Tamil News Live: இன்றைய முக்கிய செய்திகள் - 29 செப். 2026...

தமிழக அரசியல், பொது நிகழ்வுகள், தேசிய அரசியல், விளையாட்டு மற்றும் உலக நடப்புகள் குறித்த அனைத்து செய்திகளையும் ஒரே பதிவில் அறிந்து கொள்ளுங்கள்...
live news

காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம்: 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

* மியான்மர் கடலோர பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது.

* வடக்கு உள்கர்நாடகா முதல் தமிழகம் வரை தெற்கு உள்கர்நாடகா வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை ஒன்றும் நீடிக்கிறது.

இந்தியாவில் உள்ள பள்ளிகளில் 5 கோடி குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை - ஐ.நா.

* 2025-ம் ஆண்டு நிலவரப்படி உலகம் முழுவதும் 24 கோடியே 40 லட்சம் குழந்தைகளுக்கு பள்ளிகளில் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லை.

* இந்தியாவில் மட்டும் 5 கோடி குழந்தைகள் உள்ளனர்.

அமெரிக்க வரலாற்றிலேயே மிகப்பெரிய எஃகு ஆலையை கட்ட இந்திய நிறுவனத்துடன் ஒப்பந்தம் - டிரம்ப் அறிவிப்பு

*அயோவா மாநிலத்தில் 15 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 1.4 லட்சம் கோடி) என்ற பெரும் செலவில் அமையும்.

*எஸ்ஸார் குழுமத்தின் இணை நிறுவனர் ரவி ரூயா மற்றும் பிற நிறுவனப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நேபாளத்தை புரட்டிப்போட்ட கனமழை, வெள்ளம்.. அதிரவைத்த நிலச்சரிவுகள் - வீடியோ வைரல்

*இந்தச் சம்பவம் தற்காலிகமாக ஆற்றின் ஓட்டத்தைத் தடுத்தது.

*நிலச்சரிவு ஏற்பட்டபோது மரங்களுடன் ஒரு வீடு பள்ளத்தாக்கிற்குள் அடித்துச் செல்லப்பட்டது.

2 நாட்களில் கொட்டித் தீர்த்த 1 மாத மழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் பாங்காக் - 8 பேர் உயிரிழப்பு

*வெள்ளத்தால் சுமார் 329,000 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

*மக்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்யுமாறு அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

PAC: மல்யுத்த ஜாம்பவான் சாட்டர்லி 40 வயதில் உயிரிழப்பு.. ரசிகர்கள் அதிர்ச்சி

*டிரிபிள் எச் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.

*அன்றிரவு நடந்த போட்டியில் சாட்டர்லி, ஆண்ட்ரே எல் இடோலோவை எதிர்கொண்டு தோல்வியடைந்தார்.

சிலிண்டர் வெடித்ததால் இடிந்த கட்டிடம் - 3 வயது சிறுவன் உட்பட 4 பேர் பலி

*மூன்று வயதுக் சிறுவன், 18 வயது இளைஞர் மற்றும் இரண்டு பதின்ம வயதினர் அடங்குவர்.

*அருகிலுள்ள வீடுகளும் வெடிப்பின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

உக்ரைன் எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் - கண் சிவந்த தென் கொரியா - என்ன ஆனது?

*நடவடிக்கை எடுப்பது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

*தென் கொரியாவின் மக்கள் தொடர்புச் செயலாளர் சோங் கி ஹாங் தெரிவித்தார்.

GOLD PRICE TODAY: நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்... தொடர்ந்து விலை சரிவில் தங்கம் - இன்றைய நிலவரம்

* தங்கம் விலை கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.13,640-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

* வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.

