என் மலர்
இலங்கை
- முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.
- இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது.
கொழும்பு:
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. முதலில் நடந்த டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியது.
இவ்விரு அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் வரும் 20ம் தேதி தொடங்குகிறது. ஒருநாள் தொடரின் போட்டிகள் அனைத்தும் பல்லகலேவில் நடைபெற உள்ளது.
இந்நிலையில், ஒருநாள் தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. சரித் அசலங்கா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அணியில் வனிந்து ஹசரங்கா, சதீரா சமரவிக்ரமா, மகேஷ் தீக்சனா உள்ளிட்ட சீனியர் வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இலங்கை அணியின் விவரம் வருமாறு:
சரித் அசலங்கா (கேப்டன்), அவிஷ்கா பெர்ணாண்டோ, பதும் நிசாங்கா, குசால் மெண்டிஸ், ஜனித் லியானகே, சதீரா சமரவிக்ரமா, நிஷான் மதுஷ்கா, துனித் வெல்லாலகே, வனிந்து ஹசரங்கா, மகேஷ் தீக்சனா, ஜெப்ரி வாண்டர்சே, சமிது விக்ரமசிங்கே, அசிதா பெர்ணாண்டோ, தில்ஷன் மதுஷன்கா, முகமது ஷிராஸ்.
- முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 162 ரன்கள் எடுத்தது.
- அடுத்து ஆடிய இலங்கை 166 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
தம்புல்லா:
இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 162 ரன்கள் எடுத்தது. பொறுப்புடன் ஆடிய கேப்டன் பவல் 37 ரன்னில் ஆட்டமிழந்தார். அதிரடியாக விளையாடிய மோதி 15 பந்தில் 32 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இலங்கை அணி சார்பில் தீக்ஷனா, ஹசரங்கா தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 163 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது. தொடக்க ஜோடி அதிரடியாக ஆடியது.
முதல் விக்கெட்டுக்கு 60 ரன்கள் சேர்த்த நிலையில் பதும் நிசங்கா 39 ரன்னில் அவுட்டானார். குசால் மெண்டிஸ், குசால் பெராரா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தனர்.
இறுதியில் இலங்கை அணி ஒரு விக்கெட்டுக்கு 166 ரன்களை எடுத்து வெற்றி பெற்றது. அத்துடன் டி20 தொடரை 2-1 என கைப்பற்றியது. குசால் மெண்டிஸ் 68 ரன்னும், குசால் பெராரா 55 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
- டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய இலங்கை 179 ரன்கள் எடுத்தது.
கொழும்பு:
வெஸ்ட் இண்டீஸ் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.
இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி தம்புலாவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட் செய்த இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்தது. கேப்டன் அசலங்கா 59 ரன்னும், கமிந்து மெண்டிஸ் 51 ரன்னும் எடுத்தனர்.
இதையடுத்து, 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான பிராண்டன் கிங், எவின் லெவிஸ் ஜோடி அதிரடியில் மிரட்டியது.
முதல் விக்கெட்டுக்கு 109 ரன்கள் சேர்த்த நிலையில் லெவிஸ், 28 பந்தில் 50 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய ஷாய் ஹோப் 9 ரன்னில் ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து, அதிரடியாக ஆடிய பிராண்டன் கிங் அரை சதம் கடந்து 63 ரன்னில் வெளியேறினார். ரோஸ்டன் சேஸ் 19 ரன்னும், ரோவ்மேன் பவெல் 13 ரன்னும் எடுத்தனர்.
இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் 19.1 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன், டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.
- வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை சென்றார்.
- அவர் அந்நாட்டு அதிபர் மற்றும் பிரதமர் ஆகியோரை சந்தித்தார்.
கொழும்பு:
இலங்கையில் கடந்த மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அனுரகுமரா திசநாயகே தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றி பெற்றது.
இலங்கை அதிபராக அனுரகுமரா திசநாயகே பொறுப்பேற்றுள்ளார். இலங்கை பிரதமராக ஹரினி அமரசூரிய பொறுப்பேற்றுள்ளார்.
