என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

முதலமைச்சர் கொண்டு வந்த மாநில சுயாட்சி தீர்மானத்திற்கு பாமக ஆதரவு - அதிமுக, பாஜக வெளிநடப்பு
- மாநிலங்களின் நியாமான உரிமைகளை பாதுகாக்க குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும்.
- உயர்நிலைக்குழு ஜனவரியில் இடைக்கால அறிக்கையும், 2 ஆண்டுகளில் இறுதி அறிக்கையும் வழங்கும் என்றார்.
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "மாநிலங்களின் நியாமான உரிமைகளை பாதுகாக்க குரியன் ஜோசப் தலைமையில் உயர்மட்ட குழு அமைக்கப்படும்.மாநில உரிமைகளை பாதுகாக்க மத்திய அரசு உடனான உறவுகளை மேம்படுத்திட ஆய்வு செய்து உயர்மட்டக்குழு அறிக்கை அளிக்கும். உயர்நிலைக்குழு ஜனவரியில் இடைக்கால அறிக்கையும், 2 ஆண்டுகளில் இறுதி அறிக்கையும் வழங்கும் என்று தெரிவித்தார்.
இதனையடுத்து, மாநில சுயாட்சி தொடர்பாக முதலமைச்சர் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்தார். இந்த தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த நிலையில் முதல்வர் கொண்டுவந்த தீர்மானத்திற்க பாமக ஆதரவு தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்த கட்சிகளுக்கு முதலமைச்சர் மு,.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தார்.
Next Story