சமரசம்.. ரூ.1.48 கோடி பெற்றுக்கொண்டு அதானி குழும நிறுவனங்கள் மீதான வழக்கை கைவிட்ட செபி

*குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவோ ​​மறுக்கவோ செய்யாமல் வழக்கை முடித்துக்கொள்ள அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

*கௌதம் அதானி, 4 அதானி குழும நிறுவனங்கள் மற்றும் அதன் 13 இயக்குநர்கள் எதிரான தற்போதைய நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரும் உத்தரவை செபி பிறப்பித்தது.

மும்மொழிக் கொள்கையில் இருந்து 6ம் வகுப்புக்கு விலக்கு அளியுங்கள்..! சிபிஎஸ்இ-க்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

* மத்திய அரசு விரிவான ஆலோசனை நடத்தி முடிவு எடுத்துள்ளது.

* மொழி விருப்பத்தேர்வை மாற்றுவதைத்தான் எதிர்க்கிறோம்.

அமெரிக்காவின் டாப் 10 தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இந்திய ரவுடி.. தகவல் கொடுத்தால் ரூ.9 கோடி!

*கொலைகள், கடத்தல்கள், கொள்ளைகள், ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் விநியோகம் உள்ளிட்ட பல குற்றங்களில் அவர் ஈடுபட்டுள்ளதாக எப்பிஐ கூறியுள்ளது.

*லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பெடரல் நீதிமன்றத்தில் அவர் மீது பல கடுமையான குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

ரூ.46 கோடி காசோலை பண மோசடி புகார் - நடிகை அம்பிகாவை விசாரிக்க போலீசார் முடிவு

நடிகை ராதா அளித்த புகாரின் பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை தொடங்கி இருக்கிறார்கள்.

விசாரணை அதிகாரி ஜரினா நடிகை ராதாவிடம் விசாரணை நடத்தினார்.

தாராபுரத்தில் முதலமைச்சர் விஜய் நாளை பிரசாரம்

* த.வெ.க. சார்பில் போட்டியிடும், வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து, முதலமைச்சர் விஜய், நாளை பிரசாரம் செய்கிறார்.

* மாருதி நகரில், சுமார் 34 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடு தீவிரமாக நடந்து வருகிறது.

"விற்பனைக்கு வந்த கிராமம் : விலை - தண்ணீர்!"

*மகாராஷ்டிர துளசி கிராமம் தண்ணீருக்காக விற்பனைக்கு என போராட்டம்.

* 2. 26 ஆண்டு கால்வாய் பணி முடியாததால் 7000 மக்கள் தவிப்பு.

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் விவகாரம் குறித்து விவாதிக்க இன்று கூடியது காங்கிரஸ் செயற்குழு

*தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன.

*நாட்டில் ஜனநாயகம் நீடிப்பது குறித்து கவலையை இது ஏற்படுத்துகிறது.

தமிழ்நாட்டில் ஆண்கள் இறப்பு 1.11 லட்சம் அதிகம்: மதுவின் கேடுகள் குறித்து விரிவான ஆய்வு வேண்டும்- அன்புமணி

* 2025-ஆம் ஆண்டில் நிகழ்ந்த உயிரிழப்புகளில் 41% மட்டுமே மருத்துவமனைகளில் நிகழ்ந்துள்ளன என்பதால், அவற்றுக்கான காரணங்கள் மட்டுமே தெரியவந்துள்ளன.

* ஆணும், பெண்ணும் சமம் என்ற இலக்கை நோக்கி நாம் பயணித்தாலும், கிராமப்பகுதிகளில் பெரும்பாலான குடும்பங்களில் வாழ்வாதாரம் ஈட்டுபவர்களாக ஆண்கள் தான் உள்ளனர்.

புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு: மீனவர்கள் ஆர்ப்பாட்டம்- போலீசார் குவிப்பு

* தமிழகத்தில் புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற தவெக அரசு, சென்னை பட்டினப்பாக்கத்தில் ரூ.1,200 கோடி மதிப்பில் புதிய தலைமைச் செயலகம் கட்ட முடிவு செய்தது.

