என் மலர்
சீனா
- ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று தலைநகர் பீஜிங் சென்றடைந்தார்.
- அங்கு நடைபெறும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டிலும் அதிபர் புதின் பங்கேற்கிறார்.
பீஜிங்:
சீனா தனது பெல்ட் ரோடு திட்டத்திற்கு 130 நாடுகளின் பிரதிநிதிகளை வரவேற்று அழைப்பு விடுத்துள்ளது. அதன் ஒருபகுதியாக, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இன்று சீனா சென்றடைந்தார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர் நடைபெற்று வரும் நிலையில், ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் சீனா சென்றுள்ளார்.
ரஷியா, சீனா இடையிலான உறவை வலுப்படுத்தும் விதமாக, அங்கு நடைபெறும் உள்கட்டமைப்பு உச்சி மாநாட்டிலும் அதிபர் புதின் பங்கேற்கிறார்.
உக்ரைன் மீதான படையெடுப்பிற்குப் பின் ரஷியாவை பல்வேறு நாடுகள் தனிமைப்படுத்தி இருக்கும் நிலையில், புதின்-ஜின்பிங் சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது.
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆன்டனி பிளிங்கன் கடந்த வாரம் சீன வெளியுறவுத் துறை மந்திரி வாங் யீவுடன் பேசினார். அப்போது சீனா தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இஸ்ரேல்-பாலஸ்தீனத்தில் அமைதியை நிலைநாட்ட வேண்டும் என வலியுறுத்தியது குறிப்பிடத்தக்கது.
- இஸ்ரேல்-ஹமாஸ் போர் 5-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது
- இந்தியா இஸ்ரேல் ஆதரவு நிலையை எடுத்துள்ளது
கடந்த சனிக்கிழமை, பாலஸ்தீன ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தியதில் 1000க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியானார்கள். இதை தொடர்ந்து இஸ்ரேல், ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர் தொடர்ந்திருக்கிறது.
தற்போது 5-வது நாளாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் போரில் அமெரிக்கா உட்பட பல மேற்கத்திய நாடுகள் இஸ்ரேலை ஆதரிக்கின்றன. ஹமாஸ் அமைப்பை கத்தார், ஈரான் உட்பட பல மத்திய கிழக்கு நாடுகள் ஆதரிக்கின்றன.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய பயங்கரவாத தாக்குதலை கண்டித்து, இஸ்ரேலுக்கு இந்தியா துணை நிற்கும் என தெரிவித்தார். ஆனால், இந்தியாவின் தேசிய காங்கிரஸ் கட்சி, பாலஸ்தீனத்திற்கு ஆதரவளித்திருக்கிறது.
இந்நிலையில், சீனா இப்போரில் யாரை ஆதரிக்கிறது என இதுவரை தெளிவாக கூறவில்லை.
"இரு தரப்பும் அமைதி காக்க வேண்டும். பகைமையை கைவிட்டு பொது மக்களை காக்கவும், தற்போதைய சூழ்நிலை மேலும் மோசமடையாமல் கண்காணிக்கவும் இரு தரப்பையும் கேட்டு கொள்கிறோம். அனைத்து விதமான வன்முறையையும் பொதுமக்களின் மீதான தாக்குதலையும் கண்டிக்கிறோம்" என சீனா அறிக்கை வெளியிட்டு நிறுத்தி கொண்டது.
ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு தரப்பினரின் பெயரையும் குறிப்பிடாமல் ஒரு தெளிவற்ற அறிக்கையை வெளியிட்டதன் மூலம் சீனா நடுநிலை வகிக்க முயல்வதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
- அரசாங்கத்தின் முரண்பாடான சில கொள்கைகளே முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
- கிராமப்புற இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு இல்லாதது.
பீஜிங்:
உலகின் இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான சீனாவில் இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் தலைவிரித்தாடுகிறது. தற்போது 21.3 சதவீதம் இளைஞர்கள் அங்கு வேலை இல்லாமல் தவிப்பதாக நியூசிலாந்தின் விக்டோரியா பல்கலைக்கழகம் தனது ஆய்வறிக்கையில் கூறி உள்ளது. இது கொரோனாவுக்கு முன்பு இருந்ததை விட சுமார் இரு மடங்கு அதிகம் ஆகும்.
