

நேபாளத்தில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நேபாளத்தின் முஸ்டாங் மாவட்டத்தில் ஒரு பெரிய மலைப்பகுதி நொடிகளில் சரிந்து ஆற்றில் விழுந்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
முஸ்டாங் மாவட்டத்தில் உள்ள லெய்டே அருகே ஒரு பெரிய மலைப்பகுதி வெறும் ஆறு வினாடிகளில் காளி கண்டகி ஆற்றில் சரிந்தது.
சார் தாம் யாத்ரீகர்களால் எடுக்கப்பட்ட இந்தக் காணொளியில், நிலச்சரிவுவின்போது உள்ளூர்வாசிகள் பீதியில் அலறுவது கேட்கிறது. இந்தச் சம்பவம் தற்காலிகமாக ஆற்றின் ஓட்டத்தைத் தடுத்தது.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் மற்றொரு காணொளியில், நிலச்சரிவு ஏற்பட்டபோது மரங்களுடன் ஒரு வீடு பள்ளத்தாக்கிற்குள் அடித்துச் செல்லப்பட்டது.
கடந்த மூன்று நாட்களில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளில் இதுவரை 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 14 பேரைக் காணவில்லை.
மோசமான வானிலை காரணமாக பல மாவட்டங்களில் மீட்புப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
மறுபுறம், மனாங் மாவட்டத்தில் உள்ள ஹிம்லுங் ஹிமால் அடிவார முகாமில் ஏற்பட்ட பனிச்சரிவில் இருவர் உயிரிழந்தனர். மேலும் 10 பேரைக் காணவில்லை.
ஒரு மாதத்திற்கு முன்பு 1,410 பேர் உயிரிழந்த போதேகோஷி வெள்ளப்பெருக்கிலிருந்து மீள்வதற்கு முன்பே, நேபாளம் மற்றொரு பேரழிவைச் சந்தித்துள்ளது.
பனிப்பாறை சரிவால் ஏற்பட்ட அந்த வெள்ளபெருக்கில் 6,100 மாயாமாகினர். அவர்களை தேடும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது.