என் மலர்tooltip icon

    மற்றவை

    • நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும்!
    • கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!

    நம் முகத்தில் ஏதேனும் அழுக்கோ கறையோ பட்டு விட்டால் கண்ணாடியில் அது தெரிகிறது!

    அந்தக் கறையைக் கண்ணாடி, கூட்டுவதும் இல்லை, குறைப்பதும் இல்லை. உள்ளது உள்ளபடி காட்டுகிறது அல்லவா?

    அதேபோல் உன் சகோதரனிடம், நண்பனிடம், கணவரிடம், மனைவியிடம் எந்த அளவுக்கு குறை இருக்கிறதோ அந்த அளவுக்குத்தான் அதனைச் சுட்டிக்காட்ட வேண்டும்!

    எதையும் மிகையாகவோ ஜோடித்தோ சொல்லக் கூடாது!

    துரும்பைத் தூண் ஆக்கவோ கடுகை மலையாக்கவோ கூடாது!

    இது கண்ணாடி சொல்லும் முதல் பாடம்!

    கண்ணாடிக்கு முன்னால் நீ நிற்கும் போது தான் உன் குறையைக் காட்டுகிறது!

    நீ அகன்று விட்டால் கண்ணாடி மௌனமாகிவிடும்!

    அதே போல் மற்றவரின் குறைகளை அவரிடம் நேரடியாகவே சுட்டிக் காட்ட வேண்டும். அவர் இல்லாத போது முதுகுக்குப் பின்னால் பேசக்கூடாது!

    இது கண்ணாடி தரும் இரண்டாவது பாடம்!

    ஒருவருடைய முகக் கறையைக் கண்ணாடி காட்டியதால் அவர் அந்தக் கண்ணாடி மீது கோபமோ, எரிச்சலோ படுகிறாரா?

    இல்லையே…! அதே போல் நம்மிடம் உள்ள குறைகளை யாரேனும் சுட்டிக் காட்டினால் அவர் மீது கோபமோ, எரிச்சலோ படாமல் நன்றி கூற வேண்டும்!

    அந்தக் குறைகள் நம்மிடம் இருக்குமேயானால் திருத்திக்கொள்ள வேண்டும்!

    இது கண்ணாடி தரும் மூன்றாவது பாடம்!

    • மெட்ரிக் படிப்பில் தோற்றுப் போன ஒருவர் எப்படி கணிதத்தில் இவ்வளவு சாமார்த்தியமாக இருக்க முடியும் என சற்று குழம்பி தான் போனார் ஹார்டி.
    • மிகுந்த பயிற்சியும் பெரிய மேதைகளிடம் பயின்றவர்கள்கூட இராமனுஜத்திடம் தோற்றுப்போவது வாடிக்கையாக மாறியது.

    கணித மேதை இராமானுஜம் 1887ல் பிறந்தவர். ஏழை பிராமண குடும்பத்தில் பிறந்த இவர் மேல் நிலை பள்ளிப்படிப்பை கூட தாண்டவில்லை.

    ஒரு எழுத்தர் வேலைக்கு சேரவே படாதபாடு பட்ட இவர் யாருடைய வழிகாட்டலும் போதனைகளும் இன்றியே கணிதத்தில் கில்லாடியாக இருந்தார்.

    இவர் பணிபுரியும் இடத்தில் உடன் பணிபுரிபவர்கள் இவர் கணித திறமையை கண்டு அதிசயப்பட்டனர்.

    அவர் அலுவலக மேலாளர் ஒருவர் கேம்பிரிட்ஜ் பல்கலைகழக பேராசியர் ஹார்டியின் முகவரியை கொடுத்து கடிதம் எழுத தூண்டினார்.

    ஆனால் இராமானுஜம் வெறும் கடிதமாக இல்லாமல் இரண்டு வடிவியல் தேற்றங்களுக்கு விடை கண்டுபிடித்து ஹார்டிக்கு அனுப்பினார்.

    யாருயா அது இவ்வளவு கடினமான தேற்றத்தை சுலபமாக விடையளித்திருக்கிறானே அதுவும் சின்னப்பையன் என்று வேறு சொல்கிறான்.

    அந்த செல்லத்தை கையோடு கூட்டினு வாங்கைய்யா என ஹார்டி தன் உதவியாளருக்கு கட்டளையிட்டார்.

    இங்கிலாந்துக்கு பறந்தார் இராமானுஜம்.

    முதலில் சோதித்த ஹார்டி இந்த பையன் முன்னிலையில் கணிதத்தில் தான் ஒரு பாப்பா என உணர்ந்தார்.

    ஒரு கணக்கை கரும்பலகையில் எழுதினால் எப்படிப்பட்ட அறிவாளியாக இருந்தாலும் நிதானமாக யோசித்தே விடை சொல்வார்.

    இராமானுஜம் கேள்வி கேட்டவர் முடிக்குமுன்னே சரியான விடையை சட்டென சொல்கிறார்.

    அவன் சொன்னது சரியா என சோதிப்பதற்கு தான் அவருக்கு நேரம் பிடித்தது.

    லண்டனில் வாழ்ந்து வரும் மற்றொரு கணித மேதைக்கும் இராமனுஜத்திற்கும் ஒரு சிக்கலான கணக்கை கொடுத்தார் ஹார்டி.

    ஓரிரு மணித்துளிகளில் இராமானுஜம் விடையை ஒரு தாளில் எழுதி கொடுத்துவிட்டார்.

    அந்த மற்றொரு கணிதமேதை விடை கண்டுபிடிக்க ஆறு மணி நேரம் பிடித்தது.

    மெட்ரிக் படிப்பில் தோற்றுப் போன ஒருவர் எப்படி கணிதத்தில் இவ்வளவு சாமார்த்தியமாக இருக்க முடியும் என சற்று குழம்பி தான் போனார் ஹார்டி.

