என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    நான் உயிரோடு இருக்கும்வரை அண்ணாமலையின் சவால் பலிக்காது: வைகோ
    X

    நான் உயிரோடு இருக்கும்வரை அண்ணாமலையின் சவால் பலிக்காது: வைகோ

    • பா.ஜ.க.வால் தமிழகத்தில் ஒருபோதும் காலூன்ற முடியாது.
    • நான் இருக்கும்வரை தி.மு.க. ஆட்சியை அகற்ற விடமாட்டேன் என்றார் வைகோ.

    சென்னை:

    சென்னையில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    தி.மு.க. கூட்டணி வலுவாக இருக்கிறது. 200 தொகுதிகளில் தி.மு.க. கூட்டணி உறுதியாக வெற்றி பெறும்.

    பா.ஜ.க.வால் தமிழகத்தில் ஒருபோதும் காலூன்ற முடியாது. நான் இருக்கும் வரை தி.மு.க. ஆட்சியை அகற்ற விடமாட்டேன்.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டமிட்டு பணியாற்றுகிறார். அனைத்துத் தரப்பினரும் பயன்பெறும் வகையில் சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார்.

    பெண்கள், விவசாயிகள், மாணவர்கள் என அனைவருக்குமான திட்டங்களை முதலமைச்சர் நிறைவேற்றி வருகிறார்.

    ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை கொண்டு வர பார்க்கிறார்கள். மோடியின் மனதில் அதிபர் ஆகவேண்டும் என்ற எண்ணம் புதைந்து கிடைக்கிறது. ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்டம் இந்தியாவில் சாத்தியமற்றது.

    நான் உயிரோடு இருக்கும்வரை அண்ணாமலையின் சவால் பலிக்காது. அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் ரசிக்கும் படியாக இருந்தது.

    அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்.

    தி.மு.க. கூட்டணியில் எந்த விரிசலும் இல்லை. விஜய்யின் அரசியல் வருகையால் தி.மு.க. கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என தெரிவித்தார்.

    Next Story
    ×