என் மலர்
ஆன்மிகம்
- மாசியில் 14 நாள் திருவிழா தமிழ்மாதப்பிறப்பு பவுர்ணமி ஆடி வெள்ளி.
- தை வெள்ளி நவராத்திரி திருக் கார்த்திகை தனுர்மாத பூஜை .
மாசியில் 14 நாள் திருவிழா தமிழ்மாதப்பிறப்பு பவுர்ணமி ஆடி வெள்ளி.
தை வெள்ளி நவராத்திரி திருக் கார்த்திகை தனுர்மாத பூஜை .
தைப்பொங்கல் தீபாவளி.
ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும். அமாவாசை பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.
தேர் திருவிழாக்கள் :
1. பூச்சட்டு
2. அக்னிசட்டு
3. திருவிளக்கு பூஜை
4. மகிழ்வுந்து திருவிழா
5. தீப உற்சவம்
6. வசந்த விழா
- 2008 ஆம் ஆண்டு இத்திருக்கோவிலின் நுழைவாயிலில் 833/4 அடி உயர ஏழுநிலை ராஜகோபுரம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியது.
- பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற இப்பணிக்கு இந்து சமய அறநிலையத்துறை ரூபாய் முப்பது லட்சம் வழங்கியது.
2008 ஆம் ஆண்டு இத்திருக்கோவிலின் நுழைவாயிலில் 833/4 அடி உயர ஏழுநிலை ராஜகோபுரம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியது.
பல கோடி ரூபாய் செலவில் நடைபெற்ற இப்பணிக்கு இந்து சமய அறநிலையத்துறை ரூபாய் முப்பது லட்சம் வழங்கியது.
பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் மூலம் மீதமிருந்த செலவுகள் செய்யப்பட்டன.
திருக்கோவில்களில் 12 வருடங்களுக்கு ஒருமுறை நடைபெறும் திருக் குடமுழுக்கு விழா, புதிய இராஜகோபுரத்துடன் ஜூலை 11, 2014 இல் நடைபெற்றது.
பூஜை நேரம்
1. காலசந்தி காலை 7.00 மணி
2. உச்சிகாலம் நண்பகல் 12.00 மணி
3. சாயரட்சை இரவு 7.00 மணி
4. அர்த்த ஜாமம் இரவு 8.30 மணி
- கோனியம்மன் கோவில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆகும்.
- இக்கோவிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது.
கோனியம்மன் கோவில் கோயம்புத்தூரின் மையப்பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆகும்.
இக்கோவிலை மையமாகக் கொண்டே கோயம்புத்தூர் நகரம் அமைக்கப்பட்டது.
இக்கோவிலின் வரலாறு 13 ஆம் நூற்றாண்டளவில் அமைந்தது. இருளர்களால் 600 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டது.
பழங்குடியினரின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் முக்கியத்துவத்தை இழந்த இக்கோவிலை மைசூர் மன்னர்களில் ஒருவர் 'மகிசாசுர மர்த்தினி' அமைப்பில் சீரமைத்தார்.
இக்கோவில் கோவை மத்திய பேருந்து நிலையத்திலிருந்து இரண்டு கி.மீ தொலைவிலும், கோவை ரயில் நிலையத்திலிருந்து நடந்து வரும் தூரத்திலும் அமைந்துள்ளது.
- அம்பிகை சன்னதி எதிரே சிம்மவாகனம் உள்ளது. முன்மண்டபத்தில் சரஸ்வதி, லட்சுமி துர்க்கை ஆகிய தேவியர் உள்ளனர்.
- ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும். அமாவாசை பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.
அம்பிகை சன்னதி எதிரே சிம்மவாகனம் உள்ளது. முன்மண்டபத்தில் சரஸ்வதி, லட்சுமி துர்க்கை ஆகிய தேவியர் உள்ளனர்.
ஆடி மாதம் முழுவதும் ஊஞ்சல் உற்சவம் நடக்கும். அமாவாசை பவுர்ணமி நாட்களில் விசேஷ பூஜை உண்டு.
