என் மலர்
அமெரிக்கா
- ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக அன்டோனியோ குட்டரெஸ் 2-வது முறை தேர்வானார்.
- இவர் அரசுமுறைப் பயணமாக இன்று (அக்டோபர் 18-ம் தேதி ) இந்தியா வருகிறார்.
நியூயார்க்:
ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரான அன்டோனியோ குட்டரெஸ், அரசுமுறைப் பயணமாக இன்று (அக்டோபர் 18-ம் தேதி ) இந்தியா வருகிறார்.
போர்ச்சுகல் நாட்டின் முன்னாள் பிரதமராக இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஐ.நா. பொதுச் செயலாளராக பதவியேற்றார். தொடர்ந்து ஜனவரி 1, 2022ம் ஆண்டு முதல் இரண்டாவது முறையாக பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், 3 நாள் அரசுமுறைப் பயணமாக அக்டோபர் 18-ம் தேதி இந்தியா வருகை தர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தியா வரும் ஐநா பொது செயலாளர் பிரதமர் மோடி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோரை சந்திக்கிறார்.
இரண்டாவது முறையாக பொறுப்பேற்றுள்ள அண்டோனியோ குட்டரெஸ் இந்தியா வருவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது.
- இந்தோனேசியாவில் அடுத்த மாதம் ஜி20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெறுகிறது.
- இந்தியா, அமெரிக்கா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்க உள்ளனர்.
வாஷிங்டன்:
சவுதி அரேபியா, ரஷியா அங்கம் வகிக்கும் ஒபெக் எனும் எண்ணெய் ஏற்றுமதி நாடுகள் கச்சா எண்ணெய் உற்பத்தியை நாளொன்றுக்கு 20 லட்சம் பேரல்கள் குறைத்துள்ளன. இதனால் 75 டாலராக இருந்த ஒரு பேரல் தற்போது 90 டாலரை நெருங்கியுள்ளது. இது ஏற்கனவே பணவீக்க பிரச்னையில் உள்ள அமெரிக்காவுக்கு சிக்கலை ஏற்படுத்தும். இதனால் ஒபெக்கின் மிகப்பெரிய ஏற்றுமதியாளரான சவுதி மீது அமெரிக்கா கோபமடைந்துள்ளது.
இதற்கிடையே, இந்தோனேசியாவின் பாலி தீவில் அடுத்த மாதம் 15 மற்றும் 16-ம் தேதிகளில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் இந்தியா, இந்தோனேசியா, அமெரிக்கா, இங்கிலாந்து, பிரேசில், சீனா, ஜப்பான், ரஷியா போன்ற நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.
இந்நிலையில், ஜி20 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டில் அதிபர் ஜோ பைடன் சவுதி இளவரசரைச் சந்தித்துப் பேசும் திட்டம் எதுவும் இல்லை என தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சல்லிவன் தெரிவித்துள்ளார்.
- அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்துள்ளது.
- டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 82.42 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து வருகிறது. டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் 82.42 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது.
இந்திய பங்குச்சந்தையில் இருந்து அந்நிய முதலீடுகள் வெளியேற்றம், உக்ரைன் - ரஷியா போர், கச்சா எண்ணெய் விலை உயர்வு, அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தியது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி அடைந்து வருகிறது.
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பை வலுப்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதற்கிடையே, அமெரிக்கா சென்றுள்ள இந்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதிய மாநாட்டில் பங்கேற்றார். அதன் பின் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிவது குறித்த கேள்விக்கு பதிலளித்த நிர்மலா சீதாராமன், இந்திய ரூபாயின் மதிப்பு சரிவதாக நான் பார்க்கவில்லை. அமெரிக்க டாலரின் மதிப்பு தான் தொடர்ந்து உயர்ந்து வருவதாக பார்க்கிறேன். வலுவடைந்து வரும் அமெரிக்க டாலருக்கு எதிராக அனைத்து நாடுகளின் பணமும் செயல்பட்டு வருகிறது. அனைத்து நாட்டு பணத்தை ஒப்பிடும்போது அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு வலுவாக உள்ளது. வளர்ந்து வரும் சந்தை நாடுகளின் பணத்துடன் ஒப்பிடும்போது இந்திய ரூபாய் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்திய பொருளாதாரத்தின் அடித்தளம் சிறப்பாக உள்ளது. அந்நிய செலாவணி கையிருப்பும் சிறப்பாக உள்ளது. இதனால் தான் பணவீக்கம் நிர்வகிக்கும் அளவில்தான் உள்ளது என நான் தொடர்ந்து கூறி வருகிறேன் என தெரிவித்தார்.
