது எனலாம்.
    • ஸ்ரீபாஷ்யத்தின் சாரமாக தியானம், உபாசன, பக்தி இவற்றின் மூலமாக முக்தி அடைவது கூறப்படுகிறது.

    சங்கரரின் பாஷ்யம் 'சங்கர பாஷ்யம்' என்று வழங்கப்பட்டது. ராமானுஜரின் பாஷ்யம் ராமானுஜபாஷ்யம் என்ற வழங்கப்பட்டது.

    ராமானுஜருக்கு முன்பே விசிஷ்டாத்வைத வேதாந்தம் இருந்து வந்திருக்கிறது.

    போதாயனரைத் தவிர டங்கர், குகதேவர், முதலானோர், விசிஷ்டாத்வைதக் கொள்கைகளை வெளியிட்டிருக்கிறார்கள்.

    ராமானுஜர் இயற்றிய ஸ்ரீபாஷ்ய நூலே ஸ்ரீவைஷ்ணவ விசிஷ்டாத்வைத கொள்கைக்கு ஆதார நூல் என்பது பெரும்பாலோரது கருத்தாக இருந்து வருகிறது.

    காஷ்மீரத்தில் போதாயன விருத்தி உரை கண்டறிந்த பின்புதான் ஸ்ரீபாஷ்யம் பூரண தவம் அடைந்தது எனலாம்.

    பக்தி சரணாகதியை ஆதாரமாகக் கொண்டே சேவையை மையமாகக் கொண்டதுதான் விசித்டாத்வைத கொள்கையாக இருந்து வந்தது.

    விசேஷத்தன்மை பொருந்திய அத்வைதம்தான் விசிஷ்டாத் வைதம் ஒன்றுடன் ஒன்றினைந்த ஒன்றுடன் அடங்குவது ஜீவாத்மா பரமாத்மாவுடன் இணைவது தான் விசிஷ்டாத்வைதம்.

    ஸ்ரீபாஷ்யத்தின் சாரமாக தியானம், உபாசன, பக்தி இவற்றின் மூலமாக முக்தி அடைவது கூறப்படுகிறது.

    ஸ்ரீராமானுஜர் கூற கூரத்தாழ்வார் ஸ்ரீபாஷ்யத்தை எழுதி முடித்ததும் தமது மருமகன் நடாதூராழ்வார் வசம் ஸ்ரீபாஷ்யத்தை கொடுத்து காஷ்மீரத்திலிருக்கும் ஸ்ரீசாரதா பீடத்துக்கு அனுப்பி ஆசீர்வாதம் பெற்றுக் கொண்டார்.

    ஸ்ரீராமானுஜர் அருளிய ஸ்ரீபாஷ்யம் நூல் தெய்வீக வேதமறை விஞ்ஞான பொக்கிஷமாக அள்ள அள்ள குறையாத ஞான சமுத்திரமாய் இறைவனின் அருகாமையை உணர்த்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.

    • ஆனால் ராமானுஜர் சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் சிந்தித்தார்.
    • கூரத்தாழ்வார் எழுத மறுத்த அந்த வாக்கியத்தைப் பற்றி யோசித்த போது தன்னுடைய தவறு புரிந்தது.

    ஆனால் அந்த நாட்டு பண்டிதர்களோ இதனால் மிகவும் பகைமை கொண்டனர்.

    ராமானுஜரை பின்தொடர்ந்து கண்காணித்து அந்த நூலை அவரிடம் இருந்து திருடிக் கொண்டு போய்விட்டதும் ராமானுஜர் கலங்கிப் போனார்.

    இதனைக்கண்ட கூரத்தாழ்வார், "தேவரீர் தயவு செய்து கலங்க வேண்டாம்.

    நான் ஒருமுறை அந்த நூல் முழுவதையும் படித்துவிட்டேன்.

    தாங்கள் களைத்துப்போய் உறங்கிக் கொண்டிருந்த நேரத்தில் நான் அதைப்படித்தேன்.

    அதில் உள்ள பொருட்களை இப்போதே சொல்ல வேண்டுமா அல்லது இரண்டாற்றுக்கிடையே வந்து சொன்னால் போதுமா" என்று கேட்டார்.

    ராமானுஜர் கூரத்தாழ்வாரின் கல்வி நினைவாற்றல் கண்டு மெய்சிலிர்த்தார்.

    "கூரத்தாழ்வாரே ! நான் சொல்லச்சொல்ல நீர் பாஷ்ய வாக்கியங்களை எழுதிக்கொண்டே வாரும்.

    நான் சொல்லும் வாக்கியங்களுக்கும் உமது நினைவில் இருக்கும் வாக்கியங்களுக்கும் ஏதேனும் முரண் இருப்பதாக புலப்பட்டால் நீர் எழுதுவதை நிறுத்திவிடும்" என்ற ராமானுஜர் கூறவும் அவரும் சம்மதமாய் எழுதத்தொடங்கினார்.