    மேலும் இராமானுஜர் மனதால் வேகமானவராகவோ அதிக மனோசக்தி உள்ளவராகவும் தெரியவில்லை. இவர் மேதமைக்கு எந்த புறக்காரணமும் இருப்பதாக தெரியவில்லை.

    மனதை கடந்த ஏதோ ஒரு அமானுஷ்ய சக்தி இராமனுஜத்திடம் இருப்பது மட்டும் ஊர்ஜிதமானது.

    மிகுந்த பயிற்சியும் பெரிய மேதைகளிடம் பயின்றவர்கள்கூட இராமனுஜத்திடம் தோற்றுப்போவது வாடிக்கையாக மாறியது.

    தனது முப்பத்து மூணாவது வயதில் எலுப்புறுக்கி நோயால் பாதிக்கப்பட்டார் இராமானுஜம்.

    அவரை காண ஹார்டியும் ஒரு சில லண்டன் கணித மேதைகளும் அந்த மருத்துவமனைக்கு வந்தனர்.

    அவர்கள் வந்த காரின் நம்பரை பார்த்த இராமனுஜம் நாலு சிறப்பு அம்சங்கள் உங்கள் கார் எண்ணில் இருப்பதாக கூறினார்.

    அங்கிருந்து விடைபெற்ற ஹார்டி .

    குழுவினர் அந்த எண்களை வைத்து மூளையை கசக்கி பார்த்தும் அவர்களுக்கு விடைகிடைக்கவில்லை.

    கொஞ்ச நாளில் இராமானுஜம் இறந்து போனார். அவர் இறந்து மூன்று மாதத்திற்கு பிறகு தான் அந்த எண்ணின் மூன்று சிறப்பு அம்சங்களை கண்டுபிடித்தார் ஹார்டி.

    நாலாவது சிறப்பு அம்சத்தை கண்டுபிடிக்க அவருக்கு இருபது ஆண்டுகள் பிடித்தது.

    இவ்வளவு பெரிய அறிவாற்றல் இராமனுஜத்திற்கு எப்படி வந்தது என எந்த ஜாம்பவானுக்கும் இறுதிவரை விளங்கவில்லை.

    இராமனுஜத்திடம் ஒரு கேள்வி கேட்டால் அவர் ஒரு நிமிடம் கண்ணை மூடுவார்.

    அவர் இரண்டு கருவிழிகளும் புருவ மத்தியில் போய் சொருகிக்கொள்ளும்.


    அப்போது புருவ மத்தியிலுள்ள ஆக்கினன சக்கரம், (மூன்றாவது கண் என்றும் சொல்வார்கள்) பிரபஞ்சத்தோடு தொடர்பு கொள்ளும்.

    உடனே சரியான விடை தானாக வெளிவரும்.

    அந்த நெற்றிக்கண் என்ற ஆக்கினை சரியாக செயல்படத் தொடங்கினால், சிக்கலான மண்டலங்கள் கூட தெளிவாக தெரிய ஆரம்பிக்கும்.

    நாமெல்லாம் ஒரு கதவின் சாவி ஓட்டை வழியே ஒரு குறிப்பிட்ட அளவிற்கு தான் பார்த்து வருகிறோம்.

    நெற்றிக்கண் திறந்து கொண்டால் முழு வானமும் புலப்பட தொடங்கும்.

    இந்த மூன்றாவது கண்ணை, ஆக்கினையை பாதுகாக்க, திறக்கும் முயற்சிக்காக, இந்துக்கள் குங்கும திலகத்தை புருவ மத்தியில் வைக்கிறார்கள்.

    -ஓஷோ.

    • மர்லின் மன்றோ ஒரு கம்யூனிஸ்ட் அபிமானி என்ற முடிவுக்கு அமெரிக்க நிர்வாகம் வந்தது.
    • மர்லின் மன்றோ நிஜ வாழ்க்கையில் மிக மோசமான மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

    அமெரிக்காவில், ஜூன் 1, 1926-இல் லாஸ்ஏஞ்சல்ஸில் பிறந்த "நார்மா ஜீன்" என்ற குழந்தை பெற்றோரால் கைவிடப்பட்டது.

    தெருவில் நின்று தவித்த அந்த குழந்தையை ஒரு சமூக செயல்பாட்டாளர் அனாதை இல்லத்தில் சேர்ந்தார்.

    பதினெட்டு வயது நார்மா ஒரு ரேடியோ தொழிற்சாலையில் வேலை செய்யும்போது, ஒளிப்படக் கலைஞர் ஒருவர் எடுத்த விளம்பர ஒளிப்படத்தில் நார்மாவைப் பார்த்த ஒரு சினிமா தயாரிப்பாளர் இவரை ஹாலிவுட் திரை உலகிற்கு 1947ஆம் ஆண்டு "மர்லின் மன்றோ"வாக அறிமுகப்படுத்தினார்…

    இந்த ஐந்தரை அடி உயரமான ஒல்லியான 19 வயதுப் பெண் ஹாலிவுட்டில் நுழைந்தபோது, கோடிக்கணக்கான ரசிகர்களைத் தன் அழகால் கட்டிப்போடுவாள் என்று எவரும் நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

    அன்றிலிருந்து 15 ஆண்டுகள் வெற்றிகரமான கனவுக் கதாநாயகியாக வலம் வந்த மர்லின் யாரும் எதிர்பாராத விதமாக ஆகஸ்ட் 5, 1962 அன்று மர்மமாக இறந்து கிடந்தார். அப்போது அவரது வயது 36.

    பலரும் நினைப்பதுபோல் மர்லின் மன்றோ வெறும் கவர்ச்சிக் கன்னியோ, பொது அறிவு இல்லாத அழகுப் பதுமையோ இல்லை.

    அவர் ஒரு சுதந்திரமான, இடதுசாரி சிந்தனை கொண்ட அறிவுஜீவி.