இந்நிலையில், இலங்கையில் புதிய அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் இலங்கை சென்றார். புதிய அரசு அமைந்தபின் இலங்கை செல்லும் முதல் வெளிநாட்டு முக்கிய தலைவர் ஜெய்சங்கர் ஆவார்.
இலங்கை சென்ற மந்திரி ஜெய்சங்கர் அந்நாட்டு அதிபர் அனுரகுமரா திசநாயகே மற்றும் பிரதமர் ஹரினியை தனித்தனியாகச் சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது இந்தியா-இலங்கை இடையிலான நல்லுறவை மேலும் வலுப்படுத்துதல், இலங்கையில் இந்தியாவின் உதவியில் மேற்கொள்ளப்படும் திட்டப்பணிகளை மேலும் அதிகரித்தல் உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
- இருநாடுகள் இடையிலான கூட்டாண்மையை உறுதி செய்ய பயணம்.
- தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது குறித்தும் பேச்சுவார்த்தை.
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அரசு முறைப் பயணமாக நாளை இலங்கை செல்கிறார்.
இலங்கையில் புதிய அதிபர் அநுர குமர திசநாயக்க பதவியேற்றுள்ள நிலையில் இருநாடுகள் இடையிலான கூட்டாண்மையை உறுதி செய்ய பயணம்.
இருநாட்டு வெளியுறவுக் கொள்கைகளை வலுப்படுத்தும் விதமாக ஜெய்சங்கர் இலங்கை பயணம் மேற்கொள்கிறார்.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவது அதிகரித்துள்ள நிலையில் அதுகுறித்து பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- சீனா உள்பட 35 நாட்டினர் விசா இல்லாமல் இலங்கைக்கு செல்லலாம்.
- 6 மாதங்கள் வரை விசா இல்லாமல் இருக்கலாம்.
இலங்கையில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அந்நாட்டு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இந்த நிலையில் இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா உள்பட 35 நாட்டினர் விசா இல்லாமல் இலங்கைக்கு செல்ல இலவச விசா திட்டம் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் இன்று முதல் அமலுக்கு வந்தது.
அதன்படி இந்தியா, இங்கிலாந்து உட்பட 35 நாடுகளை சேர்ந்தவர்கள் இலங்கைக்கு வருவதற்கு விசா தேவையில்லை என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது. 6 மாதங்கள் வரை விசா இல்லாமல் இலங்கையில் இருக்கலாம் என்றும் அந்நாட்டின் சுற்றுலாத் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
- துணை முதல்வராக நீங்கள் இன்று பதவியேற்ற செய்தியை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
- தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதையிலும் புதிய மைல்கல் எட்ட மனமார்ந்த வாழ்த்துக்கள்.
துணை முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழ்நாடு மாநிலத்தின் துணை முதல்வராக நீங்கள் இன்று பதவியேற்ற செய்தியை கேட்டதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.
அரசியல், சமூக நலத்துறை மற்றும் மக்களின் நன்மைக்காகச் செய்த உழைப்பின் அங்கீகாரம் இந்த உயர்ந்த பதவி தங்களுக்கு கிட்டி இருக்கிறது உங்கள் அனுபவமும், ஊக்கமும் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பை ஏற்படுத்தும்.
உங்கள் புதிய பொறுப்பில் சிறப்பாக செயல்பட்டு தமிழ்நாட்டு மக்கள் நலனிலும் தமிழ்நாட்டின் வளர்ச்சி பாதையிலும் புதிய மைல்கல் எட்ட மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

- இலங்கை அணி முதல் இன்னிங்சில் 602 ரன்கள் குவித்து டிக்ளேர்.
- நியூசிலாந்து முதல் இன்னிங்சில் 88 ரன்னும், 2வது இன்னிங்சில் 360 ரன்னிலும் சுருண்டது.
காலே:
இலங்கை, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 602 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.
சண்டிமல் (116), கமிந்து மெண்டிஸ் (182 நாட்அவுட்), குசால் மெண்டிஸ் (106 நாட்அவுட்) ஆகியோர் சதம் விளாசினர்.