அம்மனுக்கு வலதுபுறத்தில் தம்பதி சமேதராக நவக்கிரகங்கள் அமைத்துள்ளனர்.
பின் பகுதியில் ஆதி கோனியம்மன் பஞ்ச முக விநாயகர் வள்ளி தெய்வானை உடன் சுப்பிரமணியர் ஆகியோர் அருள்பாலிக்கின்றனர்.
வடக்கு வாசலில் சுமார் 1 ஏக்கர் பரப்பளவில் உள்ள தளத்தில் ராஜகோபுரம் அமைந்துள்ளது.
இங்கு வேண்டிக் கொள்ள திருமணத்தடை நீங்கும் குழந்தைப்பேறு கிட்டும் நோய்கள் நீங்கும் தொழில் விருத்தி அடையும் என்பது நம்பிக்கை.
கோனியம்மனை வேண்டி தங்கள் வீட்டுப்பிள்ளைக்கு வரன் கிடைக்கப்பெற்றவர்கள் கோவிலிலேயே நிச்சயதார்த்த நிகழ்ச்சியை நடத்துகின்றனர்.
மணமக்கள் வீட்டார் இருவரும் ஒரு கூடையில் உப்பை நிறைத்து அதன் மேலே மஞ்சள் தேங்காய் வெற்றிலை பாக்கு பூ வைக்கின்றனர்.
கோனியம்மன் சாட்சியாக திருமணத்தை உறுதி செய்கின்றனர்.நோய் நீங்கவும் மாங்கல்ய பாக்கியத்திற்கும் வேண்டிகொள்கின்றனர்.
- கொங்கு நாடான கோவை மாநகர் ஆதியில் அடர் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது.
- இருளர்களின் தலைவன் கோவன் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி ஆட்சி புரிந்து வந்தான்.
கொங்கு நாடான கோவை மாநகர் ஆதியில் அடர் மரங்கள் நிறைந்த காடாக இருந்தது.
இருளர்களின் தலைவன் கோவன் அதனை சீர்படுத்தி நகராக மாற்றி ஆட்சி புரிந்து வந்தான்.
ஒரு சமயம் அவன் ஆட்சி புரிந்த பகுதியில் பஞ்சம் ஏற்பட்டு மக்கள் வாழ வழியின்றி தவித்தனர்.
அவர்களின் நிலையைக் கண்ட கோவன் தனது ஆட்சியின் கீழ், வசிக்கும் மக்கள் வாழ்வில் நன்மைகள் பல பெற்று பஞ்சம் பிணிகள் ஏற்படாமல் சிறந்து வாழ்ந்திட வேண்டி வனப்பகுதியில் சிறு நிலத்தை சீரமைத்து அங்கு கல் ஒன்றினை வைத்து அம்மனாக எண்ணி வழிபடத் தொடங்கினான்.
அதன்பிறகு கொங்கு நாட்டு மக்கள் செழிப்புற்று திகழ்ந்தனர்.
அதன்பின் இருளர்கள் அந்த அம்மனையே தங்களது குலதெய்வமாக எண்ணி கோவில் கட்டி வழிபடத் தொடங்கினர்.
இக்கோவில் கோவைக்கு வடக்கு திசையில் அமைந்தது. அம்பிகை காவல் தெய்வமாக நகரைக் காத்தாள்.
அவனது ஆட்சி முடிந்த பல்லாண்டுகளுக்குப்பின் இப்பகுதியை இளங்கோசர் என்பவர் ஆண்டு வந்தார்.
அப்போது சேரமன்னர் ஒருவர் படையெடுத்து வந்தார்.
அவரின் படையெடுப்பில் இருந்து நாட்டைக் காக்க கோவன்புத்தூரின் மையத்தில் ஓர் கோட்டையையும் மண்மேட்டையும் கட்டி காப்புத்தெய்வமான அம்மனை அங்கு வைத்து வழிபட்டார்.
