search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brazil Riots"

    • பிரேசில் பாராளுமன்றத்திற்குள் போல்சனேரோ ஆதரவாளர்கள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
    • பாராளுமன்றத்திற்குள் புகுந்த வன்முறையாளர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கினர்.

    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிபர் போல்சனேரோ தோல்வியடைந்தார். முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா வெற்றி பெற்று, புதிய அதிபராக லூயிஸ் பொறுப்பேற்றார்.

    இதற்கிடையே, வாக்கு வித்தியாசம் மிகக் குறைவாக இருந்ததால் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ளாத போல்சனேரோ தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    பிரேசில் பாராளுமன்றத்திற்குள் போல்சனேரோவின் ஆதரவாளர்கள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர். ஜனாதிபதி மாளிகை, சுப்ரீம் கோர்ட்டு வளாகம் முன் திரண்ட போல்சனேரோ ஆதரவாளர்கள் தற்போதைய அதிபர் லூயிசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அவரது ஆதரவாளர்கள் வன்முறையிலும் ஈடுபட்டனர். அதிபர் இல்லத்திலும் கலவரம் பரவியது. இந்தப் போராட்டத்தால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவியது.

    இந்நிலையில், பிரேசில் அதிபர் இல்ல கலவரம் தொடர்பாக 40 வீரர்களை பணிநீக்கம் செய்து அந்நாட்டு அதிபர் லூலா உத்தரவிட்டுள்ளார்.

    பிரேசில் சிறையில் இரு தரப்பு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியதில் 15 கைதிகள் பலியாகினார்கள்.
    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டில் அமேசோனாஸ் மாகாணத்தின் தலைநகர் மனாஸ் அருகே ஒரு சிறைச்சாலை உள்ளது. அங்கு பல தரப்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில் நேற்று காலை பார்வையாளர் நேரத்தின்போது இரு தரப்பு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் அது கலவரமாக வெடித்தது.

    உடனே ஏராளமான போலீசார் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இருந்தும் கலவரத்தில் 15 கைதிகள் பலியாகினர்.

    இந்த மோதலுக்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடைபெறுகிறது.

    பிரேசில் சிறைகளில் அதிக அளவில் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இட நெருக்கடியால்தான் இங்கு கைதிகள் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்படுவதாக கருதப்படுகிறது.

    இந்த கலவரத்தில் பலியானோர்களின் உறவினர்கள் சிறைச்சாலை அருகே கூடி சாலை மறியல், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். 
    ×