இதற்கு அரசாங்கத்தின் முரண்பாடான சில கொள்கைகளே முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அதில் ஒன்று கிராமப்புற இளைஞர்களுக்கு சரியான வேலைவாய்ப்பு இல்லாதது. மற்றொன்று ஒரே குழந்தை திட்டம். இது கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்னரே அரசால் கைவிடப்பட்டாலும் அதன் தாக்கம் மக்களிடம் இன்னும் உள்ளது.
சீனாவில் ஏற்பட்டுள்ள இளைஞர்களின் வேலையில்லா திண்டாட்டம் உலகளாவிய வினியோக சங்கிலியிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே மற்ற நாடுகளின் வெற்றிகரமான முயற்சிகளில் இருந்து சீனா உரிய முடிவை எடுக்க வேண்டும் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
- முதலில் ஆடிய பாகிஸ்தான் 5 ஓவரில் 48 ரன்கள் எடுத்தது.
- மழை காரணமாக நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வங்காளதேசம் எட்டியது.
பீஜிங்:
ஆசிய விளையாட்டு கிரிக்கெட்டில் வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் பாகிஸ்தான், வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பவுலிங் தேர்வு செய்தது.
மழையால் ஆட்டம் தாமதமாக தொடங்கியது. முதலில் ஆடிய பாகிஸ்தான் 5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்புக்கு 48 ரன்கள் எடுத்திருந்த போது மழை மீண்டும் குறுக்கிட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
தொடர்ந்து மழை பெய்ததால், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி வங்காளதேசம் 5 ஓவரில் 65 ரன்கள் எடுக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
இதையடுத்து, ஆடிய வங்காளதேசம் கடைசி ஓவரின் கடைசி பந்தில் பவுண்டரி அடித்து திரில் வெற்றி பெற்றது. இதன்மூலம் வங்காளதேச அணி வெண்கலப் பதக்கத்தைக் கைப்பற்றி அசத்தியது.
- வில்வித்தையில் இந்தியா இன்று 3 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் வென்றது.
- பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடித்து வருகிறது.
பீஜிங்:
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவில் உள்ள ஹாங்சோவ் நகரில் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 23-ம் தேதி தொடங்கிய இந்தப் போட்டியில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியா சார்பில் 661 பேர் கலந்து கொண்டனர். 35 விளையாட்டுகளில் வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
நேற்றைய 14-வது நாள் போட்டி முடிவில் இந்தியா 22 தங்கம், 34 வெள்ளி, 39 வெண்கலம் ஆக மொத்தம் 95 பதக்கங்களைப் பெற்று பதக்க பட்டியலில் தொடர்ந்து 4-வது இடத்தில் இருந்தது. நேற்று ஒரே நாளில் 9 பதக்கங்களைப் பெற்றது.
ஆசிய விளையாட்டு போட்டியின் 15-வது நாளான இன்று காலை இந்தியாவுக்கு மேலும் 5 பதக்கம் கிடைத்தது. இதன்மூலம் 100 பதக்கங்களைக் குவித்து புதிய வரலாற்று சாதனை படைத்தது.
3 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம் ஆக மொத்தம் 5 பதக்கம் கிடைத்தது. இதை தொடர்ந்து இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 100-யை தொட்டது.
2018-ம் ஆண்டு இந்தோனேசியாவில் நடந்த ஆசிய விளையாட்டில் இந்தியா 70 பதக்கம் வென்றதே சாதனையாக இருந்தது. கடந்த 4-ம் தேதி இதை முந்தி இந்தியா சாதனை படைத்து இருந்தது. தற்போது 100 பதக்கங்களைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்தது.
பெண்கள் கபடியில் இன்று இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. இறுதிப் போட்டியில் சீன தைபேயை எதிர்கொண்டது. இந்த ஆட்டம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.
இறுதியில் இந்தியா 26-25 என்ற புள்ளிக் கணக்கில் சீன தைபேயை வீழ்த்தி தங்கப் பதக்கத்தை பெற்றது. முதல் பாதியில் இந்தியா 14-9 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 2-வது பாதி ஆட்டத்தில் சீன தைபே சவால் கொடுத்தது. இதனால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இறுதியில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆண்கள் இறுதிப் போட்டியில் இந்திய அணி ஈரானை எதிர்கொள்கிறது.
