என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கனிமொழி
- ராகுல் காந்திக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- உங்கள் தைரியம், தெளிவு மற்றும் அர்ப்பணிப்பு பலரை தொடர்ந்து ஊக்குவிக்கிறது.
சென்னை:
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இன்று தனது 55-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி அவருக்கு கட்சி தலைவர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், தி.மு.க. பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியும், ராகுல் காந்திக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
ராகுல் காந்திக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துகள். நமது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான உங்கள் தைரியம், தெளிவு மற்றும் அர்ப்பணிப்பு பலரை தொடர்ந்து ஊக்குவிக்கிறது.
நீதி, சமத்துவம் மற்றும் மதச்சார்பின்மைக்கான உங்கள் போராட்டத்தில் நீங்கள் வலு பெறவேண்டும் என்று கூறியுள்ளார்.
Next Story






