என் மலர்tooltip icon

    பிரிட்டன்

    • இந்திய அணியின் ரோகித் சர்மா, சுப்மான் கில் விரைவில் அவுட்டாகினர்.
    • ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ், போலண்ட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    லண்டன்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது. டிராவிஸ் ஹெட் 163 ரன்னில் அவுட்டானார். ஸ்டீவன் ஸ்மித் 121 ரன்னில் போல்டானார். அலெக்ஸ் கேரி 48 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஷமி, ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, இந்தியா முதல் இன்னிங்சில் களமிறங்கியது. ரோகித் சர்மா, சுப்மான் கில் அதிரடியாக தொடங்கினர். ரோகித் சர்மா 15 ரன்னிலும், சுப்மான் கில் 13 ரன்னிலும் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தனர்.

    தேநீர் இடைவேளை வரை இந்தியா 2 விக்கெட்டுக்கு 37 ரன்களை எடுத்துள்ளது. புஜார் 3 ரன்னும், விராட் கோலி 4 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    ஆஸ்திரேலியா சார்பில் கம்மின்ஸ், போலண்ட் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 469 ரன்களை குவித்துள்ளது.
    • அந்த அணியின் டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் ஆகியோர் சதமடித்தனர்.

    லண்டன்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 327 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் சதமடித்தார். அவருக்கு ஸ்மித் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஆட்ட நேர முடிவில் ஹெட் 146 ரன்னுடனும், ஸ்மித் 95 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் ஸ்டீவன் ஸ்மித் சதமடித்தார். இது அவரது 31வது சதமாகும். பொறுப்புடன் ஆடிய டிராவிஸ் ஹெட் 163 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேமரூன் கிரீன் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, நிலைத்து நின்று ஆடிய ஸ்மித் 121 ரன்னில் போல்டானார். அடுத்து இறங்கிய மிட்செல் ஸ்டார்க் 5 ரன் எடுத்திருந்தபோது அக்சர் படேலின் துல்லிய பீல்டிங்கில் ரன் அவுட்டானார்.

    8-வது விக்கெட்டுக்கு அலெக்ஸ் கேரியுடன் பாட் கம்மின்ஸ் ஜோடி சேர்ந்தார். அலெக்ஸ் கேரி அதிரடியாக ஆடினார். அரை சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 48 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    இறுதியில், ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்களை குவித்து ஆல் அவுட்டானது.

    இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், ஷமி, ஷர்துல் தாக்குர் ஆகியோர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • பொறுப்புடன் ஆடிய ஸ்மித் சதமடித்து அசத்தினார்.
    • உணவு இடைவேளைக்கு முன் ஹெட், ஸ்மித் உள்ளிட்ட விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    லண்டன்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 327 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவருக்கு ஸ்மித் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஆட்ட நேர முடிவில் ஹெட் 146 ரன்னுடனும், ஸ்மித் 95 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் ஸ்டீவன் ஸ்மித் சதமடித்தார். இது அவரது 31வது சதமாகும். பொறுப்புடன் ஆடிய டிராவிஸ் ஹெட் 163 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேமரூன் கிரீன் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, நிலைத்து நின்று ஆடிய ஸ்மித் 121 ரன்னில் போல்டானார்.

    அடுத்து இறங்கிய மிட்செல் ஸ்டார்க் 5 ரன் எடுத்திருந்தபோது அக்சர் படேலின் துல்லிய பீல்டிங்கில் ரன் அவுட்டானார்.

    இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 422 ரன்களை குவித்துள்ளது. அலெக்ஸ் கேரி 22 ரன்னும், கம்மின்ஸ் 2 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்தியா சார்பில் ஷமி, ஷர்துல் தாக்குர், சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    • டிராவிஸ் ஹெட் 163 ரன்னில் ஆட்டமிழந்தார்.
    • ஸ்டீவன் ஸ்மித் 121 ரன்னில் வெளியேறினார்.

