என் மலர்tooltip icon

    மற்றவை

    • மற்றவர்களைவிட நாம் தாழ்ந்து தான் போய்விட்டோம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டால், மனம் உடைந்து போய்விடும்.
    • தனிமை, யாரைப் பார்த்தாலும் தேவையில்லாத மன எரிச்சல் இவற்றின் வித்தாகிவிடும்.

    " உன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது, உன் அகங்காரத்தின் விளையாட்டுதான்.

    ஒப்பிடுவதை தவிர்த்து விட வேண்டும்.

    அது எந்த விதத்திலும் துன்பத்தை தந்து விடும்.

    இரண்டு வகையிலும் துயரம் உன்னை ஆட்கொண்டு விடும்.

    ஒன்று, மற்றவர்களைவிட நீ உயர்ந்தவன் என்ற எண்ணம் உனக்குத் தோன்றிவிட்டால், அது ஒருவித பெருமிதத்துடன், தேவையில்லாத ஆணவத்தையும் உனக்குள் ஏற்படுத்திவிடும்.

    அது, மன இறுக்கம், தனிமை, துயரம் இவற்றின் விதையாகி விடும்.

    இரண்டு, மற்றவர்களைவிட நாம் தாழ்ந்து தான் போய்விட்டோம் என்ற எண்ணம் ஏற்பட்டுவிட்டால், மனம் உடைந்து போய்விடும். அது, தனிமை, யாரைப் பார்த்தாலும் தேவையில்லாத மன எரிச்சல் இவற்றின் வித்தாகிவிடும்.

    இரு விதத்திலும், துயரமும், துன்பமும்தான்.

    இந்த இரண்டு பாறைகளுக்கு இடையே சிக்கி,நொறுங்கிப் போய்விடும் வாழ்க்கை.

    இவைகள், வாழ்வின் தொடர் எண்ணங்களாகவும் போய்விடும்.

    ஆகையால், மற்றவர்களுடன், உங்களை ஒப்பிட்டுப் பார்ப்பதை ஆரம்பத்திலேயே தவிர்த்துவிடுவது நல்லது.

    • பசு தன் சாணத்தில் கூட உட்காருவதில்லை. பசு தூய்மையை மட்டுமே விரும்புகிறது.
    • பசும்பாலை எத்தனை முறை காய்ச்சி குடித்தாலும் அதில் உள்ள ஊட்டச்சத்து குணங்கள் அழியாது.

    பசும் பாலுக்கும் எருமைப்பாலுக்கும் உள்ள வித்தியாசம் நம்மில் பலருக்கும் புரியாது. பெரும்பாலான மக்களுக்குத் எதுவுமே தெரியாது பசுவுக்கும், எருமை மாட்டுக்கும் உள்ள வித்தியாசங்களை தெரிந்து கொள்வேமே!

    * எருமை சேற்றை (சகதியை) விரும்புகிறது.

    * பசு தன் சாணத்தில் கூட உட்காருவதில்லை. பசு தூய்மையை மட்டுமே விரும்புகிறது.

    * எருமையை 2 கி.மீ. தூரம் கொண்டு போய் விட்டுவிட்டால். வீடு திரும்பமாட்டார். நினைவு சக்தி பூஜ்ஜியம்.

    * நாம் ஒரு பசு மாட்டை 5 கி.மீ. தொலைவில் விட்டாலும், அது வீட்டிற்குத் தானாக திரும்பும்.

    * பசும்பாலுக்கு நினைவாற்றல் சக்தி உண்டு.

    * பத்து எருமை மாடுகளை கட்டி வைத்து விட்டு அதன் குழந்தைகளை விட்டு சென்றால் ஒரு குட்டி கூட தன் தாயை அடையாளம் கண்டு கொள்ளாது.

    * ஆனால் பசுவின் கன்று, சில நூறு மாடுகளுக்கு நடுவே இருந்தாலும் தன் தாயை அடையாளம் கண்டு விடும்.

    * பாலை கறக்கும் போது எருமை தன் பால் முழுவதையும் கொடுக்கிறது.

    * பசு தன் குட்டிக்காக சிறிது பாலை மறைக்கிறது. குட்டி குடிக்கும் போது தான் சேமித்து வைத்த பாலை வெளியிடுகிறது.

    * பசுவின் பாலில் மென்மை உள்ளது.

    * எருமையால் வெயிலையோ, அதிகமான வெப்பத்தையோ தாங்க முடியாது.

    * பசு மே-ஜூன் மாதங்களில் வரும் சூரியனையும் தாங்கும்.

    * எருமை பெரியது, சோம்பேறி மற்றும் விரைவாக கத்துவதில்லை. இதன் பால் கெட்டியானது மற்றும் ஜீரணிக்க கடினமாக உள்ளது. அதன் பாலை நாம் உட்கொள்ளும் போது நமக்கும் அதே சோம்பல் மற்றும் அஜீரணம் ஏற்படுகிறது. எருமை பால் கறக்கும் நேரத்தில் உரிமையாளரலே வளர்க்கப்படுகிறது.