    அவரது மரணத்துக்குப் பிறகு அவரது வீட்டை சோதனையிட்ட போலீஸ், அவரி பல அரிய புத்தகங்கள் அடங்கிய நூலகம் இருந்ததாக குறிப்பிட்டனர்..

    அமெரிக்காவில் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்ட அமைப்பு.

    சோவியத் யூனியனுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் நிலவிய பனிப்போர் காலத்தில் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்கள் கல்வி, பத்திரிகை, பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஊடுவுவதைத் தடுப்பதிலும் கண்காணிப்பதிலும் FBI தீவிரம் காட்டியது.

    இடதுசாரி சிந்தனையாளர்களை சோவியத் உளவாளிகள் என்றும், தேசத் துரோகிகள் எனவும் முத்திரை குத்தி அவர்கள் ஒருதலைப்பட்சமாக தண்டிக்கப்பட்டனர். இதற்கு "மெக்-கார்த்தியிசம்" என்று பெயர்.

    மர்லின் அமெரிக்க கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு ஆதரவு நிலையில் இருந்தார் என்பது FBI இன் குற்றச்சாட்டு.

    அன்றைய ஜனாதிபதி ஜான் கென்னடி முதல் ஹென்றி கிசிங்கர் வரை அனைத்து பிரபல அரசியல் தலைவர்களுடனும் நட்புடன் இருந்த மர்லின் மன்றோ, ஆளும் வர்க்கத்துக்கு எதிரான இடதுசாரி சிந்தனையாளரும் திரைக்கதை வசன எழுத்தாளருமான "ஆர்தர் மில்லர்" என்பவருடனும் நெருக்கமாக இருந்தார்.

    பிரபல புகைப்பட கலைஞரும் தீவிர இடதுசாரி சிந்தனையாளரும் சேகுவேராவின் நண்பருமான "பாப் ஹென்றிக்"குடனும் மர்லின் நட்பு பாராட்டினார். இதனால் மர்லின் மன்றோ ஒரு கம்யூனிஸ்ட் அபிமானி என்ற முடிவுக்கு அமெரிக்க நிர்வாகம் வந்தது.

    ஜனாதிபதி ஜான் கென்னடியின் தம்பியான ராபர்ட் கென்னடி, மர்லின் மன்றோவை தீவிரமாக காதலித்தார் என்றும் இவருக்காக தன் மனைவியை விவாகரத்து செய்யும் முயற்சியில் ஈடுபட்டார் என்றும் கிசுகிசுக்கப்பட்டது.

    மர்லின் உலகப் புகழ்பெற்ற அழகியாகவும் ஹாலிவுட் கொண்டாடும் நட்சத்திரமாகவும் இருந்ததால் அவர் மீது வெளிப்படையாக நடவடிக்கை எடுக்க FBI தயங்கியது என்று கூறப்படுகிறது.

    திரையில் மகிழ்ச்சியாகத் தோன்றிய மர்லின் மன்றோ நிஜ வாழ்க்கையில் மிக மோசமான மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். டாக்டர் அறிவுரைப்படி BARBITURATE என்ற போதை மாத்திரையை சாப்பிட்டு வந்தார்.

    இந்த நிலையில்தான் மர்லின் மன்றோவின் அகால மரணம் நிகழ்ந்து.

    பார்பிடூரேட் என்ற போதை மாத்திரையை அளவுக்கு அதிகமாக உட்கொண்டதால் அவர் இறந்தார் என்று பிரேதப் பரிசோதனயின் முடிவு தெரிவிக்கிறது.

    ஆனால் அது கொலையா அல்லது தற்கொலையா என்று தெளிவாக கூறப்படவில்லை.

    -சுந்தரம்

    • “இவரன்றோ பண்பு மிக்க கவிஞர்’ என்று முடிவு செய்து, அந்தக் கணம் முதல் பாரதிதாசனுக்கு அடிமையானார்
    • கடிதம் எழுதிக் கையெழுத்திடும் போது இட வசதிக்காக “சு ர தா” என்று இடம் விட்டு எழுதுவார்.

    "உவமைக் கவிஞர்' சுரதாவின் இயற்பெயர் ராஜகோபாலன். அவர் 'சுரதா' ஆன வரலாறு சுவை மிக்கது. ராஜகோபாலன், பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது கவிதை நூல்களை விரும்பிப் படிப்பாராம். ஒருமுறை, டீக்கடைக்காரர் ஒருவர், பாரதிதாசன் கவிதைப் புத்தகம் ஒன்றைக் கொடுத்துப் படிக்கச்சொன்னார். அந்தக் கணம் முதல் பாரதிதாசனின் கவிதைகளால் ஈர்க்கப்பட்டார்.

    புதுவைக்குச் சென்று, பாரதிதாசனைச் சந்திக்கும் துடிப்பு ஏற்பட்டது. செல்வதற்குப் பணம் வேண்டுமே...? ஒரு வீட்டுக்குச் சுண்ணாம்பு பூசும் வேலை செய்து ஆறணா கூலி பெற்று, பாரதிதாசனார் வீட்டை அடைந்தார்.

    இளைஞர் ராஜகோபாலனின் வேட்கையை அறிந்த பாரதிதாசன், பெற்றோருக்குத் தெரிவிக்காமல் தன்னைக் காண வந்ததறிந்து, "பெற்றோரின் அனுமதி பெற்றுப் பிறகு வா! என்னுடன் பல நாள் தங்கலாம்'' என்று வலியுறுத்தி, அவருக்குச் சிறு தொகையும் கொடுத்து அனுப்பி வைத்தார்.

    "இவரன்றோ பண்பு மிக்க கவிஞர்' என்று முடிவு செய்து, அந்தக் கணம் முதல் பாரதிதாசனுக்கு அடிமையானார்.பாரதிதாசனாரின் இயற்பெயர் சுப்புரத்தினம். அதனால் "சுப்புரத்தின தாசன்' என்று பெயர் மாற்றம் செய்து கொண்டார்.

    கடிதம் எழுதிக் கையெழுத்திடும் போது இட வசதிக்காக "சு ர தா" என்று இடம் விட்டு எழுதுவார். அந்த மூன்று எழுத்துகளே 'சுரதா' ஆனது.

    -சவுந்திரராஜன்

    • ஒரு வார்த்தை இது உரிமை என பேசிவிட முடியாது.
    • அரபுநாடுகள் கேட்கவே வேண்டாம் எல்லாம் மன்னர் ராஜ்ஜியம்.

    சிங்கப்பூரை பார், அமெரிக்காவைப் பார், சீனாவைப் பார் என அதன் பாஸிடிவ் அம்சங்களை மட்டும் கூறுபவர்கள் அந்த நாடுகளின் கொடூரமான மறுபக்கத்தைப் பற்றி சொல்ல மாட்டார்கள்.

    சிங்கப்பூர் என்பது மேற்கத்திய நாடுகள் நடத்தும் நட்சத்திர விடுதி.. அப்படித்தான் அதனை சொல்லமுடியும். எதிர்கட்சி, போராட்டம், அரசை பற்றிய விமர்சனம் எல்லாம் அங்கு நினைத்துபார்க்க முடியாதவை. கிட்டதட்ட ஒரு கம்யூனிஸ்ட் நாட்டு பாணியில் அமைக்கபட்ட நாடு அது. ஒரு வார்த்தை இது உரிமை என பேசிவிட முடியாது.

    சீனா கேட்கவே வேண்டாம், தேர்தல் வேண்டும் என்றதற்காக போராடிய லட்சகணக்கான மாணவர்களை தியான்மார் சதுக்கத்தில் ராணுவ டாங்கி கொண்டு நசுக்கி ரத்த பீடத்தில் தன் அதிகாரத்தை நிறுத்தியிருக்கும் நாடு. அரசுக்கு எதிரான கருத்துக்கள் பேசினால் அவ்வளவுதான், மக்கள் உரிமை என்பதெல்லாம் அங்கு ஒரு பொருட்டே இல்லை.

    அமெரிக்காவில் வரி வருமானத்தில் 30%, அது யாராயினும் கட்டித்தான் ஆகவேண்டும், மக்களை வேறுவகையான வாழ்க்கை முறையில் திருப்பிவிட்டு ஒரு மாதிரியான அரசியல் செய்யும் நாடு அது. கருப்பினத்தவருக்கு அநேகமாக தனி நீதிதான் அங்கு. அம்மக்களின் மனநிலையே வேறு, இந்திய மனநிலைக்கும் அவர்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. இந்திய அமெரிக்க ஒப்பீடு எல்லாம் அர்த்தமே இல்லாதது. அவர்கள் சாதி,மதம், இனம், திரைப்படம் பார்த்தெல்லாம் வாக்களிப்பதில்லை. இங்கு அப்படி வாக்களித்துவிட்டு அமெரிக்காவினை பார் என சொல்ல தகுதியே இல்லை.

    அரபுநாடுகள் கேட்கவே வேண்டாம் எல்லாம் மன்னர் ராஜ்ஜியம். எவனும் எதிர்த்து ஒரு வார்த்தை பேசிவிட முடியாது. தொலைத்துகட்டி விடுவார்கள். தப்பு பண்ணினால் சீவி, விடுவார்கள் பொது வெளியில் உடனடியாக.

    ஆக உலகெல்லாம் வளமாக இருப்பது போலவும், இந்தியா மட்டும் கட்டுபாடும் வாழ சிரமமும் உள்ள நாடாக சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள். உண்மையில் உலகில் மிக சுதந்திரமான நாடு ஒன்று உண்டென்றால் அது இந்தியா மட்டுமே.

    இங்கு அரசு முதல் ஆண்டி வரை நம்மால் எந்த பிரச்சினையானாலும் யாரும் கருத்து சொல்ல முடிகின்றது, போர்கொடி தூக்க முடிகின்றது.

    சொர்க்கமே என்றாலும் அது நம் பாரததேசம் போலாகுமா?

    -கண்ணன் சுவாமி

    • நம் உடலும் பஞ்ச பூதத்தால் ஆனது.
    • நம் உடலில் கண்களில்தான் பஞ்சபூதமும் உள்ளது

    எண்சாண் உடம்புக்கு சிரசே பிரதானம், நம் சிரசாகிய தலையில் உள்ள முக்கியமான உறுப்பு கண்கள் ! தலைக்கு தலையாயது கண்ணே.!

    ஒரு தாயின் கருவில் முதன்முதலாக உருவாவது கண்மணி.!

    நாம் பிறந்தது முதல் 100 வயதுவரை நம் உடலில் வளர்ச்சியடையாத முதிர்ச்சியடையாத ஒரே உறுப்பு கண்மணி !

    உலகமக்கள் அனைவருக்கும் ஒரே அளவில் உள்ளது கண்மணி.!

    நம் உடலில் இரத்தம் இல்லாதது; எலும்பு இல்லாதது, நரம்பு இல்லாதது; உடலில் ஒட்டாமல் இருப்பது கண்மணி.!

    உலகமே பஞ்ச பூதங்களால் ஆனது. நம் உடலும் பஞ்ச பூதத்தால் ஆனது. நம் உடலில் கண்களில்தான் பஞ்சபூதமும் உள்ளது !

    கண்தானம் செய்கிறார்கள் அல்லவா ? யார் கண்ணையும் யாருக்கும் பொருத்தலாமல்லவா? இதிலிருந்து என்ன தெரிகிறது ?

    கண்களில் சிறியவர் கண், பெரியவர் கண் என்ற பேதமில்லை, உலகிலுள்ள எல்லோர் கண்ணும் ஒரேமாதிரி தான் !? எனவேதான் யார் கண்ணை வேண்டுமானாலும் யாருக்கு வேண்டுமானாலும் தானம் செய்யலாம் !? கண்ணுக்கு எந்த வித்தியாசமுமில்லை !?