    லண்டன்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவருக்கு ஸ்மித் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஆட்ட நேர முடிவில் ஹெட் 146 ரன்னுடனும், ஸ்மித் 95 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது சிறிது நேரத்தில் ஸ்டீவன் ஸ்மித் சதமடித்தார். இது அவரது 31வது சதமாகும்.

    இந்நிலையில், பொறுப்புடன் ஆடிய டிராவிஸ் ஹெட் 163 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேமரூன் கிரீன் 6 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து, நிலைத்து நின்று ஆடிய ஸ்மித் 121 ரன்னில் போல்டனார்.

    இந்தியா சார்பில் ஷமி, ஷர்துல் தாக்குர், சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    உணவு இடைவேளைக்குள் ஹெட், ஸ்மித் உள்ளிட்ட 3 முக்கிய விக்கெட்டுகளை இந்திய பந்துவீச்சாளர்கள் கைப்பற்றியது ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியது.

    • முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலியா 327 ரன்களை குவித்தது.
    • 2ம் நாள் தொடக்கத்தில் ஸ்மித் சதமடித்து அசத்தினார்.

    லண்டன்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவருக்கு ஸ்மித் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஆட்ட நேர முடிவில் ஹெட் 146 ர்ன்னுடனும், ஸ்மித் 95 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது சிறிது நேரத்தில் ஸ்டீவன் ஸ்மித் சதமடித்தார். இது அவரது 31வது சதமாகும்.

    • டீப் ஸ்லீப் ஹோட்டலில் நான்கு தனியார் இரட்டை படுக்கை அறைகள் மற்றும் இரட்டை படுக்கையுடன் கூடிய ரொமான்டிக் அறை உள்ளது.
    • விருந்தினர்களுக்கு பயணத்திற்கு முன் ஹெல்மெட், லைட், சேணம் மற்றும் பூட்ஸ் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    இங்கிலாந்தில் நிலத்தடி சுரங்கத்தில் விருந்தினர்களை தூங்க அனுமதிக்கும் வகையில் உலகின் மிக ஆழமான ஓட்டல் ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

    இங்கிலாந்தில் உள்ள விக்டோரியன் சுரங்கத்தின் அடிப்பகுதியில் 400 மீட்டர் நிலத்தடியில் திறக்கப்பட்டுள்ள இந்த டீப் ஸ்லீப் ஓட்டல், வடக்கு வேல்ஸில் எரிரி தேசிய பூங்கா என்று அழைக்கப்படும் ஸ்னோடோனியாவின் மலைகளுக்கு அடியில் அமைந்துள்ளது.

    டீப் ஸ்லீப் ஹோட்டலில் நான்கு தனியார் இரட்டை படுக்கை அறைகள் மற்றும் இரட்டை படுக்கையுடன் கூடிய ரொமான்டிக் அறை உள்ளது.

    இது வாரத்தில் ஒரு நாள், சனிக்கிழமை இரவு முதல் ஞாயிற்றுக்கிழமை காலை வரை வாடகைக்கு எடுத்துக் கொள்ளலாம்.

    விருந்தினர்கள் தங்குமிடத்தை அடைய, முதலில் விக்டோரியன் ஸ்லேட் சுரங்கத்தின் வழியாக பயண உதவியாளருடன் மலையேற வேண்டும். சுரங்கத்தின் கீழே பயணம் செய்ய பண்டைய சுரங்க படிக்கட்டுகள், பழைய பாலங்கள் மற்றும் ஸ்கிராம்பிள்களை கொண்டு பயணிக்க வேண்டும்.

    ஒரு மணி நேர மலையேற்றத்தின் போது, ஒரு பயிற்றுவிப்பாளர் சுற்றுச்சூழல் பற்றிய ஏராளமான வரலாற்று தகவல்களை வழங்குவார்.

    விருந்தினர்களுக்கு பயணத்திற்கு முன் ஹெல்மெட், லைட், சேணம் மற்றும் பூட்ஸ் ஆகிய பாதுகாப்பு அம்சங்கள் வழங்கப்படுகிறது.

