என் மலர்tooltip icon

    பிரேசில்

    • போஸ் டூ இகுவாகு நகருக்கு சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது.
    • பஸ் அங்கு பரானா என்ற நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது.

    சாவ் பாலோ:

    பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள சாண்டா கேடரினா மாகாணத்தின் தலைநகர் புளோரியானோபோலிசிஸ் நகரில் இருந்து, போஸ் டூ இகுவாகு நகருக்கு சுற்றுலா பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 54 இருந்தனர்.

    இந்த பஸ் அங்கு பரானா என்ற நகரில் உள்ள நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் பஸ் சாலையில் தறிக்கெட்டு ஓடியது. பஸ்சில் இருந்த பயணிகள் பயத்தில் மரண ஓலமிட்டனர். டிரைவர் பஸ்சை நிறுத்த முயற்சித்தார்.

    ஆனால் பஸ் சாலையில் இருந்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் பஸ் உருக்குலைந்து போனது. இந்த கோர விபத்தில் அர்ஜென்டினா நாட்டை சேர்ந்த ஒரு பெண் அவரது 3 வயது குழந்தை உள்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 22 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

    • போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
    • தலைநகர் கிளர்ச்சியைத் தொடர்ந்து பிரேசில் ராணுவத் தலைவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

    பிரேசிலியா:

    பிரேசிலில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் மீண்டும் அந்த பதவிக்கு போட்டியிட்ட அதிபர் ஜெயீர் போல்சனாரோ தோல்வி அடைந்தார். ஆனால் அவர் தனது தோல்வியை ஏற்காமல் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடுகள் நடந்தாக குற்றம் சாட்டி வந்தார். இந்த சூழலில் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அதிபர் இனாசியோ லுடா சில்வா கடந்த 1-ம் தேதி பதவியேற்றார்.

    இதற்கிடையில் லுடா அதிகாரத்தைக் கைப்பற்றுவதை தடுக்க ராணுவ தலையீட்டுக்கு அழைப்பு விடுத்து போல்சனாரோவின் ஆதரவாளர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். கடந்த 8-ம் தேதி தலைநகர் பிரேசிலியாவில் திரண்ட போல்சனாரோவின் ஆதரவாளர்கள் பாராளுமன்றம், சுப்ரீம் கோர்ட்டு மற்றும் அதிபர் மாளிகை ஆகிய கட்டிடங்களுக்குள் புகுந்து சூறையாடினர். இதனால் அந்த பகுதியே போர்க்களமாக மாறியது. இதனையடுத்து போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகள் வீசியும் கலவரக்காரர்களை அப்புறப்படுத்தினர். கலவரத்தில் ஈடுபட்டதாக 200-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

    போல்சனாரோ இந்த கலவரத்தை தூண்டியதாக அதிபர் லுலா டா சில்வா குற்றம் சாட்டிய நிலையில், போல்சனாரோ அதனை திட்டவட்டமாக மறுத்தார்.

    இந்நிலையில், தலைநகரில் ஜனவரி 8-ம் தேதி கிளர்ச்சியைத் தொடர்ந்து நாட்டின் ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்கள் குறித்த கவலைகளுக்கு மத்தியில் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா நேற்று பிரேசிலின் ராணுவத் தளபதியை பதவி நீக்கம் செய்தார்.

    இதன்படி, ஜெனரல் ஜூலியோ சீசர் டி அர்ருடா ராணுவத் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக பிரேசிலிய ஆயுதப் படைகளின் அதிகாரப்பூர்வ இணையதளம் தெரிவித்துள்ளது. அவருக்குப் பதிலாக தென்கிழக்கு ராணுவக் கட்டளைத் தலைவராக இருந்த ஜெனரல் டோமஸ் மிகுவல் ரிபேரோ பைவா நியமிக்கப்பட்டார்.

    ஏற்கனவே அதிபர் இல்ல கலவரம் தொடர்பாக 40 வீரர்களை பணிநீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் லூலா உத்தரவிட்டுள்ளார்.

    • பிரேசில் பாராளுமன்றத்திற்குள் போல்சனேரோ ஆதரவாளர்கள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
    • பாராளுமன்றத்திற்குள் புகுந்த வன்முறையாளர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்று, புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றார்.