    * பசுவின் கன்று தாயிடமிருந்து கன்று பிரிந்தால் அதைக் கையாள்வது மிகவும் கடினம். பால் கறக்கும் நேரத்தில் கன்றுக்குட்டியை கட்டுப்படுத்த முடியாது, அது தன் பங்கு பாலை தாயிடம் இருந்து குடித்து முடித்த பிறகும். அந்த அக்கறையும் மென்மையும் அதன் பாலில் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

    பசுவின் முதுகில் இருக்கும் "நரம்பு" வெயில் இருக்கும் போது விழித்துக் கொள்ளும். இந்த நரம்பு சூரியன், நட்சத்திரங்கள், சந்திரன் மற்றும் பிரபஞ்சத்தில் இருந்து "காஸ்மிக் சக்தியை" உறிஞ்சுகிறது. அதனால் நோய்களை நீக்கும் சக்தி பசும்பாலுக்கு உண்டு. பிரபஞ்சத்தில் உள்ள எந்த உயிரினத்திற்கும் அத்தகைய சக்தி இல்லை.

    உண்மையில், பசுவின் பால் உட்கொள்ளும் போது உங்கள் உடலை சூடாக்காது. எருமைப்பால் அடர்த்தியானது, உட்கொள்ளும் போது உடல் சூடாகிறது, மேலும் நமது உடலிலும் சர்க்கரை அதிகரிக்கிறது (ஜெர்சி பாலில் அதிகமாக உள்ளது) சர்க்கரை நோயாளிகளுக்கு இது நல்ல தல்ல. ஆனால் பசுவின் பாலை உட்கொள்ளும் போது அதற்கு நேர்மாறாக இருக்கும்.

    * எருமைப் பாலை அடுப்பில் வைத்து சிறிது சூடாக்கும் போது அதில் உள்ள மூன்றாவது மற்றும் நான்காவது சத்து ஆவியாகிவிடும்.

    * பசும்பாலை எத்தனை முறை காய்ச்சி குடித்தாலும் அதில் உள்ள ஊட்டச்சத்து குணங்கள் அழியாது.

    • சோமாலியா நாட்டு பூனை நோஞ்சானாக மெலிந்து நடக்கவே தெம்பற்று தட்டுத்தடுமாறி முக்கி முணங்கி மேடையேறியது!
    • சோமாலியா பூனை முன்னங்காலை சிரமப்பட்டு தூக்கி பறந்து ஒரேஅடி!

    உலக அளவில் பூனைகளுக்கான குத்துச்சண்டை போட்டி நடைபெற்றது! அனைத்து நாட்டு பூனைகளையும் வீழ்த்தி அமெரிக்கா பூனை முன்னணியில் இருந்தது!

    இந்தியா பூனை, பாகிஸ்தான் பூனை, ஜெர்மனி பூனை, ஆஸ்திரேலியா பூனை, இப்படி அத்தனை நாட்டு பூனைகளும் அமெரிக்க பூனையிடம் அடிவாங்கி சுருண்டு கிடந்தன!

    அமெரிக்கா பூனையல்லவா, பாலும், இறைச்சியும் அளவிற்கு அதிகமாக உண்டு கொழுத்து கொழு, கொழுவென இருந்தது!

    கடைசி இறுதி சுற்று.... இந்தச் சுற்றில் அமெரிக்க பூனையிடம் சோமாலியா நாட்டுப் பூனை மோதப்போவதாக அறிவித்தார்கள்! பார்வையாளர்களுக்கு வியப்பு!

    சோமாலியா நாட்டு பூனை நோஞ்சானாக மெலிந்து நடக்கவே தெம்பற்று தட்டுத்தடுமாறி முக்கி முணங்கி மேடையேறியது!

    இதுவா அமெரிக்க பூனையிடம் மோதப்போகிறது!

    பார்வையாளர்கள் கேலியும் கிண்டலுமாய் சிரித்தார்கள்!

    போட்டித்துவங்கியது!

    அமெரிக்கா பூனை அலட்சியமாக சோமாலியா பூனையின் அருகில் நெருங்கியது!

    சோமாலியா பூனை முன்னங்காலை சிரமப்பட்டு தூக்கி பறந்து ஒரேஅடி!

    அமெரிக்க பூனைக்கு மண்டைக்குள் ஒரு பல்பு பளீச் என்று எரிந்து படாரென வெடித்து சிதறியது!

    கண்கள் இருண்டு மயங்கி சரிந்தது.

    பார்வையாளர்கள் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றார்கள்!

    சற்று நேரம் சென்றபின், மெதுவாக கண்விழித்து பார்த்த அமெரிக்கா பூனைக்கு ஒன்றுமே புரியவில்லை!

    சோமாலியா பூனையின் கழுத்தில் தங்கப்பதக்கம் தொங்கியது.!

    போட்டியில் வென்றதற்காக சோமாலியா பூனையை எல்லோரும் கைகுலுக்கி பாராட்டிக் கொண்டிருந்தார்கள்!

    மெதுவாக எழுந்து சோமாலியா பூனையின்அருகில் சென்று இத்தனை நாட்டு பூனைகளை வீழ்த்திய பலசாலியான என்னை நோஞ்சான் பூனையான நீ வீழ்த்தியது எப்படி? என்று கேட்டது அமெரிக்க பூனை!

    அமெரிக்கா பூனையின் காதில் மெதுவாக சோமாலியா பூனை சொன்னது!

    நான் பூனையே இல்லை.! புலி...டா...!

    என் நாட்டு பஞ்சத்தில் இப்படியாகி விட்டேன்!