    எந்தவித வித்தியாசமுமில்லாத அந்த கண்ணில் தான்; இறைவனும் எந்தவித பேதமுமின்றி உலகோர் எல்லோரிடத்தும் ஒரேமாதிரி இருக்கின்றான் !?

    ஒரேமாதிரி இருக்கின்ற அந்த இறைவன்தான்- ஒளி தான் நமக்கு தாயும் தந்தையுமாவான் !

    இறைவன் திருவடிகளே நம் கண்கள் !!

    - ஞானசற்குரு சிவசெல்வராஜ்

    • பிளீச்சிங் பவுடரை சிறிதளவு நீர் விட்டு பசை போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
    • குளோரின் டேங்க் நீர் முழுவதும் கலந்து விடும்.

    வெள்ள நீர் வீடுகளுக்குள் நுழைந்து வீட்டின் கீழ்நிலை தொட்டிகள் மற்றும் அசுத்தமான நீரால் நீர்த்தொட்டிகள் மாசடைந்து இருக்கும். முதலில் நீரை முழுவதுமாக வெளியேற்றி விட்டு உட்புற சுவரை பிளீச்சிங் பவுடர் கொண்டு நன்றாகத் தேய்த்து கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

    பிறகு நீரை டேங்க் முழுவதுமாக ஏற்றி விட்டு குளோரினேற்றம் செய்ய வேண்டும். குளோரினேற்றம் செய்வதன் மூலம் நீரில் உள்ள தொற்று உண்டாக்கும் கிருமிகளை தொற்று நீக்கம் செய்ய முடியும். நாம் கடைகளில் வாங்கும் பிளீச்சிங் பவுடரில் 30-35% குளோரின் இருக்கும். ஆயிரம் லிட்டர் நீரை தொற்று நீக்கம் செய்வதற்கு 5 கிராம் பிளீச்சிங் பவுடர் தேவைப்படும் என்பது பொது விதி.

    தாங்கள் வைத்திருக்கும் செவ்வக வடிவிலான டேங்கின் நீளம் 10 மீட்டர், அகலம் 5 மீட்டர், அதில் நீரின் உயரம் 8 மீட்டர் உள்ளது என்றும் கொண்டால் . = 10 × 5 × 8 × 1000= 400000 லிட்டர் ஆயிரம் லிட்டருக்கு 5 கிராம் பிளீச்சிங் பவுடர் தேவை என்றால் 4 லட்சம் லிட்டருக்கு எவ்வளவு பிளீச்சிங் பவுடர் தேவை ? = 4,00,000 × 5/1000= 2000 கிராம் பிளீச்சிங் பவுடர் தேவை. மேற்கூறிய ஃபார்முலாக்கள் வழி தேவைப்படும் பிளீச்சிக் பவுடரை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். ஒரு பிளாஸ்டிக் வாளியில் உங்கள் டேங்கிற்கு தேவையான பிளீச்சிங் பவுடரை சிறிதளவு நீர் விட்டு பசை போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

    இப்போது அந்த வாளியில் பாதி அல்லது முக்கால்வாசிக்கு நீரை ஊற்றி சிறிது நேரம் மரக்கரண்டி கொண்டு கிளறி விடுங்கள். பிளீச்சிங் பவுடர் கரைசலில் இருந்து குளோரின் மேலே வந்து நீரில் கலந்திருக்கும். இப்போது மேலே இருக்கும் நீரை மட்டும் வேறொரு வாளிக்கு மாற்றி விடுங்கள். இந்த நீரின் பெயர் "சூப்பர் நாட்டண்ட் திரவம்". கீழே படிந்துள்ள கரைசலை கீழ் கொட்டி விடுங்கள். சூப்பர் நாட்டண்ட் திரவம் கொண்ட வாளியை உங்களின் டேங்கிற்குள் அரை மீட்டர் ஆழத்தில் இறக்கி மரக்கரண்டி கொண்டு கிண்டி விடுங்கள். மெதுவாக குளோரின் டேங்க் நீர் முழுவதும் கலந்து விடும். அரை மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை நீரை அப்படியே விட்டு விடுங்கள். பிளீச்சிங் பவுடர் எளிதாக அங்காடிகளில் கிடைக்கிறது. அதை உபயோகித்து டேங்குகளை தொற்று நீக்கம் செய்தால் நம்மையும் நம் குடும்பத்தையும் நீரினால் பரவும் தொற்றுகளில் இருந்து காக்க முடியும்.

    -டாக்டர். ஃபரூக் அப்துல்லா

    • 1.2கோடி பேரை தாங்க வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியம்?
    • வருடத்தின் மூன்றுமாத மழைக்காலம் கடந்துவிடுகிறது... அதன்பிறகு மழையை மறந்து அவரவர் வேலைகளைபார்க்க கிளம்பி விடுகின்றனர்..

    சென்னை என்ற ஒரு வீங்கி பெருத்து வெடிக்கத்தயாராக உள்ள ஒரு மாநரகத்தின் இன்றைய அவல நிலைக்கு வெறுமனே ஆட்சியாளர்களை மட்டுமே குற்றம் சொல்லிக் கொண்டிருப்பதில் அர்த்தமில்லை.

    30 லட்சம் பேர் வரை வாழும் கொள்ளளவு கொண்ட ஒரு நரகத்தில் , சுமார் 1 கோடி மக்கள் நிரந்தரமாக வசிப்பதும் தினசரி சுமார் 20லட்சம் பேர் மாநரகத்தின் உள்ளே வந்து செல்வதும் ஆகமொத்தம் 1.2கோடி பேரை தாங்க வேண்டும் என்றால் அது எப்படி சாத்தியம்?