- அரசியல் பழி வாங்கும் நோக்கத்திற்காக அது பயன்படுத்தப்படவில்லை.
- முறையான தகவல் மற்றும் ஆதாரங்களைப் பெற்ற பின்னரே சோதனை நடவடிக்கை.
வாஷிங்டன்:
அமெரிக்கா சென்றுள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்களில் கலந்து கொண்ட பின்னர் வாஷிங்டனில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது இந்தியாவில் செயல்படும் மத்திய அமலாக்க இயக்குனரகத்தை அரசியல் பழிவாங்கும் நோக்கங்களுக்காக மத்திய அரசு பயன்படுத்துகிறது என்ற குற்றச்சாட்டை அவர் மறுத்தார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
மத்திய அமலாக்க இயக்குனரகம் முற்றிலும் சுதந்திரமாக உள்ளது. கார்ப்பரேட் துறையினர் மற்றும் பொது சமூக பிரிவினருக்கு அது எவ்வித அச்சுறுத்தையும் ஏற்படுத்தவில்லை. குற்றங்கள் தொடர்பாக முன்னறிவிப்பு செய்து விசாரணையை நடத்தும் நடைமுறையை பின்பற்றும் ஒரு நிறுவனம்.
மத்திய அமலாக்க இயக்குனரகம் அளிக்கும் தண்டனை விகிதம் மிகவும் குறைவானது. குற்றத்தில் ஈடுபடுபவர்கள் குறித்த தகவல்கள் மற்றும் ஆதாரங்களை பெற்ற பின்னரே மத்திய அமலாக்க இயக்குனரகம் செயல்படுகிறது. தனிப்பட்ட வழக்குகள் அல்லது அணுகுமுறை குறித்து நான் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை, ஆனால் நிச்சயமாக, அது எங்கு சென்று சோதனை நடத்தினாலும் முதன்மையான ஆதாரங்கள் அதனிடம் நிச்சயம் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- எந்தவிதமான ஒருங்கிணைப்பும் இல்லாமல் அணு ஆயுதம் வைத்துக்கொண்டிருப்பதாக குற்றச்சாட்டு
- அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முயற்சி
வாஷிங்டன்:
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், பாகிஸ்தானுக்கு எதிராக பேசியது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஜனநாயக கட்சியின் பிரச்சாரக் குழு வரவேற்பு நிகழச்சியில் ஜோ பைடன் இவ்வாறு பேசியிருக்கிறார்.
ரஷியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் அமெரிக்காவுக்கு ஏற்படுத்தி உள்ள சவால்கள் குறித்து பேசும்போது, பாகிஸ்தான் குறித்து பைடன் பேசினார். தன்னுடைய பார்வையில் பாகிஸ்தான் நாடு, உலகத்திலேயே மிகவும் ஆபத்தான நாடுகளில் ஒன்று எனவும், எந்தவிதமான ஒருங்கிணைப்பும் இல்லாமல் அணு ஆயுதம் வைத்துக்கொண்டிருக்கும் நாடு எனவும் தெரிவித்தார்.
அமெரிக்காவுடனான உறவை மேம்படுத்துவதற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் முயற்சி மேற்கொண்டு வரும் நிலையில், பைடன் இவ்வாறு கூறியிருப்பது பாகிஸ்தான் அரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு கொள்கை வெளியிடப்பட்ட இரண்டு நாட்களுக்குப் பிறகு பைடனின் இந்த கருத்துக்கள் வந்துள்ளன. 48 பக்கங்கள் கொண்ட இந்த பாதுகாப்பு கொள்கை அறிக்கையில் பாகிஸ்தானைப் பற்றி எந்தக் குறிப்பும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- விண்கலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள அட்லாண்டிக் கடலில் தரையிறங்கியது.