    இதற்கிடையே, வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    பிரேசில் பாராளுமன்றத்திற்குள் போல்சனேரோவின் ஆதரவாளர்கள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மாளிகை, சுப்ரீம் கோர்ட்டு வளாகம் முன் திரண்ட போல்சனேரோ ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் லூயிசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவரது ஆதரவாளர்கள் வன்முறையிலும் ஈடுபட்டனர். அதிபர் இல்லத்திலும் கலவரம் பரவியது. இந்தப் போராட்டத்தால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

    இந்நிலையில், பிரேசில் அதிபர் இல்ல கலவரம் தொடர்பாக 40 வீரர்களை பணிநீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் லூலா உத்தரவிட்டுள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும்.
    • பிரேசில் அதிகாரிகளுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும்.

    பிரேசிலில் முன்னாள் அதிபர் போல்சனாரோ ஆதரவாளர்கள் பாராளுமன்றம், அதிபர் மாளிகை மற்றும் சுப்ரீம் கோர்ட்டில் புகுந்து வன்முறை சம்பவத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

    பிரேசிலியாவில் அரசு நிறுவனங்களுக்கு எதிரான கலவரம் மற்றும் நாசவேலை பற்றிய செய்திகள் ஆழ்ந்த கவலையை அளித்து உள்ளது. ஜனநாயக மரபுகளை அனைவரும் மதிக்க வேண்டும், பிரேசில் அதிகாரிகளுக்கு இந்தியா முழு ஒத்துழைப்பு வழங்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

    • பிரேசில் பாராளுமன்றத்திற்குள் போல்சனேரோ ஆதரவாளர்கள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
    • பாராளுமன்றத்திற்குள் புகுந்த வன்முறையாளர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றார். இதையடுத்து, பிரேசிலின் புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.

    இதற்கிடையே, வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    இந்நிலையில், பிரேசில் பாராளுமன்றத்திற்குள் போல்சனேரோவின் ஆதரவாளர்கள் இன்று நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மாளிகை, சுப்ரீம் கோர்ட்டு வளாகம் முன் திரண்ட போல்சனேரோ ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் லூயிசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

    தேர்தலில் போல்சனேரோ தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்ட நிலையில் அதை ஏற்றுக்கொள்ளாத அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தால் பிரேசிலில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

    • பிரேசிலின் பீலே புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ம் தேதி மரணம் அடைந்தார்.
    • பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தனது மனைவியுடன் சென்று பீலே உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

    சான்டோஸ்:

    கால்பந்து உலகின் சரித்திர நாயகனும், மூன்று முறை உலகக்கோப்பையை கையில் ஏந்திய ஒரே வீரருமான பிரேசிலின் பீலே (82) புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ந்தேதி மரணம் அடைந்தார். அவரது உடல் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் காலை பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.

    மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். பிரேசில் அதிபர் லுலா டா சில்வா தனது மனைவியுடன் சென்று அஞ்சலி செலுத்தினார்.

    அஞ்சலி நிகழ்ச்சிக்கு பிறகு பீலேவின் உடல் தீயணைப்பு வாகனத்தில் ஊர்வலமாக சான்டோஸ் வீதிகளில் எடுத்துச் செல்லப்பட்டது. சாலையின் இரு புறமும் நின்றிருந்த ரசிகர்கள் கண்ணீர் மல்க தங்களது கால்பந்து மன்னனுக்கு விடையளித்தனர். அஞ்சலி மற்றும் இறுதி ஊர்வலத்தில் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்றனர்.

    14 அடுக்கு மாடிகளைக் கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தை அவரது உடல் சென்றடைந்தது. இது தான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும். அங்கு அவரது குடும்பத்தினர் இறுதிச்சடங்குகளை செய்தனர். அதைத் தொடர்ந்து 9-வது மாடியில் பீலே என்ற பெயர் பொறிக்கப்பட்ட பெட்டகத்தில் அவரது பதப்படுத்தப்பட்ட உடல் வைக்கப்பட்டது.

    தனது மறைவுக்கு பிறகு ஸ்டேடியத்தை நோக்கியே தனது உடலை அடக்கம் செய்யவேண்டும் என பீலே கூறியிருந்தாராம். அவரது கடைசி ஆசையை நிறைவேற்றும் வகையில் அவரது உடல் இந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    • பிரேசிலின் பீலே புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ம் தேதி மரணம் அடைந்தார்.
    • அவரது மறைவையொட்டி பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

    சான்டோஸ்:

    உலக கோப்பை கால்பந்தில் 3 முறை மகுடம் சூடிய ஒரே வீரர் பிரேசிலின் பீலே (82). புற்றுநோய் பாதிப்பால் கடந்த 29-ம் தேதி மரணம் அடைந்தார். அவரது மறைவையொட்டி பிரேசிலில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுகிறது.

