என் மலர்tooltip icon

    கதம்பம்

    மக்கள் தொகையை மிஞ்சிய ஆடுகள்
    X

    மக்கள் தொகையை மிஞ்சிய ஆடுகள்

    • உத்தரபிரதேசம் அளவு பெரிய மாநிலத்தில் ஐம்பது லட்சம் பேர் வசிப்பதை கற்பனை செய்யமுடிந்தால் அதுதான் நியூசிலாந்து.
    • 51 லட்சம் பேருக்கு 2.5 கோடி செம்மறி ஆடுகள் உள்ளதால் மனிதர்களை விட ஐந்து மடங்கு செம்மறி ஆடுகள் உள்ள நாடு.

    உலகிலேயே மனிதர்கள் கடைசியாக குடியேறிய நாடு என நியூசிலாந்தை சொல்லலாம். நியூசிலாந்தை பாலினேசியர்கள் கண்டுபிடித்து குடியேறுகையில் சுமாராக 13ம் நூற்றாண்டு. அதற்குமுன்? கிவி பறவைகள் தான் தீவில் சுற்றிக்கொன்டு இருந்தன. அதாவது தமிழகத்தில் ராஜராஜ சோழன், குலோத்துங்கசோழன் ஆட்சி எல்லாம் நடந்து முடிந்தும் நியூஸிலாந்தில் மனிதனின் கால் தடமே படவில்லை என்றால் பார்த்துக்கலாம்.

    மனிதர்கள் மட்டுமல்ல, நியூசிலாந்தில் பெரிய மிருகங்களுக்கும் பூர்வீகம் கிடையாது. கடல்வாழ் டால்பின்கள், திமிங்கிலங்கள், வவ்வால்கள் தான் அத்தீவின் இயற்கையான பாலூட்டிகள். மான், சிங்கம், பூனை, யானை... எதுவும் அங்கே பூர்வீகமா இல்லை. தீவில் தம்மை வேட்டையாட யாரும் இல்லாததால் கிவி பறவைகள் கூட பறப்பதை விட்டுவிட்டு நிலம்வாழ் பறவைகள் ஆகிவிட்டன.

    ஆஸ்திரேலியாவுக்கு பக்கத்து நாடு என சொல்லிகிட்டாலும் ஆஸ்திரேலியா இங்கிருந்து 2000 கிமி தொலைவு. ஆஸியிலேயே மனிதர்கள் குறைவு, நியூஸியில் அதைவிட குறைவு.

    உத்தரபிரதேசம் அளவு பெரிய மாநிலத்தில் ஐம்பது லட்சம் பேர் வசிப்பதை கற்பனை செய்யமுடிந்தால் அதுதான் நியூசிலாந்து.

    இங்கே 13ம் நூற்றாண்டில் பாலினேசியர்கள் குடியேறுகிறார்கள். வடக்கு, தெற்கு என இரு தீவுகள். விவசாய நிலம் வெகு குறைவு. ஆனால் புல்வெளிகள் மிக அதிகம். நாட்டின் 51% நிலபரப்பில் புற்கள் தான். அதனால் அங்கே எல்லாம் செம்மறிஆடுகளையும், மாடுகளையும் வளர்க்கிறார்கள். 51 லட்சம் பேருக்கு 2.5 கோடி செம்மறி ஆடுகள் உள்ளதால் மனிதர்களை விட ஐந்து மடங்கு செம்மறி ஆடுகள் உள்ள நாடு. இத்தனை புல்வெளிகள் இருப்பதால் கால்ப் கிளப்புகளும் கூடுதல்.

    - நியாண்டர் செல்வன்

    Next Story
    ×