

ஆசிய விளையாட்டு போட்டியில் பெண்களுக்கான 4X400 மீட்டர் தொடர் ஓட்டம் இந்திய நேரப்படி இன்று மாலை நடைபெற்றது. இதன் இறுதிப் போட்டியில் இந்திய அணியைச் சேர்ந்த கிரண், பூவம்மா மச்சேத்திரா, பிராச்சி, வித்யா ராம்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதிப் போட்டியில் 9 நாடுகள் கலந்து கொண்டனர். இதில் இந்திய வீராங்கனைகள் 3:29.69 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் வென்றனர்.
பஹ்ரைன் வீராங்கனைகள் 3:30.21 நிமிடங்களில் கடந்து வெள்ளிக் பதக்கம் வென்றனர். சீனா வீராங்கனைகள் 3:31.02 நிமிடங்களில் கடந்து வெண்கலப் பதக்கம் வென்றனர்.
இந்திய அணியில் தமிழகத்தைச் சேர்ந்த வித்யா ராம்ராஜ் இடம் பிடித்திருந்தார். இவர் ஏற்கனவே 400மீ தடைதாண்டும் ஓட்டத்தில் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். அத்துடன் பி.டி. உஷாவின் 42 வருட சாதனையை முறியடித்தார்.
4X400 கலப்பு பிரிவில் வித்யா ராம்ராஜ் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்தார். தற்போது தங்கம் வென்றதன் மூலம் ஆசிய விளையாட்டில் மூன்று பதக்கங்கள் வென்றுள்ளார்.
ஆண்களுக்கான 4X400மீ தொடர் ஒட்டத்தில் இந்திய வீரர்கள் வெண்கல பதக்கம் வென்றனர்.
தரம்வீர் சவுத்ரி, டிஎஸ் மானு, ஜெய் குமார், டி.கே. விஷால் ஆகியோர் 3:01.61 நிமிடங்களில் பந்தய தூரத்தை கடந்தனர்.