என் மலர்
மேற்கிந்தியத் தீவு
- மழை குறுக்கிட்டதால், ஆட்டம் இரண்டு முறை நிறுத்தப்பட்டது.
- டக்வொர்த் லூயிஸ் விதிப்படி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு 257 ரன்கள் இலக்கு.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக ஷிகர் தவான், ஷுப்மான் கில் களமிறங்கினர்.
இந்திய அணி 24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. மழை நின்ற பின்னர் 40 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டு மீண்டும் தொடங்கியது.
ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கேப்டன் ஷிகர் தவான் 58 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 44 ரன்கள் அடித்தார். கில் 98 ரன்கள் குவித்த நிலையில், போட்டி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டது.

அப்போது இந்திய அணி 36 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து இந்திய இன்னிங்ஸ் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் கில் சதம் அடிக்கும் வாய்ப்பு நலுவியது. மேலும் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 35 ஓவர்களில் 257 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 26 ஓவர்கள் முடிவில் 137 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக கேப்டன் பூரனும், பிரான்டன் கிங்கும் தலா 42 ரன்கள் குவித்தனர். சாய் ஹோப் 22 ரன்கள் அடித்தார். கெயில் மேயர்ஸ், புரூக்ஸ், கீமோ பால், ஜெய்டன் சீல்ஸ் ஆகிய வீரர்கள் டக் அவுட் ஆகினர்.
இந்தியா தரப்பில் சாகல் 4 விக்கெட்களையும், சிராஜ், தாக்கூர் தலா இரண்டு விக்கெட்களையும், அக்சர் , கிருஷ்ணா தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். இதனையடுத்து 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை ஒயிட் வாஷ் முறையில் இந்திய அணி முழுமையாக கைப்பற்றியது.
- மழை குறுக்கிட்டதால், ஆட்டம் இரண்டு முறை நிறுத்தம்.
- இந்திய அணியில் அதிகபட்சமாக ஷுப்மான் கில் 98 ரன்கள் அடித்தார்.
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் மைதானத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க வீரர்களாக ஷிகர் தவான், ஷுப்மான் கில் களமிறங்கினர்.

இந்திய அணி 24 ஓவர்களில் 1 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. மழை நின்ற பின்னர் 40 ஓவர்களாக போட்டி குறைக்கப்பட்டு மீண்டும் நடைபெற்றது. ஆரம்பம் முதலே அதிரடி காட்டிய கேப்டன் ஷிகர் தவான் 58 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.
ஷ்ரேயாஸ் அய்யர் 44 ரன்கள் அடித்தார்.கில் 98 ரன்கள் குவித்த நிலையில், போட்டி மீண்டும் மழையால் பாதிக்கப்பட்டது. அப்போது இந்திய அணி 36 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 225 ரன்கள் எடுத்திருந்தது.
இதையடுத்து இந்திய அணி இன்னிங்ஸ் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் கில் சதம் அடிக்கும் வாய்ப்பு நலுவியது. மேலும் டக்வொர்த் லூயிஸ் விதிப்படி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற 35 ஓவர்களில் 257 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறங்கி விளையாடியது.
- ஒருநாள் தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் கைப்பற்றி விட்டது.
- இன்றைய போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெறும் என எதிர்பார்ப்பு.
போர்ட் ஆப் ஸ்பெயின்:
ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் இரு ஆட்டங்களிலும் வெற்றி பெற்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.
3-வது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் இன்று நடக்கிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. முதல் இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் 300 ரன்களுக்கு மேல் குவித்ததுடன், வெற்றிக்கான போராட்டம் கடைசி ஓவர் வரை நீடித்தது.
இரு அணிகளும் வலுவான நிலையில் உள்ளதால் இன்றைய போட்டியிலும் வெற்றிக்காக தீவிரம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டத்திலும் இந்திய அணி வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி ஹாட்ரிக் பெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் ரசிகர்கள் உள்ளனர்.
முதல் 2 போட்டியிலும் விளையாடாத இந்திய வீரர்களுக்கு இன்றைய ஆட்டத்தில் வாய்ப்பு வழங்கப்படலாம். என எதிர்பார்க்கப்படுகிறது.
- முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 311 ரன்கள் எடுத்திருந்தது.
- வெஸ்ட்இண்டீஸ் வீரர் ஷாய் ஹோப் 115 ரன்கள் குவித்தார்.
