என் மலர்tooltip icon

    Recap 2024

    ரத்தன் டாடா முதல் ஐ.பி.எல். வரை.. 2024 இல் இந்தியர்கள் அதிகம் தேடியவை.. டாப் 10 லிஸ்ட்
    X

    ரத்தன் டாடா முதல் ஐ.பி.எல். வரை.. 2024 இல் இந்தியர்கள் அதிகம் தேடியவை.. டாப் 10 லிஸ்ட்

    • இந்தியாவில் 2024 கூகுளில் ட்ரெண்டிங் தேடல்களில் தேர்தல் மற்றும் விளையாட்டுகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.
    • புரோ கபடி லீக் மற்றும் இந்தியன் சூப்பர் லீக் ஆகியவை அதிகம் தேடப்பட்டுள்ளன

    ஒவ்வொரு ஆண்டில் முடிவிலும் அந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 விஷயங்களை அந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கும் நிலையில் இந்த ஆண்டு டாப் 10 கூகுள் தேடல்கள் என்னென்ன என்ற லிஸ்ட் வெளியாகி உள்ளது. இந்தியாவில் 2024 கூகுளில் ட்ரெண்டிங் தேடல்களில் தேர்தல் மற்றும் விளையாட்டுகள் ஆதிக்கம் செலுத்தியுள்ளது.

    ஐபிஎல், டி20 உலகக் கோப்பை மற்றும் ஒலிம்பிக் 2024 ஆகியவற்றை விட 2024 ஆம் ஆண்டிற்கான ட்ரெண்டிங் தேடல்களாக ஆச்சர்யம் அளிக்கும் வகையில் , புரோ கபடி லீக் மற்றும் இந்தியன் சூப்பர் லீக், மகளிர் பிரீமியர் லீக் மற்றும் துலீப் டிராபி போன்ற உள்நாட்டு விளையாட்டுப் போட்டிகள் இந்திய மக்களால் அதிகம் தேடப்பட்டுள்ளன.

    கோபா அமெரிக்கா - யுஇஎஃப்ஏ ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் மற்றும் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் உலகக் கோப்பை ஆகியவை இந்தியாவில் அதிகம் தேடப்பட்ட மற்ற விளையாட்டு நிகழ்வுகள் ஆகும்.

    அதைத்தொடர்ந்து இந்த ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தல், பல மாநிலத் தேர்தல்கள், பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் போன்ற சொற்கள் அதிகம் தேடப்பட்டள்ளன.

    2024-ல் அதிகம் தேடப்பட்ட நபர்களில், வினேஷ் போகத் , பீகார் முதல்வர் நிதிஷ் குமார், மத்திய அமைச்சர் சிராக் பாஸ்வான் மற்றும் ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் போன்ற அரசியல்வாதிகள் முன்னணியில் உள்ளனர்.

    2024 இல் Google இல் அதிகம் தேடப்பட்ட முதல் 10:

    1) இந்தியன் பிரீமியர் லீக்

    2) டி20 உலகக் கோப்பை

    3) பாரதிய ஜனதா கட்சி

    4) தேர்தல் முடிவுகள் 2024

    5) ஒலிம்பிக் 2024

    6) அதிக வெப்பம்

    7) ரத்தன் டாடா

    8) இந்திய தேசிய காங்கிரஸ்

    9) புரோ கபடி லீக்

    10) இந்தியன் சூப்பர் லீக்

    Next Story
    ×