ஞானேஷ்குமாருக்கு எதிரான மனு மீது அடுத்த வாரம் விசாரணை - சுப்ரீம் கோர்ட் ஒப்புதல்

எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.
 Gyanesh Kumar - Supreme court
Published on: 
Summary

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் வழங்கினார். மேலும் அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டார்.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்.ஐ.ஆர்) விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் மற்ற இரு தேர்தல் ஆணையர்களான சுக்பீர் சிங் சந்து, விவேக் ஜோஷி ஆகியோர் 14 முறை எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தனிப்பட்ட முறையில் முடிவெடுத்ததாக புகார் எழுந்துள்ளது.

இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் இந்த குற்றச்சாட்டை தேர்தல் ஆணையம் மறுத்தது.

இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் ஞானேஷ் குமாருக்கு எதிராக அரசியலமைப்பின் 32-வது பிரிவின் கீழ் வக்கீல் ராகேஷ் குமார் சிங் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இதில் ஞானேஷ் குமார் தலைமையிலான இந்திய தேர்தல் ஆணையம் எடுத்த முடிவுகள் குறித்து சந்தேகம் எழுப்பப்பட்டு உள்ளது.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வது தொடர்பாக தலைமை நீதிபதி சூர்யகாந்த் மற்றும் நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு இன்று பரிசீலனை செய்தது. அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் விகாஸ் சிங் கூறும்போது, சட்ட விதிமுறைகளின்படி, பல உறுப்பினர்களைக் கொண்ட தேர்தல் ஆணையத்தின் முடிவுகள் ஒருமன தாகவோ அல்லது பெரும்பான்மை அடிப்படையிலோ எடுக்கப்பட வேண்டும்.

தேர்தல் ஆணையம் செயல்படும் விதத்தைப் பார்க்கும்போது, ​​முடிவுகள் ஒருமனதாக எடுக்கப்படுகின்றனவா என்பது குறித்துக் கடுமையான சந்தேகம் எழுகிறது என்றார்.

இதைத்தொடர்ந்து ஞானேஷ் குமாருக்கு எதிரான வழக்கை விசாரிக்க தலைமை நீதிபதி ஒப்புதல் வழங்கினார். மேலும் அடுத்த வாரம் விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டார்.

X

Maalai Malar
www.maalaimalar.com