    பிரேசில் நாட்டின் சான்டோசில் உள்ள விலா பெல்மிரோ ஸ்டேடியத்தில் பீலே உடல் வைக்கப்பட்டது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    அஞ்சலி நிகழ்ச்சி முடிந்ததும் 4.4 ஏக்கர் நிலப்பரப்பில், 14 அடுக்கு மாடிகளை கொண்ட நெக்ரோபோல் எகுமெனிகா நினைவு கல்லறை தோட்டத்தில் பீலேவின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. இங்குள்ள பெட்டகத்தில் பதப்படுத்தப்பட்ட அவரது உடல் வைக்கப்படும். இதுதான் உலகிலேயே மிக உயரமான கல்லறை தோட்டமாகும்.

    இங்கு நடக்கும் இறுதிச்சடங்கில் அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாருக்கும் அனுமதி கிடையாது. கால்பந்து நாயகன் பீலேவுக்கு விடையளிக்க லட்சக்கணக்கான மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பிரேசில் அதிபர் தேர்தலில் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்றுள்ளார்.
    • அதிபர் தேர்தலில் வெற்றிபெற 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    பிரேசிலியா:

    உலகின் 4-வது மிகப்பெரிய ஜனநாயக நாடான பிரேசிலில் கடந்த அக்டோபர் 2-ம் தேதி அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தீவிர வலதுசாரியான ஜெயீர் போல்சனரோவுக்கும், முன்னாள் அதிபரும் ஊழல் வழக்கில் சிறைவாசம் அனுபவித்து விட்டு வந்துள்ள இடதுசாரி வேட்பாளருமான லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவுக்கும் இடையில் பலப்பரீட்சை நடந்தது.

    கொரோனா தொற்றை கையாண்ட முறை, அமேசான் மழைக்காடுகள் அழிப்பு உள்ளிட்ட விவகாரங்களில் ஜெயீர் போல்சனரோ அரசு மக்களிடம் கடும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் எதிர்கொண்டதால் இந்த தேர்தலில் அவரது வெற்றி வாய்ப்பு கேள்விக்குறியானது.

    பிரேசில் தேர்தல் நடைமுறையின்படி அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இதற்கிடையே, பிரேசில் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டதி இடதுசாரி தலைவரும், முன்னாள் அதிபருமான லுலு டா சில்வா 50.90 சதவீத வாக்குகள் பெற்று மீண்டும் பிரேசில் அதிபராக வெற்றிபெற்றுள்ளார்.

    இந்நிலையில், பிரேசில் நாட்டின் புதிய அதிபராக லுலா டா சில்வா நேற்று பதவியேற்றார். அப்போது பேசிய அவர், பிரேசிலுக்கான எங்கள் செய்தி நம்பிக்கை மற்றும் மறுசீரமைப்பு ஆகும் என தெரிவித்தார்.

    • புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
    • இதய செயல் இழப்பால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

    சாவ் பொல்ஹொ:

    பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து ஜாம்பவான் பீலே (வயது 82) புற்று நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு புற்றுநோய் கட்டி அகற்றப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு செப்டம்பரில் இருந்து அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 


    இந்நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட பீலே, பிரேசிலின் சாவ் பொல்ஹொ பகுதியில் உள்ள மருத்துவமனையில் கடந்த மாதம் இறுதியில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடந்து சிகிச்சை அளித்து வந்தனர். நுரையீரல், இதய செயல் இழப்பு சிகிச்சைகளுக்காக அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த பீலேவை மருத்துவர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வந்தனர். 


    இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி பீலே இன்று உயிரிழந்ததாக அவரது மகள் தனது இண்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்து உள்ளார். பீலே மறைவுக்கு உலகெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள், இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர். பிரேசில் நாட்டிற்காக மூன்று முறை உலகக் கோப்பையை வென்று தந்த பீலே, அனைத்து காலத்திற்குமான சிறந்த கால்பந்து வீரராக கருதப்படுகிறார்.

    • கால்பந்து ஜாம்பவானான பீலே தீவிர சிகிச்சை பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டார்.
    • உலக கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்கு உரியவர்.

    பிரேசிலியா:

    தென் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டின் பிரபல கால்பந்து வீரர் பீலே (81).