    ராமானுஜர் சொல்லச்சொல்ல எழுதிக்கொண்டே வந்த கூரத்தாழ்வார் ஒரு சமயம் எழுதுவதை நிறுத்திவிட்டார்.

    ராமானுஜர் கூறியது பக்தி மார்க்க மதமாகிய விசிஷ்டாத் வைத கொள்கைக்கு முரணாக இருந்ததால் தான் கூரத்தாழ்வார் அப்படி எழுதுவதை நிறுத்தியபடி இருந்தார்.

    இராமானுஜர் அதனைக்கண்டு கடும் கோபம் கொண்டார்.

    "நான் சொன்னதை எழுத உமக்க இஷ்டம் இல்லையென்றால் நீரே பாஷ்யம் எழுதிக்கொள்ளும்" என்று ராமானுஜர் எழுந்து போய்விட்டார்.

    ஆனால் ராமானுஜர் சிறிது நேரத்திற்கெல்லாம் மீண்டும் சிந்தித்தார்.

    கூரத்தாழ்வார் எழுத மறுத்த அந்த வாக்கியத்தைப் பற்றி யோசித்த போது தன்னுடைய தவறு புரிந்தது.

    அதன்பின் அந்த வாக்கியத்தை திருத்திச்சொல்ல கூரத்தாழ்வார் எழுதத்துவங்கினார்.

    • பண்டிதர்கள் இதனைக் கேட்டதும் முகம் சுளித்தனர். ராமானுஜருக்கு அதனைக் காண்பிக்கக்கூடாது என்று தீர்மானம் செய்துவிட்டனர்.
    • அதனை அறிந்து அவர் மிகவும் மனவேதனை அடைந்தார்.

    மகரிஷி போதாயனர் லட்சம் கிரந்தங்களில் பிரம்ம சூத்திர பாஷ்யம் செய்திருக்கிறாரே அதைச் சங்கரர் கூட குறிப்பிட்டு இருக்கிறாரே அதனை நான் படித்து பார்க்க விரும்புகிறேன் என்று ராமானுஜர் தெரிவித்தார்.

    பண்டிதர்கள் இதனைக் கேட்டதும் முகம் சுளித்தனர்.

    ராமானுஜருக்கு அதனைக் காண்பிக்கக்கூடாது என்று தீர்மானம் செய்துவிட்டனர்.

    அதனை அறிந்து அவர் மிகவும் மனவேதனை அடைந்தார்.

    ஒருவழியும் தோன்றாது கடைசியாய் காஷ்மீரத்து மன்னரிடம் சென்றார்.

    எனது குருநாதர் ஸ்ரீரங்கத்து ஸ்ரீஆளவந்தார் ஆணைப்படி ஸ்ரீபாஷ்யம் நூல் எழுதும் பொருட்டு காஷ்மீருக்கு நெடும் பயணம் மேற்கொண்டு வந்துள்ளேன்.

    எனக்கு இங்குள்ள போதாயன விருத்தி நூலை ஒருமுறை வாசித்து பார்ப்பதற்கு அனுமதி தந்தால் மிகவும் உவகை அடைவேன் என்றார் ராமானுஜர்.

    ராமானுஜரது முக வசீகரமும் காந்த சக்தியும் அரசனை கவர்ந்து அவரது ஆழ்ந்த புலமையையும் கண்ணுற்று அந்த போதாயன விருத்தி ஏட்டை நீங்கள் உங்கள் நாட்டுக்கே எடுத்துச் செல்லலாம் என்று அனுமதி அளித்தார்.

    அனுமதி அளித்ததோடு ராமானுஜரிடம் அந்த நூலையும் அளித்துவிட்டார் அரசர்.

    • கோவில் காவல் பணிகளுக்கு பிள்ளையுறங்கா வில்லிதாசர் நியமிக்கப்பட்டார்.
    • கோவில் நிர்வாகப் பொறுப்புகளுக்கு முதலியாண்டான் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    ஸ்ரீ ஆளவந்தார் திருவுள்ளப்படி ஸ்ரீபாஷ்யம் என்கிற வேதாந்த நூல் எழுதி முடிக்கும் திருப்பணியில் கவனம் செலுத்த திருக்கோவிலில் முறையிட்டதும், ஸ்ரீ ராமானுஜர் ஸ்ரீபாஷ்யம் நூலுக்காக காஷ்மீர் தேசம் செல்ல உத்தேசிக்கப்பட்டது.

    காஷ்மீர் தேசத்தில் தான் ஸ்ரீபாஷ்யம் நூலுக்கான போதாயன சூத்திர விருத்தியுரை நூல் இருந்து வந்தது.