    பாலும், கறியும் உண்டாலும் பூனை பூனைதான்!

    பட்டினி கிடந்தாலும் புலி புலிதான்!

    • உத்தரபிரதேசம் அளவு பெரிய மாநிலத்தில் ஐம்பது லட்சம் பேர் வசிப்பதை கற்பனை செய்யமுடிந்தால் அதுதான் நியூசிலாந்து.
    • 51 லட்சம் பேருக்கு 2.5 கோடி செம்மறி ஆடுகள் உள்ளதால் மனிதர்களை விட ஐந்து மடங்கு செம்மறி ஆடுகள் உள்ள நாடு.

    உலகிலேயே மனிதர்கள் கடைசியாக குடியேறிய நாடு என நியூசிலாந்தை சொல்லலாம். நியூசிலாந்தை பாலினேசியர்கள் கண்டுபிடித்து குடியேறுகையில் சுமாராக 13ம் நூற்றாண்டு. அதற்குமுன்? கிவி பறவைகள் தான் தீவில் சுற்றிக்கொன்டு இருந்தன. அதாவது தமிழகத்தில் ராஜராஜ சோழன், குலோத்துங்கசோழன் ஆட்சி எல்லாம் நடந்து முடிந்தும் நியூஸிலாந்தில் மனிதனின் கால் தடமே படவில்லை என்றால் பார்த்துக்கலாம்.

    மனிதர்கள் மட்டுமல்ல, நியூசிலாந்தில் பெரிய மிருகங்களுக்கும் பூர்வீகம் கிடையாது. கடல்வாழ் டால்பின்கள், திமிங்கிலங்கள், வவ்வால்கள் தான் அத்தீவின் இயற்கையான பாலூட்டிகள். மான், சிங்கம், பூனை, யானை... எதுவும் அங்கே பூர்வீகமா இல்லை. தீவில் தம்மை வேட்டையாட யாரும் இல்லாததால் கிவி பறவைகள் கூட பறப்பதை விட்டுவிட்டு நிலம்வாழ் பறவைகள் ஆகிவிட்டன.

    ஆஸ்திரேலியாவுக்கு பக்கத்து நாடு என சொல்லிகிட்டாலும் ஆஸ்திரேலியா இங்கிருந்து 2000 கிமி தொலைவு. ஆஸியிலேயே மனிதர்கள் குறைவு, நியூஸியில் அதைவிட குறைவு.

    உத்தரபிரதேசம் அளவு பெரிய மாநிலத்தில் ஐம்பது லட்சம் பேர் வசிப்பதை கற்பனை செய்யமுடிந்தால் அதுதான் நியூசிலாந்து.

    இங்கே 13ம் நூற்றாண்டில் பாலினேசியர்கள் குடியேறுகிறார்கள். வடக்கு, தெற்கு என இரு தீவுகள். விவசாய நிலம் வெகு குறைவு. ஆனால் புல்வெளிகள் மிக அதிகம். நாட்டின் 51% நிலபரப்பில் புற்கள் தான். அதனால் அங்கே எல்லாம் செம்மறிஆடுகளையும், மாடுகளையும் வளர்க்கிறார்கள். 51 லட்சம் பேருக்கு 2.5 கோடி செம்மறி ஆடுகள் உள்ளதால் மனிதர்களை விட ஐந்து மடங்கு செம்மறி ஆடுகள் உள்ள நாடு. இத்தனை புல்வெளிகள் இருப்பதால் கால்ப் கிளப்புகளும் கூடுதல்.

    - நியாண்டர் செல்வன்

    • தூக்கமின்மை, கல்வி மற்றும் வேலைக்கான செயல் திறன் மற்றும் நினைவுத் திறனை பாதிக்கும்.
    • மன அழுத்தம் மற்றும் தவறான வாழ்வியல் முறைகளே பெரும்பாலும் தூக்கமின்மை ஏற்படுவதற்கான காரணங்கள்.

    தினசரி யாருக்கு, எவ்வளவு நேரம் தூக்கம் அவசியம்?

    நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் அறிவுறுத்தலின் படி,

    3 மாதம் வரையுள்ள குழந்தைகள் 14 - 17 மணிநேரம்,

    4 - 12 மாதம் வரையுள்ள குழந்தைகள் 12 - 16 மணிநேரம்,

    1 முதல் 2 வயது வரையுள்ள குழந்தைகள் 11 - 14 மணிநேரம்,

    3 முதல் 5 வயது வரையுள்ள குழந்தைகள் 10 - 13 மணிநேரம்,

    6 முதல் 12 வயது வரையுள்ள குழந்தைகள் 9 - 12 மணிநேரம்,

    13 - 18 வயது வரையுள்ள வளிரிளம் பருவத்தினர் 8 - 10 மணிநேரம்

    மற்றும் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் 7 - 9 மணிநேரம், தினந்தோறும் தூங்க வேண்டும்.

    தூக்கமின்மையால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

    தொடர்ந்து தூக்கமின்மையால் அவதிப்படுபவர்களுக்கு, உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, பக்கவாதம், இதய நோய், ஆஸ்துமா, உடல் பருமன், மனச்சோர்வு, குழப்பம் போன்றவை ஏற்படுவதற்கான அபாயம் உள்ளது.