அதன்பின், முதல் இன்னிங்சை தொடங்கிய நியூசிலாந்து 88 ரன்னில் சுருண்டது. சான்ட்னர் 29 ரன்கள் எடுத்தார்.
இலங்கையின் பிரதாப் ஜெயசூர்யா 6 விக்கெட்டும், நிஷான் பெய்ரிஸ் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
514 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலோ ஆன் பெற்ற நியூசிலாந்து 2வது இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் டேவன் கான்வே அரை சதமடித்து 61 ரன் எடுத்தார். கேன் வில்லியம்சன் 46 ரன் எடுத்தார். கிளென் பிலிப்ஸ் 78, சான்ட்னர் 67, டாம் பிளெண்டல் 60 ரன்னும் எடுத்து போராடினர்.
இறுதியில், நியூசிலாந்து 2வது இன்னிங்சில் 360 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 154 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அபார வெற்றி பெற்றதுடன் 2-0-என டெஸ்ட் தொடரை கைப்பற்றி அசத்தியது.
இலங்கை அணி சார்பில் நிஷான் பெய்ரிஸ் 6 விக்கெட்டும், பிரபாத் ஜெயசூர்யா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.
ஆட்ட நாயகனாக கமிந்து மெண்டிசும், தொடர் நாயகனாக பிரபாத் ஜெயசூர்யாவும் தேர்வு செய்யப்பட்டனர்.
- நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி
- 2-வது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதல் பேட்டிங் தேர்வு செய்தது.
இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நியூசிலாந்து அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
காலே மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி பெற்று தொடரில் முன்னிலை பெற்றது.
இன்று அதே மைதானத்தில் 2 ஆவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதல் பேட்டிங் தேர்வு செய்தது.
தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கிய பதும் நிசாங்கா 1 ரன்னில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். மற்றொரு தொடக்க ஆட்டக்காரராக திமுத் கருணாரத்னே 46 ரன்கள் அடித்திருந்தபோது ரன் அவுட்டாகி வெளியேறினார்.
பின்னர் ஜோடி சேர்ந்த தினேஷ் சண்டிமால் மற்றும் ஏஞ்சலோ மேத்யூஸ் பொறுப்புடன் விளையாடி ரன்களை சேர்த்தனர். நிதானமாக விளையாடிய சண்டிமால் சதமடித்து 116 ரன்னில் ஆட்டமிழந்தார்.
இலங்கை அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 306 ரன்களை எடுத்துள்ளது. ஏஞ்சலோ மேத்யூஸ் 78 ரன்களும் கமிந்து மெண்டிஸ் 51 ரன்களும் அடித்து களத்தில் உள்ளனர்.
- இனி வரும் காலங்களில் இலங்கையின் சர்வதேச நிலைப்பாடு குறித்து திசநாயக விளக்கம் அளித்துள்ளார்.
- பிராந்திய பிரச்சனைகள் அதிகரித்து வருகின்றன
இலங்கை அதிபராகப் பதவியேற்றுள்ள இடதுசாரி தலைவர் அனுர குமார திசநாயக கொள்கை ரீதியாக சீனாவுக்கே அதிக ஆதரவு அளிப்பார் என்று கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இனி வரும் காலங்களில் இலங்கையின் சர்வதேச நிலைப்பாடு குறித்து திசநாயக விளக்கம் அளித்துள்ளார்.
அதிகரித்து வரும் பிராந்திய பிரச்சனைகளுக்கு இடையே இலங்கையின் வெளியுறவுக் கொள்கை நாட்டின் இறையாண்மையைப் பேணுவதையே பிரதானமாக கொண்டு அமையும். புவிசார் அரசியல் சண்டைகளில் நாங்கள் பங்குபெறப் போவதில்லை. எந்த பக்கமும் நாங்கள் சாயமாட்டோம்.

குறிப்பாக இந்தியா சீனா இடையில் நாங்கள் சிக்கிக்கொள்ள விரும்பவில்லை. இரண்டு நாடுகளின் நடப்பையும் நாங்கள் போற்றுகிறோம். எங்கள் அரசின் கீழ் இனி வரும் காலங்களில் இரு நாடுகளுடனும் நெருக்கத்தை அதிகரிக்க முயற்சிப்போம். மேலும், ஐரோப்பிய யூனியன், மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுடனும் நட்புறவு ஏற்படுத்த விழைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
- மீன்பிடிக்க சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.