    இடத்தை அடைந்த பிறகு, ஓட்டலில் தங்கும் விருந்தினருக்கு சூடான பானமும் மாலை முழுவதும் ஓய்வெடுக்க நேரமும் வழங்கப்படுகிறது. சைவ மற்றும் அசைவ உணவுகள் வழங்கப்படுகிறது. பின்னர் ஆழ்ந்த உறக்கத்திற்காக படுக்கை அறைகளும் உள்ளன.

    ஒரு தனியார் கேபினில் இருவர் தங்குவதற்கு ஒரு இரவிற்கு ரூ. 36,003 வசூலிக்கப்படுகிறது. அதே சமயம் ரொமான்டிக் அறையில் இருவர் தங்க ரூ. 56,577 வசூலிக்கப்படுவதாக ஓட்டல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

    • ஹெட் 146 ரன்னுடனும், ஸ்மித் 95 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
    • இந்தியா சார்பில் சிராஜ், ஷர்துல் தாக்குர், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா முகமது சிராஜ் பந்தில் டக் அவுட்டானார். டேவிட் வார்னருடன் லாபுசேன் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது. 69 ரன்கள் சேர்த்த நிலையில் வார்னர் 43 ரன்னில் அவுட்டானார்.

    இதையடுத்து, லாபுசேனுடன் ஸ்மித் இணைந்தார். லாபுசேன் 26 ரன்னுடன் ஆடினார். உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 73 ரன்னுக்கு 2 விக்கெட்களை இழந்திருந்தது.

    உணவு இடைவேளைக்கு பின் ஆட்டம தொடங்கிய சிறிது நேரத்தில் லாபுசேன் 26 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து இறங்கிய டிராவிஸ் ஹெட், ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்தார்.

    நிதானமாக ஆடிய இந்த ஜோடி பொறுப்புடன் ரன்களை சேர்த்தது. சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் அரை சதமடித்தார்.

    தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து விளையாடிய ஹெட் 146 ரன்னுடனும், ஸ்மித் 95 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்தியா சார்பில் சிராஜ், ஷர்துல் தாக்குர், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இந்நிலையில், முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 85 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 327 ரன்களை ஆஸ்திரேலியா குவித்துள்ளது.

    • இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • உணவு இடைவேளையில் ஆஸ்திரேலியா 2 விக்கெட்டுக்கு 73 ரன்கள் எடுத்திருந்தது.

    லண்டன்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்கியது.

    தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா முகமது சிராஜ் பந்தில் டக் அவுட்டானார். டேவிட் வார்னருடன் லாபுசேன் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது.

    69 ரன்கள் சேர்த்த நிலையில் வார்னர் 43 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து, லாபுசேனுடன் ஸ்மித் இணைந்தார். லாபுசேன் 26 ரன்னுடன் ஆடி வருகிறார். உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 73 ரன்னுக்கு 2 விக்கெட்களை இழந்திருந்தது.

    உணவு இடைவேளைக்கு பின் ஆட்டம தொடங்கிய சிறிது நேரத்தில் லாபுசேன் 26 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    அடுத்து இறங்கிய டிராவிஸ் ஹெட், ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்தார். நிதானமாக ஆடிய இந்த ஜோடி பொறுப்புடன் ரன்களை சேர்த்தது.

    சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் அரை சதமடித்தார்.

    தேநீர் இடைவேளை வரை ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 170 ரன்கள் சேர்த்துள்ளது. ஹெட் 60 ரன்னுடனும், ஸ்மித் 33 ரன்னுடனும் களத்தில் உள்ளனர்.

    இந்தியா சார்பில் சிராஜ், ஷர்துல் தாக்குர், ஷமி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    • இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.
    • டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சை தேர்வு செய்தது.

    லண்டன்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியது.

    டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்குகியது.