    மேலும், தூக்கமின்மை, கல்வி மற்றும் வேலைக்கான செயல் திறன் மற்றும் நினைவுத் திறனை பாதிக்கும்.

    தூக்கமின்மை ஏற்படுவதற்கான காரணம் என்ன?

    மன அழுத்தம் மற்றும் தவறான வாழ்வியல் முறைகளே பெரும்பாலும் தூக்கமின்மை ஏற்படுவதற்கான காரணங்கள்.

    ஒழுங்கற்ற தூக்க அட்டவணை, தூக்க நேரத்தில் செல்போன், லேப்டாப், டிவி போன்றவற்றை தொடர்ந்து உபயோகப்படுத்துவது, தூங்கும் அறையில் அதிகளவு வெளிச்சம் அல்லது சத்தம் இருத்தல் போன்றவை தூக்கமின்மையை ஏற்படுத்தும். காஃபீன், நிக்கோட்டின், மது போன்றவை தூக்கமின்மையை ஏற்படுத்தும்.

    உளவியல் பாதிப்புகள், புற்றுநோய், இதய நோய், ஆஸ்துமா, மனச்சோர்வு நோய், இருமல் போன்றவற்றிற்கு உபயோகப்படுத்தும் சில மருந்துகளும் தூக்கமின்மையை ஏற்படுத்தலாம்.

    -எம். எஸ். சீதாராமன்

    • ஜோனின் மனைவியால் ஏடிஎம் அட்டைக்கான ஆறு இலக்க ரகசிய பின் நம்பரை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை.
    • ஏடிஎம் இயந்திரங்கள் காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களை கண்டு விட்டாலும், இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதலில் மலர்ந்த அந்த முதல் ஏடிஎம் தான்.

    ஸ்காட்லாந்தைச் சேர்ந்த ஜோன் ஷெப்பர்ட் பேரோன் என்பவர் தன் மனைவிக்கு பிறந்தநாள் பரிசளிக்க விரும்பி, அதற்காக வங்கியில் இருந்து பணம் எடுக்க வரிசையில் நின்றார்.

    பொறுமையுடன் காத்திருந்த அவர் கேஷ் கவுன்டரை நெருங்கியபோது, 'டைம் முடிந்து விட்டது' என்று கூறி கேஷியர் கவுன்டரை அடைத்து விட்டு சென்று விட்டார்.

    பெரும் ஏமாற்றம் அடைந்த ஜோன், வெறுங்கையோடு சென்று மனைவியைப் பார்க்க விரும்பவில்லை.

    கையில் இருந்த கொஞ்சம் சில்லறையை வைத்து, சாக்லேட்களை வாங்கிக் கொடுத்து மனைவியை மகிழ்விக்கலாம் என நினைத்து சாக்லேட் வெண்டிங் இயந்திரத்தைத் தேடிச் சென்றார்.

    இருந்த காசுக்கு கிடைத்த சாக்லேட்டை வாங்கி மனைவிக்கு கொடுத்தாலும், பணம் இருந்தும் நம்மால் விரும்பிய பரிசை மனைவிக்கு அளிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு இருந்தது.

    அப்போது, அவர் கண் முன்னால், பூட்டிய வங்கிக் கவுண்டரும், இயந்திரத்தில் காசு போட்டவுடன் கொட்டிய சாக்லேட்களும் அவர் மனதில் மீண்டும் மீண்டும் வந்து போயின. பணம் போட்டால் சாக்லேட் கிடைக்கும் இயந்திரம் போல், எந்த நேரத்திலும் பணத்தையும் எடுக்க ஒரு மெஷின் இருந்தால் எப்படி இருக்கும் என்று அவர் சிந்தனையில் உருவானது தான் ஏடிஎம் இயந்திரம்.

    இவர் உருவாக்கிய முதல் ஏடிஎம் இயந்திரம் 1969-ம் ஆண்டு வடக்கு லண்டனில் உள்ள பார்க்லேஸ் வங்கியில் வைக்கப்பட்டது. விரும்பிய நேரத்தில் பணத்தை எடுக்கவும் மிஷினா ? என அனைவரும் ஆச்சரியப்பட்டனர். அதிலும் ஒரு சிக்கல் ஏற்பட்டது.

    ஜோனின் மனைவியால் ஏடிஎம் அட்டைக்கான ஆறு இலக்க ரகசிய பின் நம்பரை ஞாபகம் வைத்துக்கொள்ள முடியவில்லை. உடனே செயலில் இறங்கிய ஜோன், அதை நான்கு இலக்கமாக குறைத்தார்.

    இன்று ஏடிஎம் இயந்திரங்கள் காலத்திற்கேற்ப நவீன மாற்றங்களை கண்டு விட்டாலும், இதற்கெல்லாம் அடிப்படையாக இருந்தது ஜோனின் காதலில் மலர்ந்த அந்த முதல் ஏடிஎம் தான்.

    -தூத்துக்குடி போவஸ்

    • பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குல தெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும்.
    • பங்குனி மாத பௌர்ணமியில் குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை தரிசித்து வாருங்கள்.

    "குலம் தெரியாமல் போனாலும், குலதெய்வம் தெரியாமல் போகக்கூடாது!"

    "குருவை மறந்தாலும் குல தெய்வத்தை மறக்கக்கூடாது" என்பவை பழமொழிகள்.

