என் மலர்tooltip icon

    கதம்பம்

    நொறுங்க தின்றால்..
    X

    நொறுங்க தின்றால்..

    • தமிழில் நொறுங்குதல் என்பது தன்னியல்பில் நடப்பதைக் குறிக்கும்.
    • சில நேரங்களில் என்ன சாப்பிட்டோம் என்பது கூட மறந்து விடுகிறது.

    "நொறுங்க தின்றால் நுாறு வயது" என்ற முதுமொழிக்கு கீழ்கண்டவாறு அர்த்தம் தரப்படுகிறது.

    உணவை நன்றாக அரைத்து, கூழாக்கி விழுங்க வேண்டும் என்றும், நாமாக முயன்று பற்களைக் கொண்டு வாய் வலிக்கும் வரை மெல்ல வேண்டும் கூறப்படுகிறது. இது சரியான முறையா?

    தமிழில் நொறுங்குதல் என்பது தன்னியல்பில் நடப்பதைக் குறிக்கும். நொறுக்குதல் என்பது நம் முயற்சியால் செயற்கையாக நொறுக்கப்படுவதை குறிக்கும்.

    நொறுங்கத் தின்பது என்பது யாருடைய வேலை. நம் சொந்த முயற்சியில் நடக்க வேண்டிய வேலையா அல்லது பற்களின் இயல்பான வேலையா..?

    குறுக்கிட்டால் குளறுபடி தான். உடல் செய்ய வேண்டிய சுவாசத்தை நாம் கையில் எடுத்தால் என்னவாகும். கொஞ்ச நேரம் நீங்கள் சுவாசிக்க முயற்சித்தால் சுவாசம் சீரற்றுப் போகும். மூச்சுவிட முடியாத அளவிற்கு நெஞ்சு கனமாகும். உடலின் இயல்பான வேலைகளில் நாம் குறுக்கிட்டால் குளறுபடிதான் நடக்கும்.

    அதுபோல் பற்களின் இயல்பான வேலை மெல்லுவது தான். அதை நாம் கையில் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆக மெல்லுவது என்பதும் சுவாசிப்பதைப் போல உடலின் இயக்கம்தான். அதை நாம் செய்ய விட வேண்டும். உண்ணும் போதே வேறு பல வேலைகளையும் (டி.வி.பார்ப்பது) நாம் செய்தால் முழு கவனமும் உண்ணுவதில் இருக்காது. சில நேரங்களில் என்ன சாப்பிட்டோம் என்பது கூட மறந்து விடுகிறது. நம்முடைய கவனம் உண்ணுவதில் மட்டும் இருக்கும் போது பற்கள் தங்கள் வேலையை முழுமையாகச் செய்கின்றன. நாம் பிற வேலைகளைச் சேர்த்துச் செய்யும் போது மெல்லுவது முழுமையடைவதில்லை.

    இதைதான் நொறுங்க தினறால் நூறுவயது என்றார்கள்.

    -ஹீலர் உமர் பாரூக்

    Next Story
    ×