    இத்தகைய அவலநிலை ஏற்படப்போவதை 1980களிலேயே கணித்த அன்றைய தமிழக முதல்வர் எம்ஜிஆர் தலைநகரை திருச்சி-தஞ்சைக்கு நடுவே கட்டமைக்க முடிவு செய்தார்... ஆனால் அன்று அந்த திட்டத்தை சிலர் கெடுத்தார்கள்.

    1990களில் உலகசந்தை மயமாதலுக்கு தேசம் திறந்துவிடப்பட்ட பிறகு சென்னையின் பல்தொழில் வளர்ச்சி மிகப்பெரிய பாய்ச்சலை அடைந்தது.. அதனையொட்டி தமிழகத்தின் ஏனைய பகுதிகளின் மக்கள் மிகவேகமாக சென்னையில் குடியேற ஆரம்பித்தனர்.. 2000களில் மென்பொருள் துறை அசுர வளர்ச்சி அடையத் தொடங்கிய பின்னர் சென்னையில் குடியேறுவோரின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்தது...

    உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி கற்போர் எண்ணிக்கை மாநிலம் முழுவதும் அதிகரிக்க அதிகரிக்க.. அவற்றுக்கு இணையாக வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து தமிழகத்தில் வந்து தொடங்கப்பட்ட தொழில்களை மாநிலம் முழுவதும் பரவலாக்காமல் தங்களது சொந்த நலன்களுக்காக சென்னையிலேயே முடக்கினர்... விளைவு தமிழகம் முழுவதும் படித்தவர்கள் வேலை தேடி இந்த நரகத்துக்கே வரவேண்டிய நெருக்கடி...

    20 ஆண்டுகளுக்கு முன்பு தாம்பரத்தில் தொடங்கிய மாநரகம் கூடுவாஞ்சேரி, வண்டலூர் எல்லாம் தாண்டி காட்டாங்குளத்தூரிலேயே தொடங்கும்அளவு விரிவடைந்துவிட்டது... இதில் காஞ்சிபுரம் வரை சேர்த்து கிரேட்டர் சென்னை ஆக்கப்போகின்றனராம்...

    மக்கள் தொகை பெருகப்பெருக அதற்கேற்ப மின்சாரதடம், தொலைதொடர்புதடம், குடிநீர்குழாய், மெட்ரோ, வடிகால் என்று சென்னை நரகத்தின் சாலைகள் வருடக்கணக்கில் தோண்டப்பட்டுக் கொண்டே இருக்கும் நிலைமை...

    நீர்நிலைகளை அரசியல், பணபலம் மிக்கவர்கள் சொந்தமாக்கிக்கொள்ள, நீர்வழித்தடங்களை எளிய மக்கள் எடுத்துக்கொள்ள... பூமி தோன்றிய காலம்தொட்டே பெய்யும் மழைநீர் தன்வழித்தடம் காணாமல் திகைத்து தேங்கி நிற்க..

    இவற்றுக்கெல்லாம் காரணமானவர்கள் ஒருவரையொருவர் குற்றம் சொல்லிக்கொண்டு நிற்க..

    வருடத்தின் மூன்றுமாத மழைக்காலம் கடந்துவிடுகிறது... அதன்பிறகு மழையை மறந்து அவரவர் வேலைகளைபார்க்க கிளம்பி விடுகின்றனர்..

    சென்னையின் மழைநீர் வடிகால் பிரச்சினையும் சரி.. தீபாவளி பொங்கலுக்கு ஏற்படும் பயண நெருக்கடிகளும் சரி ஒருபோதும் தீர்க்க முடியாதவை...

    ஐடி உள்ளிட்ட சேவை நிறுவனங்களை திருச்சி, தஞ்சை, மதுரை, நெல்லை உள்ளிட்ட.. நகரங்களிலும், ஏற்றுமதி இறக்குமதி சார்ந்த தொழில்களை கடலூர், நாகை, தூத்துக்குடி உள்ளிட துறைமுக நகரங்களிலும் அமைத்தால் சென்னையை காப்பாற்றலாம்.. இல்லையென்றால் அந்நகரை இயற்கையே கைவிட வைக்கும்...

    -தஞ்சை ராஜேஷ்

    • தமிழில் நொறுங்குதல் என்பது தன்னியல்பில் நடப்பதைக் குறிக்கும்.
    • சில நேரங்களில் என்ன சாப்பிட்டோம் என்பது கூட மறந்து விடுகிறது.

    "நொறுங்க தின்றால் நுாறு வயது" என்ற முதுமொழிக்கு கீழ்கண்டவாறு அர்த்தம் தரப்படுகிறது.

    உணவை நன்றாக அரைத்து, கூழாக்கி விழுங்க வேண்டும் என்றும், நாமாக முயன்று பற்களைக் கொண்டு வாய் வலிக்கும் வரை மெல்ல வேண்டும் கூறப்படுகிறது. இது சரியான முறையா?

    தமிழில் நொறுங்குதல் என்பது தன்னியல்பில் நடப்பதைக் குறிக்கும். நொறுக்குதல் என்பது நம் முயற்சியால் செயற்கையாக நொறுக்கப்படுவதை குறிக்கும்.

    நொறுங்கத் தின்பது என்பது யாருடைய வேலை. நம் சொந்த முயற்சியில் நடக்க வேண்டிய வேலையா அல்லது பற்களின் இயல்பான வேலையா..?

    குறுக்கிட்டால் குளறுபடி தான். உடல் செய்ய வேண்டிய சுவாசத்தை நாம் கையில் எடுத்தால் என்னவாகும். கொஞ்ச நேரம் நீங்கள் சுவாசிக்க முயற்சித்தால் சுவாசம் சீரற்றுப் போகும். மூச்சுவிட முடியாத அளவிற்கு நெஞ்சு கனமாகும். உடலின் இயல்பான வேலைகளில் நாம் குறுக்கிட்டால் குளறுபடிதான் நடக்கும்.

