என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

DMK| திறனற்ற திமுக ஆட்சியில் காமுகர்களாக மாறிய காவலர்கள்!- நயினார் நாகேந்திரன்
- வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை!
- காவல் நிலையத்தில் காக்கிச் சட்டை அணிந்த பெண்ணுக்கும் பாதுகாப்பில்லை!
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
கோவையில் காவல் நிலைய அலுவலக அறையில் வைத்தே பெண் காவலரை மதுக்கரை சிறப்பு காவல்துறை கமாண்டண்ட் அதிகாரி பாலியல் வன்கொடுமை செய்ததாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
"வெல்லும் தமிழ்ப் பெண்கள்" என்று போலியாக முழங்கும் திமுக ஆட்சியின் நிர்வாகத் திறனின்மையால் தெருதோறும் காமுகர்கள் பெருகி வருவது ஒருபுறமிருக்க, மறுபுறம் காவல் அதிகாரிகளே காமுகர்களாக மாறிவருவது பெண்கள் பாதுகாப்பை ஒட்டுமொத்தமாகக் கேள்விக்குறியாக்குகிறது.
வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த பச்சிளம் குழந்தைக்கும் பாதுகாப்பில்லை! காவல் நிலையத்தில் காக்கிச் சட்டை அணிந்த பெண்ணுக்கும் பாதுகாப்பில்லை! தமிழகத்தின் வரலாற்றில் இப்படி ஒரு கொடூரத்தை இதுவரை யாரும் பார்த்ததும் இல்லை! இனி இந்தக் கேடுகெட்ட தி.மு.க. ஆட்சி தொடரப்போவதுமில்லை! என்று கூறியுள்ளார்.