முன்னதாக, வில்வித்தையில் 2 தங்கமும், ஒரு வெள்ளியும், ஒரு வெண்கலமும் கிடைத்தது.
பெண்கள் காம்பவுண்ட் தனிநபர் வில்வித்தை போட்டியில் ஜோதி சுரேகா தங்கம் வென்றார். அவர் இறுதிப் போட்டியில் 149-145 என்ற புள்ளிக்கணக்கில் தென் கொரியா வீராங்கனை சேவோனை வீழ்த்தினார்.
இதே இந்தியாவுக்கு வெண்கல பதக்கமும் கிடைத்தது. வெண்கல பதக்கத்துக்கான போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி கோபிசந்த் 146-140 என்ற கணக்கில் இந்தோனேசியாவை சேர்ந்த ரைத் ஜில்காட்டியை தோற்கடித்தார்.
ஆண்களுக்கான காம்பவுண்ட் தனிநபர் பிரிவில் இந்தியாவுக்கு தங்கமும், வெள்ளியும் கிடைத்தது. இறுதிப் போட்டியில் இந்திய வீரர்கள் ஒஜாஸ் பிரவின்-அபிஷேக் வர்மா மோதினார்கள்.
இதில் ஒஜாஸ் 149-147 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றிபெற்று தங்கப் பதக்கம் வென்றார். அபிஷேக் வர்மாவுக்கு வெள்ளி கிடைத்தது.
வில்வித்தை போட்டியில் மட்டும் இந்தியாவுக்கு 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் ஆக மொத்தம் 9 பதக்கம் கிடைத்தது.
பெண்கள் கபடி பிரிவில் பெற்ற தங்கம் மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 100 ஆக அதிகரித்தது. பிற்பகலில் மேலும் பதக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. இதன்மூலம் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை அதிகரிக்கும்.
நாளையுடன் ஆசிய விளையாட்டு போட்டி முடிவடைகிறது. கடைசி நாளில் கராத்தே போட்டிகள் மட்டும் நடைபெறுகிறது.
- வில்வித்தை ஆண்கள் ஒற்றையர் காம்பவுண்டு பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் பெற்றது.
- இதே பிரிவில் இந்தியாவின் அபிஷேக் வெள்ளி வென்றார்.
பீஜிங்:
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
நேற்று 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றது.
இந்நிலையில், இன்று காலை வில்வித்தை ஆண்கள் ஒற்றையர் காம்பவுண்டு பிரிவில் இந்தியா தங்கம், வெள்ளிப் பதக்கம் வென்றது.
ஏற்கனவே, வில்வித்தை பெண்கள் காம்பவுண்டு தனிநபர் பிரிவில் இந்தியா தங்கமும், வெண்கலமும் வென்றுள்ளது.
இந்திய அணி இதுவரை 24 தங்கம், 35வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 99 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.
- வில்வித்தை பெண்கள் ஒற்றையர் காம்பவுண்டு பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் பெற்றது.
- ஏற்கனவே வில்வித்தையில் இந்தியாவின் அதிதி கோபிசந்த் சுவாமி வெண்கலம் வென்றார்.
பீஜிங்:
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
நேற்று 1 தங்கம், 2 வெள்ளி மற்றும் 6 வெண்கலம் என மொத்தம் 9 பதக்கங்களை வென்றது.
இந்நிலையில், இன்று காலை வில்வித்தை காம்பவுண்டு தனிநபர் பிரிவில் இந்தியாவின் ஜோதி சுரேகா வெண்ணாம் கொரிய வீராங்கனையை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
காம்பவுண்டு தனிநபர் பிரிவு, பெண்கள் காம்பவுண்டு மற்றும் காம்பவுண்டு கலப்பு அணி ஆகியவற்றில் ஜோதி சுரேகா வெண்ணாம் தங்கம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே, வில்வித்தை காம்பவுண்டு தனிநபர் பிரிவில் இந்தியாவின் அதிதி கோபிசந்த் சுவாமி வெண்கலப் பதக்கம் வென்றார்.
இந்திய அணி இதுவரை 23 தங்கம், 34 வெள்ளி, 40 வெண்கலம் என மொத்தம் 97 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.