* கடலோர பகுதியில் இத்திட்டம் வருவதால், தங்களின் பாரம்பரிய மீன்பிடி தொழில் மற்றும் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும் என்று அவர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

தனியார் பேருந்துகள் வேலை நிறுத்தப் போராட்டம் ஒத்திவைப்பு

* மகளிர் இலவச பயணத்தை எங்களுக்கும் விரிவுபடுத்தி மாற்றியமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* பஸ் கட்டணத்தை மாற்றி அமைக்காவிட்டால் தொழில் முடங்கிவிடும் நிலையில் இருக்கிறோம்.

புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழையையொட்டி கட்-அவுட், பேனர்கள் வைக்க மாவட்ட ஆட்சியர் தடை!

* வடகிழக்கு பருவமழையால் புதுச்சேரியில் பேனர், கட்அவுட்களுக்கு தடை விதிப்பு

* மீறி வைக்கும் பேனர்களை அகற்றும் செலவை மீறியவர்களே ஏற்க வேண்டும்.

மினி பஸ்கள் அனைத்தும் நாளை வழக்கம்போல் இயங்கும் என உரிமையாளர்கள் அறிவிப்பு

* தனியார் பஸ் தொழிலை காப்பாற்றும் வகையில் பஸ் கட்டணத்தை உயர்த்தியும், மகளிர் இலவச பயணத்தை எங்களுக்கும் விரிவுபடுத்தி மாற்றியமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

* கோரிக்கையை வலியுறுத்தி நாளை (புதன்கிழமை) ஒரு நாள் கவன ஈர்ப்பு வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கங்களின் சம்மேளனம் அறிவித்துள்ளது

திருப்பதியில் சணல் பைகளில் லட்டு விநியோகம்

*திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

*லட்டு அளவுக்கு ஏற்றால் போல் ரூ.10, 20, 50, 80, 100 விலைகளில் சணல் பைகள் விற்பனை செய்யப்படுகின்றன.

ஊதிய உச்சவரப்பு அதிகரித்ததன் எதிரொலி.. PF பங்களிப்பு ரூ.3917 ஆக உயர்வு

*ஊதிய உச்ச வரம்பினை மாதத்திற்கு ரூ.15,000ல் இருந்து ரூ. 25,000 ஆக மத்திய அரசு உயர்த்தி உள்ளது.

*வேலை வழங்​கும் நிறுவன பங்​களிப்பு (3.67%) ரூ.550-லிருந்து ரூ.917 ஆக உயரும்.

திமுகவின் பொதுச்செயலாளர் போல் பேசி வருகிறார் இபிஎஸ் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா

* தன்னை உயர்த்தியே நிர்வாகிகளை வெளியேற்றியவர் இபிஎஸ்.

* பெண்களை மையப்படுத்தி ஆபாசமாக பேசுவது தான் திமுகவின் வாடிக்கை.

தாராபுரம் இடைத்தேர்தல்: மு.க.ஸ்டாலின் 2-ந்தேதி பிரசாரம்

* பொதுக்கூட்டத்தில் தோழமை கட்சி தலைவர்களும் கலந்து கொண்டு பேசுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

* 3-ம் தேதி மதுராந்தகம் சென்று அங்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்.

டெல்லி: இளைஞரை அறைந்த விவகாரத்தில் அமைச்சர் பர்வேஷ் வர்மா மீது நடவடிக்கை - அரவிந்த் கெஜ்ரிவால் கண்டனம்!

*தரமற்ற சாலையை வீடியோ எடுத்த இளைஞரை அமைச்சர் பர்வேஷ் வர்மா தாக்கினார்.

* இளைஞரை அடிக்கும் அமைச்சரை பதவி நீக்குக என கெஜ்ரிவால் வலியுறுத்தல்.