    குல தெய்வம் என்று கூறப்படும் தெய்வங்கள், அந்தந்தக் குடும்பங்களில் அல்லது குழுவினரில், இன்னும் தெளிவாகக் கூறவேண்டுமெனில், ஒவ்வொரு சாதிப்பிரிவினரில் தோன்றி தங்கள் குலம் செழிக்கப்பாடுபட்டு, தியாகம் புரிந்து, இன்னல்களில் இருந்து காப்பாற்றியவர்கள் ஆவர்.

    அப்படி நம் முன்னோர்களின் கண்முன்னே வாழ்ந்து மறைந்தவர்களை நாம் வணங்குவது நமது தலையாய கடமையாகும்.

    குல தெய்வ கோவில்களான காவல் தெய்வங்கள் என அழைக்கப்படும் கோவில்களுக்கு பங்குனி உத்திரத்தன்று சென்று வழிபடுவதை மக்கள் வழக்கமாக கொண்டுள்ளனர்.

    பங்குனி உத்திரம் நாளில் குலதெய்வத்தை வழிபட்டால் இரட்டிப்பு பலன் கிடைக்கும் என்பது நம்பிக்கை...

    இந்த குலதெய்வ வழிபாட்டை கார்த்திகை மாதம் திருகார்த்திகையின்போதும், பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தன்றும் மேற்கொள்வார்கள்.

    இதில் பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குல தெய்வ வழிபாடு செய்வது மிகவும் சிறப்புக்குரியதாகும்.

    மற்ற நாட்களில் குலதெய்வத்தை வழிபடுவதுடன், பங்குனி உத்திரம் நாளில் சென்று வழிபடுவது மேலும் நல்ல நற்பயனைப் பெற்றுத் தரும் என்று நம்பப்படுகிறது!

    பங்குனி மாத பௌர்ணமியில் குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை தரிசித்து வாருங்கள். வழக்கமாக உங்கள் முன்னோர்களால் செய்யப்படும் பூஜைகள், அபிஷேகங்கள் செய்து பொங்கல் இட்டு குடும்பத்தோடு ஒற்றுமையாக வழிபட்டால் புண்ணிய பலன்களோடு முன்னோர்களது ஆசியும் கிடைக்கும் என்பது நம்பிக்கை.

    பங்குனி உத்திரத்தன்று வெளியூரிலும், வெளிநாடுகளிலும் வசிப்பவர்கள் தவிர்க்க இயலாத காரணத்தினால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல முடியவில்லையென்றால் வீட்டின் பூஜையறையில் இருக்கும் குலதெய்வத்துக்கு படையல் இட்டு மனம் உருகி வழிபாடு செய்யலாம்.

    குலம் சிறக்கவும், குடும்பம் மேன்மை பெறவும் குலதெய்வத்தை மகிழ்விக்க பங்குனி உத்திர நாளே நல்ல நாள்... ஒருவரது குலத்தை வழி வழியாக பாதுகாக்கும் வலிமையும், சக்தியும் குலதெய்வத்துக்கே உண்டு.

    இவ்வளவு சிறப்புகள் ஒன்றாகப் பொருந்திய பங்குனி உத்திரத்தன்று குடும்பத்துடன் சென்று குலதெய்வத்தை பூஜை செய்து இறைவனின் ஆசியைப் பெறுவோம்...!

    • நீரிழிவற்ற உடல் பருமன் பிசிஓடி ரத்தகொதிப்பற்ற மக்களும் பழங்களை ஆரோக்கியமான ஸ்நாக்காக அளவோடு உட்கொள்ளலாம்.
    • பல் இல்லாத முதியோர் குழந்தைகளுக்கு நோயாளிகளுக்கு பழத்தை சாறாக்கி வழங்கலாம்.

    பழங்களை பழமாகவே சாப்பிடுவது தான் சிறந்தது.

    அதைச் சாறாக்கி கூழாக்கி குடிப்பது சிறந்தததன்று.

    பழமாக உண்ணும் போது இன்னும் அதிகமான நார்ச்சத்து கிடைக்கும்.

    மேலும் பழச்சாறில் சீனி / சர்க்கரை கலந்து பருகுவது மிகப்பெரும் தவறு.

    அது அந்த பழத்தின் இயற்கை சுவையை மறக்கடித்து விடுகிறது. மேலும் இனிப்பு கலந்த பழச்சாறு நன்மை தருவதை விட கேட்டைத்தான் அதிகமாக தரும்.

    ஆனால் நானும் பழச்சாறுக்கடைகளில் பார்த்து விட்டேன். சீனி இல்லாமல் எங்கும் விற்பனை நடப்பதில்லை. பழத்தை உண்ணுங்கள்.

    சாறாக பருகவேண்டும் எனில் இனிப்பு சேர்க்காமல் அந்த பழத்தின் இயற்கை சுவையோடு பருகுங்கள்.

    ஒரு செயற்கை குளிர்பானம் குடிப்பதை விடவும் பழச்சாறு குடிப்பது சிறந்தது தான்.

    ஆனால் அதில் சீனி/ சர்க்கரை சேர்க்கும் வரை மட்டுமே அது செயற்கை குளிர்பானங்களை விடச் சிறந்தது என்பதை அறிக. சிறார் சிறுமியருக்கு பேக்கரி உணவுகளைக் காட்டிலும் பழங்கள் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ்.