- அச்சத்தில் மீன் பிடிக்காமல் மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்.
கச்சத்தீவு அருகே துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டு தமிழக மீனவர்கள் விரட்டியடித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சுமார் 300க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்றுள்ளனர்.
இந்நிலையில், இலங்கை கடற்படையினரின் அத்துமீறல் தமிழக மீனவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதுவரை இல்லாத அளவிற்கு அதிகப்படியான ரோந்து கப்பலில் இலங்கை கடற்படை வந்ததாக மீனவர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஒரு படகிற்கு 50 ஆயிரம் முதல் 70 ஆயிரம் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை அடைந்துள்ளனர்.
இதன் எதிரொலியால், அச்சத்தில் மீன் பிடிக்காமல் மீனவர்கள் கரை திரும்பி வருகின்றனர்.
- அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் பாராளுமன்றம் கலைப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அனுர குமார திசநாயக புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நேற்று முன்தினம் இவர் அதிபராக பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுகிறது. இதில் நள்ளிரவு (நேற்று) முதல் அமலுக்கு வரும் என அறிவித்தார். அத்துடன் நவம்பர் மாதம் 14-ந்தேதி பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் எனவும் அறிவித்தார்.
அனுர குமார திசநாயகா அதிபராக பதவி ஏற்றதும் பாராளுமன்றம் கலைப்பு அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்தத நகர்வாக பார்க்கப்படுகிறது. கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றம் தேர்தல் நடத்தப்பட்டது. அதன் பதவிக்கலாம் 2025 ஆகஸ்ட் வரை உள்ளது. இருந்த போதிலும் 11 மாதங்களுக்கு முன்னதாக நேற்று நள்ளிரவுடன் கலைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கடந்த 21-ந் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இதில் ஆட்சியில் இருந்த ரணில் விக்ரமசிங்கே, முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சே உள்பட 38 பேர் போட்டியிட்டனர். தேர்தல் முடிந்ததும் உடனடியாக வாக்குகள் எண்ணப்பட்டன. இதில் வெற்றி பெறத்தேவையான 50 சதவீதத்துக்கு அதிகமான வாக்குகளை யாரும் பெறாததால் இலங்கை வரலாற்றில் முதல் முறையாக விருப்ப வாக்குகள் எண்ணப்பட்டன.
இதில் நீண்ட இழுபறிக்கு பிறகு தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திசநாயக (வயது 56) வெற்றி பெற்றார். இதனையடுத்து இலங்கையின் புதிய அதிபராக அனுரா குமார திசநாயகா நேற்று முன்தினம் பதவியேற்றார். அதனை தொடர்ந்து இலங்கையின் பிரதமராக இருந்த தினேஷ் குணவர்தனே தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் இலங்கையின் புதிய பிரதமராக தேசிய மக்கள் சக்தி கட்சியின் பெண் தலைவரான ஹரினி அமரசூரியாவை அதிபர் அனுரா குமார திசநாயகா நியமதித்தார். இதையடுத்து, அவர் இலங்கை பிரதமராக நேற்று பதவியேற்றார். இதன் மூலம் இலங்கை வரலாற்றில் 3-வது பெண் பிரதமர் என்கிற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
54 வயதான ஹரினி அமரசூரியா சமூக ஆர்வலர், பல்கலைக்கழக பேராசிரியர், அரசியல் தலைவர் என பன்முகங்களை கொண்டவர் ஆவார்.
பிரதமராக பொறுப்பேற்றுள்ள அவருக்கு நீதி, கல்வி, தொழிலாளர், தொழில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுகாதாரம் மற்றும் முதலீடு ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. ஹரினி அமரசூரியாவுடன் தேசிய மக்கள் சக்தி கட்சியின் எம்.பி.க்களான விஜித ஹேரத் மற்றும் லக்ஸ்மன் நிபுனாராச்சி ஆகியோர் கேபினட் மந்திரிகளாக பதவியேற்றனர்.