    ஸ்ரீராமானுஜர் காஷ்மீர் தேசத்துக்கு செல்வதற்கு ஏதுவாக ஸ்ரீரங்கம் திருக்கோவில் கட்டளைகளை நிறைவேற்றி சில திட்டங்கள் வகுக்கப்பட்டன.

    கோவில் காவல் பணிகளுக்கு பிள்ளையுறங்கா வில்லிதாசர் நியமிக்கப்பட்டார்.

    கோவில் நிர்வாகப் பொறுப்புகளுக்கு முதலியாண்டான் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    சகல பரிவார பரிபாலன மேற்பார்வை விசாரணைகளுக்கு அகளங்க சோழனும் மற்றும் நம்பிக்கைக்கு உரியவர்கள் நியமிக்கப்பட்டனர்.

    ராமானுஜர் அதன்பின் தன் பயணத்திற்கு எப்பொழுதும் நிழலாக இருக்கும் கூரத்தாழ்வாரை துணையாக அழைத்துக் கொண்டு காஷ்மீர் பயணம் சென்றார்.

    காஷ்மீரில் ராமானுஜர் பாண்டிதர்களைச் சந்தித்து வேதவேதாந்த விஷயங்கள் சம்பந்தமாக கலந்து உரையாடினார்.

    ராமானுஜரது புலமையும் அறிவுக் கூர்மையும் வாக்கு வன்மையும் ஞான வேட்கையும் எல்லோரையும் பிரமிக்கச் செய்தன.

    • எந்த சாதியைச் சேர்ந்தவர்களும், எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் வைணவத்தின் கதவுகள் திறந்தே உள்ளன.
    • வைணவத்தில் சேர்ந்தவர்கள் தமது பண்டைக் குலத்தை துறந்து தொண்டர் குலத்தினர் ஆகி விடுவார்கள்.

    மேல்கோட்டைக்கு அழைத்து வந்த ஏழை எளியவர்களில், கடையருக்கும் கடையராக் கருதப்படும் பஞ்சமர்களின் பகவத்தைங்கரியத்தை நினைவு கூர்ந்து ராமானுஜர் பெருமிதம் கொண்டார்.

    அந்த மக்கள் அனைவரையும் அழைத்து, நன்னெறிக் கோட்பாடுகளை உபதேசித்து வைணவர்கள் ஆக்கினார்.

    திருநாராயண சுவாமி கோவில், ஸ்ரீரங்கப் பட்டணத்திலும் பேலூரிலுமுள்ள பெருமாள் கோவில்கள் போன்ற எல்லா வைணவக் கோவில்களுக்குள்ளும் எல்லோரையும் போன்றே இவர்களும் சென்று இறைவழிபாடு செய்யலாம் என்றும், கோவிலுக்கு அருகில் வெட்டப்பட்ட குளத்தில் இருந்து நீர் எடுத்து வரலாம் என்றும் ராமானுஜர் அறிவித்தார்.

    தீண்டத்தகாதவர் என்று கருதப்பட்ட பஞ்சமர்களை மகாத்மா காந்தி "அரிஜன்", (விஷ்ணுவுக்குப் பிரியமானவர்கள்) என்று அழைத்தார்.

    ஆனால், 900 ஆண்டுகளுக்கு முன்னரே ராமானுஜர் அவர்களை "திருக்குலத்தார்" எனக் குறிப்பிட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

    எந்த சாதியைச் சேர்ந்தவர்களும், எந்த வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் வைணவத்தின் கதவுகள் திறந்தே உள்ளன.

    வைணவத்தில் சேர்ந்தவர்கள் தமது பண்டைக் குலத்தை துறந்து தொண்டர் குலத்தினர் ஆகி விடுவார்கள்.

    இவ்விதம் வைணவராகி, தொண்டர் குலத்தைச் சேர்ந்தவர்களை, அவர்களுடைய பண்டைக் குலத்தைக் குறிப்பிட்டுப் பேசுவது மகாபாவம் ஆகும் என்றார் ராமானுஜர்.

    இவ்விதம் பழிப்பவர்களுக்கு அடுத்த ஜன்மத்திலோ அல்லது மரணத்திற்குப் பின்னரோ தண்டனை கிடைக்கும் என்பதில்லை, இந்த ஜன்மத்திலேயே, பழித்துக் கூறிய அதே இடத்தில் தண்டனை உடனே கிடைக்கும் என்று ராமானுஜர் எச்சரித்தது குறிப்பிடத்தக்கது.

    • இந்து சமயத்தில் புரையோடிக் கிடந்த சாதி வேறுபாட்டை ஒழிக்கப் பாடுபட்டவர் ராமானுஜர் "எந்தப் பிரிவினரும் வைணவத்தைத் தழுவலாம்.
    • வைணவம் அனைவருக்கும் உரித்தானது" என்று அவர் அறிவித்தார்.

