என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அதிமுகவின் இடத்தை கைப்பற்றவே விஜய் முயற்சி செய்து வருகிறார் -  கொங்கு ஈஸ்வரன்
    X

    அதிமுகவின் இடத்தை கைப்பற்றவே விஜய் முயற்சி செய்து வருகிறார் - கொங்கு ஈஸ்வரன்

    • திமுக ஒரு தீய சக்தி, தவெக ஒரு தூய சக்தி என ஈரோடு பிரச்சார கூட்டத்தில் விஜய் முழங்கினார்.
    • தமிழ்நாட்டில் திமுகவை தோற்கடிக்க விஜய் முயற்சிக்கவில்லை

    ஈரோடு அருகே விஜயமங்கலம் சரளையில் த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம் நடைபெற்றது. பிரசார வாகனத்தில் ஏறிநின்று பேசிய விஜய், "எம்.ஜி.ஆர் அவர்களும், ஜெயலலிதா அவர்களும் ஒரே வார்த்தையை சொல்லி திமுகவை காலி செய்தார்கள். நான் கூட யோசிப்பேன். ஏன் இவ்வளவு ஆக்ரோஷமாக பேசுகிறார்கள், திமுகவை திட்டுகிறார்கள்? என் யோசித்தது உண்டு.

    இப்போ தானே புரிகிறது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் சொன்னதை நான் இப்போது திரும்ப சொல்கிறேன். திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி.. திமுக ஒரு தீய சக்தி... தூய சக்தி தவெக-வுக்கும், தீய சக்தி திமுகவுக்கும் தான் போட்டியே" என்று ஆக்ரோஷமாக முழங்கினார்.

    இதுகுறித்து கொமதேக பொதுச்செயலாளர் ஈஸ்வரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த அவர், "தமிழ்நாட்டில் திமுகவை தோற்கடிக்க விஜய் முயற்சிக்கவில்லை. அதிமுகவின் இடத்தை கைப்பற்றவே முயற்சி செய்து வருகிறார். அவரைப் பார்த்து அதிமுகதான் பயப்பட வேண்டும்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×