கர்நாடக முதல்வரை பார்த்து பயமா..?- எடப்பாடி பழனிசாமி கேள்வி

* தமிழகம், புதுச்சேரி ஒப்புதல் இல்லாமல் புதிய அணையோ, நீர் தேக்கமோ கட்ட இயலாது என்ற அரசியல் அமைப்புச் சட்டத்தை முதல்வர் அறிவாரா?

* உடனடியாக அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டி மத்திய அரசுக்கும் கர்நாடக அரசுக்கும் கடுமையான அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

திருப்பதியில் 5 நாட்கள் வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து

•தொடர்ச்சியான விடுமுறை நாட்கள் முன்னிட்டு பக்தர்களின் வருகை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.

• வி.ஐ.பி பிரேக் தரிசனம் ரத்து செய்யப்பட்டதை முன்னிட்டு நாளை முதல் 4-ந் தேதி வரை பரிந்துரை கடிதங்கள் ஏற்கப்படமாட்டாது என தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் மக்களுக்கான மாற்றமா?- மின்வாரிய தனியார்மய முடிவுக்கு சீமான் எதிர்ப்பு!

* தமிழ்நாட்டில் உள்ள 3.5 கோடி குறைந்த மின்னழுத்த இணைப்புகள் உள்ள நிலையில், அவற்றில் சுமார் 2.5 கோடி வீட்டு மின் இணைப்புகளாக உள்ளன.

* பணியாளர்கள் பற்றாக்குறை என்றால், அதற்கான தீர்வு பணியாளர்களை நியமிப்பதுதானே தவிர தனியார்மயம் அல்ல என்பதை அரசு எப்போது உணரப்போகிறது?

தாராபுரம் இடைத்தேர்தல்: மு.க.ஸ்டாலின் 2-ந்தேதி பிரசாரம்

*  மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசார சுற்றுப்பயண ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டு வருகிறது.

* 3-ம் தேதி மதுராந்தகம் சென்று அங்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பேசுகிறார்.

மாணவி பாலியல் வன்கொடுமை செய்தி வதந்தியா?.. பஞ்சாப் LPU பல்கலை கலவரத்தின் பின்னணி

*ரெட்டிட்டில் ஒரு செய்தி வந்ததையடுத்து அந்த வதந்தி வேகமாகப் பரவியது.

*அப்படி ஒரு சம்பவமே நடைபெறவில்லை என்றும் பல்கலைக்கழக தரப்பு தெரிவித்துள்ளது.

தீரா ஆசை..!- 60 ஆண்டுகளாக லாட்டரி சீட்டு வாங்கி ரூ.2 கோடி இழந்த கேரள முதியவர்

* 60 ஆண்டுகளை நெருங்கிய நிலையிலும் லாட்டரி சீட்டு வாங்குவதை அவர் விடவில்லையாம்.

* அவரது வீட்டில் 5 மூட்டை நிறைய பழைய லாட்டரி சீட்டுகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஞானேஷ்குமாருக்கு எதிரான மனு மீது அடுத்த வாரம் விசாரணை - சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்

* தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிப்பட்ட முறையில் முடிவெடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

* எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். 

தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கு எங்கே செல்கிறது?- அரசை சாடிய அன்புமணி ராமதாஸ்

* ஒரு மாநிலத்தில் நல்லாட்சி நடப்பதன் அடையாளம் சட்டம் - ஒழுங்கு பாதுகாக்கப்படுவதும், மக்கள் அச்சமின்றி நிம்மதியாக நடமாட முடிவதும் தான்.

* தமிழ்நாட்டில் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கு தேவையான நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும்.

பெண்களுக்கான 4X400மீ தொடர் ஓட்டத்தில் இந்தியாவுக்கு தங்கம்: வித்யா ராம்ராஜ் ஹாட்ரிக் பதக்கம்

* இந்திய வீராங்கனைகள் 3:29.69 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றனர்.

* பஹ்ரைன் வீராங்கனைகள் வெள்ளிப் பதக்கம் வென்றனர்.

X