காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிரம்: 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்

வடக்கு உள்கர்நாடகா முதல் தமிழகம் வரை தெற்கு உள்கர்நாடகா வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை ஒன்றும் நீடிக்கிறது.
storm warning cage 1st cage
Published on: 
Summary

தமிழ்நாட்டில் 7 துறைமுகங்களிலும், புதுச்சேரியில் காரைக்கால், புதுச்சேரி ஆகிய 2 துறைமுகங்களிலும் புயல் சின்னம் உருவாக இருப்பதை காட்டும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது.

வடக்கு அந்தமான் கடல் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மியான்மர் கடலோர பகுதிகளில் நிலவி வந்த தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது மேலும் அதே திசையில் நகர்ந்து, தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும் தீவிரம் அடைய இருக்கிறது.

இதன் காரணமாக, தமிழ்நாட்டில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, பாம்பன், தூத்துக்குடி ஆகிய 7 துறைமுகங்களிலும், புதுச்சேரியில் காரைக்கால், புதுச்சேரி ஆகிய 2 துறைமுகங்களிலும் புயல் சின்னம் உருவாக இருப்பதை காட்டும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டு இருக்கிறது.

இதுதவிர வடக்கு உள்கர்நாடகா முதல் தமிழகம் வரை தெற்கு உள்கர்நாடகா வழியாக காற்றழுத்த தாழ்வு பாதை ஒன்றும் நீடிக்கிறது. இந்த நிகழ்வுகளால் தமிழ்நாட்டில் ஈரோடு, நாமக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கனமழையும், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திண்டுக்கல், விருதுநகர், புதுக்கோட்டை, சிவகங்கை மாவட்டங்களில் சில இடங்களில் பலத்த காற்றுடன் மிதமான மழையும் இன்று பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com