என் மலர்tooltip icon

    கதம்பம்

    குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய..
    X

    குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய..

    • பிளீச்சிங் பவுடரை சிறிதளவு நீர் விட்டு பசை போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.
    • குளோரின் டேங்க் நீர் முழுவதும் கலந்து விடும்.

    வெள்ள நீர் வீடுகளுக்குள் நுழைந்து வீட்டின் கீழ்நிலை தொட்டிகள் மற்றும் அசுத்தமான நீரால் நீர்த்தொட்டிகள் மாசடைந்து இருக்கும். முதலில் நீரை முழுவதுமாக வெளியேற்றி விட்டு உட்புற சுவரை பிளீச்சிங் பவுடர் கொண்டு நன்றாகத் தேய்த்து கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.

    பிறகு நீரை டேங்க் முழுவதுமாக ஏற்றி விட்டு குளோரினேற்றம் செய்ய வேண்டும். குளோரினேற்றம் செய்வதன் மூலம் நீரில் உள்ள தொற்று உண்டாக்கும் கிருமிகளை தொற்று நீக்கம் செய்ய முடியும். நாம் கடைகளில் வாங்கும் பிளீச்சிங் பவுடரில் 30-35% குளோரின் இருக்கும். ஆயிரம் லிட்டர் நீரை தொற்று நீக்கம் செய்வதற்கு 5 கிராம் பிளீச்சிங் பவுடர் தேவைப்படும் என்பது பொது விதி.

    தாங்கள் வைத்திருக்கும் செவ்வக வடிவிலான டேங்கின் நீளம் 10 மீட்டர், அகலம் 5 மீட்டர், அதில் நீரின் உயரம் 8 மீட்டர் உள்ளது என்றும் கொண்டால் . = 10 × 5 × 8 × 1000= 400000 லிட்டர் ஆயிரம் லிட்டருக்கு 5 கிராம் பிளீச்சிங் பவுடர் தேவை என்றால் 4 லட்சம் லிட்டருக்கு எவ்வளவு பிளீச்சிங் பவுடர் தேவை ? = 4,00,000 × 5/1000= 2000 கிராம் பிளீச்சிங் பவுடர் தேவை. மேற்கூறிய ஃபார்முலாக்கள் வழி தேவைப்படும் பிளீச்சிக் பவுடரை கணக்கிட்டுக் கொள்ளுங்கள். ஒரு பிளாஸ்டிக் வாளியில் உங்கள் டேங்கிற்கு தேவையான பிளீச்சிங் பவுடரை சிறிதளவு நீர் விட்டு பசை போல கலந்து வைத்துக் கொள்ளுங்கள்.

    இப்போது அந்த வாளியில் பாதி அல்லது முக்கால்வாசிக்கு நீரை ஊற்றி சிறிது நேரம் மரக்கரண்டி கொண்டு கிளறி விடுங்கள். பிளீச்சிங் பவுடர் கரைசலில் இருந்து குளோரின் மேலே வந்து நீரில் கலந்திருக்கும். இப்போது மேலே இருக்கும் நீரை மட்டும் வேறொரு வாளிக்கு மாற்றி விடுங்கள். இந்த நீரின் பெயர் "சூப்பர் நாட்டண்ட் திரவம்". கீழே படிந்துள்ள கரைசலை கீழ் கொட்டி விடுங்கள். சூப்பர் நாட்டண்ட் திரவம் கொண்ட வாளியை உங்களின் டேங்கிற்குள் அரை மீட்டர் ஆழத்தில் இறக்கி மரக்கரண்டி கொண்டு கிண்டி விடுங்கள். மெதுவாக குளோரின் டேங்க் நீர் முழுவதும் கலந்து விடும். அரை மணிநேரம் முதல் ஒரு மணிநேரம் வரை நீரை அப்படியே விட்டு விடுங்கள். பிளீச்சிங் பவுடர் எளிதாக அங்காடிகளில் கிடைக்கிறது. அதை உபயோகித்து டேங்குகளை தொற்று நீக்கம் செய்தால் நம்மையும் நம் குடும்பத்தையும் நீரினால் பரவும் தொற்றுகளில் இருந்து காக்க முடியும்.

    -டாக்டர். ஃபரூக் அப்துல்லா

    Next Story
    ×