    இந்து சமயத்தில் புரையோடிக் கிடந்த சாதி வேறுபாட்டை ஒழிக்கப் பாடுபட்டவர் ராமானுஜர் "எந்தப் பிரிவினரும் வைணவத்தைத் தழுவலாம்.

    வைணவம் அனைவருக்கும் உரித்தானது" என்று அவர் அறிவித்தார்.

    ஆசையுடையோர்க் கெல்லாம் வைணவ மகாமந்திரம் பொதுவானது. வைணவர் அனைவரும் ஒரே குலம் தொண்டர் குலம் என்றார் உடையவர்.

    தாகம் தீர்த்தார்

    சமயத் தொண்டில் மட்டுமின்றி சமூகத் தொண்டிலும் ராமானுஜர் ஆர்வம் காட்டினார்.

    இவருடைய பொதுஜன சேவைக்கு மகுடம் இட்டாற்போலத் திகழ்வது மோதிதலாப் (முத்துக்குளம்) என்று அழைக்கப்படும் நீர்த்தேக்கம்.

    தலைநகரின் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க இந்த நீர்த்தேக்கத்தை உருவாக்கம் திட்டத்தைத் தீட்டியவர் ராமானுஜர் தான்.

    குன்றுகளுக்கு இடையே முக்கோண வடிவில் அமைந்த பள்ளத்தாக்கில் பாய்ந்து சென்ற சிற்றாற்றின் குறுக்கே ஓர் அணையைக் கட்டி நீர்நிலையை உருவாக்க வேண்டும் என்று விஷ்ணுவர்த்தன ராயனிடம் ராமானுஜர் எடுத்துரைத்தார்.

    அதன்படியே நீர்த்தேக்கம் உருவானது.

    இரண்டரை மைல் நீளமும் ஒரு மைல் அகலமும் கொண்ட இந்தப் பெரிய ஏரி இன்றும் கூட மக்களின் தாகத்தைத் தணித்து, ராமானுஜரின் புகழ் பாடுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கடும் வெயிலில் அருகம்புல் காய்ந்து போகுமே தவிர, அழிந்து போகாது.
    • குடல் புண்களை ஆற்றும் சக்தி இந்த அருகம்புல்லுக்கு உண்டு.

    முன் காலத்தில் கவுண்டின்யர் என்ற முனிவர் இருந்தார். அவர் எப்போதும் விநாயகப்பெருமானுக்கு, அருகம்புல்லை வைத்து வழிபாடு செய்தார்.

    இதை பார்த்துக் கொண்டிருந்த முனிவரின் மனைவி, "எதற்காக விநாயகருக்கு அருகம்புல் வைத்து வணங்குகிறீர்கள்? என்று கேட்டாள். உடனே கவுண்டின்யர், விநாயகருக்கு அருகம்புல் வழிபாடு வந்ததற்கான காரணத்தை தன்னுடைய மனைவிக்கு கூறினார்.

    அது ஒரு புராணக் கதை யாகும். அதனை நாமும் தெரிந்து கொள்ளலாம். அது எமலோகம், எமன் வீற்றிருந்த சபையில் அனைவரும் இசை இசைத்துக் கொண்டிருந்தனர். பாடல்கள் பாடி நடனமாடிக் கொண்டிருந்தனர்.

    தேவலோக கன்னிகளான ரம்பை, ஊர்வசி, திலோத்தமை ஆகிய மூவரும் இசைக்கு ஏற்ப அற்புத நடனம் ஆடினர். அவர்களின் நடனத்தை அந்த சபையே அசையாமல் பார்த்துக் கொண்டிருந்தது. அவர்களில் திலோத்தமையின் நடனம் எமனை கவர்ந்தது. அவளது அழகும் தான். அவனுக்கு காமம் தலைக்கேறியது.

    தன்னுடைய சபையில் பலரும் கூடியிருக்கிறார்கள் என்பதையும் மறந்து, ஓடிச் சென்று திலோத்தமையின் கரங்களை வலுவாக பற்றினான். எமதர்மன், தகாத இந்த செயலால் எந்த கேடு விளையப்போகிறதோ என்று, அங்கிருந்த அனைவரும் திகைத்தனர்.

    ரம்பையும், ஊர்வசியும் அங்கிருந்து ஒடி மறைந்தனர். அதையெல்லாம் காணும் நிலையில் எமன் இல்லை. தர்மத்தை நிலை நிறுத்தும் அவனுக்கு, இப்போது காமமே தலைதூக்கி நின்றது. அதனால் திலோத்தமையின் கரங்களை மேலும் வலுவாக பற்றினான்.