    1956ம் ஆண்டு தனது 15-வது வயதில் கால்பந்து விளையாட்டில் இறங்கி தொடர்ந்து 1974-ம் ஆண்டு வரை விளையாடிய பெருமை பெற்றவர். இதில், 6 பிரேசிலியன் லீக் பட்டங்களையும், 2 கோப்பா லிபர்டடோர்ஸ் பட்டங்களையும் வென்றுள்ளார். உலக கோப்பையை மூன்று முறை வென்ற ஒரே வீரர் என்ற பெருமைக்கு உரியவர். தனது அணிக்காக பீலே 643 கோல்களை அடித்து உள்ளார்.

    பீலேவுக்கு கடந்த ஆண்டு பெருங்குடலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிறிய கட்டி அகற்றப்பட்டது. இதன்பின், அவருக்கு கடந்த 2021-ம் ஆண்டு செப்டம்பரில் இருந்து கீமோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக அவரது உடல்நலம் பலவீனமடைந்து இருந்தது.

    இதற்கிடையே, கடந்த செவ்வாய்க்கிழமை சாவோ பாவ்லோ மாகாணத்தில் உள்ள போல்ஹா என்ற பகுதியில் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு கீமோதெரபி சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவரது உடல்நலம் தேறாமல் தொடர்ந்து இருந்து வந்தது.

    இந்நிலையில், மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் பீலே அனுமதிக்கப்பட்டார். டாக்டர்கள் அவரை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

    • தெற்கு பிரேசில் பாரானா மாகாணம் போலாரது என்ற இடத்தில் உள்ள நெடுஞ்சாலையில் கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
    • நிலச்சரிவில் 2 பேர் இறந்தனர். அந்த சமயம் 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அந்த ரோட்டில் சென்று கொண்டிருந்தன.

    பரானா:

    பிரேசில் நாட்டில் பாரானா மற்றும் சாண்டா கேடரன் உள்பட பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாது கொட்டிவரும் மழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். உயிர் பிழைப்பதற்காக அவர்கள் வீட்டு மாடிகளில் தஞ்சம் புகுந்து உள்ளனர்.

    பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி விட்டது. மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி நடந்து வருகிறது.

    தெற்கு பிரேசில் பாரானா மாகாணம் போலாரது என்ற இடத்தில் உள்ள நெடுஞ்சாலையில் கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 2 பேர் இறந்தனர். அந்த சமயம் 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அந்த ரோட்டில் சென்று கொண்டிருந்தன. நிலச்சரிவில் அந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டது. இதில் அந்த வாகனங்களில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தொடர் மழையால் பிரேசிலில் 17 நகரங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

    • அரசு மற்றும் தனியார் பள்ளியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
    • துப்பாக்கியால் சுட்டவரை அடையாளம் காண்பது கடினமாக இருந்ததாக தகவல்

    எஸ்பிரிடோ சாண்டோ

    பிரேசில் நாட்டின் தென்கிழக்கு பகுதியில் உள்ள எஸ்பிரிடோ சாண்டோ மாகாணத்தில் பள்ளிகளுக்குள் அடுத்தடுத்து புகுந்து மர்மநபர் ஒருவர், தானியங்கி துப்பாக்கி மூலம் அங்கிருந்தவர்களை நோக்கி சுட்டார். ஒரு அரசுப் பள்ளி மற்றும் ஒரு தனியார் பள்ளியில் இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

    குண்டு துளைக்காத சட்டை அணிந்து முகத்தை மூடியவாறு அந்த நபர் துப்பாக்கிச் சூடு நடத்துவது கண்காணிப்பு கேமிராவில் பதிவாகி உள்ளது. இந்த கொடூர தாக்குதலில் 2 ஆசிரியர்கள், ஒரு மாணவர் உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 11 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    துப்பாக்கிச் சூடு நடத்தியவரை போலீசார் கைது செய்தார்கள் என்பது குறித்த தகவல் உடனடியாகத் வெளியாகவில்லை. அந்த நபரை அடையாளம் காண்பது கடினமாக இருந்ததாக கூறப்படுகிறது. பிரேசில் சமூக ஊடகங்களில் சூப்பாக்கிச் சூடு குறித்த வீடியோ வெளியான நிலையில், நிலைமையை கண்காணித்து வருவதாகவும், குற்றவாளியை கண்டறிய அதிகாரிகளை அனுப்பி உள்ளதாகவும் எஸ்பிரிட்டோ சாண்டோ மாகாண ஆளுநர் ரெனாடோ தெரிவித்துள்ளார்

    ×