என் மலர்tooltip icon

    நியூசிலாந்து

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னின் பதவி காலம் அக்டோபர் மாதம் வரை உள்ளது.
    • நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து ஜெசிந்தா ஆர்டெர்ன் விலகுவதாக அறிவித்துள்ளது கட்சிக்குள்ளும், நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    நியூசிலாந்து நாட்டின் பெண் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன். நியூசிலாந்து தொழிலாளர் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னின் பதவி காலம் அக்டோபர் மாதம் வரை உள்ளது.

    இந்த நிலையில் அவர் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்த பின்னர் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

    அந்த அறிக்கையில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியிருப்பதாவது:-

    நியூசிலாந்து பிரதமர் பொறுப்பில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிவிட்டேன். இப்போது அந்த பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். அதன்படி அடுத்த மாதம் (பிப்ரவரி), 7ம் தேதிக்குள் நான் பதவி விலக போகிறேன். இந்த முடிவுக்கு நான் என்னை தயார்படுத்தி கொண்டேன். எனது பதவி காலத்தில் நான் ஒரு சிறந்த மனிதனாக பணியாற்றி உள்ளேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது.

    பிரதமர் பதவியில் இருந்து விலகினாலும், அடுத்த தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். நான் போட்டியிடவில்லை என்றாலும் நியூசிலாந்து தொழிலாளர் கட்சியே அடுத்த தேர்தலில் அமோக வெற்றி பெறும்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

    பிரதமருக்கான தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து ஜெசிந்தா ஆர்டெர்ன் விலகுவதாக அறிவித்துள்ளது கட்சிக்குள்ளும், நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆடும் நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டது.
    • ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    வெலிங்டன்:

    நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் (ஜன. 18, ஜன.21, ஜன.24) மற்றும் மூன்று டி20 போட்டிகளில் ( ஜன.27, ஜன.29, பிப்.1) விளையாடுகிறது.

    இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் ஆடும் நியூசிலாந்து அணி நேற்று அறிவிக்கப்பட்டது. கேப்டன் கேன் வில்லியம்சன், வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதிக்கு ஓய்வு அளிக்கப்பட்டது. ஆல்-ரவுண்டர் மிட்செல் சான்ட்னர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

    நியூசிலாந்து டி20 போட்டிக்கான அணி விவரம் வருமாறு:

    மிட்செல் சான்ட்னர் (கேப்டன்), பின் ஆலென், பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டேன் கிளிவர், கான்வே, ஜேக்கப் டப்பி, லோக்கி பெர்குசன், பென் லிஸ்டர், டேரில் மிட்செல், கிளென் பிலிப்ஸ், மைக்கேல் ரிப்போன், ஹென்றி ஷிப்லி, சோதி, பிளேர் டிக்னெர்.

    • உலகிலேயே சூரியன் முதலாவதாக உதிக்கும் நியூசிலாந்து நாட்டில் 2023 புத்தாண்டு பிறந்துள்ளது.
    • வாணவேடிக்கையுடன் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர்.

    வெல்லிங்டன்:

    உலகிலேயே நியூசிலாந்து நாட்டில்தான் முதன்முதலாக புத்தாண்டு பிறக்கும்.

    இந்நிலையில், நியூசிலாந்தில் 2023 புத்தாண்டு பிறந்தது. நியூசிலாந்து மக்கள் வாணவேடிக்கையுடன் புத்தாண்டை வரவேற்றனர்.

    உலகின் முதல் இடமாக மத்திய பசிபிக்கில் உள்ள கிரிபால்டி தீவில் 2023 புத்தாண்டு பிறந்தது.

    2023 புத்தாண்டு இனிய ஆண்டாக அமைய வேண்டும் என மக்கள் புத்தாண்டை வரவேற்றுள்ளனர்.

    • இந்தியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் கேன் வில்லியம்சன் பெயர் இடம் பெறவில்லை.
    • இந்த தொடர் ஜனவரி 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

    வெலிங்டன்:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நியூசிலாந்து அணி இந்தியாவுக்கு எதிராக 3 டி20 போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. இந்த தொடர் ஜனவரி 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்குகிறது.

    இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்க்கொள்வதற்கு முன்னர் நியூசிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

    சமீபத்தில் நியூசிலாந்தின் டெஸ்ட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகிய கேன் வில்லியம்சன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் மட்டும் கேப்டனாக நியமிக்கப்பட்டுளார்.

    இந்நிலையில், இந்திய தொடருக்கு எதிரான நியூசிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    இந்திய அணிக்கு எதிரான தொடரில் நியூசிலாந்து அணியின் கேப்டன் பொறுப்பை டாம் லதாம் ஏற்கிறார். இந்திய அணிக்கு எதிரான தொடரில் கேன் வில்லியம்சன் பெயர் இடம் பெறவில்லை.

    இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான நியூசிலாந்து அணி விவரம் வருமாறு:

    டாம் லாதம் (கேப்டன்), மார்க் சாம்ப்மென், லாக்கி பெர்குசன், டேரில் மிட்செல், மிட்செல் சாண்ட்னெர், பின் ஆலென், டேவன் கான்வே, மேட் ஹென்றி, ஹென்றி நிக்கோல்ஸ், ஹென்றி சிப்லே, மைக்கெல் பிரேஸ்வெல், ஜேக்கப் டப்பி, ஆடம் மில்னே, க்ளென் பிலிப்ஸ், இஷ் சோதி.

    • மக்களிடம் புகை பிடிக்கும் பழக்கத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.
    • நியூசிலாந்தை 2025-ம் ஆண்டுக்குள் புகைப்பிடிக்காத நாடாக மாற்ற இலக்கை.

    வெல்லிங்டன் :

    2025-ம் ஆண்டுக்குள் நியூசிலாந்தை புகைப்பிடிக்காத நாடாக மாற்ற வேண்டும் என்ற இலக்கை அந்த நாட்டு அரசு கொண்டுள்ளது. அதன் அடிப்படையில் மக்களிடம் புகை பிடிக்கும் பழக்கத்தை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் நியூசிலாந்தில் இளைஞர்கள் சிகரெட் வாங்குவதற்கு வாழ்நாள் தடை விதிக்கும் புதிய சட்டத்தை அந்த நாட்டு அரசு நேற்று முன்தினம் நிறைவேற்றியது.

    ஜனவரி 1, 2009 அன்று அல்லது அதற்குப் பிறகு பிறந்த எவருக்கும் புகையிலை விற்கக் கூடாது என்று அந்த சட்டம் கூறுகிறது. இதன் மூலம் சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

    அதாவது, நியூசிலாந்தில் அடுத்த 50 ஆண்டுகளுக்கு பிறகு சிகரெட் வாங்குவதற்கான குறைந்தபட்ச வயது 63 ஆக இருக்கும் என சட்ட நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால் அதற்கு முன்பாகவே புகைபிடிக்கும் பழக்கம் மறைந்துவிடும் என்று சுகாதார அதிகாரிகள் நம்புகின்றனர்.

    இந்த புதிய சட்டம் நாட்டில் புகையிலை விற்க அனுமதிக்கப்படும் சில்லறை விற்பனையாளர்களின் எண்ணிக்கையை சுமார் 6,000ல் இருந்து 600 ஆக குறைக்கிறது. மேலும் புகையிலையில் அனுமதிக்கப்பட்ட நிகோடின் அளவை குறைக்கவும் வழிவகை செய்கிறது.

    • முதல் போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்து முன்னிலை.
    • இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்தியா உள்ளது.

    கிறிஸ்ட்சர்ச்:

    நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஹேமில்டனில் நடைபெற்ற 2-வது போட்டி மழையால் பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

    இந்த சூழலில் இரு அணிகளுக்கும் இடையேயான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்று நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை சமன் செய்ய வேண்டிய நெருக்கடியில் இந்திய அணி இன்று களம் இறங்குகிறது. இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்க உள்ளது இதனிடையே, கிறிஸ்ட்சர்ச் பகுதியில், கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. 

    • நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
    • வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.

    ஹேமில்டன்:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்று பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையேயான 3 போட்டி கொண்ட 20 ஓவர் தொடரை 1-0 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றியது. இதையடுத்து தற்போது ஒரு நாள் தொடரில் இரு அணிகளும் பங்கேற்று வருகின்றன.

    ஆக்லாந்தில் நடந்த முதல் ஆட்டத்தில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியால் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 2-வது ஒரு நாள் போட்டி ஹேமில்டனில் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது.

    இந்த போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணிக்கு உள்ளது. இதனால் இன்றைய போட்டியில் நியூசிலாந்துக்கு இந்திய அணி பதிலடி கொடுத்து தொடரை சமன் செய்யுமா? என்று ஆவலுடன் ரசிகர்கள் உள்ளனர். இரு அணிகளும் இதுவரை மோதிய ஒருநாள் போட்டிகளில் இந்தியா 55-ல், நியூசிலாந்து 50-ல் வெற்றி பெற்றுள்ளன. 

    • நியூசிலாந்துடனான டி20 தொடரை 1-0 என இந்தியா கைப்பற்றியது.
    • இரு அணிகள் இடையிலான முதல் ஒருநாள் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது.

    ஆக்லாந்து:

    இந்திய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

    இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டம் ஆக்லாந்தில் இன்று பகல்-இரவாக நடக்கிறது. இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக செயல்படுகிறார்.

    இந்நிலையில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி இந்திய அணி முதலில் களமிறங்குகிறது.

    அர்ஷ்தீப் சிங் மற்றும் உம்ரான் மாலிக் ஆகியோர் இன்றைய போட்டியில் அறிமுகமாகின்றனர்.

    தவான் தலைமையிலான இந்திய அணி கடந்த மாதம் சொந்த மண்ணில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

    • அதிரடியாக ஆடிய டெவோன் கான்வே, கிளென் பிலிப்ஸ் இருவரும் அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
    • இந்தியா தரப்பில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர்.

    நேப்பியர்:

    இந்தியா-நியூசிலாந்து கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நேப்பியரில் இன்று நடக்கிறது. நேப்பியரில் விட்டு விட்டு மழை பெய்ததால் போட்டி தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற நியூசிலாந்து மணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    துவக்க வீரர் பின் ஆலன் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அதன்பின்னர் களமிறங்கிய மார்க் சாப்மென் 12 ரன்களில் வெளியறினார். அதிரடியாக ஆடிய டெவோன் கான்வே, கிளென் பிலிப்ஸ் இருவரும் அணியின் ஸ்கோரை மளமளவென உயர்த்தினர். பிலிப்ஸ் 54 ரன்களிலும், கான்வே 59 ரன்களிலும் அவுட் ஆகினர். மற்ற வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழக்க, நியூசிலாந்து அணி 19.4 ஓவர்களில் 160 ரன்களில் சுருண்டது.

    இந்தியா தரப்பில் முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங் தலா 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினர். இதையடுத்து 161 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்குகிறது.

    • நேப்பியரில் விட்டு விட்டு மழை பெய்ததால் போட்டியை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
    • இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஹர்ஷல் படேல் களமிறங்குகிறார்.

    நேப்பியர்:

    இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டி20 போட்டி மழையால் ஒரு பந்துகூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இரண்டாவது போட்டியில் இந்தியா 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் மூன்றாவது மற்றும் கடைசி போட்டி நேப்பியரில் இன்று நடக்கிறது. நேப்பியரில் காலை முதலே விட்டு விட்டு மழை பெய்ததால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர் மழை நின்ற நிலையில், டாஸ் சுண்டப்பட்டது. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது.

