என் மலர்
கதம்பம்

24 மணிநேரம் எடுத்துக் கொள்!
- ஒன்பது வயதுச் சிறுவன் அதை அப்படியே மனதுள் பதித்துக் கொண்டான்.
- ரஷிய கம்யூனிஸ்ட். சர்வாதிகார அடக்குமுறையை மீறியும் அவன் உலகம் முழுதும் தெரிந்தான்.
ரஷியாவைச் சேர்ந்த தத்துவ ஞானி ஜார்ஜ் குர்ட்ஜெஃப். அவருக்கு ஒன்பது வயது இருக்கும்போது அவரின் அப்பா மரணப் படுக்கையில் இருந்தார். தம் சிறு வயது குழந்தை மகனை அழைத்தார். நோயின் தீவிரம் அதன் வேதனை இரண்டையும் மீறி கண்ணீருடன் சொன்னார்.
" மகனே...நான் இறக்கப் போகிறேன்.. தாய் இழந்து தவித்து இருக்கும் உன்னை மேலும் பெரும் கஷ்டத்தில் விட்டுப் போகிறேன்.... உனக்கு என்று பணம், சொத்து என எதுவும் விட்டு செல்லவில்லை....நீயே உன்னைப் பார்த்துக் கொள்ள வேண்டிய பரிதாபத்தில் நீ இப்பொழுது இருக்கிறாய்...
ஆனால் ஒன்றை மட்டும் உனக்கு நான் மந்திர வாக்கியமாக சொல்லிச் செல்கிறேன்.... அதை மட்டும் உன் மனதில் நிறுத்திக்கொள்ள வேண்டும். உன்னை எவர் எந்த இக்கட்டான சமயத்தில் கோபப் படுத்தினாலும் நீ பிரதிவினை ஆற்ற குறைந்தது 24 மணி நேரம் எடுத்துக்கொள்... இந்த மகா வாக்கியம் மட்டுமே உனக்கு நான் விட்டுச் செல்லும் ஒரே சொத்து...இதை உன் வாழ்நாளில் கைவிட்டு விடாதே... அந்த ஒன்பது வயதுச் சிறுவன் அதை அப்படியே மனதிள் பதித்துக் கொண்டான்.
ரஷிய கம்யூனிஸ்ட். சர்வாதிகார அடக்குமுறையை மீறியும் அவன் உலகம் முழுதும் தெரிந்தான். அவன் சிகிச்சையால் , இசையால், போதனையால்.... எத்தனை எத்தனையோ மன நோயாளிகள் குணமானார்கள். 83 வயது வரை வாழ்ந்த அந்த தத்துவஞானி நமக்குச் சொன்ன முக்கிய செய்தி இதுதான். "உன்னை எவர் எந்த இக்கட்டான சமயத்தில் கோபப் படுத்தினாலும் நீ பிரதிவினை ஆற்ற குறைந்தது 24 மணி நேரம் எடுத்துக்கொள்... " இவ்வாறு நடந்துகொண்டால் யாருயை பேச்சும் நம்மை ஒன்றும் செய்யாது. அதனால் எந்த கெடுதியும் ஏற்படாது.
-கி. காமராஜ்.