    அதுபோல் பற்களின் இயல்பான வேலை மெல்லுவது தான். அதை நாம் கையில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆக மெல்லுவது என்பதும் சுவாசிப்பதைப் போல உடலின் இயக்கம்தான். அதை நாம் செய்ய விட வேண்டும். உண்ணும் போதே வேறு பல வேலைகளையும் (டி.வி.பார்ப்பது) நாம் செய்தால் முழு கவனமும் உண்ணுவதில் இருக்காது. சில நேரங்களில் என்ன சாப்பிட்டோம் என்பது கூட மறந்து விடுகிறது. நம்முடைய கவனம் உண்ணுவதில் மட்டும் இருக்கும் போது பற்கள் தங்கள் வேலையை முழுமையாகச் செய்கின்றன. நாம் பிற வேலைகளைச் சேர்த்துச் செய்யும் போது மெல்லுவது முழுமையடைவதில்லை.

    இதைதான் நொறுங்க தினறால் நூறுவயது என்றார்கள்.

    -ஹீலர் உமர் பாரூக்

    • நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
    • தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    முட்டை கோஸ் கீரை வகையைச் சேர்ந்தது. இதன் கொழுந்து உருண்டையாகக் காணப்படும். இதனையோ உணவாகப் பயன்படுத்துகிறோம்.

    இதில் உயிர்ச்சத்துக்கள், தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலுக்கு ஊட்டம் தரும் உணவாகும். உடல் வளர்ச்சிக்கு முட்டை கோஸ் மிகவும் சிறந்தது.

    முட்டைகோஸின் மேல் பகுதியில் மூடியிருக்கும் முற்றிய காய்ந்த இலைகளை நீக்கிவிட்டு சிறிதாக நறுக்கி பாசிப்பயறுடன் சேர்த்து கூட்டாகவோ அல்லது பொரியலாகவோ செய்து சாப்பிடலாம்.

    முட்டைகோஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள்:

    கண் பார்வைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வை நரம்புகளை சீராக இயங்கச் செய்யும். இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து கண் பார்வைக்கு சிறந்தது.

    மூல நோயின் பாதிப்பைக் குறைக்கும். அஜீரணத்தால் உண்டாகும் வயிற்றுவலியை நீக்கும்.

    சரும வறட்சியை நீக்கும். சருமத்திற்கு பொலிவைக் கொடுக்கும்.

    வியர்வைப் பெருக்கியாக செயல்படும். சிறுநீரை நன்கு பிரித்து வெளியேற்றும்.

    எலும்புகளுக்கு வலு கொடுக்கும். இதில் சுண்ணாம்புச்சத்து அதிகமிருப்பதால் எலும்புகளும் பற்களும் உறுதியாகும்.

    பெண்களுக்கு மெனோபாஸ் காலங்களில் உண்டாகும் கால்சியம், பாஸ்பரஸ் இழப்பை முட்டைகோஸ் ஈடுசெய்யும்.

    நரம்புகளுக்கு வலு கொடுக்கும். நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.

    தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

    முட்டைகோஸை நீரில் போட்டு சிறிது நேரம் ஊறவைத்து அந்த நீரைக் கொண்டு முகம் கழுவினால் வறட்சியான சருமம் பளபளப்படையும்.

    உடல் சூட்டைத் தணிக்கும். நாள்பட்ட மலச்சிக்கலைப் போக்கும். குடல் சளியைப் போக்கும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.

    தலைமுடி உதிர்வதைக் குறைக்கும். மயிர்க்கால்களுக்கு பலம் கொடுக்கும்.

    முட்டைகோஸின் பயன்களை அறிந்து அதனை நம் உணவில் சேர்த்து நீண்ட வாழ்நாளைப் பெறுவோமாக..!

    - கூத்தன் செந்தமிழ்

    • ஒன்பது வயதுச் சிறுவன் அதை அப்படியே மனதுள் பதித்துக் கொண்டான்.
    • ரஷிய கம்யூனிஸ்ட். சர்வாதிகார அடக்குமுறையை மீறியும் அவன் உலகம் முழுதும் தெரிந்தான்.

    ரஷியாவைச் சேர்ந்த தத்துவ ஞானி ஜார்ஜ் குர்ட்ஜெஃப். அவருக்கு ஒன்பது வயது இருக்கும்போது அவரின் அப்பா மரணப் படுக்கையில் இருந்தார். தம் சிறு வயது குழந்தை மகனை அழைத்தார். நோயின் தீவிரம் அதன் வேதனை இரண்டையும் மீறி கண்ணீருடன் சொன்னார்.

    " மகனே...நான் இறக்கப் போகிறேன்.. தாய் இழந்து தவித்து இருக்கும் உன்னை மேலும் பெரும் கஷ்டத்தில் விட்டுப் போகிறேன்.... உனக்கு என்று பணம், சொத்து என எதுவும் விட்டு செல்லவில்லை....நீயே உன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பரிதாபத்தில் நீ இப்பொழுது இருக்கிறாய்...

    ஆனால் ஒன்றை மட்டும் உனக்கு நான் மந்திர வாக்கியமாக சொல்லிச் செல்கிறேன்.... அதை மட்டும் உன் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். உன்னை எவர் எந்த இக்கட்டான சமயத்தில் கோபப் படுத்தினாலும் நீ பிரதிவினை ஆற்ற குறைந்தது 24 மணி நேரம் எடுத்துக்கொள்... இந்த மகா வாக்கியம் மட்டுமே உனக்கு நான் விட்டுச் செல்லும் ஒரே சொத்து...இதை உன் வாழ்நாளில் கைவிட்டு விடாதே... அந்த ஒன்பது வயதுச் சிறுவன் அதை அப்படியே மனதிள் பதித்துக் கொண்டான்.

