search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பா.ஜ.க.வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை- ஜெயக்குமார்
    X

    பா.ஜ.க.வுடன் ஒட்டும் இல்லை, உறவும் இல்லை- ஜெயக்குமார்

    • மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை தோலுரித்து காட்டுவோம்.
    • தி.மு.க. கூட்டணி கட்சிக்குள் பல முரண்பாடுகள் உள்ளன.

    சென்னை:

    அ.தி.மு.க. பாராளுமன்றத் தேர்தலில் தொகுதி பங்கீடு, தேர்தல் பிரசாரக் குழு, விளம்பரக் குழுவினர் கூட்டம் இன்று நடந்தது.

    கூட்டம் முடிந்த பின்னர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

    பாராளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து இப்போது எதுவும் சொல்ல முடியாது. உரிய நேரத்தில் அறிவிப்போம். மத்திய, மாநில அரசுகள் தவறு செய்தால் சுட்டிகாட்டுவோம்.

    அ.தி.மு.க. யாருக்கும் பயப்படாது. கூட்டணிக்காக அ.தி.மு.க.வினர் டெல்லி சென்று காலில் விழுந்ததாக அண்ணாமலை கூறுகிறார். இதனை தமிழக மக்கள் நம்ப மாட்டார்கள்.

    பா.ஜ.க.வில் தன்னை முன்நிறுத்தி கொள்ள அண்ணாமலை இதுபோன்ற செயல்களில் ஈடுபடுகிறார். நடக்காத விஷயத்தை அவர் கூறுகிறார்.

    மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோத செயல்களை தோலுரித்து காட்டுவோம். கடந்த 10 ஆண்டுகளில் மாநில நலன்களை பா.ஜ.க. மறந்து விட்டது. பா.ஜ.க.வுடன் இனி ஒட்டும் இல்லை... உறவும் இல்லை.

    பீகார் முதல்-மந்திரி நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறி உள்ளார். இந்தயா கூட்டணியை போல தி.மு.க. கூட்டணியும் சிதறும். தி.மு.க. கூட்டணி கட்சிக்குள் பல முரண்பாடுகள் உள்ளன. நெல்லிக்காய் மூட்டை போல சிதறும்.

    அண்ணாமலை, அண்ணே... அண்ணே... என்று ஊளை கும்மிடு போடும் நபர்கள் நாங்கள் இல்லை. மத்திய, மாநில அரசுகள் தவறு செய்தால் அவர்களை அடையாளப்படுத்துவது அ.தி.மு.க.வின் வேலை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×