    அவனது காமம் திரண்டு, சுக்கிலமாக வெளியேறியது. அதன் மூலம் ஒரு அசுரன் தோன்றினான். அவன் வெப்பத்தால் தகித்தான். அவன் தொட்டதெல்லாம் நெருப்பில் பொசுங்கியது. அவன் வாயில் இருந்தும் நெருப்பு வெளிப்பட்டது. இதனால் அவன் 'அனலாசுரன்' என்று அழைக்கப்பட்டான்.

    தேவர்களையும், மக்களையும், முனிவர்களையும் தன்னுடைய வெப்பத்தால் துன்புறுத்தினான். தேவர்கள் அனைவரும் திருமாலிடம் சென்று முறையிட்டனர். அவர் தன் படையுடன் சென்று அனலாகானுடன் போரிட்டு, அவனை வீழ்த்தினார்.

    கீழே விழுந்த அவன் மீது, வருணன் கடும் மழை பொழிவித்தான். குளிர்ச்சியான சந்திரன், அனலாகரன் மீது தன்னுடைய குளிர் கதிர்களை பாய்ச்சினான்.

    இதையடுத்து விநாயகப்பெருமான், அனலாசுரன் அருகில் சென்றார். அவனை சிறிய உருவமாக மாற்றிய விநாயகர், அவனை அப்படியே விழுங்கி விட்டார்.

    அப்போது விநாயகரின் வயிற்றில் சூடான வெப்பம் ஏற்பட்டது. அது கடுமையான வெப்பத்தை உண்டாக்கி, விநாயகரை அவதிப்படுத்தியது. சிவபெருமான் தன்னுடைய குளிர்பாணங்களை விநாயகர் மீது எய்தார்.

    ஆனாலும் அவரது வெப்பம் தணியவில்லை. கங்கை தன்னுடைய குளிர்ச்சியான நீரால்,விநாய கரை நீராட்டினாள். அதுவும் பலன் அளிக்க வில்லை. இறுதியாக ஒரு முனிவர், அருகம்புல்லை விநாயகரின் மீது வைத்தார்.

    அதன் குளிர்ச்சியால், அவருக்குள் இருந்த வெப்பம் தணிந்தது. வெப்பத்தை தணிக்கும் ஆற்றல் நிறைந்த அந்த அருகம்புல், விநாயகரின் முக்கியமான வழிபாட்டுப் பொருளாக மாறிப்போனது.


    அருகம்புல் எல்லா காலங்களிலும் வளரும் தன்மை கொண்டது. மழை இல்லாமல் கடுமையான கோடை நிலவினாலும் கூட அருகம்புல் வளரும். கடும் வெயிலில் அருகம்புல் காய்ந்து போகுமே தவிர, அழிந்து போகாது. சிறிதளவு மழை பெய்தாலும் அருகம்புல் பசுமையாக துளிர்விட்டு வளர்ந்து விடும்.

    சாதாரண புல் போன்று காட்சி தரும் இந்த அருகம் புல், அளப்பரிய மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ளது. குளிர்ச்சி தன்மை கொண்ட இந்த அருகம்புல், உடல் சூட்டை அகற்றும், சிறுநீர் கடுத்தால் அதனை குணமாக்கும்.

    நாள்பட்ட குடல் புண்களை ஆற்றும் சக்தி இந்த அருகம்புல்லுக்கு உண்டு. இவற்றைப் பருகி வருபவர்களின் ரத்தத்தை தூய்மையாக்கும். கண்பார்வையை தெளிவாக்கும். இப்படி பல ஆற்றல்களை கொண்ட அருகம்புல்லைத் தான், விநாயகர் தன்னுடைய விருப்பமான அர்ச்சனைக்குரியதாக ஆக்கிக் கொண்டார்.

    • செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வேதமலை உள்ளது.
    • முப்பத்துமுக்கோடி தேவர்கள் முதலானோர் பூஜித்த பெருமைக்குரியது.

    செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில் வேதமலை மீது அமைந்துள்ள சொக்கநாயகி உடனாய வேதகிரீஸ்வரர் கோவிலும், மலை அடிவாரத்தில் தாழக்கோவில் எனப்படும் திரிபுரசுந்தரி உடனாய பக்தவத்சலேஸ்சவரர் கோவிலும் இருக்கின்றன.

    திருக்கழுக்குன்றத்திற்கு, கழுகாசலம், நாராயணபுரி, பிரம்மபுரி, இந்திரபுரி, உருத்திரகோடி, நந்திபுரி மற்றும் பட்சிதீர்த்தம் என பல சிறப்புப் பெயர்கள் உண்டு.

    வேதமலையின் மீது 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வேதகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த தலம் பிரம்மன், இந்திரன், முப்பத்துமுக்கோடி தேவர்கள் முதலானோர் பூஜித்த பெருமைக்குரியது. மேலும் கழுகுகள் பூஜித்த பெருமையும் கொண்டது.

