என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சூடு பிடிக்கும் தேர்தல் களம்... ஜன. 28-ந்தேதி பிரதமர் மோடி தமிழகம் வருகை?
- மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைவார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
- கூட்டணிக் கட்சி தலைவர்களை ஒரே மேடையில் ஏற்றி உரையாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
சென்னை:
தமிழக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, இன்று காலை அ.தி.மு.க- பா.ம.க. இடையே கூட்டணி உறுதியாகி உள்ளது. மேலும் பா.ம.க. ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து பின்னர் தெரிவிக்கப்படும் என்றும் மேலும் சில கட்சிகள் கூட்டணியில் இணைவார்கள் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
இந்த நிலையில், பிரதமர் மோடி வருகிற 28-ந்தேதி தமிழகம் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கன்னியாகுமரியில் நடைபெற உள்ள தாமரை மகளிர் மாநாட்டில் பிரதமர் பங்கேற்க உள்ளதாகவும், கூட்டணிக் கட்சி தலைவர்களை ஒரே மேடையில் ஏற்றி உரையாற்ற உள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று இரண்டு நாள் பயணமாக தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து கூட்டணியை உறுதி செய்யும் பணிதீவிரமாக நடைபெற்று வருகிறது. பிரதமர் வருகைக்குள் கூட்டணி பேச்சுவார்த்தையை முடிக்க பா.ஜ.க. தீவிர பணியாற்றி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சட்டசபை தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், இன்று அதிமுக- பாமக கூட்டணி உறுதியாகி உள்ளதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.