    ரஷிய கம்யூனிஸ்ட். சர்வாதிகார அடக்குமுறையை மீறியும் அவன் உலகம் முழுதும் தெரிந்தான். அவன் சிகிச்சையால் , இசையால், போதனையால்.... எத்தனை எத்தனையோ மன நோயாளிகள் குணமானார்கள். 83 வயது வரை வாழ்ந்த அந்த தத்துவஞானி நமக்குச் சொன்ன முக்கிய செய்தி இதுதான். "உன்னை எவர் எந்த இக்கட்டான சமயத்தில் கோபப் படுத்தினாலும் நீ பிரதிவினை ஆற்ற குறைந்தது 24 மணி நேரம் எடுத்துக்கொள்... " இவ்வாறு நடந்துகொண்டால் யாருயை பேச்சும் நம்மை ஒன்றும் செய்யாது. அதனால் எந்த கெடுதியும் ஏற்படாது.

    -கி. காமராஜ்.

    • ஆற்காடு நவாப் வெள்ளையர்களின் கைப்பாவையாக மாறியதுபோல் சியாங்கேஷேக் ஜப்பானின் கைப்பாவையாக ஆட்சி செய்தார்.
    • சீனா தயாரிப்புகள் இல்லாவிட்டால் உலகமே ஸ்தம்பித்து விடும் நிலைதான் உள்ளது.

    உலக அரங்கில் இந்தியாவை வேறு ஏதாவது ஒரு நாட்டுடன் ஒப்பிட்டு பார்க்க வேண்டுமானால் சீனாவுடன்தான் ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

    அளவுகடந்த மக்கட்தொகை.. பல்வேறு மொழிகள்.. இந்தியாவைவிட மிக மோசமான மூட நம்பிக்கைகளும் முட்டாள் தனமான பழக்க வழக்கங்களும் கடுமையான சாஸ்திர சம்பிரதாயங்களும் கொண்ட நாடாக இருந்தது சீனா!

    மன்னராட்சியை வீழ்த்தி சன்யாட்சென் ஆரம்பித்த கோமிண்டாங் கட்சி, அதனுடைய தலைவர் சியாங்கேஷேக் காலத்தில் ஒரு ராணுவ சர்வாதிகார நாடாக மாறி ஜப்பானியர்களால் கடுமையாக சுரண்டப்பட்டும் ஒடுக்கப்பட்டும் வந்தது.

    ஆற்காடு நவாப் வெள்ளையர்களின் கைப்பாவையாக மாறியதுபோல் சியாங்கேஷேக் ஜப்பானின் கைப்பாவையாக ஆட்சி செய்தார்.

    1912 லிருந்து கம்யூனிஸ்ட் கட்சியை ஏழுபேரோடு தொடங்கி கடுமையாக உழைத்து சீனாவின் கல்வியறிவற்ற மக்களை ஒருங்கிணைத்து சீனாவில் 1948 இல் கம்யூனிஸ்ட் ஆட்சியை நிறுவியவர் மாவோ.

    கிட்டத்தட்ட 36 ஆண்டுகள் போராட்டம் அது. பின்னர் 1955 இல் எடுத்த ஒரு அதிரடியான விவசாய புரட்சி தோல்வியடைந்ததால் பசியும் பட்டினியும் தாண்டவமாடின.

    ஆனால் அவர் இட்ட அடித்தளத்தில் பின்னர் உலகமயமாக்களுக்குப்பிறகு சீனாவின் வளர்ச்சி அபரிமிதமாக மாறியது.

    இன்று சீனப்பொருட்கள் இல்லாவிட்டால் அமெரிக்காவின் ஒரு நாள் கூட கழியாது. அமெரிக்கா மட்டுமல்ல உலகின் பெரும்பான்மையான நாடுகளுக்கு மருந்து வகைகளுக்கு தேவையான வேதியியல் பொருட்கள் சீனாவிலிருந்து செல்கின்றன.

    சீனாவில் சாஃப்ட் கோக் எனப்படும் கரி கிடையாது. இரும்பு தாதுகிடையாது. ஆனால் உலகத்திலேயே இரும்பு பொருட்கள் சீனாவில்தான் விலை குறைவு.

    ஒரு வகையில் உலகில் ஒரு தொழிற்புரட்சியையே உண்டாக்கியது சீனாதான். இந்தியாவுக்கே கூட பெரும் வளர்ச்சியையே அளித்தது சீனா இயந்திரங்கள்தான்.

    உதாரணமாக ஒரு நிட்டிங் மெஷின் ஜப்பான் தயாரிப்பு 25 லட்சத்திற்கு என்றிருந்த போது சீனா அதை ஐந்து லட்சத்திற்கு அளித்தது. ஒயர் கட்டிங் மெஷின் 30 ஆண்டுகளுக்கு முன்பு 20 லட்சம் ரூபாய். இப்போது 5 லட்சத்திற்கு சீன மெஷின்கள் கிடைக்கின்றன. இது ஒரு உதாரணம்தான். எல்லா இயந்திரங்களுக்கும் இதுதான் நிலை.

    கொரோனா நோய் பரவிய போது பத்தே நாட்களில் நான்கு அடுக்கு மருத்துவமனையை கட்டி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

    ஒரு சின்ன உதாரணம் அவர்களுடைய மருத்துவ கல்வி. சென்னையிலுள்ள மெட்ராஸ் மெடிக்கல் காலேஜைவிட பரப்பளவில் பெரியது பெய்ஜிங் மருத்துவ கல்லூரி லைப்ரரி.

    இப்போதைய நிலையில் சீனா தயாரிப்புகள் இல்லாவிட்டால் உலகமே ஸ்தம்பித்து விடும் நிலைதான் உள்ளது.

    அறுபது ஆண்டுகளுக்கு முன் உண்ண உணவு இல்லாமல் பட்டினியால் மக்கள் கொத்து கொத்தாக மடிந்து கிடந்த சீனா இன்று அமெரிக்காவுக்கு சவால் விடும் அளவுக்கு வளர்ந்ததற்கு காரணம் மாவோதான் என்பதை மறக்கவும் முடியாது .. யாராலும் மறுக்கவும் முடியாது.

    -எம.எஸ். ராஜகோபால்

    ×