பதவி காலம் முடியும் முன்பே பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த நியூசிலாந்து பெண் பிரதமர்

நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்னின் பதவி காலம் அக்டோபர் மாதம் வரை உள்ளது.நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து ஜெசிந்தா ஆர்டெர்ன் விலகுவதாக அறிவித்துள்ளது கட்சிக்குள்ளும், நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பதவி காலம் முடியும் முன்பே பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த நியூசிலாந்து பெண் பிரதமர்
Published on

இந்த நிலையில் அவர் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டம் முடிந்த பின்னர் அவர் ஒரு அறிக்கை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில் பிரதமர் ஜெசிந்தா ஆர்டெர்ன் கூறியிருப்பதாவது:-

நியூசிலாந்து பிரதமர் பொறுப்பில் 5 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிவிட்டேன். இப்போது அந்த பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளேன். அதன்படி அடுத்த மாதம் (பிப்ரவரி), 7ம் தேதிக்குள் நான் பதவி விலக போகிறேன். இந்த முடிவுக்கு நான் என்னை தயார்படுத்தி கொண்டேன். எனது பதவி காலத்தில் நான் ஒரு சிறந்த மனிதனாக பணியாற்றி உள்ளேன் என்ற திருப்தி எனக்கு உள்ளது.

பிரதமர் பதவியில் இருந்து விலகினாலும், அடுத்த தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். நான் போட்டியிடவில்லை என்றாலும் நியூசிலாந்து தொழிலாளர் கட்சியே அடுத்த தேர்தலில் அமோக வெற்றி பெறும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

பிரதமருக்கான தேர்தல் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 14ம் தேதி நடைபெறவுள்ள நிலையில், நியூசிலாந்து பிரதமர் பதவியில் இருந்து ஜெசிந்தா ஆர்டெர்ன் விலகுவதாக அறிவித்துள்ளது கட்சிக்குள்ளும், நாட்டிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com