என் மலர்
பிரிட்டன்
- இரண்டாவது இன்னிங்சில் அதிரடியாக விளையாடிய பேர்ஸ்டோ 136 ரன்கள் குவித்தார்.
- கேப்டன் ஸ்டோக்ஸ் 75 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.
நாட்டிங்காம்:
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தின், நாட்டிங்காம் நகரில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
டேரில் மிட்செல், பிளெண்டல் இருவரும் சதமடித்தனர். டேரில் மிட்செல் 190 ரன்னிலும், பிளெண்டல் 106 ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். பின்னர் முதல் இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி 539 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. ஜோ ரூட் 176 ரன்னிலும், ஒல்லி போப் 145 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அலெக்ஸ் லீஸ் 67 ரன்னிலும், விக்கெட் கீப்பர் போக்ஸ் 56 ரன்னிலும் அவுட்டாகினர்.
இதையடுத்து, 14 ரன்கள் முன்னிலை வகித்த நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடியது. வில் யங் 56 ரன்னும், கான்வே 52 ரன்னும் எடுத்தனர். நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் 284 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. மிட்செல் இறுதிவரை போராடி 62 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இதையடுத்து 299 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கு இங்கிலாந்திற்கு நிர்ணயிக்கப்பட்டது.
ஆட்டத்தில் கடைசி நாளான நேற்று இந்த போட்டி டிராவில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்க்சை விளையாடியது. 100 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை அந்த அணி இழந்த நிலையில் அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ 92 பந்துகளில் 136 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 75 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இதனால் இங்கிலாந்து அணி 5 விக்கெட் இழப்பிற்கு 299 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியால் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2-0 என கணக்கில் இங்கிலாந்து அணி கைப்பற்றியது.
- உலக நாடுகளில் குரங்கம்மை நோயை கண்காணிக்க அனைத்து அரசுகளுக்கும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.
- இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளது.
லண்டன்:
ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய், தற்போது பல உலக நாடுகளில்பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை பாதித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.
இந்நிலையில் இங்கிலாந்தில் மேலும் 104 பேருக்கு குரங்கம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து இங்கிலாந்தில் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 470 ஆக அதிகரித்துள்ளது.
இதை தொடர்ந்து உலக நாடுகளில் குரங்கம்மை நோயை கண்காணிக்க அனைத்து அரசுகளுக்கும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது.
- இங்கிலாந்தின் ஜோ ரூட், ஒல்லி போப் ஜோடி 3-வது விக்கெட்டுக்கு 187 ரன்கள் சேர்த்தது.
- இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்டில் நியூசிலாந்தின் போல்ட் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.
நாட்டிங்காம்:
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது.
முதலில் பேட் செய்த நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 553 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. டேரில் மிட்செல், பிளெண்டல் இருவரும் சதமடித்தனர். டேரில் மிட்செல் 190 ரன்னிலும், பிளெண்டல் 106 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து சார்பில் ஆண்டர்சன் 3 விக்கெட்டும், பிராட், பென் ஸ்டோக்ஸ், ஜாக் லீச் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் லீஸ் அரை சதமடித்து
67 ரன்னில் வெளியேறினார்.
அடுத்து இறங்கிய ஒல்லி போப், ஜோ ரூட் ஜோடி நிதானமாக ஆடியது. இருவரும் சதமடித்து அசத்தினர். ஒல்லி போப்145 ரன்னில் அவுட்டானார். பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட் 176 ரன்னில் ஆட்டமிழந்தார். விக்கெட் கீப்பர் போக்ஸ் அரை சதமடித்தார். அவர் 56 ரன்னில் அவுட்டானார்.
இறுதியில், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 539 ரன்னில் ஆல் அவுட்டானது.
நியூசிலாந்து சார்பில் போல்ட் 5 விக்கெட், பிரேஸ்வெல் 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, 14 ரன்கள் முன்னிலை வகித்த நியூசிலாந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடி வருகிறது.
- கொரோனா கவசப் பொருள்கள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து நாடாளுமன்ற குழு அச்சம் தெரிவித்துள்ளது.
- அவரசரத்தில் வாங்கப்பட்ட முகக்கவசம், கொரோனா தடுப்பு அங்கி உள்ளிட்ட 15,000 தொகுதிகள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
லண்டன்:
உலகம் முழுவதும் கொரோனா பரவலை தொடர்ந்து, அந்த வைரஸில் இருந்து பாதுகாக்க கொரோனா முகக்கவசங்கள், கொரோனா தடுப்பு அங்கிக்கள் உள்ளிட்டவை வாங்கப்பட்டன.
இந்நிலையில் பிரிட்டன் அரசு கொள்முதல் செய்துள்ள ரூ.38,600 கோடி மதிப்பிலான கொரோனா கவசப் பொருட்கள் தரமற்றவை என தெரிய வந்துள்ளது. இதையடுத்து இந்த பொருட்களை எரித்து, அதன்மூலம் மின்சாரம் தயாரிக்க அந்த நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
அவசரத்தில் வாங்கப்பட்ட முகக்கவசம், கொரோனா தடுப்பு அங்கி உள்ளிட்ட 15,000 தொகுதிகள் பயன்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஆனால் அரசின் செலவீனங்களை கண்காணிக்கும் நாடாளுமன்றக் குழு, பிரிட்டன் அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரூ.38,600 கோடி தொகையை செலவிட்டு பொருட்களை வாங்கி, அவற்றை வீணாக்குவது குறித்த விசாரணையை நாடாளுமன்ற குழு தொடங்கியுள்ளது. மேலும் கொரோனா கவசப் பொருள்கள் எரிக்கப்படுவதால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்தும் அச்சம் தெரிவித்துள்ளது.
- இந்த திட்டம் தொழிலாளர்களின் நலன் மற்றும் உற்பத்தி திறனில் எந்த அளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது என ஆய்வு நடத்தப்படவுள்ளது.
- இந்த திட்டம் நிறுவனங்களுக்கும் நன்மை சேர்க்கும் என கருதப்படுகிறது.
லண்டன்:
இங்கிலாந்து முழுவதும் பல்வேறு நிறுவனங்களில், ஊதிய இழப்பு இல்லாமல் வாரத்திற்கு 4 நாட்கள் மட்டுமே வேலை என்ற திட்டம் சோதனை அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று முதல் இங்கிலாந்தில் உள்ள பல வங்கிகள், பராமரிப்பு இல்லங்கள், அனிமேஷன் ஸ்டுடியோக்கள், உட்பட பல துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்த திட்டத்தை அமல்படுத்தியுள்ளன. இந்த திட்டத்தின் மூலம் தொழிலாளர்களின் உட்சபட்ச திறன் வெளிப்படும் என்பதால் 100 சதவீதம் ஊதியம் அளிக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.
3 நாட்கள் விடுமுறை திட்டம் தொழிலாளர்களின் நலன் மற்றும் உற்பத்தி திறனில் எந்த அளவுக்கு முன்னேற்றத்தை ஏற்படுத்துகிறது என நிறுவன அமைப்பாளர்கள், பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இணைந்து ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளார்கள்.
இந்த திட்டம் நிறுவனங்களுக்கும் நன்மை சேர்க்கும் என கருதப்படுகிறது.






