என் மலர்

  செய்திகள்

  அமெரிக்க பள்ளியில் மாணவன் குத்திக் கொலை
  X

  அமெரிக்க பள்ளியில் மாணவன் குத்திக் கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமெரிக்க பள்ளியில் மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் ஒரு மாணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது.
  நியூயார்க்:

  அமெரிக்கா நியூயார்க் நகரில் புரான்ஸ் பில்டிங் என்ற இடத்தில் தனியார் பள்ளிக்கூடம் ஒன்று செயல்பட்டு வருகிறது.

  இங்கு படித்து வந்த 17 வயது மாணவருக்கும் மற்றும் 2 மாணவர்களுக்கும் இடையே ஒரு வாரத்துக்கும் மேலாக மோதல் இருந்து வந்துள்ளது.

  இதில், ஆத்திரம் அடைந்த அவர் அந்த இரு மாணவர்களையும் கத்தியால் குத்தி கொலை செய்ய திட்டமிட்டார். இதற்காக வகுப்புக்கு கத்தியை எடுத்து வந்தார்.

  நேராக அவர்களிடம் சென்று தகராறில் ஈடுபட்டார். திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து 2 பேரையும் சர மாரியாக குத்தினார்.  இதில் ஒரு மாணவர் அந்த இடத்திலேயே உயிர் இழந்தார். மற்றொரு மாணவர் ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

  சம்பவ இடத்துக்கு அதிரடிப்படை போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் அந்த மாணவரை கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் பதட்டம் நிலவியது.

  அமெரிக்காவில் பள்ளிக்கூடங்களில் சக மாணவர்களை சுட்டு கொல்லும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.

  இதனால் அனைத்து பள்ளிகளிலும் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி வைப்பதற்கு அரசு உத்தர விட்டுள்ளது. ஆனால், இந்த பள்ளியில் மட்டும் ‘மெட்டல் டிடெக்டர்’ கருவி பொருத்தப்படவில்லை. இதனால் மாணவர் கத்தி எடுத்து வந்ததை கண்டு பிடிக்க முடியவில்லை.
  Next Story
  ×