போர்ட் ஆப் ஸ்பெயின்:
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் நடைபெற்றது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ் ஆகியோர் முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தனர். கைல் மேயர்ஸ் 39 ரன்னில் அவுட்டானார்.அடுத்து களம் இறங்கிய ஷமார் புருக்ஸ் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். பிராண்டன் கிங் டக் அவுட்டானார்.

ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவருக்கு நன்கு ஒத்துழைப்பு அளித்த நிகோலஸ் பூரன் 77 ரன்னில் வெளியேறினார். பாவெல் 13 ரன்னில் வீழ்ந்தார். ஷாய் ஹோப் 115 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
வெஸ்ட் இண்டீஸ் அணி 50 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்களை எடுத்தது. இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து, 312 ரன்கள் என்ற வலுவான இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணியில் தொடக்க வீரர் கேப்டன் ஷிகர் தவான் 13 ரன் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
சுப்மான் கில் 43 ரன்கள் அடித்தார். ஷ்ரேயாஸ் அய்யர் 63 ரன்கள் குவித்தார். சூரியகுமார் யாதவ் 9 ரன்னுக்கு அவுட்டானார். சஞ்சு சாம்சன் 54 ரன்கள் அடித்தார். ஹூடா 33 ரன் எடுத்த நிலையில் அவுட்டானார்.

ஒருபுறம் இந்திய விக்கெட்கள் சரிந்த போதிலும் அதிரடி காட்டிய அக்சர் படேல் 35 பந்துகளில் 65 ரன்கள் குவித்து களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் இந்தியா வெற்றி பெற 2 பந்துகள் மீதம் இருந்த நிலையில் அக்ஷர் பட்டேல் சிக்சர் அடித்து அணியை வெற்றிபெற செய்தார்.
இந்திய அணி 49.4 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 312 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 2-வது ஒருநாள் போட்டியில் 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன் ஒருநாள் தொடரையும் இந்தியா கைப்பற்றியது.
- டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
- அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்களை எடுத்தது.
போர்ட் ஆப் ஸ்பெயின்:
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் ஐந்து டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் ஒருநாள் போட்டி போர்ட் ஆப் ஸ்பெயினில் நடந்தது. இந்தப் போட்டியில் இந்தியா 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, அந்த அணியின் ஷாய் ஹோப், கைல் மேயர்ஸ் ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கினர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 65 ரன்கள் சேர்த்தது. கைல் மேயர்ஸ் 39 ரன்னில் அவுட்டானார்.
அடுத்து இறங்கிய ஷமார் புருக்ஸ் 35 ரன்னில் ஆட்டமிழந்தார். பிராண்டன் கிங் டக் அவுட்டானார்.
ஒருபுறம் விக்கெட்டுகள் வீழ்ந்தாலும் ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவருக்கு நிகோலஸ் பூரன் நன்கு ஒத்துழைப்பு அளித்து அரை சதமடித்து 77 ரன்னில் வெளியேறினார். பாவெல் 13 ரன்னில் வீழ்ந்தார். ஷாய் ஹோப் 115 ரன்னுக்கு ஆட்டமிழந்தார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 311 ரன்களை எடுத்துள்ளது.
இந்தியா சார்பில் ஷர்துல் தாக்குர் 3 விக்கெட் கைப்பற்றினார். இதையடுத்து, 312 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.
- முதலில் விளையாடிய இந்திய அணியில் கேப்டன் ஷிகர் தவான் 97 ரன்கள் குவித்தார்.
- வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் 75 ரன்கள் அடித்தார்.
டிரினிடாட்:
இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அந்நாட்டு அணியுடன் இந்தியா பங்கேற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி, டிரினிடாட்டில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, முதலில் களம் இறங்கிய இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் ஷிகர் தவான், ஷுப்மான் கில் ஆகியோர் ஆரம்பம் முதல் சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர்.
முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 119 ரன்கள் சேர்த்தது. அரை சதமடித்த ஷுப்மான் கில் 64 ரன்னில் அவுட்டானார். சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிகர் தவான் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யர் 54 ரன்கள் அடித்தார்.
தொடர்ந்து சூர்யகுமார் யாதவ் 13 ரன்னிலும், சஞ்சு சாம்சன் 12 ரன்னிலும் அவுட்டாகினர். அக்சர் படேல் 21 ரன்னிலும், தீபக் ஹூடா 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களை எடுத்தது.
