என் மலர்tooltip icon

    கதம்பம்

    சொர்க்கமே என்றாலும்..
    X

    சொர்க்கமே என்றாலும்..

    • ஒரு வார்த்தை இது உரிமை என பேசிவிட முடியாது.
    • அரபுநாடுகள் கேட்கவே வேண்டாம் எல்லாம் மன்னர் ராஜ்ஜியம்.

    சிங்கப்பூரை பார், அமெரிக்காவைப் பார், சீனாவைப் பார் என அதன் பாஸிடிவ் அம்சங்களை மட்டும் கூறுபவர்கள் அந்த நாடுகளின் கொடூரமான மறுபக்கத்தைப் பற்றி சொல்ல மாட்டார்கள்.

    சிங்கப்பூர் என்பது மேற்கத்திய நாடுகள் நடத்தும் நட்சத்திர விடுதி.. அப்படித்தான் அதனை சொல்லமுடியும். எதிர்கட்சி, போராட்டம், அரசை பற்றிய விமர்சனம் எல்லாம் அங்கு நினைத்துபார்க்க முடியாதவை. கிட்டதட்ட ஒரு கம்யூனிஸ்ட் நாட்டு பாணியில் அமைக்கபட்ட நாடு அது. ஒரு வார்த்தை இது உரிமை என பேசிவிட முடியாது.

    சீனா கேட்கவே வேண்டாம், தேர்தல் வேண்டும் என்றதற்காக போராடிய லட்சகணக்கான மாணவர்களை தியான்மார் சதுக்கத்தில் ராணுவ டாங்கி கொண்டு நசுக்கி ரத்த பீடத்தில் தன் அதிகாரத்தை நிறுத்தியிருக்கும் நாடு. அரசுக்கு எதிரான கருத்துக்கள் பேசினால் அவ்வளவுதான், மக்கள் உரிமை என்பதெல்லாம் அங்கு ஒரு பொருட்டே இல்லை.

    அமெரிக்காவில் வரி வருமானத்தில் 30%, அது யாராயினும் கட்டித்தான் ஆகவேண்டும், மக்களை வேறுவகையான வாழ்க்கை முறையில் திருப்பிவிட்டு ஒரு மாதிரியான அரசியல் செய்யும் நாடு அது. கருப்பினத்தவருக்கு அநேகமாக தனி நீதிதான் அங்கு. அம்மக்களின் மனநிலையே வேறு, இந்திய மனநிலைக்கும் அவர்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. இந்திய அமெரிக்க ஒப்பீடு எல்லாம் அர்த்தமே இல்லாதது. அவர்கள் சாதி,மதம், இனம், திரைப்படம் பார்த்தெல்லாம் வாக்களிப்பதில்லை. இங்கு அப்படி வாக்களித்துவிட்டு அமெரிக்காவினை பார் என சொல்ல தகுதியே இல்லை.

    அரபுநாடுகள் கேட்கவே வேண்டாம் எல்லாம் மன்னர் ராஜ்ஜியம். எவனும் எதிர்த்து ஒரு வார்த்தை பேசிவிட முடியாது. தொலைத்துகட்டி விடுவார்கள். தப்பு பண்ணினால் சீவி, விடுவார்கள் பொது வெளியில் உடனடியாக.

    ஆக உலகெல்லாம் வளமாக இருப்பது போலவும், இந்தியா மட்டும் கட்டுபாடும் வாழ சிரமமும் உள்ள நாடாக சிலர் சொல்லிகொண்டிருக்கின்றார்கள். உண்மையில் உலகில் மிக சுதந்திரமான நாடு ஒன்று உண்டென்றால் அது இந்தியா மட்டுமே.

    இங்கு அரசு முதல் ஆண்டி வரை நம்மால் எந்த பிரச்சினையானாலும் யாரும் கருத்து சொல்ல முடிகின்றது, போர்கொடி தூக்க முடிகின்றது.

    சொர்க்கமே என்றாலும் அது நம் பாரததேசம் போலாகுமா?

    -கண்ணன் சுவாமி

    Next Story
    ×