- ஆண்கள் கபடியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
- ஏற்கனவே பெண்கள் அணியும் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.
பீஜிங்:
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
இன்று நடைபெற்ற ஆண்கள் கபடி போட்டி அரையிறுதியில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது.
ஆரம்பம் முதல் அதிரடியாக ஆடிய இந்திய அணி 61-14 என வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. இதன்மூலம் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. இறுதிப்போட்டியில் இந்திய அணி ஈரான் அல்லது சீன தைபே அணியுடன் மோத உள்ளது.
- பேட்மிண்டனில் இந்தியா வெண்கலப் பதக்கம் வென்றது.
- இதுவரை இந்தியா 35 வெண்கலம் வென்றுள்ளது.
பீஜிங்:
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
பேட்மிண்டன் ஆண்கள் அரையிறுதியில் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், சீன வீரருடன் மோதி தோல்வி அடைந்தார். ஆனாலும் அவர் வெண்கலம் வென்றார்.
இந்திய அணி இதுவரை 21 தங்கம், 32 வெள்ளி, 35 வெண்கலம் என மொத்தம் 88 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.
- இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
- திலக் வர்மா அதிரடியாக ஆடி அரை சதம் கடந்தார்.
பீஜிங்:
சீனாவில் ஆசிய விளையாட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் இந்தியா, வங்காளதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்தியா பவுலிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய வங்காளதேசம் 20 ஓவரில் 96 ரன்கள் மட்டுமே எடுத்தது.
இந்தியா சார்பில் சாய் கிஷோர் 3 விக்கெட்டும், வாஷிங்டன் சுந்தர் 2 விக்கெட்டும் எடுத்தனர்.
இதையடுத்து, 97 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ஜெய்ஸ்வால் டக் அவுட்டானார். கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட், திலக் வர்மா ஜோடி அதிரடியாக ஆடியது. திலக் வர்மா பொறுப்புடன் ஆடி அரை சதமடித்தார். திலக் வர்மா 55 ரன்னும், கெயிக்வாட் 40 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.
இறுதியில் இந்தியா 97 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றது. அத்துடன் இறுதிப்போட்டிக்கும் தகுதிபெற்றது.
இந்நிலையில், திலக் வர்மா தான் அடித்த அரை சதத்தை தாய்க்கு சமர்ப்பிக்கும் வகையில், தனது உடம்பில் வரைந்திருந்த தாயின் டாட்டூ படத்தை குறிப்பிட்டுக் காட்டினார்.
- வில்வித்தையில் இந்தியா இன்று 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் வென்றது.
- பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடித்து வருகிறது.
பீஜிங்:
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
கபடி பெண்கள் பிரிவில் இந்தியா, சீன தைபே அணியை போராடி வீழ்த்தி தங்கம் வென்றது. இது இந்தியாவுக்கு 100-வது பதக்கமாக அமைந்தது.
ஏற்கனவே, வில்வித்தையில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 1வெண்கலம் வென்றுள்ளது.
இந்திய அணி இதுவரை 28 தங்கம், 38 வெள்ளி, 41 வெண்கலம் என மொத்தம் 107 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.
சீனா முதலிடத்திலும், ஜப்பான் 2வது இடத்திலும், தென் கொரியா 3வது இடத்திலும் உள்ளது.
- வில்வித்தை பெண்கள் ரிகர்வ் பிரிவில் இந்தியா வெண்கலம் வென்றது.
- இதுவரை இந்தியா 34 வெண்கலம் வென்றுள்ளது.
பீஜிங்:
19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளைச் சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.
வில்வித்தையில் பெண்கள் ரிகர்வ் பிரிவில் இந்தியாவின் அங்கிதா பகத், பஜன்கவுர் மற்றும் சிம்ரன்ஜித் கவுர் ஆகியோர் வெண்கலப் பதக்கம் வென்றனர்.
இந்திய அணி இதுவரை 21 தங்கம், 32 வெள்ளி, 34 வெண்கலம் என மொத்தம் 87 பதக்கங்களைப் பெற்றுள்ளது. பதக்கப் பட்டியலில் இந்தியா தொடர்ந்து 4-வது இடத்தில் நீடிக்கிறது.






