என் மலர்tooltip icon

    உலகம்

    முடிவுக்கு வந்த சகாப்தம்.. ஈரானை கட்டியெழுப்பிய சிற்பி - யார் இந்த அயதுல்லா அலி காமேனி? - முழு பின்னணி!
    X

    முடிவுக்கு வந்த சகாப்தம்.. ஈரானை கட்டியெழுப்பிய சிற்பி - யார் இந்த அயதுல்லா அலி காமேனி? - முழு பின்னணி!

    • புரட்சிகர பாதுகாப்புப் படையை தனது அதிகாரத்தின் முதுகெலும்பாக மாற்றினார்.
    • பெண் ஒரு மென்மையான மலர், வீட்டு வேலைக்காரி அல்ல.

    ஈரான் மீது நேற்று அமெரிக்கா-இஸ்ரேல் இணைந்து நடத்திய தாக்குதலில் அதன் உச்ச தலைவர் அயதுல்லா காமேனி கொல்லப்பட்டார்.

    தெஹ்ரானில் நடந்த தாக்குதலில் அவர் கொல்லப்பட்டார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்த நிலையில், ஈரான் அரசு ஊடகமாக IRNA அவரது மரணத்தை உறுதி செய்தது.

    கடந்த 35 ஆண்டுகளாக ஈரானை வழிநடத்தி வந்த அயதுல்லா அலி காமேனி (86 வயது) இயற்கை எய்தியதாக IRNA அறிவித்துள்ளது. அவரது மறைவுக்கு ஈரானில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கடுகிறது.

    இஸ்ரேல்-அமெரிக்க தாக்குதலில் காமேனியுடன் அவரது மகள், பேரன், மருமகன், மருமகள் ஆகியோரும் கொல்லப்பட்டனர்.

    காமேனியின் மறைவுடன் ஈரானில் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்துள்ளது.

    காமேனி இளமை முதல் முதுமை வரை

    காமேனயின் சகாப்தம்:

    ஈரான் நாட்டில் கடந்த 1979 ஆம் ஆண்டு ஏற்பட்ட இஸ்லாமிய புரட்சி நடைபெற்றது. இதன் முன்னர் அயத்துல்லா அலி காமேனி முந்தைய ஆட்சியாளர்களால் சிறையில் அடைக்கப்பட்டு சித்ரவதைகளை அனுபவித்தார்.

    1979 இஸ்லாமிய புரட்சிக்கு பின்னர் இஸ்லாமிய குடியரசாக ஈரான் உருவெடுத்தது. அதன் முதல் உயர் [தேசிய-மத] தலைவராக (Supreme Leader) ருஹோல்லா கோமேனி பதவி வகித்தார்.

    1989 ஆம் ஆண்டு அவரது மறைவுக்குப் பின் தேசிய தலைவரான அயத்துல்லா அலி காமேனி தற்போது வரை அந்த பதவியில் இருந்து வந்தார்.

    ஈரானின் உயர் தலைவர் பதவி என்பது அந்நாட்டு அதிபர் பதவியை விடவும் அதிகாரமிக்கதும் வாழ்நாள் முழுவதும் வகிக்கும் பதவியும் ஆகும்.

    ஈரானின் மிக வலிமையான ராணுவ அமைப்பான புரட்சிகர பாதுகாப்புப் படையை தனது அதிகாரத்தின் முதுகெலும்பாக மாற்றினார்.

    ஏவுகணைத் தயாரிப்பு முதல் நாட்டின் பொருளாதாரம் வரை அனைத்தையும் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தார்.

    அமெரிக்காவின் நட்புக்காக மற்ற மத்திய கிழக்கு நாடுகள் ஏங்கிக் கிடந்த சூழலில் அணுசக்தி கையிருப்பு மூலம் மத்திய கிழக்கில் தனிப்பெரும் சக்தியாக ஈரானை மாற்றினார்.

    லெபனானின் ஹிஸ்புல்லா, ஏமனின் ஹூதிகள் மற்றும் பிற போராளி அமைப்புகளை ஆதரிப்பதன் மூலம் மத்திய கிழக்கில் ஈரானின் செல்வாக்கை நிலைநாட்டினார்.

    காமேனியின் பதிவுகள்:

    தங்கள் அணு ஆயுதங்கள் வளர்ச்சி மற்றும் அமைதியின் நிமித்தமே என்று கூறிய ஈரான் எப்போதும் கூறி வந்தது.

    இதற்கு மத்தியில் ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியில் பழைய சமூக பழைய சமூக ஊடகப் பதிவுகள் வைரலாகின.

    இந்தப் பதிவுகளில் காமேனி, பெண் உரிமை, கவிதைகள் மீதான விருப்பம், பிளாக் லைவ்ஸ் மேட்டர் இயக்கத்திற்கு ஆதரவு, இந்தியப் பிரதமரின் புத்தகத்தைப் படித்தது, மற்றும் சிறுவயதில் தான் எப்படி குறும்புக்காரராக இருந்தார் என்று பலவற்றை குறித்துப் பேசியுள்ளார்.

    வைரலானவற்றில் சில பதிவுகள் 10 வருடங்களுக்கும் பழையவை. தற்போது போரை முன்னெடுத்து செல்லும் காமேனியின் முற்றிலும் மாறுபட்ட பிம்பத்தை இந்த பதிவுகள் முன்வைக்கின்றன.