இதையடுத்து, 309 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க வீரர் ஹோப் 7 ரன்னுக்கு வெளியேற, சிறப்பாக விளையாடி 75 ரன்கள் குவித்த கைல் மேயர்ஸ் ஆட்டமிழந்தார். ஷமர் ப்ரூக்ஸ் 46 ரன்களும், பிராண்டன் கிங் 54 ரன்களும் அடித்தனர். கேப்டன் பூரன் 25 ரன்கள் எடுத்தார்.
பாவெல் 6 ரன்னுடன் வெளியேற, பின்னர் ஜோடி சேர்ந்த அகேல் ஹோசின், ரொமாரியோ ஷெப்பர்டும் அணியின் வெற்றிக்கு போராடினர். கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், வெஸ்ட் இண்டீஸ் அணி 12 ரன்கள் அடித்தது.
50 ஓவர் முடிவில் அந்த அணி 6 விக்கெட் இழப்பிற்கு 305 ரன்கள் எடுத்ததால், இந்திய அணி 3 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் ஹோசின் 32 ரன்னுடனும், ஷெப்பர்ட் 38 ரன்னுடன் கடைசி வரை களத்தில் இருந்தனர். இந்தியா தரப்பில் சிராஜ், தாக்கூர், சாகல் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
- இந்திய அணியின் கேப்டன் ஷிகர் தவான் 97 ரன்னில் அவுட்டானார்.
- மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் ஷுப்மான் கில் 64 ரன்னில் வெளியேறினார்.
டிரினிடாட்:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களாக ஷிகர் தவான், ஷுப்மான் கில் இறங்கினர். ஆரம்பம் முதல் இருவரும் அதிரடியாக ஆடினர். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினர். இதனால் அணியின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்தது.
ஷுப்மான் கில் முதலில் அரை சதமடித்தார். அவர் 64 ரன்னில் அவுட்டானார். முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 119 ரன்கள் சேர்த்தது.
சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஷிகர் தவான் 97 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய ஷ்ரேயஸ் அய்யரும் அரை சதமடித்து 54 ரன்னில் வெளியேறினார்.
தொடர்ந்து இறங்கிய சூர்யகுமார் யாதவ் 13 ரன், சஞ்சு சாம்சன் 12 ரன்னிலும் அவுட்டாகினர். அக்சர் படேல் 21 ரன்னிலும், தீபக் ஹூடா 27 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 308 ரன்களை எடுத்துள்ளது. இதையடுத்து, 309 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்குகிறது.
- இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக இடம்பெறவில்லை.
- வெஸ்ட் இண்டீஸ் அணியில் கொரோனா தொற்றால் ஜேசன் ஹோல்டர் இடம்பெறவில்லை.
டிரினிடாட்:
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி டிரினிடாட்டில் இன்று நடைபெறுகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி, இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.
இரு அணிகளின் விவரம் வருமாறு:
இந்தியா: ஷிகர் தவான் (கேப்டன்), ஷுப்மான் கில், ஸ்ரேயாஸ் அய்யர், சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, அக்சர் பட்டேல், ஷர்துல் தாக்குர், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல், முகமது சிராஜ்.
வெஸ்ட் இண்டீஸ்: ஷாய் ஹோப், பிரான்டன் கிங், ஷமார் புரூக்ஸ், கைல் மேயர்ஸ், நிகோலஸ் பூரன் (கேப்டன்), ரோமன் பவெல், அகில் ஹூசைன், ரொமாரியோ ஷெபர்ட், அல்ஜாரி ஜோசப், குடாகேஷ் மோட்டி, ஜெய்டன் சீலஸ்.
- இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையே, முதல் ஒருநாள் போட்டி இன்று நடைபெறுகிறது.
- இஷான் கிஷான், தீபக் ஹூடா, சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற வாய்ப்பு.
போர்ட் ஆப் ஸ்பெயின்:
இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இரு நாடுகள் இடையே 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் நடைபெறுகிறது. இரு அணிகளும் மோதும், முதல் ஒருநாள் போட்டி போட்டி, போர்ட் ஆப் ஸ்பெயின் நகரில் இந்திய நேரப்படி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது.
