சமரசம்.. ரூ.1.48 கோடி பெற்றுக்கொண்டு அதானி குழும நிறுவனங்கள் மீதான வழக்கை கைவிட்ட செபி

குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவோ ​​மறுக்கவோ செய்யாமல் வழக்கை முடித்துக்கொள்ள அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.
அதானி
அதானி
Published on: 
Summary

குறைந்தபட்ச பொதுப் பங்குதாரர் விதிமுறைகளை மீறியதாக அதானி மற்றும் அதானி குழுமத்தின் 4 நிறுவனங்கள் மீதான வழக்கை செபி கைவிட்டுள்ளது.

அதானி குழுமத் தலைவர் கௌதம் அதானிக்கு, பங்குச்சந்தை ஒழுங்குமுறை ஆணையமான செபியிடமிருந்து நிவாரணம் கிடைத்துள்ளது.

குறைந்தபட்ச பொதுப் பங்குதாரர் விதிமுறைகளை மீறியதாக கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், அதானி குழுமத்தின் நான்கு நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கைகளை செபி முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது.

இந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர, கௌதம் அதானி உட்பட மொத்தம் 18 பேர், ரூ.1.48 கோடி சமரச தொகையைச் செலுத்தியுள்ளனர்.

குற்றச்சாட்டு

இந்தியாவில் பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் குறைந்தபட்சம் 25% பொதுப் பங்குகளை பொதுமக்கள் மற்றும் இதர பங்குதாரர்கள் வசம் வைத்திருக்க வேண்டும் என்பது செபியின் கட்டாய விதிமுறையாகும்.

அதானி குழுமத்தின் சில நிறுவனங்கள் குறைந்தபட்ச பொதுப் பங்குதாரர் விதிமுறைகளை கடைப்பிடிக்கவில்லை என்று 2020 ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் செபிக்கு புகார்கள் வந்தன.

விசாரணை

இது குறித்து முதற்கட்ட விசாரணையை நடத்திய செபி, அதே ஆண்டு அக்டோபர் 23 அன்று முறைப்படி வழக்கு விசாரணையை தொடங்கியது.

குறைந்தபட்ச பொதுப் பங்குதாரர் விதிமுறைகளை மீறிதாக அதானி எண்டர்பிரைசஸ், அதானி பவர், அதானி போர்ட்ஸ் மற்றும் அதானி டிரான்ஸ்மிஷன் (தற்போது அதானி எனர்ஜி சொல்யூஷன்ஸ்) ஆகியவை இந்த வழக்கில் சேர்க்கப்பட்டன.

விசாரணையை முடித்த பிறகு, செபி 2024 செப்டம்பர் 27 அன்று விளக்கம் கோரும் அறிவிப்புகளை வெளியிட்டது. 2025 மார்ச் 3 அன்று மற்றொரு அறிவிப்பையும் வெளியிட்டது.

சமரசம்

இந்த விவகாரத்தை தீர்ப்பதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினர் செபிக்கு ஒரு முன்மொழிவை அனுப்பியுள்ளனர்.

குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்ளவோ ​​மறுக்கவோ செய்யாமல் வழக்கை முடித்துக்கொள்ள அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.

இந்தச் செயல்பாட்டில், சமரசமாக மொத்தம் ரூ. 1.48 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, கௌதம் அதானி, 4 அதானி குழும நிறுவனங்கள் மற்றும் அதன் 13 இயக்குநர்கள் எதிரான தற்போதைய நடவடிக்கைகளை முடிவுக்குக் கொண்டுவரும் உத்தரவை செபி நேற்று பிறப்பித்தது.

X

Maalai Malar
www.maalaimalar.com