- விண்வெளி நிலையத்தில் தற்போது 7 விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
கேப் கனரவல்:
நாசாவின் 4 விண்வெளி வீரர்கள் கடந்த ஏப்ரல் மாதம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் விண்கலம் மூலம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு புறப்பட்டுச் சென்றனர். விண்வெளி நிலையத்தில் சுமார் 6 மாத காலம் தங்கியிருந்து ஆய்வு மேற்கொண்ட அவர்கள், நேற்று பூமிக்கு திரும்பினர். அவர்களின் விண்கலம் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள அட்லாண்டிக் கடலில் தரையிறங்கியது.
விண்கலமானது, விண்வெளி நிலையத்தை விட்டு வெளியேறிய சுமார் ஐந்து மணி நேரத்திற்குப் பிறகு, புளோரிடாவின் ஜாக்சன்வில்லிக்கு அருகில் கடலில் பாராசூட் மூலம் இறங்கியது. பூமிக்கு திரும்பிய விண்வெளி வீரர்களுக்கு மாற்றாக, ஸ்பேஸ்எக்ஸ் கடந்த வாரம் வேறு வீரர்களை அனுப்பியது. தற்போது விண்வெளி நிலையத்தில் 3 அமெரிக்கர்கள், 3 ரஷியர்கள் மற்றும் ஒரு ஜப்பானியர் தங்கியிருந்து ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
- 2020-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவினார்.
- நாடாளுமன்ற குழு டிரம்பிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோல்வியை தழுவினார். ஆனால் அவர் தனது தோல்வியை ஏற்காமல் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக குற்றம் சாட்டி வந்தார்.
இந்த சூழலில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடனுக்கு வெற்றி சான்றிதழ் வழங்க அமெரிக்க நாடாளுமன்றம் கூடியது. அப்போது டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இதில் 5 பேர் பலியாகினர்.
ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கிய இந்த சம்பவம் குறித்து விசாரிக்க நாடாளுமன்ற குழு அமைக்கப்பட்டது. பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தி வரும் இந்தக் குழு இந்த சம்பவம் தொடர்பாக முன்னாள் ஜனாதிபதி டிரம்பிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது. அதன்படி விசாரணைக்கு நேரில் ஆஜராகும்படி டிரம்புக்கு அந்த விசாரணை குழு சம்மன் அனுப்பியுள்ளது. இருப்பினும், தன் மீதான குற்றச்சாட்டுகளை திட்டவட்டமாக மறுத்து வரும் டிரம்ப் இந்த விசாரணை முடிவை எதிர்த்து மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- உக்ரைன், ரஷியா இடையிலான போர் 7 மாதத்தைக் கடந்து நீடித்து வருகிறது.
- போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி செய்து வருகிறது.
வாஷிங்டன்:
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா தொடங்கிய போர் 7 மாதங்களைக் கடந்துள்ளது. போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு ராணுவ ஆயுத உதவிகளை அமெரிக்கா தொடர்ந்து வழங்கி வருகிறது.
இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 725 மில்லியன் டாலர்கள் நிதி உதவி அளிக்கப்படும் என அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்டனி பிளிங்கன் உறுதியளித்தார்.
ஏற்கனவே, கடந்த வாரம் அதிபர் ஜோ பைடன், உக்ரைன் அதிபரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு 625 மில்லியன் டாலர் நிதியுதவி அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அரசுமுறை பயணமாக நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அமெரிக்கா சென்றுள்ளார்.
- அங்கு அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.
வாஷிங்டன்:
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள அமெரிக்கா சென்றுள்ளார்.
ஐ.எம்.எப். எனப்படும் சர்வதேச நிதி ஆணையத்தின் ஆண்டுக்கூட்டம் அமெரிக்காவில் வரும் 16-ம் தேதி நடைபெறுகிறது. அமெரிக்க நிதி மந்திரி ஜேனட் ஏலனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும், உலக வங்கியின் வருடாந்திர கூட்டங்களில் பங்கேற்க உள்ளார்.
இந்நிலையில், இந்தியாவின் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், ஐரோப்பிய யூனியன் பொருளாதார ஆணையரான பாவ்லோ ஜெண்டிலோனியை சந்தித்துப் பேசினார். அப்போது, இரு தலைவர்களும் தற்போதைய உலகப் பொருளாதார நிலைமை குறித்து விவாதித்ததாக மத்திய நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- விமான நிலையத்தில், திருடன் என குரல் எழுப்பிய போராட்டக்காரர்கள்.
