தமிழக மீனவர்கள் 16 பேர் விசைப்படகுடன் சிறைபிடிப்பு

பல்வேறு அச்சுறுத்தல்களால் தமிழக மீனவர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.மீனவர்களை இலங்கை கடற்படையினர் மொட்டை அடித்து திருப்பி அனுப்பினர்.
தமிழக மீனவர்கள் 16 பேர் விசைப்படகுடன் சிறைபிடிப்பு
Published on

இலங்கை கடற்படையினரின் கைது நடவடிக்கை, படகுகளை பறிமுதல் செய்தல், ரோந்து கப்பலால் விசைப்படகுகள் மீது மோத செய்வது, நடுக்கடலில் தாக்குதல், வலைகளை அறுத்து சேதப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்களால் தமிழக மீனவர்கள் கடுமையான அவதிக்கு ஆளாகி வருகிறார்கள்.

தமிழக மீனவர்களை சிறைப்பிடிப்பதை தொடர்ந்து நடவடிக்கையாக இலங்கை கடற்படையினர் எடுத்து வருகின்றனர்.

கடந்த மாதத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை இலங்கை கடற்படையினர் மொட்டை அடித்து திருப்பி அனுப்பிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியத.

இந்நிலையில், எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக தமிழக மீனவர்கள் 16 பேர் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மற்றும் விசைப்படகை இலங்கை கடற்பனையினர் சிறைப்பிடித்துள்ளனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com