    86 வயதான இந்த தலைவரை தீவிர இஸ்லாமிய குடியரசின் மூத்த மதகுரு மட்டுமே என்று தாங்கள் தவறாக மதிப்பிட்டுவிட்டதாகக் பலர் தெரிவிக்கின்றனர்.

    பெண்கள் தொடர்பான பல பதிவுகளில், காமேனி பெண்களுக்காக குரல் கொடுத்ததுடன், காதல் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார்.

    "ஒரு மனிதன் பெண்ணின் தேவைகளையும் உணர்வுகளையும் புரிந்துகொள்ள பொறுப்புள்ளவன், அவளது உணர்ச்சிபூர்வமான நிலையை புறக்கணிக்கக் கூடாது" என்று அவர் எழுதியுள்ளார்.

    இதற்கு எக்ஸ் பயனர் ஒருவர், "காதலனாகப் பிறந்தவர், உச்ச தலைவராக மாற கட்டாயப்படுத்தப்பட்டவர்" என்று தற்போது கமெண்ட் செய்துள்ளார்.

    "பெண் ஒரு மென்மையான மலர், வீட்டு வேலைக்காரி அல்ல. ஒரு பெண்ணை வீட்டில் ஒரு பூவைப் போல நடத்த வேண்டும். ஒரு பூவைப் பராமரிக்க வேண்டும்" என்று கமேனி கூறினார்.

    ஆனால் இஸ்லாமிய குடியரசான ஈரானில் பெண் உரிமைகள் கட்டுப்படுத்தப்படுவதே கள யதார்த்தமாக உள்ளத்தையும் ஒப்பிட்டு பார்க்க வேண்டி உள்ளது.

    2013 ஆம் ஆண்டு ஒரு பதிவில், காமேனி தனது பள்ளிக் காலங்களை நினைவு கூர்ந்துள்ளார். "முதல் நாளில் இருந்தே நான் பள்ளியில் ஒரு சிறப்பு மேலங்கியுடன் சென்றேன்.

    மற்ற குழந்தைகளுக்கும் முன்பாக அதை அணிவது சங்கடமாக இருந்தது, ஆனால் குறும்புத்தனமாகவும் விளையாட்டுத்தனமாகவும் இருப்பதன் மூலம் அதை ஈடுகட்ட முயற்சித்தேன்" என்று எழுதியுள்ளார்.

    இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புத்தகத்தைப் படித்து நாட்டின் வரலாற்றைப் புரிந்து கொண்டதாகவும் காமேனி கருத்து தெரிவித்துள்ளார்.

    "நேருவின் 'உலக வரலாற்றின் காட்சிகள்' புத்தகத்தைப் படிக்கும் முன், காலனித்துவத்திற்கு முன் இந்தியா இத்தனை முக்கியமான முன்னேற்றங்களுக்கு உள்ளானது என்று எனக்குத் தெரியாது" என்று காமேனி பதிவிட்டார்.

    காமேனி கொலை:

    கடந்த ஆண்டு ஜூன் மாதமும் இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரான் மீது தாக்குதல் நடத்தின. அதன் அணுசக்தி தளங்களை அழித்துவிட்டதாகவும், இஸ்ரேலின் விருப்பத்தை நிராகரித்து அசிங்கமான மரணத்தில் இருந்து காமேனியை காப்பாற்றியதாகவும் டிரம்ப் அப்போது தெரிவித்திருந்தார்.

    மோதல் முடிவுக்கு வந்ததும் பொதுமக்களுக்கு உரையாற்றிய காமேனி அமெரிக்காவும், இஸ்ரேலும், வேரிலிருந்து அழிக்கப்படவேண்டிய புற்றுநோய் என தெரிவித்தார்.

    அண்மையில் அமெரிக்கா - ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தைகள் நடந்து வந்த சூழலில், தங்கள் விருப்பத்திற்கு இணங்கவில்லை என்றால் விளைவு மோசமாக இருக்கும் என டிரம்ப் மிரட்டி வந்தார். இந்த சூழலில் நேற்றைய தாக்குதலில் காமேனி கொல்லப்பட்டுள்ளார்.

    காமேனி ஆட்சிக் காலத்தில் 2009 தேர்தல் எதிர்ப்புப் போராட்டங்கள், 2022-ல் மாஷா அமினியின் மரணத்திற்குப் பிறகு வெடித்த ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டங்கள் எனப் பல சவால்களைச் சந்தித்தார். இவை அனைத்தும் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்டன.

    இந்த ஆண்டு அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் நாணய மதிப்பு வீழ்ச்சியால் பொருளாதர நெருக்கடி ஏற்பட்டு மக்கள் போராட்டம் வெடித்தது. இதன்போது ஆயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். இது காமேனியின் ஆட்சியில் கரும்புள்ளியாக அமைந்தது.

    மொஜ்தபா கமேனி

    அடுத்த தலைவர்:

    ஈரானின் அரசியலமைப்பின் கீழ், 88 உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர்கள் சபை உச்சத் தலைவரைத் தேர்ந்தெடுத்து மேற்பார்வையிடுகிறது.

    இந்த அமைப்பிற்கான வேட்பாளர்கள் கார்டியன் கவுன்சிலால் சரிபார்க்கப்படுகிறார்கள். அதன் உறுப்பினர்கள் உச்சத் தலைவரால் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ நியமிக்கப்படுகிறார்கள்.

    அடுத்த ஈரான் தேசிய தலைவராகத் தனது இரண்டாவது மகன் மொஜ்தபா கமேனியை அயத்துல்லா காமேனி தேர்ந்தெடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    Next Story
    ×