    போட்டி ஒரு சில நிமிடங்களில் தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் மழை பெய்ய ஆரம்பித்தது. இதனால் ஆடுகளம் பிளாஸ்டிக் கவரால் மூடப்பட்டது. லேசான மழை என்பதால் விரைவில் போட்டி தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக ஹர்ஷல் படேல் ஆடும் லெவனில் இடம்பெற்றுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேன் நியூசிலாந்து அணியில் இடம் பெறுகிறார்.
    • ஆக்லாந்து ஒருநாள் போட்டியில் வில்லியம்சன் மீண்டும் அணியில் இணைகிறார்.

    நேப்பியர்

    நியூசிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டி20 போட்டி தொடரில் பங்கேற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்துச் செய்யப்பட்டது. 2வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த போட்டியில் இருந்து நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் விலகி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை மருத்துவரை சந்திப்பதற்காக அவருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் அவரது முழங்கை வலி பிரச்சினைக்கும் இதற்கும் தொடர்பு இல்லை என்றும், நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.

    எங்கள் வீரர்களின் உடல்நலம் மற்றும் நல்வாழ்வு மிக முக்கியமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆக்லாந்தில் நடைபெறும் ஒருநாள் போட்டியில் வில்லியம்சன் மீண்டும் அணியில் இணைவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 3வது டி20 போட்டியில் வில்லியம்சனுக்கு பதிலாக மார்க் சாப்மேன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். மூத்த வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி அணியை வழிநடத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

    • நியூசிலாந்தில் நடைபெற்ற டி20 போட்டியில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் சூர்யகுமார் யாதவ்.
    • ஒரு காலண்டர் வருடத்தில் 2 சதங்களை அடித்த 2-வது இந்திய வீரர்.

    மவுண்ட் மாங்கானு:

    நியூசிலாந்தில் இன்று நடைபெற்ற 2வது டி20 போட்டியில் இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதற்கு இந்திய அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 111 ரன்கள் குவித்தது முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் அவர் 11 பவுண்டரிகள் மற்றும் ஏழு சிக்ஸர்களை அடித்து இந்திய ரசிகர்களை உற்சாக படுத்தினார்.

    மேலும் இன்றைய சதம் மூலம் ஒரு காலண்டர் வருடத்தில் 2 சதங்களை அடித்த 2-வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தொடர்ந்து டி20 கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த வீரர்கள் பட்டியலிலும் இரண்டாவது இடத்தில் அவர் உள்ளார். மேலும் நியூசிலாந்தில் நடைபெற்ற டி20 போட்டி ஒன்றில் சதம் அடித்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையையும் சூர்யகுமார் பெற்றுள்ளார். 


    இந்நிலையில் சூரிய குமார் யாதவ் இன்னும் இந்தியாவின் சிறந்த டி20 வீரர் இல்லை என்று நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுத்தி தெரிவித்துள்ளார். போட்டி நிறைவுக்கு பின்னர் இது குறித்து பேசிய அவர், இந்தியாவில் இருந்து பல சிறந்த டி20 வீரர்கள் உள்ளனர், டி20 போட்டிக்கு மட்டுமல்ல, மூன்று வடிவ போட்டிகளுக்கும் பல அற்புதமான கிரிக்கெட் வீரர்களை இந்தியா உருவாக்கியுள்ளது.

    அவர் (சூர்யகுமார்) பல வழிகளில் அடிக்கக் கூடிய ஒரு வீரர். அவர் கடந்த 12 மாதங்களில் ஐபிஎல் மற்றும் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த ஃபார்மில் இருக்கிறார். இன்று அவர் மிகவும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனாலும், அவர் இந்தியாவின் சிறந்த வீரராக மாற, தொடர்ந்து தன்னை நிரூபிக்க வேண்டும். இவ்வாறு சவுத்தி தெரிவித்துள்ளார்.

    இதனிடையே. இன்றைய போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் போது இறுதி ஓவரை வீசிய டிம் சவுத்தி, அந்த ஓவரில் ஹர்திக் பாண்டியா, தீபக் ஹூடா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டமிழக்க செய்த ஹாட்ரிக் சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.

    ×