    தொடக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜா முகமது சிராஜ் பந்தில் டக் அவுட்டானார். டேவிட் வார்னருடன் லாபுசேன் இணைந்தார். இந்த ஜோடி நிதானமாக ஆடியது.

    69 ரன்கள் சேர்த்த நிலையில் வார்னர் 43 ரன்னில் அவுட்டானார். இதையடுத்து, லாபுசேனுடன் ஸ்மித் இணைந்தார். லாபுசேன் 26 ரன்னுடன் ஆடி வருகிறார்.

    உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 73 ரன்னுக்கு 2 விக்கெட்களை இழந்துள்ளது.

    இந்தியா சார்பில் சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • டாஸ் வென்ற ரோகித் சர்மா ஆடும் லெவனை அறிவிக்கும்போது, அஸ்வின் பெயர் இல்லை.
    • இது அஸ்வின் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

    லண்டன்:

    இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

    பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என வல்லுனர்கள் கணித்த காரணத்தினால் 2 சுழற் பந்துவீச்சாளர்களுடன் இந்தியா களமிறங்குமா என்ற கேள்வி இருந்து கொண்டே வந்தது.

    ஏனென்றால் அஸ்வின், ஜடேஜா ஆகிய இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் அல்ல. அஸ்வின் சிறந்த ஆப் ஸ்பின்னர், ஜடேஜா சிறந்த லெக் ஸ்பின்னர். அத்துடன் இரண்டு பேரும் பேட்டிங்கும் செய்யக்கூடியவர்கள். இதனால் யாரை எடுப்பார்கள் என்ற விவாதம் நடந்து கொண்டே இருந்தது.

    இந்நிலையில், டாஸ் வென்ற ரோகித் சர்மா ஆடும் லெவனை அறிவிக்கும்போது, அஸ்வின் பெயர் இல்லை. இது அஸ்வின் ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது.

    அஸ்வினை அணியில் சேர்க்காதது மிக கஷ்டமான ஒன்றுதான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் ஆடும் சூழ்நிலை மற்றும் அணியின் வெற்றி காம்பினேஷன் ஆகியவற்றிற்காக அவரை தவிர்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது என ரோகித் சர்மா தெரிவித்தார். அவருக்கு பதிலாக உமேஷ் யாதவை இந்திய அணி தேர்வு செய்துள்ளது. இந்தியா 4 வேக பந்துவீச்சாளர்களுடன் களம் இறங்கி உள்ளது.

    வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் போட்டி மூன்று அல்லது நான்கு நாட்களில் முடிந்து விட்டால் அஸ்வினை சேர்க்காதது குறித்து எந்த விவாதம் எழும்ப வாய்ப்பில்லை.

    ஒரு வேளை போட்டி ஐந்தாவது நாள் வரை நீடித்தால் சுழற் பந்துவீச்சு தாக்கம் அதிகமாக இருக்கும். மேலும் ஆஸ்திரேலியாவில் ஐந்து இடதுகை பேட்ஸ்மேன்கள் உள்ளனர். இடதுகை பேட்ஸ்மன்களுக்கு அஸ்வின் எப்போதுமே சவாலாக இருப்பார். ஆகையால் இந்தப் போட்டி முடிந்தபின் ஒருவேளை இந்தியாவுக்கு சாதகமாக போட்டி அமையாவிட்டால் அஸ்வினை அணியில் எடுக்காதது குறித்து மிகப்பெரிய விவாதம் எழும்பும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

    • உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை 2019-ம் ஆண்டு ஐ.சி.சி. அறிமுகப்படுத்தியது.
    • இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதுகின்றன.

    லண்டன்:

    உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப்பை 2019-ம் ஆண்டு ஐ.சி.சி. அறிமுகப்படுத்தியது. இரு ஆண்டுகள் நடக்கும் டெஸ்ட் போட்டிகளில் அதிக வெற்றிகளை குவித்து புள்ளிப்பட்டியலில் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.

