சிலிண்டர் வெடித்ததால் இடிந்த கட்டிடம் - 3 வயது சிறுவன் உட்பட 4 பேர் பலி

மூன்று வயதுக் சிறுவன், 18 வயது இளைஞர் மற்றும் இரண்டு பதின்ம வயதினர் அடங்குவர்.
எல்பிஜி சிலிண்டர் வெடித்ததால் இடிந்த கட்டிடம்
எல்பிஜி சிலிண்டர் வெடித்ததால் இடிந்த கட்டிடம்
Published on: 
Summary

உத்தரப் பிரதேசத்தில் சிலிண்டர் வெடித்த விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

உத்தரப் பிரதேசத்தின் பதேபூர் மாவட்டத்தில் நேற்று (திங்கள்கிழமை) மாலை இரண்டு மாடிக் கட்டிட வீட்டிற்குள் வீட்டு உபயோக எல்பிஜி சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டது.

இதில் 3 வயது சிறுவன் உட்பட 4 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்தச் சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தனர்.

விபத்து

மால்வான் நகரில் பழம் மற்றும் காய்கறி வியாபாரியான சுரேஷ் குப்தா என்ற சுன்னாரின் இல்லத்தில், மாலை சுமார் 5 மணியளவில் உணவு தயாரிக்கப்பட்டுக்கொண்டிருந்தபோது இந்த வெடிவிபத்து நிகழ்ந்ததாக காவல் கண்காணிப்பாளர் அபிமன்யு மங்லிக் தெரிவித்தார்.

வெடிப்பின் தாக்கத்தால் வீடு இடிந்து விழுந்ததில், உள்ளே இருந்தவர்கள் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கிக்கொண்டனர். அருகிலுள்ள வீடுகளும் வெடிப்பின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

காவல்துறை மற்றும் தீயணைப்புப் படையினர் அடங்கிய மீட்புக் குழுவினர், உள்ளூர் மக்களின் உதவியுடன், இடிபாடுகளிலிருந்து ஏழு பேரை மீட்டு மருத்துவமனைக்கு விரைந்து கொண்டு சென்றனர்.

உயிரிழப்பு

மீட்கப்பட்டவர்களில் நால்வர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் அனைவரும் ஆண்கள் ஆவர். அவர்களில் மூன்று வயதுக் சிறுவன், 18 வயது இளைஞர் மற்றும் இரண்டு பதின்ம வயதினர் அடங்குவர். அவர்களின் அடையாளங்கள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது.

காயமடைந்த மூவரில் ஒருவர் உடலில் சுமார் 90 சதவிகிதம் தீக்காயங்கள் ஏற்பட்டதால், அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

எல்பிஜி சிலிண்டர் வெடிப்புச் சம்பவம் தொடர்பான சூழ்நிலைகள் குறித்து காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com