இவளே கோனியம்மனாக வழிபடப்படுகிறாள்.
- மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் மகிமை அதிகம்.
- விநாயகர்' என்றால் 'மேலான தலைவர்' என்று அர்த்தம்.
ஒருமுறை சிவபிரான் வெளியே சென்றிருந்த சமயம் பார்வதிதேவி நீராடச்சென்றார். அப்போது தனக்கு காவல்காக்க ஒருவரும் இல்லையென்பதால், தனது நீராட்டுக்காக வைக்கப்பட்டிருந்த சந்தனக் குழம்பை எடுத்து ஒரு உருவம் உருவாக்கி அனுக்கிரகத்தால் அதற்கு உயிரூட்டினார்.
அவரால் உயிரூட்டப்பட்டதால் அவ்வுருவம் அவரது பிள்ளை ஆகிவிட்டது. எவரையும் உள்ளே நுழைவதற்கு அனுமதிக்கக் கூடாதெனப் பிள்ளையாருக்கு அறிவுறுத்தி விட்டு பார்வதி தேவியார் நீராடச் சென்று விட்டார்.

அச்சமயத்தில் வந்த சிவபிரானைப் பிள்ளையார் உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. அதனால் கோபம் கொண்ட சிவன் பிள்ளையாரின் தலையை வெட்டி விட்டு உள்ளே சென்று விட்டார்.
நீராடி முடிந்ததும் தேவியார் வெளியே வந்து பிள்ளையார், சிரச்சேதமுற்றுக் கிடந்த கோலத்தைக் கண்டு சீற்றங்கொண்டார்.
தான் உருவாக்கிய பிள்ளையாரைச் சிவனே சிதைத்து விட்டதை அறிந்த அவர் ஆவேசம் கொண்டவராக காளியாக உருக்கொண்டு வெளியேறி மூவுலகிலும் தமது கண்ணில் பட்ட சகலவற்றையும் அழிக்கத் தொடங்கினார்.
காளியின் ஆவேச நர்த்தனத்தைக் கண்டு அஞ்சிய தேவர்கள் சிவபிரானிடம் சென்று முறையிட்டனர். காளியைச் சாந்தப்படுத்துவதற்கு சிவன் எண்ணி, தனது கணங்களை அழைத்து வட திசையாகச் சென்று முதலில் தென்படுகின்ற ஜீவராசியின் தலையைக் கொண்டு வருமாறு பணித்தார்.
அதன்படி கணங்கள் வடதிசை நோக்கிச் சென்ற பொழுது அவர்களுக்கு ஒரு யானையே முதலில் தென்பட்டது.
அவர்கள் அதன் தலையை கொண்டு வந்து இறைவனிடம் கொடுக்கவும், அவர் அத்தலையை வெட்டுண்டு கிடந்த பார்வதியின் பிள்ளையாரின் உடலில் பொருத்தி வைத்து உயிரூட்டி விட்டார்.
இதைக் கண்டு சாந்தமடைந்த தேவியார் மகிழ்ச்சி அடைந்து பிள்ளை யாரைக் கட்டி அணைத்துக் கொண்டார். சிவபிரான் அந்த குழந்தைக்கு "கணேசன்" என நாமம் சூட்டித் தமது கணங்களுக்கு தலைவராக நியமித்தார் என "நாரதபுராணத்தில்" தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவே பிள்ளையாரின் அவதார சரிதம்.
இந்த நிகழ்ச்சி நடந்தது சுக்கில பட்ச சதுர்த்தியன்றாகும். அன்றில் இருந்து அத்தினம் விநாயகர் சதுர்த்தி என்ற புனித தினமாக ஆகி விட்டது.

