என் மலர்
பிரான்ஸ்
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
- இதில் செர்பிய வீரர் ஜோகோவிச் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், பிரான்சின் கோரண்டின் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஜோகோவிச் 6-3, 6-2, 7-6 (7-1) என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் ரஷியாவின் ஆண்ட்ரே ரூப்லெவ் 7-6 (7-1) 6-1, 7-6 (7-5) என்ற செட் கணக்கில் ஆஸ்திரேலியாவின் ஆடம் வால்டனை வீழ்த்தி மூன்றாவது சுற்றுக்கு முன்னேறினார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- பெண்கள் ஒற்றையரில் அமெரிக்காவின் கோகோ காப் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், செக் வீராங்கனை டெரேசா வேலன்டோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-2, 6-4 என்ற செட்களில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-3, 7-6 (7-3) என்ற செட்கணக்கில் சக நாட்டு வீராங்கனை ஆன் லீயை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
- இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் யூகி பாம்ப்ரி ஜோடி வெற்றி பெற்றது.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் யூகி பாம்ப்ரி-அமெரிக்காவின் ராபர்ட் கலோவோ ஜோடி, நெதர்லாந்தின் ராபின் ஹாஸ்-ஜெர்மனியின் ஹென்ரிக் ஜெபென்ஸ் ஜோடி உடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய யூகி பாம்ப்ரி ஜோடி 6-3, 6-7 (8-10), 6-3 என்ற செட் கணக்கில் வென்று 2வது சுற்றுக்கு முன்னேறியது.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடந்து வருகிறது.
- இதில் கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் 2வது சுற்றில் தோல்வி அடைந்தார்.
பாரிஸ்:
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெற்று வருகிறது.
இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் முன்னணி வீரரும், கிரீசை சேர்ந்தவருமான சிட்சிபாஸ், இத்தாலியின் மேட்டியோ கிகாண்டே உடன் மோதினார்.
முதல் செட்டை 6-4 என கிகாண்டே வென்றார். இரண்டாவது செட்டை சிட்சிபாஸ் 7-5 என வென்றார். இதனால் சுதாரித்த இத்தாலி வீரர் மேட்டியோ அடுத்த இரு செட்களை 6-2, 6-4 என்ற கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார். இதன்மூலம் முன்னணி வீரரான சிட்சிபாஸ் அதிர்ச்சி தோல்வி அடைந்து தொடரில் இருந்து வெளியேறினார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- பெண்கள் ஒற்றையரில் இகா ஸ்வியாடெக் 2வது சுற்றில் வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், பிரிட்டனின் எம்மா ராடுகானு உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய ஸ்வியாடெக் 6-1, 6-2 என்ற செட்களில் வென்று 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி 6-3, 6-3 என்ற செட்கணக்கில் ஆஸ்திரேலியாவின் அஜ்லா டாம்ஜனோவிக்கை வீழ்த்தி 3வது சுற்றுக்கு முன்னேறினார்.
- 1989 முதல் 2014 வரை இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார்.
- மயக்க மருந்து கொடுத்து சிறுமகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
20 ஆண்டுகளுக்கு மேலாக 299 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த குற்றத்திற்கான பிரான்ஸ் நீதிமன்றம், 74 வயதான முன்னாள் அறுவை சிகிச்சை நிபுணருக்கு 20 ஆண்டுகள் தண்டனை வழங்கியுள்ளது.
ஜோயல் லெ ஸ்கௌர்னெக் என்ற அறுவை சிகிச்சை நிபுணர் 200 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை மற்றும் பாலியல் பலாத்காரம் செய்தது கண்டு பிடிக்கப்பட்டது. 2020ஆம் ஆண்டு நான்கு குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஏற்கனவே 15 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
புதிய விசாரணை கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கியது. 1989 முதால் 2014 வரை ஜோயல் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டுள்ளா். மயக்கமடைந்த அல்லது மயக்க மருந்து கொடுக்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களின் சராசரி வயது 11 ஆகும். இதில் 158 பேர் சிறுவர்கள். 141 பேர் சிறுமிகள் ஆவார்கள்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- பெண்கள் ஒற்றையரில் கோகோ காப் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப், ஆஸ்திரேலியாவின் ஒலிவியா கடேகி உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய கோகோ காப் 6-2, 6-2 என்ற செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் ஜெசிகா பெகுலா 6-2, 6-4 என்ற செட் கணக்கில் ரோமானியாவின் அன்கா டுடோனியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் மெத்வதேவ் தோல்வி அடைந்தார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ரஷியாவின் டேனில் மெத்வதேவ், பிரிட்டனின் கேமரூன் நூரி உடன் மோதினார்.
ஆரம்பம் முதலே இருவரும் சிறப்பாக ஆடினர். முதல் இரு செட்களை 7-5, 6-3 என நூரி வென்றார். இதில் சுதாரித்துக் கொண்ட மெத்வதேவ் அடுத்த இரு செட்களை 6-4, 6-1 என கைப்பற்றினார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் 5வது செட்டை 5-7 என இழந்த மெத்வதேவ், நடப்பு தொடரில் இருந்து வெளியேறினார். இந்தப் போட்டி 3 மணி நேரம் 54 நிமிடங்கள் நடந்தது.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் சக்காரி, ஜபேர் தோல்வி அடைந்தனர்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரி, பிரான்சின் எல்சா ஜாக்யூமோட் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய எல்சா 6-3, 7-6 (7-4) என்ற நேர் செட்களில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் போலந்தின் மக்டலேனா 7-6 (7-4), 6-0 என்ற செட் கணக்கில் துனீசியாவின் ஓன்ஸ் ஜபேரை எளிதில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இத்தாலி வீரர் முசெட்டி வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகளில் ஒன்று பிரெஞ்சு ஓபன் தொடராகும். இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடந்து வருகிறது.
இந்நிலையில், ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இத்தாலியின் லாரன்சோ முசெட்டி, ஜெர்மனியின் ஹான்மன் உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய முசெட்டி 7-5, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியாபே 6-4, 7-5, 6-4 என்ற செட் கணக்கில் ரஷியாவின் ரோமன் சபியுலினை வென்றார்.
- பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நடைபெறுகிறது.
- இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் சபலென்கா வெற்றி பெற்றார்.
பாரீஸ்:
கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகளில் ஒன்று பிரெஞ்சு ஓபன் தொடராகும்.
இந்த ஆண்டுக்கான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் இன்று தொடங்கி ஜூன் 8-ம் தேதி வரை நடக்கிறது.
இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பெலாரசின் அரினா சபலென்கா, ரஷியாவின் கமிலா ரகிமோவா உடன் மோதினார்.
இதில் சிறப்பாக ஆடிய சபலென்கா 6-1, 6-0 என்ற நேர் செட்களில் எளிதில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.
வரும் புதன்கிழமை நடைபெறும் 2வது சுற்றில் சபலென்கா, சுவிட்சர்லாந்தின் ஜில் டெக்மான் உடன் மோதுகிறார்.
- ஸ்ட்ராஸ்போக் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் நடைபெற்றது.
- இதில் கஜகஸ்தான் வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார்.
பாரீஸ்:
ஸ்ட்ராஸ்போக் ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்சில் உள்ள ஸ்ட்ராஸ்போக் நகரில் நடைபெற்றது.
இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டி நேற்று நடந்தது. இதில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ரஷியாவின் சாம்சோனோவா உடன் மோதினார்.
ரிபாகினா முதல் செட்டை 6-1 என கைப்பற்றினார். இரண்டாவது செட்டை சாம்சோனோவா 7-6 (7-2) என வென்றார்.
வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ரிபாகினா 6-1 என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.