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் கே.எல். ராகுலுக்கு ஓய்வு அளிக்கப்பட்டிருந்தது. டி20 தொடரில் இடம் பெற்றுள்ள அவருக்கு துணை கேப்டன் பொறுப்பும் வழங்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கே.எல். ராகுலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான டி 20 அணியில் ராகுல் இடம் பெறாத பட்சத்தில் இஷான் கிஷான், தீபக் ஹூடா மற்றும் சஞ்சு சாம்சன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என தெரிகிறது.
- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரரான லெண்டல் சிம்மன்ஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளனர்.
- இதேபோல் முன்னாள் கேப்டன் தினேஷ் ராம்தின் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தினேஷ் ராம்தின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்தார்.
ராம்தின் தனது கடைசி போட்டியை கடந்த டி20ஐ டிசம்பரில் 2019-ல் விளையாடினார். அவர் 74 டெஸ்ட், 139 ஒருநாள் மற்றும் 71 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
ஜூலை 2005-ல் கொழும்பில் இலங்கைக்கு எதிராக அறிமுகமானார். 2014-ல் வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் கேப்டனாக நியமிக்கப்பட்ட பிறகு, ராம்தின் 17 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகளை வழிநடத்தினார்.
இதேபோல், வெஸ்ட் இண்டீஸ் வீரர் லெண்டல் சிம்மன்ஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக நேற்று அறிவித்துள்ளார்.
இவர் 8 டெஸ்ட், 68 ஒருநாள் போட்டி மற்றும் 68 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் மொத்தமாக 3,763 ரன்கள் எடுத்துள்ளார்.
- முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 178 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- வங்காளதேசம் சார்பில் தஜுல் இஸ்லாம் 5 விக்கெட் வீழ்த்தினார்.
கயானா:
வங்காளதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் மற்றும் டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் கைப்பற்றியது. இரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் வங்காளதேசம் வென்றது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி கயானாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் 48.4 ஓவரில் 178 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. அரை சதமடித்த நிகோலஸ் பூரன் 73 ரன்னில் அவுட்டானார். மற்ற வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.
வங்காளதேசம் சார்பில் தஜுல் இஸ்ளாம் 5 விக்கெட்டும், நசும் அகமது, முஸ்தபிசுர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் களமிறங்கியது. லிட்டன் தாஸ் அதிகபட்சமாக 50 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். கேப்டன் தமிம் இக்பால் 34 ரன் எடுத்தார். விக்கெட் கீப்பர் நுருல் ஹசன் 32 ரன்கள் எடுத்து அணியை வெற்றி பெறச்செய்தார்.
இறுதியில் வங்காளதேசம் 48.3 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 179 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் வங்காளதேசம் ஒருநாள் தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது.
ஆட்ட நாயகன் விருது தஜுல் இஸ்லாமுக்கும், தொடர் நாயகன் விருது தமிம் இக்பாலுக்கும் வழங்கப்பட்டது.
- வங்காளதேசத்துக்கு எதிராக டி20 தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என கைப்பற்றியது.
- நிகோலஸ் பூரனுக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.
கயானா:
வங்காளதேசம் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் 2-0 என கைப்பற்றியது.
இரு அணிகளுக்கு இடையிலான டி20 தொடரின் முதல் போட்டி மழையால் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி பெற்றது.
இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ், வங்காளதேசம் அணிகளுக்கு இடையிலான 3வது டி20 போட்டி கயானாவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேசம் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. அபிப் ஹுசைன் அரை சதமடித்தார். லிட்டன் தாஸ் 49 ரன்னில் அவுட்டானார்.
இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கைல் மேயர்ஸ் அரை சதமடித்தார். அவர் 55 ரன்னில் ஆட்டமிழந்தார். கேப்டன் நிகோலஸ் பூரன் அதிரடியாக ஆடி அரை சதமடித்து அசத்தினார்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி 18.2 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 169 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. நிகோலஸ் பூரன் 39 பந்துகளில் 5 சிக்சர், 5 பவுண்டரி உள்பட 74 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் வெற்றிக்கு வழிவகுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என டி 20 தொடரைக் கைப்பற்றியது. நிகோலஸ் பூரனுக்கு ஆட்ட நாயகன் மற்றும் தொடர் நாயகன் விருது வழங்கப்பட்டது.