விநாயகரை எந்த பொருள் மூலமாகவும் வடிவமைத்து வழிபடலாம். ஆனால் மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் மகிமை அதிகம் என்கிறார்கள். பார்வதி முதலில் விநாயகரை படைத்த போது மஞ்சளைப் பிடித்து உருவாக்கியதுதான் அதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
'விநாயகர்' என்றால் 'மேலான தலைவர்' என்று அர்த்தம். 'விக்னேஸ்வரர்' என்றால் 'இடையூறுகளை நீக்குபவர்' என்றும் 'ஐங்கரன்' என்றால் ஐந்து கரங்களை உடையவரெனவும் அர்த்தப்படும்.
'கணபதி என்பது கணங்களுக்கு அதிபதி' என்று பொருள்படும். இவ்வாறே அவரது சகல நாமங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் அந்தந்த பெயர்களிலேயே பொதிந்துள்ளன.
- விநாயகர் சதுர்த்தி நாளை மறுநாள் கொண்டாடப்படுகிறது.
- விநாயகரை பூஜித்துவிட்டு வீட்டிலேயே கரைத்து விட முடியும்.
விநாயகர் சதுர்த்தி நாளை மறுதினம் (சனிக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் கொழுக்கட்டை மாவு உள்ளிட்டவற்றை வாங்குவதுடன் களிமண்ணால் செய்த விநாயகர் சிலை, பூ போன்ற பொருட்களை வாங்கி வந்து பூஜை செய்வது வழக்கம்.
பூஜை முடிந்ததும் களிமண்ணால் செய்த விநாயகர் சிலையை நீர் நிலைகளில் கொண்டு கரைப்பதும் உண்டு. ஆனால் தற்போது சற்று வித்தியாசமான முறையில் பசும் சாணத்தால் செய்யப்பட்ட விநாயகர் சிலை விற்பனைக்கு வந்து உள்ளது. இவற்றை பொதுமக்கள் ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.

இதுகுறித்து பசும் சாணத்தால் விநாயகர் சிலை செய்து வரும் சென்னை ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த இயற்கை மருத்துவர் பிரிதா மணிகண்டன் கூறியதாவது:-
நாட்டு மாடுகளை காப்பதற்காக ஆதம்பாக்கம், பள்ளிக்கரணையில் 120 மாடுகளுடன் கோசாலை ஒன்றை நடத்தி வருகிறோம். இதில் சிவகங்கை குட்டை, தஞ்சாவூர் குட்டை, காஞ்சி குட்டை, துரிஞ்சல் உள்ளிட்ட 20 வகையான நாட்டு மாடுகள் எங்களிடம் வாழ்ந்து வருகின்றன.
இவற்றின் மூலம் எதிர்பார்த்த அளவு பால் உற்பத்தி இல்லாததால் விவசாயிகளிடம் நாட்டு மாடுகளுக்கு நல்ல வரவேற்பு இல்லாத நிலை உள்ளது.
இதனால் இந்த வகை மாடுகள் அழிந்துவிடும் நிலை இருப்பதால் இதுகுறித்து பலருக்கும் விழிப்புணர்வு அளிப்பதுடன், இவற்றை பாதுகாத்தும் வருகிறோம்.
பசுக்களில் இருந்து பால் மட்டுமே வருமானம் என்று பார்க்காமல், சாணத்தில் இருந்து பொருட்களை தயாரித்து வருமானம் பார்க்க முடியும்.
குறிப்பாக இயற்கை உரம், கம்யூட்டர் சாம்பிராணி, சோப்பு போன்ற பூஜை பொருட்கள், பாத்திரம் பூசும் பொடி, கொசுவிரட்டி உள்ளிட்ட வீட்டு உபயோகப்பொருட்கள், சோப்பு, முகத்தில் தடவும் கிரீம்கள் உள்ளிட்ட அழகு சாதன பொருட்கள், கண், மூக்குகளில் விடப்படும் நெய் உள்ளிட்ட பஞ்ச கவ்ய மருந்துகள் போன்றவை சாணம் மூலம் தயாரித்து வருகிறோம்.
