SIR சர்ச்சை: ஞானேஷ் குமார் தலைமையில் கூட்டம்.. அனைத்து முடிவுகளும் ஒருமனதாக எடுக்கப்பட்டதாக விளக்கம்

தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஞானேஷ் குமார் தலைமையில் கூட்டம்
ஞானேஷ் குமார் தலைமையில் கூட்டம்
Published on: 
Summary

சர்ச்சைக்கு மத்தியில் தேர்தல் ஆணையர்கள் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) நடவடிக்கையின் போது, ​​இரண்டு தேர்தல் ஆணையர்கள் தங்கள் பெயர்களில் எடுக்கப்பட்டதாக கூறப்படும் முடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்ததாக செய்திகள் வெளியானது.

இதைத்தொடர்ந்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு குறித்து பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.

இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன.

முக்கிய கூட்டம்

ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ள நிலையில், தேர்தல் ஆணையம் இன்று முக்கிய கூட்டத்தை நடத்தியது.

இக்கூட்டத்தில், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தேர்தல் ஆணையர்கள் சுக்பீர் சிங் சந்து மற்றும் விவேக் ஜோஷி ஆகியோர் கலந்துகொண்டனர்.

சிறப்பு தீவிர திருத்த நடைமுறை (SIR) மேல் உள்ள புகார்கள் மற்றும் தேர்தல் ஆணைய உறுப்பினர்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகள் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

டெல்லியில் வாக்காளர் பட்டியலிலிருந்து பெயர்கள் பரவலாக நீக்கப்படுவது குறித்த புகார் பற்றியும் ஆணையம் விவாதித்தது.

கூட்டத்தின் முடிவு

ஆணைய உறுப்பினர்களிடையே எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை என்றும், வாக்காளர் பட்டியலைத் திருத்தும் முடிவு ஒருமனதாக எடுக்கப்பட்டது என்றும் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.

வாக்காளர் பதிவுக்கான படிவம் 6 மற்றும்தேர்தல் ஆணைய இணையமான ECINET தொழில்நுட்ப அமைப்பின் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் தகவல் தொழில்நுட்ப அமைப்புகளை ஆய்வு செய்ய ஒரு நிபுணர் குழுவை நியமிக்கவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக ஆணையம் தெரிவித்தது.

நீட்டிப்பு

மேலும் டெல்லியில் வாக்காளர் பட்டியல் விசாரணைக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளதாக ஆணையம் அறிவித்துள்ளது.

அங்கு எஸ்ஐஆர் பட்டியல் புகார்கள் மற்றும் ஆட்சேபனைகளைத் தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஆணையம் அக்டோபர் 30 வரை நீட்டித்துள்ளது

முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி ஆணையத்தால் அறிவிப்புகள் அனுப்பப்பட்டவர்கள், விசாரணைக்காக வாக்காளர் பதிவு அலுவலர் முன் நேரில் ஆஜராகத் தேவையில்லை என கூறப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவிலும் எஸ்ஐஆர் நடவடிக்கை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com