    நான்கு வேதங்களும் மலையாக அமைந்ததால், இந்த மலைக்கு 'வேதமலை', 'வேதகிரி' என்று பெயர். வேதகிரியின் மீது எழுந்தருளி அருள்பாலிப்பதால் இறைவனுக்கு வேதகிரீஸ்வரர் என்ற திருநாமம் உண்டானது.

    வேதகிரீஸ்வரரை வணங்கி அருள்பெற 567 படிகள் ஏறிச் செல்ல வேண்டும். மலைப்பாதையில் ஏறும் போது வலது புறத்தில் கம்பாநதி சன்னிதி உள்ளது. மலைக் கோவில் கருவறையில் இறைவன் சுயம்புத் திருமேனியாக வேதகிரீஸ்வரர் என்ற திருநாமம் தாங்கி எழுந்தருளியுள்ளார்.

    பிரகாரத்தில் நர்த்தன விநாயகரும், சொக்கநாயகி அம்பாளும் தனித்தனி சன்னிதிகளில் அருள்பாலிக்கின்றனர். வெளிப்பிரகார கருவறை கோஷ்டங்களில் புடைப்புச் சிற்பங்களாக அர்த்தநாரீஸ்வரர், சோமாஸ்கந்தர், யோக தட்சிணாமூர்த்தி உள்ளனர்.

    வழக்கமாக சிவாலயங்களில் கருவறைக்கு எதிரில் நந்தி இருக்கும். ஆனால் இத்தலத்தில் கருவறைக்கு எதிரில் பலிபீடமும், கொடிமரமும் மட்டுமே உள்ளன.


    பட்சி தீர்த்தம்

    கிரேதா யுகத்தில் சண்டன் - பிரசண்டன், திரேதா யுகத்தில் சம்பாதி - சடாயு, துவாபர யுகத்தில் சம்புகுந்தன் - மாகுந்தன் ஆகியோர் சாபத்தினால் கழுகுகளாக உருமாறி வேதகிரீஸ்வரரை வழிபட்டு சாப விமோசனம் அடைந்தார்கள்.

    கலியுகத்தில் பூஷா - விருத்தா ஆகிய முனிவர்கள், இத்தல இறைவனை வேண்டி தவம் இருந்தனர். அவர்கள் இருவரும் இத்தல இறைவனிடம் சாயுட்சய வரம் வேண்டும் என்று கேட்டதால், இறைவனின் அருளாசிப்படி கழுகாக மாறினர்.

    பின்னர் பல ஆண்டு காலம் பகல் வேளையில் வேதமலை வந்து இறைவனை வழிபட்டு அமுதுண்டு வந்தனர். இரண்டு கழுகுகள் வலம் வந்த காரணத்தால் இந்த ஆலயம் 'பட்சி தீர்த்தம்' என்ற பெயர் பெற்றது.


    சங்கு தீர்த்தம்

    மார்க்கண்டேய முனிவர் இவ்வாலயத்தில் உள்ள தீர்த்தத்தில் நீராடி, சிவ பூஜை செய்ய முற்பட்டார். அப்போது 'ஓம்' என்ற ஒலியுடன் சங்கு ஒன்று தீர்த்தத்தில் தோன்றியது. அந்த சங்கைக் கொண்டு சிவபெருமானை, முனிவர் பூஜித்தார்.

    அன்று முதல் பனிரெண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த குளத்தில் சங்கு பிறக்கும் அதிசயம் நிகழ்ந்து வருகிறது. இதனால் இத்தீர்த்தம் 'சங்கு தீர்த்தம்' என்று அழைக்கப்படலாயிற்று. இத்தீர்த்தத்தில் கடந்த மார்ச் மாதம் சங்கு தோன்றியது குறிப்பிடத்தக்கது.


    வேதமலையின் சிறப்பு

    வேதகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ள வேதமலையானது, சுமார் 4 கிலோமீட்டர் சுற்றளவு கொண்டது. பல அரிய மூலிகைகள் நிறைந்த இந்த மலையை பவுர்ணமி நாளில் வலம் வந்தால் தீராத நோய்களும் தீரும் என்பது நம்பிக்கை.

    பவுர்ணமி நாட்களில் பல்லாயிரக்கணக்கான மக்கள் இந்த மலையை வலம் வருகிறார்கள். வேதகிரீஸ்வரரை தரிசிக்க வேதமலையில் ஏறும்போது மலைப்பாதையில் இடை இடையே ஓய்வெடுத்துச் செல்ல சிறு மண்டபங்கள் உள்ளன.

    இந்த திருக்கோவிலில் இறைவனை தரிசிக்க ஏறிச் செல்ல ஒரு மலைப்பாதையும், தரிசனத்தை முடித்துக் கொண்டு இறங்கி வர ஒரு பாதையும் அமைக்கப்பட்டுள்ளன.