தற்போது விநாயகர் சதுர்த்தி சீசன் என்பதால் பசு மாட்டு சாணத்தால் விநாயகர் சிலை தயாரித்து விற்பனை செய்து வருகிறோம். எந்தவித ரசாயன பொருட்களும் சேர்க்காமல் சுத்த சாணத்தால் பின்விளைவு இல்லாத வகையில் தயாரித்து வருகிறோம்.
சென்னை போன்ற மாநகரங்களில் வசிப்பவர்கள் களிமண் பிள்ளையார் வைத்து பூஜித்து விட்டு நீரில் கரைப்பதற்கு நீர் நிலைகளை தேடி செல்ல வேண்டிய நிலை ஏற்படும்.
ஆனால் சாணத்தால் தயாரிக்கப்பட்ட விநாயகரை பூஜித்துவிட்டு வீட்டிலேயே கரைத்து விட முடியும். இதுபோன்ற பல சிறப்புகளை கொண்டது சாணப்பிள்ளையார்.
இவ்வாறு அவர் கூறினார்.
பசும் சாணத்தால் தயாரிக்கப்பட்ட விநாயகர் சிலைகள் சிறியது (5 செ.மீ) ரூ.90, சற்று பெரியது (12 செ.மீ) ரூ.220, அதைவிட சற்று பெரியது (17 செ.மீ) ரூ.350, பெரியது (27செ.மீ) ரூ.450 என 4 வகையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதில் ரசாயன பொருட்கள் கலக்காத சுத்தமான முறையில் இயற்கையிலேயே தயாரிக்கப்பட்ட மங்களகரமான நிறம் சேர்ப்பதற்கு கூடுதலாக ரூ.10 அதிகம் வசூலிக்கப்படுகிறது.
சென்னையில் இந்த வகை விநாயகர் சிலைகள் ஆதம்பாக்கம் மற்றும் நங்கநல்லூரில் விற்பனை செய்து வருகிறோம். பொதுமக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது என்று விற்பனையாளர்கள் கூறினர்.
- சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
- உப்பூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் திருக்கல்யாணம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு ஆவணி-20 (வியாழக்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: துவிதியை காலை 11.48 மணி வரை பிறகு திருதியை
நட்சத்திரம்: உத்திரம் காலை 6.42 மணி வரை பிறகு அஸ்தம்
யோகம்: மரண, சித்தயோகம்
ராகுகாலம்: நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம்: காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம்: தெற்கு
நல்ல நேரம்: காலை 9 மணி முதல் 10 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று சுபமுகூர்த்த தினம். சாம வேத உபாகர்மா. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் ஆவணிப் பெருவிழா தொடக்கம். உப்பூர் ஸ்ரீ விநாயகப் பெருமான் திருக்கல்யாணம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. ஆலங்குடி ஸ்ரீ குரு பகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். தக்கோலம் ஸ்ரீ தட்சணாமூர்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமி மடத்தில் சிறப்பு திருமஞ்சன அலங்கார சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-ஆராய்ச்சி
ரிஷபம்-அன்பு
மிதுனம்-சிரத்தை
கடகம்-பண்பு
சிம்மம்-நன்மை
கன்னி-உதவி
துலாம்- உயர்வு
விருச்சிகம்-மகிழ்ச்சி
தனுசு- வெற்றி
