என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brazil Rain"

    • தெற்கு பிரேசில் பாரானா மாகாணம் போலாரது என்ற இடத்தில் உள்ள நெடுஞ்சாலையில் கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது.
    • நிலச்சரிவில் 2 பேர் இறந்தனர். அந்த சமயம் 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அந்த ரோட்டில் சென்று கொண்டிருந்தன.

    பரானா:

    பிரேசில் நாட்டில் பாரானா மற்றும் சாண்டா கேடரன் உள்பட பல மாகாணங்களில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இடைவிடாது கொட்டிவரும் மழையால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

    பல இடங்களில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்து உள்ளதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாமல் தவித்து வருகின்றனர். உயிர் பிழைப்பதற்காக அவர்கள் வீட்டு மாடிகளில் தஞ்சம் புகுந்து உள்ளனர்.

    பல நகரங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கி விட்டது. மீட்பு படையினர் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் சிக்கி தவிப்பவர்களை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி நடந்து வருகிறது.

    தெற்கு பிரேசில் பாரானா மாகாணம் போலாரது என்ற இடத்தில் உள்ள நெடுஞ்சாலையில் கனமழையால் திடீர் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 2 பேர் இறந்தனர். அந்த சமயம் 15-க்கும் மேற்பட்ட வாகனங்கள் அந்த ரோட்டில் சென்று கொண்டிருந்தன. நிலச்சரிவில் அந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டது. இதில் அந்த வாகனங்களில் பயணம் செய்த 30-க்கும் மேற்பட்டவர்களை காணவில்லை. அவர்கள் கதி என்னவென்று தெரியவில்லை. அவர்களை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தொடர் மழையால் பிரேசிலில் 17 நகரங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது.

    பிரேசிலில் கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஆயிரக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
    ரியோ டி ஜெனிரோ,:

    பிரேசில் நாட்டில் வடகிழக்குப் பகுதியில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டோடுகிறது. வெள்ளம் குடியிருப்பு பகுதிகளைச் சூழ்ந்ததால் ஆயிரக்கணக்கான வீடுகள் வெள்ள நீரில் மூழ்கின. வெள்ளத்திற்கு அலகோவாஸ், பெர்னாம்புகோ ஆகிய மாகாணங்கள் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளன. கனமழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.

    அந்நாட்டின் வடகிழக்கே அமைந்த பெர்னாம்புகோ மாகாணத்தின் தலைநகர் ரீசிப் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. அந்நகரில் 30 பேர் வரை உயிரிழந்துள்ளனர். வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடா் மீட்பு குழுவினர், ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். 

    இந்நிலையில், பிரேசிலில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரித்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் புலம் பெயர்ந்துள்ளனர் என மீட்புக் குழுவினர் தெரிவித்தனர். 

    ×