    இந்த ஆலயமானது தினமும் காலை 9 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து வைக்கப்பட்டிருக்கும்.

    அமைவிடம்

    செங்கல்பட்டில் இருந்து 13 கிலோமீட்டர் தொலைவிலும், மாமல்லபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது, திருக்கழுக்குன்றம். செங்கல்பட்டில் இருந்து மாமல்லபுரம் மற்றும் கல்பாக்கம் செல்லும் பேருந்துகள், திருக்கழுக்குன்றம் வழியாகவே செல்லும்.

    • 7-ந்தேதி விநாயகர் சதுர்த்தி.
    • 8-ந்தேதி மகாலட்சுமி விரதம்.

    3-ந்தேதி (செவ்வாய்)

    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி தெப்பம்.

    * உப்பூர் விநாயகர் ரிஷப வாகனத்தில் பவனி.

    * திருவலஞ்சுழி, தேரெழுந்தூர், திண்டுக்கல் தலங்களில் விநாயகப்பெருமான் திருவீதி உலா.

    * சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் புறப்பாடு.

    * கீழ்நோக்கு நாள்.

    4-ந்தேதி (புதன்)

    * திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி மஞ்சள் நீராடல்.

    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் மயில் வாகனத்தில் பவனி.

    * திருவைகுண்டம் கள்ளபிரானுக்கு பால் அபிஷேகம்.

    * மேல்நோக்கு நாள்.

    5-ந்தேதி (வியாழன்)

    * முகூர்த்த நாள்.

    * திருநெல்வேலி நெல்லையப்பர், காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.

    * மதுரை மீனாட்சி சொக்கநாதர் ஆவணி பெருவிழா தொடக்கம்.

    * பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் குதிரை வாகனத்தில் பவனி.

    * சமநோக்கு நாள்.

    6-ந்தேதி (வெள்ளி)

    * முகூர்த்த நாள்.

    * மதுரை சோமகந்தரர் நாரைக்கு முக்தி அருளிய காட்சி, இரவு பூத அன்ன வாகனத்தில் பவனி.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.

    * சமநோக்கு நாள்.

    7-ந்தேதி (சனி)

    * விநாயகர் சதுர்த்தி.

    * திருவலஞ்சுழி விநாயகர் ரத உற்சவம்.

    * மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி, ருக்மணி, சத்தியபாமா சமேத கிருஷ்ணலீலை.

    * பிள்ளையார்பட்டி, தேவகோட்டை, திண்டுக்கல், மிலட்டூர், உப்பூர், தேரெழுந்தூர் தலங்களில் விநாயகப்பெருமான் தீர்த்தவாரி.

    * சமநோக்கு நாள்.

    8-ந்தேதி (ஞாயிறு)

    * முகூர்த்த நாள்.

    * ரிஷி பஞ்சமி.

    * மகாலட்சுமி விரதம்.

    * மதுரை சொக்கநாதர் தருமிக்கு பொற்கிழி அருளிய காட்சி.

    * திருத்தணி முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

    * சமநோக்கு நாள்.

    9-ந்தேதி (திங்கள்)

    * விருதுநகர் சுவாமி யானை வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி.

    * மதுரை நவநீத கிருஷ்ணசுவாமி வெள்ளி தோளுக்கினியானில் பவனி.

    * ஆழ்வார்திருநகரி நம்மாழ்வார் புறப்பாடு.

    * சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்.

    * கீழ்நோக்கு நாள்

    • சோளசிம்மபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் புறப்பாடு.
    • திருச்செந்தூர் முருகப் பெருமான் கேடயச் சப்பரத்தில் பவனி.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு ஆவணி-18 (செவ்வாய்க்கிழமை)

    பிறை: தேய்பிறை.

    திதி: அமாவாசை காலை 7.59 மணி வரை. பிறகு பிரதமை.

    நட்சத்திரம்: பூரம் மறுநாள் விடியற்காலை 4.13 மணி வரை. பிறகு உத்திரம்.