மகரம்-மாற்றம்
கும்பம்-செலவு
மீனம்-வரவு
- திருமணம் - கி.பி. 1033ல் 16-வது வயதில்
- மனைவி - தஞ்சமாம்பாள் என்கிற ரக்ஷகாம்பாள்
பிறப்பு- கி.பி. 1017 பிங்கள ஆண்டு சித்திரைத் திங்கள்
பிறந்த ஊர் - பூதபுரி எனும் ஸ்ரீபெரும்புதூர்
தந்தையார் - ஆசாரி கேசவ சோமயாஜி பட்டாசாரி
தாய் - காந்திமதி எனும் பூமிப் பிராட்டியார்
காதுகுத்தல் வைபவம் - கி.பி.1022
உபநயனம் - கி.பி.1025
திருமணம் - கி.பி. 1033ல் 16-வது வயதில்
மனைவி - தஞ்சமாம்பாள் என்கிற ரக்ஷகாம்பாள்
காஞ்சீபுரத்தில் தனிக்குடித்தனம் - கி.பி.1034
காசி யாத்திரை - 1035
ஸ்ரீ ஆளவந்தார் சந்திப்பு - கி.பி. 1041
ராமானுஜர் சந்தியாசம் - 1047
திருக்கோட்டியூர் நம்பி சந்திப்பு - 1049
திருமலை திருப்பதி வாசம் - 1051
ஸ்ரீபாஷ்யம் எனும் வேதநூல் எழுதியது - கி.பி. 1051-1055
திருமலைதிருப்பதி திருப்பணிகள் - கி.பி. 1057
ஸ்ரீரங்கநாத சாம்ராஜ்ய நிர்வாக பொறுப்பு - 1058- 1089
திக்விஜயம் - கி.பி. 1089- 1095
கூர்மஷேத்திர திருப்பணி - கி.பி. 1094 - 1095
மைசூர் தேசம் சென்றது - கி.பி.1097 - 1098
தொண்டனூர் ராஜகுருவாக பிரகடனம் - கி.பி. 1110
டில்லி சுல்தான் குமாரியிடம் விக்ரகம் பெற்ற சம்பவம் 1101-1104
ஸ்ரீரங்கம் திரும்புதல் - கி.பி. 1111- 1112
ஸ்ரீ ராமானுஜர் மோட்ச கதி அடைதல் - 22.1.1138
- அவதரிதது 120 ஆண்டுகள் கழித்து, அவர் அவதரித்த அதே பிங்கள ஆண்டில் அத்திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
- உடையவர் கந்த அந்த மூர்த்தத்தை ‘தாம் உகந்த திருமேனி’ என்றனர்.
ஸ்ரீபெரும்புதூரில் இருந்த பக்தர்கள் வேதம் வகுத்த நெறியில் தம்முடைய விக்கிரகம் ஒன்றைச் செய்து பிரதிஷ்டை செய்ததைத் தான் மவுன நிலையில் கண்டதாகக் கூறினார்.
எவருக்கும் தங்களுடைய வாழ்நாளில் தங்கள் பிறந்த மண்ணில் சிறப்புகள் கிட்டுவது அரிது.
ராமானுஜருக்கு அச்சிறப்பு கிட்டியது. தமது வாழ்நாளுக்கு பிறகும் தம்முடைய அவதாரத் தலத்தில் அர்ச்சா வடிவத்தில் எழுந்தருளுவது ராமானுஜருக்கு உகப்பாகவே இருந்தது.
அவதரிதது 120 ஆண்டுகள் கழித்து, அவர் அவதரித்த அதே பிங்கள ஆண்டில் அத்திருமேனி பிரதிஷ்டை செய்யப்பட்டது.
உடையவர் கந்த அந்த மூர்த்தத்தை 'தாம் உகந்த திருமேனி' என்றனர்.
- அவர் அங்கு ஞானச்செங்கோல் ஓச்சிய காலத்தில் ஏற்படுத்திய நெறிமுறைகள் இன்றளவும் பின்பற்றப்படுகின்றன.
- கோவிற்கலைகளில் வல்லவர்களான பலருக்கும் வேலை வாய்ப்பு அளித்தார்.
ராமானுஜர் திருநாராயணபுரம் செல்வதற்கு முன்னால் 30 ஆண்டுகளும், அங்கிருந்து திரும்பி வந்த பிறகு 20 ஆண்டுகளும் ஆக மொத்தம் 50 ஆண்டுகள் திருவரங்கன் திருத்தொண்டுகள் புரிந்தார்.
அவர் அங்கு ஞானச்செங்கோல் ஓச்சிய காலத்தில் ஏற்படுத்திய நெறிமுறைகள் இன்றளவு வைணவத் திருத்தல்களில் பின்பற்றப்படுகின்றன.
