search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - 2வது நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 422/7
    X

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - 2வது நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலியா 422/7

    • பொறுப்புடன் ஆடிய ஸ்மித் சதமடித்து அசத்தினார்.
    • உணவு இடைவேளைக்கு முன் ஹெட், ஸ்மித் உள்ளிட்ட விக்கெட்டுகள் வீழ்ந்தன.

    லண்டன்:

    இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 3 விக்கெட்டுக்கு 327 ரன்கள் குவித்தது. டிராவிஸ் ஹெட் சிறப்பாக ஆடி சதமடித்தார். அவருக்கு ஸ்மித் நன்கு ஒத்துழைப்பு கொடுத்தார். ஆட்ட நேர முடிவில் ஹெட் 146 ரன்னுடனும், ஸ்மித் 95 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

    இந்நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. சிறிது நேரத்தில் ஸ்டீவன் ஸ்மித் சதமடித்தார். இது அவரது 31வது சதமாகும். பொறுப்புடன் ஆடிய டிராவிஸ் ஹெட் 163 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய கேமரூன் கிரீன் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து, நிலைத்து நின்று ஆடிய ஸ்மித் 121 ரன்னில் போல்டானார்.

    அடுத்து இறங்கிய மிட்செல் ஸ்டார்க் 5 ரன் எடுத்திருந்தபோது அக்சர் படேலின் துல்லிய பீல்டிங்கில் ரன் அவுட்டானார்.

    இரண்டாம் நாள் உணவு இடைவேளை வரை ஆஸ்திரேலிய அணி 7 விக்கெட்டுக்கு 422 ரன்களை குவித்துள்ளது. அலெக்ஸ் கேரி 22 ரன்னும், கம்மின்ஸ் 2 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இந்தியா சார்பில் ஷமி, ஷர்துல் தாக்குர், சிராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    Next Story
    ×