- வெளிநாடுகளில் பாகிஸ்தான் அமைச்சர்கள் தொடர்ந்து அவமதிப்பு
வாஷிங்டன்:
பாகிஸ்தான் புதிய நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள 72 வயதான இஷாக் தார், உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்திர கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ளார்.வாஷிங்டன் விமான நிலையத்திற்கு வந்த இறங்கிய அவர், அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் மசூத் கான் மற்றும் பிற அதிகாரிகளுடன் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது அவரை சூழ்ந்து கொண்ட போராட்டக்காரர்கள் சிலர், கோஷங்கள் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் தார் ஒரு பொய்யர் என்றும், திருடன் என்றும் போராட்டக்காரர்கள் குரல் எழுப்பும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வைரலானது. பாகிஸ்தான் அமைச்சர்கள் வெளிநாட்டுப் பயணங்களிலும் போது, பொது இடங்களில் சிலர் அவர்களை முற்றுகையிட்டு கோஷமிடுவது தொடர்கதையாகி வருகிறது.
கடந்த மாதம், லண்டனில் உள்ள ஒரு காபி ஷாப்பில் பாகிஸ்தான் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் மரியம் ஔரங்கசீப்பை சிலர் முற்றுகையிட்டு எதிர்ப்பு குரல் எழுப்பினர். இதேபோல் பாகிஸ்தான் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் அஹ்சன் இக்பால், ஒரு உணவகத்திற்கு சென்ற போது, இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் ஆதரவாளர்கள் அவருக்கு எதிராக கோஷமிட்டது குறிப்பிட்டதக்கது.
- துப்பாக்கி சூடு நடத்திய நபரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
- அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு நடந்து வருகிறது.
வாஷிங்டன்:
அமெரிக்காவின் வடக்கு கரோலினா தலைநகர் ராலேவில் குடியிருப்பு பகுதியில் பொதுமக்களை நோக்கி மர்ம நபர் ஒருவர் திடீரென்று துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த மக்கள் அலறியடித்து ஓடினார்கள். சிலர் குண்டு பாய்ந்து கீழே விழுந்தனர். பின்னர் அந்த மர்ம நபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.
இந்த துப்பாக்கி சூட்டில் ஒரு போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். காயம் அடைந்தவர்களை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
துப்பாக்கி சூடு நடத்திய நபரை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். இதில் அவர் போலீசாரிடம் சிக்கினார். அந்த நபர் யார்? எதற்காக துப்பாக்கி சூடு நடத்தினார்? என்ற விவரங்களை போலீசார் தெரிவிக்கவில்லை.
இச்சம்பவம் தொடர்பாக ராலே நகர மேயர் மேரி-ஆன் பால்ட்வின் கூறும் போது, ராலேவில் உள்ள பிரபல இடமான நியூஸ் ரிவர் கிரீன்வே அருகே துப்பாக்கி சூடு நடந்துள்ளது. ராலே நகருக்கு இது ஒரு சோகமான நாள் என்றார்.
அமெரிக்காவில் அடிக்கடி துப்பாக்கி சூடு நடந்து வருகிறது. இதை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனால் துப்பாக்கி சூடு சம்பவங்கள் தொடர்ந்தபடி தான் உள்ளது.
- இந்தியாவில் 5ஜி சேவை முதல் கட்டமாக 4 நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- 5ஜி தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது.
வாஷிங்டன்:
அமெரிக்காவில் பயணம் மேற்கொண்டுள்ள மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஜான்ஸ் ஹாப்கின்ஸ் ஸ்கூல் ஆப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸ் கல்லூரியின் மாணவர்களுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:
இந்தியாவின் 5ஜி தொழில்நுட்பம் முற்றிலும் உள்நாட்டில் உருவானது. தென் கொரியா போன்ற நாடுகளில் இருந்து ஒருசில முக்கியமான பாகங்கள் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டு 5ஜி தொழில்நுட்பம் உருவானது.
5ஜி தொழில்நுட்பத்தில் இந்தியாவின் சாதனையைப் பற்றி நாம் பெருமிதம் கொள்ளலாம். 5ஜி தொழில்நுட்பத்தை மற்ற நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள இந்தியா தயாராக உள்ளது. 2024-க்குள் நாட்டின் பெரும்பாலான மக்கள் 5ஜி சேவைப் பெற முடியும் என தெரிவித்தார்.