கோவிற்கலைகளில் வல்லவர்களான பலருக்கும் வேலை வாய்ப்பு அளித்தார்.
திருவீதிகளில் வேதங்கள் மற்றும் பிரபந்தங்களை ஓதச் செய்தார். அவற்றைக் கற்பிக்கவும் ஏற்பாடுகள் செய்தார்.
சோழச் சிற்றரசன் அகளங்கனிடம் கோவில் நிர்வாகத்தை ஒப்படைத்து, அது வெவ்வனே செயற்பட வழிவகுத்தார்.
அரங்கனுக்குரிய நிவேதனங்கள் குறைவின்றித் தளிகை செய்யப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதங்கள் தாராளமாக வழங்கப்பட்டன.
திருக்கோவிலைச் சுற்றி மண்டபங்கள், நந்தவனங்கள், மலர்ச்சோலைகள், மருத்துவமனைகள், நூல் நிலையங்கள் போன்ற அனைத்தும் நிறுவப்பட்டன.
மொத்தத்தில் திருக்கோவில் அமைதி அளிக்கும் வழிபாட்டுத் தலமாகவும், கலைகளை வளர்க்கும் இடமாகவும், மக்கள் நலப் பணிகளைச் செய்யும் அறச்சாலையாகவும் விளங்கின.
குறிப்பாக, திருக்கோவிலில் சமத்துவ பக்தி நிலவச் செய்ததில் ராமானுஜர் முன்னோடியாக திகழ்ந்தார்.
தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே என்று அனைவரும் போற்றும் அளவிற்கு திருவரங்கத்தைச் செழிக்கச் செய்தார் உடையவராகிய ராமானுஜர்.
நூற்றிருபது வயது முதுமையிலும் ராமானுஜர் சீடர்களுக்குப் பாடம் கற்பித்து வந்தார்.
ஒருநாள் பாடம் சொல்லி வந்தபோது, ராமானுஜர் மவுனத்தில் ஆழ்ந்தார்.
அப்போது அவருடைய கண்களிலிருந்து இரண்டு சொட்டு ரத்தம் வந்தது. சீடர்கள் செய்வது அறியாது திகைத்தார்.
சிறிது நேரம் கழித்து மவுனம் கலைந்து, உடையவரே மவுனத்தில் உதிரம் சொட்டிய காரணத்தை விளக்கினார்.
சீர்திருத்தம் பலவற்றை சிறப்புடனே செய்தவராம்...
சீர்பெருமை பல பெற்ற சீர்மிகு ராமானுஜராம்...
(சீர்திருத்தம்)
வைணவராய்ப் பிறந்தாலும் வையகமே போற்றி நிற்கும்
வரதராஜன் தந்த வரம் ராமானுஜர் அவதாரம்!
குலத்தாழ்ச்சி இல்லாமல், குலப்பெருமை பேசாமல்,
குலகுருவாய் வந்திட்டவர், குலம் செழிக்க வாதிட்டவர்!
(சீர்திருத்தம்)
ஆழ்வார்கள் அருளிச் செய்த அழகு தமிழ்ப் பாசுரங்கள்
வடமொழியின் வேதத்திற்கு இணையெனவே வாதிட்டவர்!
திராவிடரின் வேதமென்றே திவ்ய பிரபந்தப் பாசுரத்தை
ஓதும்படி செய்திடவே இவ்வுலகில் தோன்றிட்டவர்!
(சீர்திருத்தம்)
திருக்கோவில் உள்ளேதான் நுழைந்திடவே முடியாத
தெருக்கோடி மக்களுக்கும் திருக்கரத்தை நீட்டியவர்!
தீண்டாமை எனச் சொல்லும் தீவினையை மாற்றிடவே
திருப்பெரும்புதூர் ஈன்றெடுத்த அவதார திருச்செல்வர்!
(சீர்திருத்தம்)!
-நெமிலி ஸ்ரீபாபாஜி பாலா






