என் மலர்tooltip icon

    உலகம்

    ஈரானுக்கு அணு ஆயுதங்களை வழங்க பல நாடுகள் தயாராக உள்ளன - ரஷியா
    X

    ஈரானுக்கு அணு ஆயுதங்களை வழங்க பல நாடுகள் தயாராக உள்ளன - ரஷியா

    • ரஷியா வரலாற்று ரீதியாக ஈரானின் அணுசக்தி திட்டத்தை ஆதரித்து வருகிறது.
    • ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அமெரிக்கா என்ன சாதித்தது.

    அணு ஆயுதத்தை தயாரிப்பதில் ஈரான் தீவிரமாக உள்ளது என்றும் அது தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக கூறி ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது.

    இதனையடுத்து, 2 நாடுகளும் 7 நாட்களுக்கு மேலாக மோதலில் ஈடுபட்டு வருகின்றன. இதனிடையே, அமெரிக்க ராணுவம், ஈரானின் ஃபோர்டோ (Fordo), இஸ்ஃபஹான் (Isfahan) மற்றும் நடான்ஸ் (Natanz) அணுசக்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தியது போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

    இந்நிலையில், பல நாடுகள் ஈரானுக்கு நேரடியாக அணு ஆயுதங்களை வழங்க தயாராக இருப்பதாக ரஷியாவின் பாதுகாப்பு கவுன்சிலின் துணைத் தலைவர் டிமிட்ரி மெட்வெடேவ் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "பல நாடுகள் ஈரானுக்கு நேரடியாக தங்கள் சொந்த அணு ஆயுதங்களை வழங்கத் தயாராக உள்ளன. ரஷியா வரலாற்று ரீதியாக ஈரானின் அணுசக்தி திட்டத்தை ஆதரித்து வருகிறது. ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி அமெரிக்கா என்ன சாதித்தது" என்று பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×