    2021-ம் ஆண்டு சவுத்தம்டனில் நடந்த முதலாவது டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிச்சுற்றில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்து கோப்பையை கைப்பற்றியது.

    இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் இன்று தொடங்குகிறது.

    டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்படி, ஆஸ்திரேலிய அணி முதலில் களமிறங்குகிறது.

    இரு அணி வீரர்கள் விவரம் வருமாறு:

    இந்தியா: ரோகித் சர்மா, சுப்மான் கில், புஜாரா, விராட் கோலி, ரகானே, ஸ்ரீகர் பரத், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்குர், முகமது ஷமி, உமேஷ் யாதவ், முகமது சிராஜ்

    ஆஸ்திரேலியா: டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, லாபுசேன், ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி, பாட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், நாதன் லைன், ஸ்காட் போலண்ட்

    • போட்டி நடைபெறும் லண்டன் ஓவல் மைதானத்தின் ஆடுகளங்களை சேதப்படுத்தப்போவதாக கூறி உள்ளனர்.
    • மோசமான வானிலை காரணமாக போட்டி தடைபட்டால் ஒரு ரிசர்வ் டேயும் இருக்கும்.

    இரண்டாவது உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் போட்டி இன்று லண்டன் ஓவல் மைதானத்தில் தொடங்குகிறது. இதில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.

    இந்நிலையில் எண்ணெய் உற்பத்திக்கு எதிராக போராட்டம் நடத்தும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களால், இன்றைய கிரிக்கெட் போட்டிக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

    லண்டன் ஓவல் மைதானத்தில் போட்டி நடைபெறும்போது ஆடுகளம் மற்றும் மைதானத்தை சேதப்படுத்தப்போவதாக போராட்டக்காரர்கள் கூறி உள்ளனர். இதையடுத்து மைதானத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. எனினும், போராட்டக்காரர்கள், ரசிகர்களோடு ரசிகர்களாக வந்து ஆடுகளத்தில் புகுந்து சேதப்படுத்தவும் வாய்ப்பு உள்ளது. எனவே, முன்னெச்சரிக்கையாக ஐசிசி 2 ஆடுகளங்களை தயார்நிலையில் வைத்துள்ளது.

    கேப்டன்கள் ரோகித் சர்மா மற்றும் பேட் கம்மின்ஸ் ஆகியோருக்கும் நம்பிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை ஆடுகளம் சேதமடையும்பட்சத்தில், இருவரும் விளையாட ஒப்புக்கொண்டால், மாற்று ஆடுகளத்தில் தொடர்ந்து விளையாடுவார்கள். இல்லையெனில் போட்டி ரத்து செய்யப்படலாம் அல்லது கைவிடப்படலாம். 

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி ஓவல் மைதானத்தில் இன்று முதல் 11 வரை இந்திய நேரடிப்படி மாலை 3 மணிக்கு தொடங்கி நடைபெறும். மோசமான வானிலை காரணமாக போட்டி தடைபட்டால் ஒரு ரிசர்வ் டேயும் இருக்கும்.

    பிரிட்டனில் புதிய புதைபடிவ எரிபொருள் உரிமம் மற்றும் உற்பத்தியை அரசு நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும், பெட்ரோல், டீசல் மற்றும் எரிவாயு மூலம் இயங்கும் வாகனங்களை முற்றிலுமாக தடை செய்ய வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது. இதற்காக ஜஸ்ட் ஸ்டாப் ஆயில் என்ற குழுவை அமைத்துள்ளனர்.

    நாட்டில் புதைபடிவ எரிபொருட்களின் ஆய்வு மற்றும் உற்பத்தி தொடர்பான அனைத்து எதிர்கால ஒப்புதல்கள் மற்றும் உரிமம் தொடர்பான ஒப்பந்தங்களை நிறுத்தவேண்டும் என இந்த அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. மேலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் முதலீடு செய்யவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.

    ×