    நீரிழிவற்ற உடல் பருமன் பிசிஓடி ரத்தகொதிப்பற்ற மக்களும் பழங்களை ஆரோக்கியமான ஸ்நாக்காக அளவோடு உட்கொள்ளலாம்.

    பல் இல்லாத முதியோர் குழந்தைகளுக்கு நோயாளிகளுக்கு பழத்தை சாறாக்கி வழங்கலாம்.

    பழங்களில் மேற்படி இனிப்பை சேர்ப்பது என்பது அதில் இருக்கும் நன்மைகளை மழுங்கடிக்கச் செய்து விடுகிறது .

    -டாக்டர்.அ.ப.ஃபரூக் அப்துல்லா

    • ரத்த நாளங்களின் உள்புற சுவர்களில் உள்காயங்கள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.
    • இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும் போது சிறுநீரகங்கள் தேவைக்கும் அதிகமாக சோடியம் உப்பை ரத்தத்தில் சேமிக்கும்.

    ரத்தக் கொதிப்பு (ஹை பிரஷர்) வந்தவர்கள் குறைக்க வேண்டியது எதை? என்ற கேள்விக்கு கட்டாயம் அனைவரும் கூறும் பதிலாக "உப்பு" என்பதாக இருக்கும் .

    கட்டாயம் நிறுத்த வேண்டியது எதை என்று கேட்டால் பெரும்பான்மையினர்,

    "முட்டையின் மஞ்சள் கரு"

    "மட்டன்"

    என்று கூறுவதையே காண முடியும்.

    ஆனால் ரத்தக்கொதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சையில் இருப்பவர்கள் கட்டாயம் நிறுத்த வேண்டியது ,"சீனி / நாட்டு சர்க்கரை இனிப்புகளைத் தான்.

    என்ன? பிரஷருக்கு உப்ப தான குறைக்க சொல்லுவாங்க? நீங்க என்ன இனிப்ப நிறுத்த சொல்றீங்க?

    இனிப்பு சுவை தரும் சீனி / நாட்டு சர்க்கரை ஆகியவற்றில் சுக்ரோஸ் உள்ளது. அதில் இருந்து க்ளூகோஸ் ரத்தத்தில் கலப்பதால் கணையத்தின் "இன்சுலின்" சுரப்பைத் தூண்டிக் கொண்டே இருக்கும். எனவே ரத்தத்தில் எப்போதும் இன்சுலின் பிரவாகம் எடுக்கும். அதிகமாகவே இருக்கும்.

    இதை "இன்சுலின் மிகை நிலை" என்கிறோம். இன்சுலின் மிகை நிலையில் இருக்கும் போது சரியாக அதன் பணிகளை செய்யாது. இதன் விளைவாக "இன்சுலின் எதிர்ப்பு" நிலை தோன்றுகிறது.

    இன்சுலின் மிகை நிலையில் உடல் சேமித்து வைத்த கொழுப்பு எரியாமல் மேலும் சேமித்து வைக்கப்படுகிறது.

    இதனால் உடல் பருமனாகிறது.

    ட்ரைகிளசரைடுகள் கூடுகின்றன .

    ஊறு செய்யும் ஆக்சிடைஸ்டு எல்.டி.எல் அளவுகள் கூடுகின்றன.

    ரத்த நாளங்களின் உள்புற சுவர்களில் உள்காயங்கள் தொடர்ந்து ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றன.

    இதன் விளைவாக ரத்த நாளங்கள் தங்களின் நெகிழ்வுத் தன்மையை இழக்கின்றன. இதன் விளைவாக ரத்த அழுத்தம் உயர்கிறது. கூடவே இன்சுலின் சுரப்பு அதிகமாக இருக்கும் போது சிறுநீரகங்கள் தேவைக்கும் அதிகமாக சோடியம் உப்பை ரத்தத்தில் சேமிக்கும். சோடியத்துடன் சேர்த்து அதிகமான நீரும் சேமிக்கப்படும். இதன் விளைவாக ரத்த அழுத்தம் மேலும் கூடுகிறது.

    இதுவரை செய்யப்பட்ட ஆய்வுகள் பலவற்றிலும் இனிப்பு சுவை கொண்ட சீனி நாட்டு சர்க்கரை போன்றவற்றை உட்கொள்ளும்போது ரத்த அழுத்தம் உயர்ந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    இதன் மூலம் நாம் அறிவது யாதெனில் நீரிழிவில் மட்டுமல்ல ரத்தக் கொதிப்பிலும் சீனி மற்றும் நாட்டு சர்க்கரையை கைவிட்டால் சிறப்பான கட்டுப்பாடு கிடைக்கும் என்பது புலப்படும்.

    -டாக்டர். அ.ப.ஃபரூக் அப்துல்லா

    • டோங்காவின் நிலங்கள் அனைத்தையும் அரசுடமை ஆக்கி, வெள்ளையருக்கு துளிநிலத்தை விற்கவும் தடை விதித்து சட்டம் இயற்றினார்.
    • பூடானுக்கு அடுத்து உலகின் மிக எளிமையான அரசவம்சம் என டோங்கா அரசவம்சத்தை சொல்லலாம்.