    யோகம்: சித்த, அமிர்தயோகம்

    ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

    எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

    சூலம்: வடக்கு

    நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    சுவாமி மலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். சோளசிம்மபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மர் புறப்பாடு. திருச்செந்தூர் முருகப் பெருமான் கேடயச் சப்பரத்தில் பவனி. பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகர் காலை வெள்ளி கேடயத்தில் அருளுதல், மாலை கஜமுக சூரசம்ஹாரலீலை. உப்பூர் ஸ்ரீவிநாயகப் பெருமான் ரிஷப வாகனத்தில் திருவீதியுலா. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் வெள்ளிப்பாவாடை தரிசனம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-இன்சொல்

    ரிஷபம்-அமைதி

    மிதுனம்-பணிவு

    கடகம்-பரிசு

    சிம்மம்-துணிவு

    கன்னி-பயணம்

    துலாம்- தேர்ச்சி

    விருச்சிகம்-பெருமை

    தனுசு- விருத்தி

    மகரம்-ஆக்கம்

    கும்பம்-மாற்றம்

    மீனம்-உவகை

    1. மதுராந்தகம்

    2. திருஅத்தியூர்

    3. திருவரங்கம்

    4. திருக்கோட்டீயூர்

    5. திருக்கரம்பனூர்

    6. திருவெள்ளறை

    7. திருக்கோவலூர்

    8. திருக்கடிகை

    9. திருவேங்கடம்

    10. திருப்புட்குழி

    11. திருவெக்கா

    12. திருவாலி திருநகரி

    13. திருமுட்டம்

    14. திருஇந்தளூர்

    15. திருவழுந்தூர்

    16. திருவிண்ணகரம்

    17. திருநறையூர்

    18. திருக்குடந்தை

    19. திருப்போர்நகர்

    20. திருமாலிருஞ்சோலை

    21. திருமெய்யம்

    22. திருமோகூர்

    23. திருக்கூடல்

    24. திருப்புல்லாணி

    25. திருத்தண்கால்

    26. திருவில்லிபுத்தூர்

    27. திருவைகுந்தம்

    28. திருவரகுணமங்கை

    29. திருப்புளிங்குடி

    30. திருத்தொலைவில்லி மங்கலம்

    31. திருக்குளந்தை

    32. திருத்தென்திருப்பேரை

    33. திருக்குருகூர்

    34. திருக்கோளூர்

    35. திருக்குறுங்குடி

    36. திருவண்பரிசாரம்

    37. திருவட்டாறு

    38. திருவனந்தபுரம்

    39. திருப்புலியூர்

    40. திருவாறன்விளை

    41. திருச்செங்குன்றூர்

    42. திருவண்வண்டூர்

    43. திருவல்லவாழ்

    44. திருக்கடித்தானம்

    45. திருமூழிக்களம்

    46. திருக்காட்கரை

    47. திருவித்துவக்கோடு

    48. திருவஞ்சிக்களம்

    49. திருநாவாய்

    50. திருத்துவாரகை

    51. திருப்புட்கரம்

    52. திருவாய்ப்பாடி

    53. திருவிருந்தாவனம்

    54. திருவடமதுரை

    55. கோவர்த்தனகிரி

    56. குருட்சேத்திரம்

    57. திருவரித்துவார்

    58. திருக்கண்டமெனுங்கடிநகர்

    59. திருப்பிரிதி

    60. திருவதரிகாச்ரமம்

    61. திருவயோத்தி

    62. திருநைமிசாரண்யம்

    63. காசி

    64. கயை

    65. திருச்சாளக்கிராமம்

    66. காஷ்மீர்&ஸ்ரீநகர்

    67. பூரிசெகந்நாதம்

    68. திருக்கூர்மம்

    69. திருக்காகுளம்

    70. வாராங்கல்

    71. சிம்மாசலம்

    72. திருச்சிங்கவேள்குன்றம்

    73. திருவல்லிக்கேணி

    74. திருமயிலை

    75. திருநீர்மலை

    76. திருநின்றவூர்

    77. திருஎவ்வுள்

    78. திருநீரகம்

    79. திருவூரகம்

    80. திருக்காரகம்

    81. திருக்கார்வானம்

    82. திருபெரும்புதூர்

    83. திருக்கடல்மல்லை

    84. திருவிடவெந்தை

    85. திருவயிந்திபுரம்

    86. வீரநாராயணபுரம்

    87. திருச்சித்திரக்கூடம்

    88. திருக்காழீச்சீராமவிண்ணகரம்

    89. திருக்காவளம்பாடி

    90. திருஅரிமேயவிண்ணகரம்

    91. திருவண்புருடோத்தமம்

    92. திருச்செம்பொன்செய்கோவில்

    93. திருமணிமாடக்கோவில்

    94. திருவைகுந்தவிண்ணகரம்

    95. திருத்தேவனார்தொகை

    96. திருத்தெற்றியம்பலம்

    97. திருமணிக்கூடம்

    98. திருவெள்ளக்குளம்

    99. திருப்பார்த்தன்பள்ளி

    100. திருத்தலைச்சங்கநாண்மதியம்

    101. திருச்சிறுபுலியூர்

    102. திருக்கண்ணபுரம்

    103. திருச்சேறை

    104. திருக்கண்ணமங்கை

    105. திருக்கண்ணங்குடி

    106. திருநாகை

    107. தொண்டனூர்

    108. திருநாராயணபுரம்

    ×