search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்திய அணி சரிவில் இருந்து மீளுமா?
    X

    உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: இந்திய அணி சரிவில் இருந்து மீளுமா?

    • முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா 469 ரன்கள் குவித்து ஆல்-அவுட் அனது.
    • இந்திய அணி ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சில் திணறியது.

    லண்டன்:

    இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் தொடங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா நேற்றைய 2-ம் நாள் ஆட்டத்தில் 469 ரன்கள் குவித்து ஆல்-அவுட் அனது.

    டிராவிஸ் ஹெட் 163 ரன்னும், ஸ்டீவன் சுமித் 121 ரன்னும், அலெக்ஸ் கேரி 48 ரன்னும் எடுத்தனர்.

    இந்திய தரப்பில் முகமது சிராஜ் 4 விக்கெட்டும், முகமது சமி, ஷர்துல் தாக்கூர் தலா 2 விக்கெட்டும், ஜடேஜா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

    பின்னர் முதல் இன்னிங்சை விளையாடிய இந்திய அணி ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சில் திணறியது. கேப்டன் ரோகித் சர்மா 15 ரன்னிலும், சுப்மன் கில் 13 ரன்னிலும், புஜாரா, கோலி தலா 14 ரன்னிலும் அடுத்தடுத்து அவுட் ஆனார்கள். இந்தியா 71 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்தது. பின்னர் ரகானே-ஜடேஜா ஜோடி நிதானமாக விளையாடியது. ஜடேஜா 48 ரன்னில் அவுட் அனார்.

    நேற்றைய 2-ம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 38 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 151 ரன்கள் எடுத்தது. ரகானே 29 ரன்னுடனும், கே.எஸ்.பரத் 5 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இன்று 3-ம் நாள் ஆட்டம் நடக்கிறது.

    இந்திய அணி ஆஸ்திேரலியாவை விட 318 ரன்கன் பின்தங்கி உள்ளது. பாலோ-ஆனை தவிர்க்க இன்னும் 119 ரன்கள் சேர்த்தாக வேண்டும். கைவசம் 5 விக்கெட்டுகள் உள்ளன.

    தற்போதைய நிலையில் ஆஸ்திரேலியாவின் கையே ஓங்கி இருக்கிறது. இதனால் இந்திய அணி சரிவில் இருந்து மீண்டும் எழுச்சி பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

    ரகானே நிலைத்து நின்று விளையாடுவது முக்கியம். அவருக்கு மற்ற வீரர்கள் உறுதுணையாக ஆட வேண்டும். அதே வேளையில் ஆடுகளத்தை ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் நன்கு கணித்து பந்து வீசுகிறார்கள். இதனால் இந்திய பேட்ஸ்மேன்கள் கவனமுடன் விளையாடுவது அவசியம்.

    இன்றைய ஆட்டம் இந்தியாவுக்கு முக்கியமானது. இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால்தான் ஆஸ்திரேலியாவுக்கு பதிலடி கொடுக்க முடியும்.

    Next Story
    ×