    எந்த நாட்டின் காலனி ஆதிக்கத்துக்கும் உள்ளாகாமல் 3000 ஆண்டுகளாக சுதந்திரமாக இருக்கும் நாடு எது? டோங்கா.

    பெங்களூர் அளவு நிலப்பரப்பு உள்ள தீவுக்கூட்டம். 1 லட்சம் மக்கள் தொகை. ஆஸ்திரேலியாவுக்கு கிழக்கே ஐயாயிரம் கிமீ தொலைவில் தென்பசிபிக் கடலில் உள்ள நாடு டோங்கா. பக்கத்து நாடு எதற்காவது போகவேண்டுமெனில் ஆயிரம் கிமீ படகில் போகவேண்டும். அதனால் தான் யாரும் ஐரோப்பியர் வரும்வரை டோங்காவை ஆக்கிரமிக்க முயலவில்லை.

    ஆய்வுகள் அங்கே கிமு 800 வாக்கில் பாலினேசிய மக்கள் குடியேறியதாக காட்டுகின்றன. அதன்பின் மெதுவாக அதன் தீவுகூட்டங்களில் குடியேற்றங்கள் உருவாகி, பல குடிகளாக பிரிந்து, டோங்கா எனும் நாடாக அவர்கள் உருவானார்கள். கிபி 1200ம் ஆண்டுவாக்கில் டோங்கா மன்னன் ஒருவன் ஆயிரம் கிமீ தள்ளி இருக்கும் சமோவ நாடு மேல் படை எடுத்தான். அப்போதுதான் டோங்கா எனும் நாடு இருப்பதே வரலாற்றில் பதிவாகிறது.

    அதன்பின் 1616ம் ஆண்டு போர்ச்சுகீசியர்கள் டோங்காவை கண்டுபிடிக்கிறார்கள். ஆனால் அதை பிடித்து என்ன செய்ய என விட்டுவிட்டார்கள். கிபி 1770ம் ஆண்டு ப்ரிட்டிஷார் அங்கே வந்து இறங்குகிறார்கள். அவர்கள் அருகே இருந்த சமோவா, பிஜியை எல்லாம் பிடிக்க, டோங்காவையும் பிடித்து தேயிலை, கரும்பு தோட்டங்கள் அமைப்பார்கள் என்ற அச்சம் எழுந்தது.

    டோங்காவின் மன்னர் ஜார்ஜ் டுபாவு அப்போது தந்திரமாக காய் நகர்த்தினார். அவருக்கு ப்ரிட்டிஷ் மன்னர் ஜார்ஜின் பெயர்தான். அத்துடன் ப்ரிட்டிஷார் பாணியில் டோங்காவுக்கு அரசியல் சாசனம், மனித உரிமைகளை எல்லாம் இயற்றினார். கொத்தடிமை ஒழிப்பு சட்டத்தை கொன்டுவந்தார். ஞாயிற்றுக்கிழமை கட்டாய விடுமுறை என்பது மக்களின் உரிமை என அரசியல் சட்டத்தில் பொறித்தார். இன்றும் டோங்காவுக்கு போனால் ஞாயிற்றுக்கிழமை எந்த கடைகளும் திறந்திருக்காது.

    அத்துடன் டோங்காவின் நிலங்கள் அனைத்தையும் அரசுடமை ஆக்கி, வெள்ளையருக்கு துளிநிலத்தை விற்கவும் தடை விதித்து சட்டம் இயற்றினார். இதனால் இந்தியா, பிஜி, மேற்கிந்திய தீவுகளில் செய்தது போல காலனிகள் அமைக்கவும், தோட்டங்கள் அமைக்கவும் இயலாமல் போனது. மன்னரின் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பல ப்ரிட்டிஷார் பரமரசிகர்களாக இருந்தார்கள். அதனால் டோங்காவை காலனிமயம் ஆக்காமல் விட்டுவிட்டார்கள்.

    இன்றும் அதே அரசவம்சம் தான் டோங்காவை ஆண்டுவருகிறது. பூடானுக்கு அடுத்து உலகின் மிக எளிமையான அரசவம்சம் என டோங்கா அரசவம்சத்தை சொல்லலாம்.

    - நியாண்டர் செல்வன்

    • கல்லும் முள்ளுமாக உள்ள களர் நிலத்தைப் பண்படுத்துவதுபோல மக்கள் மனத்தைப் பண்படுத்திச் சீர் செய்யும் வேலையைப் பெரியார் செய்தார்.
    • சிந்தனை என்ற விதையை விதைத்துக் கொண்டு வருகிறேன். இதில் வேறுபாடு இல்லை என்றார் மகரிஷி அவர்கள்.

    ஒருமுறை பெரியார் பிறந்த ஈரோட்டில் வேதாத்ரி மகரிஷி அவர்கள் "கடவுளைக் காணலாம்" என்ற தலைப்பில் உரையாற்ற இருந்தார்கள்.

    திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஒரு அன்பர் மகரிஷியிடம் வந்தார். "ஐயா, இது பெரியார் பிறந்தமண். இங்கு இத்தனை ஆண்டு காலமாக கடவுள் இல்லை. கடவுளைக் கற்பித்தவன் முட்டாள் என்று சொல்லி எங்களை எல்லாம் பக்குவப்படுத்திவிட்டுப் போயிருக்கிறார். பெரியார் கருத்தைப் போன்றே தங்கள் கருத்தும் இருக்கும் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். ஆனால் இதே இடத்தில் வந்து கடவுளைக் காணலாம் என்று பேசி எங்களைக் குழப்புகிறீர்களே" என்றார்.

    "அன்பரே, அவர் சொல்லியதைத்தான் நான் சொல்கிறேன். எல்லையற்ற இறைவனை எல்லை கட்டி ஒரு இடத்தில் ஒரு உருவத்தில் கடவுள் இருக்கிறார் என்பதை அவர் எதிர்த்தார். அதனால் பெருகும் ஊழலை, அறியாமையை, வியாபாரத்தை அவர் எதிர்த்தார். மனிதனை மதி என்றார்.

    நானும் அதைத்தான் சொல்கிறேன். இறைவன் எங்கும் நிறைந்த பரம்பொருள். அவன் அணு முதல் அண்டமாகி ஓரறிவு முதல் ஆறறிவாகப் பரிணமித்து மனிதனாகவும் வந்துள்ளான். அவனுள் இறைவனே அறிவாக உள்ளான். இதை சிந்தித்து அறியச் சொல்கிறேன்.

    கல்லும் முள்ளுமாக உள்ள களர் நிலத்தைப் பண்படுத்துவதுபோல மக்கள் மனத்தைப் பண்படுத்திச் சீர் செய்யும் வேலையைப் பெரியார் செய்தார். அதில் சிந்தனை என்ற விதையை விதைத்துக் கொண்டு வருகிறேன். இதில் வேறுபாடு இல்லை" என்றார் மகரிஷி அவர்கள்.

    -சோம நடராஜன்

    • தேவையான அளவு தண்ணீர் குடிக்க மறந்து விடாதீர்கள்.
    • வெயிலில் அதிகம் அலைய வேண்டாம்.

    வெயில் காலம் கடுமையாக ஆரம்பமாகிவிட்டது. என் டாக்டர் நண்பர்கள் கூறிய எளிய கூல் டிரிங்ஸ்!

    நீர் மோரில் இஞ்சி தட்டி போட்டு கருவேப்பிலை, கொத்துமல்லியை தூவிவிட்டு, அலுவலகம் செல்லும் போது, ஒரு லிட்டருக்கு குறையாமல் கொண்டு செல்லுங்கள். காபி, டீ தவிர்த்துவிட்டு தாகம் எடுக்கும் போது எல்லாம் குடியுங்கள். எந்தவெய்யில் கால நோய்களும் அணுகாது. நீர் மோர் காவிரி வெள்ளம் போல இருக்க வேண்டும் என்றார்.

    ஒரு லிட்டர் தண்ணீரில் அரை எலுமிச்சை பழத்தை பிழிந்து, சிறிது உப்பு போட்டு வைத்து கொள்ளுங்கள். அடிக்கடி தாகம் எடுக்கும் போது குடிக்கலாம். வெயில் காலத்திற்கு நல்ல எனர்ஜி டானிக். செயற்கை குளிர்பானங்கள், ஐஸ்கிரீம் தவிர்த்துவிடுங்கள் என்றார்.

    பாட்டியின் அனுபவ பகிர்வு : கோடை காலத்தில் நாவறட்சி தீர, இயற்கை பானங்கள் இளநீர், நுங்கு, மோர், எலுமிச்சை சர்பத், தர்பூசணி பழம் எடுத்து கொள்ளலாம். இவற்றோடு பானகம் ஒன்றையும் அவ்வப்போது தயார் செய்து அருந்தலாம். இதற்கு வெறும் புளி, கருப்பட்டி, தண்ணீர் போதும்.

    புளியை தண்ணீரில் நன்கு கரைக்க வேண்டும். கருப்பட்டியை தட்டி அதோடு நன்கு கலக்க வேண்டும். பாத்திரத்தில் துணியால் வடிகட்ட வேண்டும். சுக்கும் ஏலக்காயும் சேர்த்து கொள்ளலாம். பானகம் ரெடி. இந்த பானக தயாரிப்பு இப்போது மெல்ல மறைந்து வருகிறது.

    கோடை காலத்தில், வெப்பத்தால் ஏற்படும் களைப்பை விரட்டும். பழரசத்தை விட நல்லது இந்த பானகம்.

    இதன் பார்முலா : கால்சியம் + இரும்பு சத்து + விட்டமின்கள் + எனர்ஜி = பானகம்.

    இரும்பு சத்தை அமினோ அமிலங்களை பனைவெல்லத்தில் இருந்தும், புளியிலிருக்கும் விட்டமின் சி-யானது பனைவெல்லத்துடன் இணைந்து, உடனடி எனர்ஜியாக உடலுக்கு அளிக்கிறது. சுக்கின் நன்மை நம் எல்லோருக்கும் தெரியும். ஏலக்காய் உணவு குழாயில் ஏற்படும் தொற்றுகள், செரிமானத்தை சரி செய்யும். அற்புதமான பானகம். இந்த வெய்யிலுக்கு தயாரிப்பதும் எளிது.

    எது எப்படியோ, இவைகளுடன், தேவையான அளவு தண்ணீர் குடிக்க மறந்து விடாதீர்கள். வெயிலில் அதிகம் அலைய வேண்டாம்.

    -ஆர்.எஸ். மனோகரன்

    ×